7 முதல் பணி

Start from the beginning
                                    

"உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும் பாட்டி" என்றாள் பிரியா.

"சொல்லு பிரியா"

"என்னோட தங்கை லயா இந்தியாவுக்கு வரப் போறா. இங்க நிறைய பிரெண்ட்ஸ் கூட இருந்தவளுக்கு, அமெரிக்காவில் தனியா இருக்க பிடிக்கலையாம். இங்க வந்து தங்கறதுக்கு உங்ககிட்ட பர்மிஷன் கேட்க சொன்னா. நான் அவளுக்கு என்ன சொல்லட்டும்?"

"என்ன பிரியா இப்படி கேக்குற? நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்றவங்கள, வேண்டாம்னா சொல்லப் போறோம்? வர சொல்லு. நீ எங்ககிட்ட பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் இல்ல. இது உன் வீடும் தான்" என்றாள் நர்மதா.

"இல்ல அண்ணி, இதைப்பத்தி நான் அத்தைகிட்ட பேசினேன். அவங்க பிடி கொடுக்கவே இல்ல..." என்று சிரித்தாள் ப்ரியா தன் மாமியார் புஷ்பாவை பார்த்தபடி.

"நானா எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். அத்தை சொன்னா சரி தான்" என்றார் புஷ்பா.

"என்ன சித்தி இப்படி சொல்றீங்க? நீ லயாவை வர சொல்லு" என்றாள் நர்மதா பிரியாவிடம்.

"தேங்க்ஸ் அண்ணி"

"எப்ப வர போறா லயா?"

"அவ ஓப்பன் டிக்கெட் எடுத்து வைச்சிகிட்டு காத்திருக்கா. நீங்க சரின்னு சொன்னா போதும், இன்னைக்கே கிளம்பிடுவா"

"அப்படின்னா கிளம்ப சொல்லு" என்று சிரித்தாள் நர்மதா.

"சரிங்க அண்ணி" என்று கூறிவிட்டு தனது தங்கை லயாவிற்கு ஃபோன் செய்ய சென்றாள் பிரியா.

பிரசாத தட்டை திரும்ப வைக்க, பூஜை அறைக்கு சென்றாள் நர்மதா.

புஷ்பாவின் முகத்தை கவனித்துக்கொண்டிருந்த பாட்டி,

"லயா இங்க வர்றதுல உனக்கு விருப்பம் இல்லையா?" என்றார்.

"சுத்தமா இல்ல..." என்றார் புஷ்பா.

"ஏன்?"

"நம்ம தான் பார்த்தோமே, பரத், ப்ரியா கல்யாணத்துல, அந்தப் பொண்ணு ராமு பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா. அதுல கடுப்பான ராமு, கல்யாண விருந்துக்கு கூட வரவே இல்லை. இதைப் பத்தி பிரியா, ஒரு வாரமா என்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தா. ஆனா, அந்த பொண்ணு இங்க வர்றதுல எனக்கு விருப்பமே இல்ல. அவ இங்க வந்தா, ராமு வெறுப்பாயிடுவான். அவ பிரியா மாதிரி நல்ல பொண்ணு இல்ல. ஆனா, தன்னை ரொம்ப நல்லவளா காட்டிக்கிறவ. அது ஒரு தேவையில்லாத தலைவலி"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now