• 12 •

86 10 39
                                    

               திகாலைப் பனித்துளிகளை மறைய வைக்கும் பணியிலமர்ந்து கிழக்கிலிருந்து மேற்குக்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்குமென்று சலிக்காது சம இடைவெளியில் சென்று வந்து கொண்டிருந்த சூரியனும்,

நாட்காட்டியில் பிறையிலக்கங்களுக்கு ஏதுவாய் வளர்ந்துகொண்டும் தேய்ந்துகொண்டும் சென்று ஒருநாள் மறைந்தும் ஒருநாள் முழுவதும் மிளிர்ந்தும் உலகே நிமிர்ந்து பார்க்க, விண்மீன் பட்டாளத்துடன் பவனி வரும் சந்திரனும்,

முகில்களின் மாநாட்டையும் வால் நட்சத்திரங்களின் சீற்றத்தையும் பிரமிக்க வைக்கும் தன் நிற மாற்றங்களையும் என தன்னைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்தவாறு பரந்து விரிந்திருந்த ஆகாயமும்,

மீனினத்தை வாழவிட்டுப் பார்த்தபடி அலைகளைத் துடுப்பாயும் உப்புக் காற்றைப் பந்தாயும் பாவனை செய்து விளையாடியபடி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்த கடலும்,

வாரநாட்களில் அதிகமாக வெறிச்சோடிப் போயும் வார இறுதிகளில் கலகலவென்றும் நேரம் கடத்தியவாறு தன்னைத் தேடி வரும் தவித்த மனங்களின் தலைதடவி ஆசுவாசப்படுத்தும் கடற்கரையும்,

ஓலைக் கூந்தலுக்கு மத்தியில் தேங்காய்களால் அலங்காரம் செய்துகொண்டு பெருமிதமாகத் தலையை ஆட்டி அசைத்தவாறு அழகாக வளைந்து வளர்ந்தபடி நின்றிருக்கும் தென்னங் குமரிகளும்,

அலைக் கரங்களால் கரைநோக்கியும் கரையினால் கடல்நோக்கியும் தள்ளப்பட்டவாறு எவ்விதப் பலனும் எதிர்பாராது அங்கு வருவோரைத் தழுவித் தழுவி இதமளிக்கும் தென்றலும்

என்று எல்லாம் அதனதன் பாட்டில் சின்னஞ் சிறு மாற்றங்களுடன் வழமைபோன்றே செயற்பட்டுக் கொண்டிருக்க, அந்தப் பகுதியிலிருந்த ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி மட்டும் தன் இறக்கைகளை விரித்து உலா வருவதற்கென்றே நேரம் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது, ஆலியா மக்கீன்!

ஆஸிமாவின் கட்டளைப்படி அவள் மீண்டும் விஞ்ஞான வகுப்புக்களுக்குச் செல்ல ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்கள் கடந்திருந்தன.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now