சூசைட் - 2

32 6 14
                                    

கதிர் இனியாவை அணைக்க போக கதிரின் உடல் இனியாவை ஊடுறுவி சென்றது. கதிர் குழப்பமாக இனியாவை பார்க்க இனியா கதிர் இருப்பதை சற்றும் சட்டை செய்யாமல் அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதிர் இனியாவை அழைக்க இனியா துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

கதிர் குழப்பமாக 'என்ன ஆச்சி இவளுக்கு என்னை பார்த்ததும் கட்டி பிடிச்சி சந்தோஷப்படுவான்னு பார்த்தா இப்ப கண்டுக்காம போறா அதோட அவள என்னால ஏன் கட்டி பிடிக்க முடியல நம்ம அவளுக்குள்ள போய் வெளில வந்தோம் ... அப்படினா அவ ஆவியா ... இல்லை நம்ம ஆவியா" என்று அவனுக்குள்ளே அவனே கேள்வி கேட்டுக் கொண்டான்.

நிசப்தமான அந்த அறையில் கடிகாரத்தின் நொடி முள் சத்தமும் அதோடு கதிரின் இதயதுடிப்பின் சத்தமும் மட்டுமே முழுதாக நிறம்பி இருந்தது.

சரியாக பன்னிரண்டு மணிக்கு கடிகாரம் அலாரம் அடிக்க யோசனையாக இருந்த கதிர் அலார சத்தத்தில் துள்ளி விழுந்தான். கதிரின் மனம் படபடக்க சிறு வேர்வை துளியும் எட்டி பார்த்தது.

"ம்ச் அலாரம்" என்று நெஞ்சை தேய்த்துக் கொண்ட கதிர் அப்பொழுது தான் மணியை பார்த்தான்.

"மணி பன்னன்டா" என்று வாய் விட்டே கேட்ட கதிர் ஜன்னல் திரையை விலக்கி பார்த்தான். வெளியில் முழுதாக இருள் சூழ்ந்திருந்தது.

"அப்படினா இது நிகழ்காலம் இல்லை கடந்தகாலம் இனியா நைட் வந்ததுல இருந்து நமக்கு கண் முன்னாடி ஓடுது... ஆனா யார் இதெல்லாம் பன்றா ... எதுக்காக பன்றாங்க" என்று மேலும் மேலும் கதிர்க்கு குழப்பம் அதிகரித்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு கதிர் திரும்ப அங்கு இனியா முகத்தை துணியால் துடைத்துக் கொண்டு வந்தாள்.

இனியாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி அவ்வளவு பூரிப்பு தான் நினைத்ததை வென்று விட்ட ஆனந்தம் கதிர் கண்கள் கலங்கி 'இவ்வளவு சந்தோஷமா இருந்தவ காலையில' என்று நினைத்தவன் இதயம் பாரமாகி போனது.

சூசைட் (Sucide)Where stories live. Discover now