• 16 •

80 10 56
                                    

               ந்தக் கள்ளமோ கபடமோ வலியோ வசையோ அறியாது தான் தூங்கிக் கிடந்த தாயின் கருவறைக்குள் இருந்து அப்போதுதான் வெளியே வந்தாற்போல இருந்தது ஆலியாவுக்கு. நடந்தது கனவா இல்லையேல் நனவா என்று அறிந்திட முடியாத இன்ப அதிர்ச்சியுடன் கடற்கரையிலிருந்து தன் தாயுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அந்நாள் வரைக்கும் ஆஸிமாவிடம் அவள் உணர்ந்திராத தாயன்பு முழுவதையும் அந்த ஒற்றை அணைப்பில் உணர்ந்தவளுக்கு அவரது கை வளைவுக்குள் இருந்த அந்தக் கணங்கள் அவ்வாறே உறைந்துவிடாதா என்னும் ஏக்கம் மட்டுமே..

வெப்பம் குறையாத அந்த மாலை நேரத்து மணல்கரையில் அலைகளின் துள்ளல் அதிகரிப்பதைப் பார்த்தவாறே இன்னும் கொஞ்சம் அமர்ந்திருந்தால் ஒருவேளை அவர்கள் இருவரும் இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இருட்டுவதற்கு முன்னர் கடற்கரையிலிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. சீக்கிரமே பரவிவிட்ட இருள்மீது வந்ததே கோபம் ஆலியாவுக்கு!

மஃரிப் நேர அதானுக்குத் தாயும் மகளுமாக முன் மண்டபத்து சோபாவில் அமர்ந்து மௌனம் காத்தனர். அவர்களுக்காகக் கதவைத் திறந்த சந்தனகுமாரியும் எதிர்பார்ப்புடன் ஆலியாவின் முகத்தை நோக்கிவிட்டு  அங்கிருந்து நகர்ந்தார். ஆலியா இருந்த களிப்பில் அதனைக் கவனிக்கவில்லை போலும்.


மின்விசிறியைத் தட்டிவிட்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, அந்த செயற்கைக் காற்றுக்குத் தன் தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஆலியாவின் இரசாயனவியல் குறிப்புப் புத்தகத்தின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அதன்மீது படிந்த ஆஸிமாவின் பார்வை சிறிது நேரத்திற்கு அதன் மீதிருந்து அசையவே இல்லை.

அந்தக் குறிப்புப் புத்தகத்தைக் கையில் எடுத்த ஆஸிமா,  அதான் முடிந்ததும் ஆலியாவின் பக்கம் திரும்பினார்.

"Aaliya.. why is it here?"

அவர் அவ்வாறு கேட்கவும் கைகளைப் பிசைந்தாள் நம் கதாநாயகி.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now