7 முதல் பணி

Start from the beginning
                                    

"ஆனா, நம்ம பிரியாவை மனசு வருத்தப்பட வைக்க முடியாது. நம்ம ராமுவைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அவனுக்கு பிரச்சனையை எப்படி சமாளிக்கணும் நல்லாவே தெரியும்"
 
"அதுக்காக நம்ம அவளை சும்மா விட கூடாது. அந்த ஒட்டுண்ணியை நான் ராமுகிட்ட நெருங்க விட மாட்டேன்" என்றார் புஷ்பா.

"ராமுவுக்கு அவளைப் பிடிச்சிருந்தா என்ன செய்வ?"

"வாய்ப்பே இல்ல...  நான் அடிச்சி சொல்லுவேன். போன தடவையே நான் கவனிச்சிகிட்டு தான் இருந்தேன். ராமு அவளை திரும்பிக்கூட பார்க்கல. அவனுக்கு அவளைப் பிடிச்சிருந்தா, அவ அமெரிக்கா போனதுக்கு பிறகு, ஒரு தடவையாவது அவளுக்கு ஃபோன் பண்ணி பேசியிருப்பான்ல?"

"ஆமாம்" என்று அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார் பாட்டி.

"ராமுவுக்கு வரப்போற பொண்டாட்டி, எங்க தான் பிறந்திருக்காளோ தெரியல... எப்போ தான் அவனோட வாழ்க்கையில வரப்போறாளோ..." என்றார் பாட்டி... அவள், ஏற்கனவே அவன் வாழ்க்கையில், அதிரடி வருகை தந்துவிட்டது தெரியாமல்...!

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

நவீனமாக, தட்டிகளால் தடுக்கப்பட்ட பல சிற்றறைகளை கொண்டிருந்தது எஸ் ஆர் ஃபேஷன்ஸ். அதில் மிதிலாவின் அறையை அவளுக்கு காட்டினான் குகன். தனது நாற்காலியில் அமர்ந்து, கடவுளை பிரார்த்தனை செய்த பின், கணினியை உயிரூட்டினாள் மிதிலா. ஸ்ரீராம் கூறிய டேட்டாபேஸ் ஃபைலை தயாரிக்க  தேவையான விபரங்களை சேகரிக்க துவங்கினாள். அவளுக்கு கிடைத்தது வெறும் மூன்று வருடத்திற்கான விபரங்கள் மட்டும் தான். எவ்வளவு தேடியும் அதற்கு முந்தைய வருடத்திற்கான விபரங்கள் அவளுக்கு கிடைக்கவில்லை. அங்கிருந்து குகனின் அறைக்குச் சென்றாள்.

"சொல்லுங்க மிதிலா"

"அஞ்சு வருஷத்துக்கான சப்ளையர்ஸ் டீடெயில்ஸ் எனக்கு வேணும்"

"அது எதுக்கு உங்களுக்கு?"

"பாஸ் தான் என்னை டேட்டாபேஸ் ஃபைல் கிரியேட் பண்ண சொல்லியிருக்காரு"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now