9 எதிர்பாராத தீர்வு

Начните с самого начала
                                    

"ஒருவேளை அவன் வேண்டாமுன்னு சொல்லிட்டா என்ன செய்யறது?"

"நிச்சயம் சொல்லமாட்டான். ஏன்னா, சூழ்நிலை அப்படி"

"அப்படின்னா பர்ச்சேஸ் பத்தி அவனுக்கு தெரியாதா?"

"தெரியாது... மெட்டீரியல்ஸ் வந்து சேர்ற வரைக்கும் அவனுக்கு தெரிய கூடாது. அதுக்கு முன்னாடியே தெரிஞ்சா, அவன் ஆர்டரை கேன்சல் பண்ண வாய்ப்பு இருக்கு"

"ஆமாம். அவன் செய்வான்"

"அவன் மிதிலாவுடைய செயல் திறமையை புரிஞ்சுக்கணும். அதை அவனுக்கு புரிய வைக்க, இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது. ஏன்னா, இதுல நம்ம கம்பெனியோட கௌரவம் மட்டுமில்ல, ஸ்ரீராமுடைய கௌரவமும் அடங்கி இருக்கு"

ஆமாம் என்று தலையசைத்தான் லட்சுமன்.

"அவன்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே இருந்துடு..."

"எனக்கு என்ன தெரியும்? எனக்கு எதுவுமே தெரியாது..." என்று கூறியபடி அங்கிருந்து நடையைக் கட்டினான் லட்சுமன், குகனை சிரிக்க வைத்து.

........

எதிர்பார்த்தபடியே, ஸ்ரீராமுக்கு தூக்கமே வரவில்லை. இது அவன் நிறுவனத்தின் நற்பெயர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. சொன்ன தேதியில் அவன் பொருள்களை ஒப்புவித்தாக வேண்டும். இவ்வளவு நாள் அவன் கட்டிக்காத்து வந்த நற்பெயரை இழக்கலாகாது. வேறு வழியின்றி, தனது பழைய சப்ளையர் ஒருவரை மீண்டும் அழைப்பது என்ற முடிவுக்கு வந்தான் ஸ்ரீராம். அவன் அதை செய்து தான் ஆக வேண்டும்... வேறு வழி இல்லை.

அந்த முடிவை எடுத்த பின், அவன் நிம்மதியாய் உறங்கியிருப்பான் என்று நினைத்தால், அது தான் இல்லை. தான், வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த சப்ளையரை, மீண்டும் அழைக்க வேண்டுமென்பதை எண்ணிய போது அவன் தூக்கம் சுத்தமாய் ஒழிந்தது. எப்படி இறங்கி சென்று அவனிடம் நிற்பது? தன் அறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தான், வேறு ஏதாவது வழி பிடி படுகிறதா என்று யோசித்தபடி.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Место, где живут истории. Откройте их для себя