பாப்பா எப்ப வரும்

Start from the beginning
                                    

முல்லை: இந்த வீட்டில இன்னும் இரண்டு பேர் இருக்காங்கல.... அவங்கல செய்ய சொல்லுங்க

தனம்: அதெல்லாம் முடியாது

முல்லை: கதிர் இனி தனியா மூட்டை தூக்கி கஷ்டப்பட்ட மாட்டான்..... அதுக்கு வேலைக்கு ஆள் வச்சுக்கோங்க

தனம்: அசால்ட்டா சொல்ற ஆள் வேலைக்கு வைங்கனு. அதுக்கு எவ்வளவு சம்பளம் ஆகும் தெரியுமா.

முல்லை: நீங்களும் அசால்ட்டா சொல்றீங்க கதிர மூட்டை தூக்க சொல்லி.... அவன் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா..

அது தெரிஞ்சாலும் நீங்க தெரியாத மாதிரி தான இருப்பீங்க..

தனம்: முல்ல ரொம்ப பேசுர

முல்லை: ஆளுக்கு சம்பளம் குடுக்க முடியலன உங்க புருஷன மூட்டை தூக்க சொல்லுங்க

தனம்: முல்ல.... என்ன பேசுர

லெட்சுமி: போதும் நிறுத்துங்க....

கதிரு நீ தனியா இனி இத செய்யாத...

எல்லா பசங்களும் எனக்கு ஒன்னு தான்..
ஒரு பிள்ளைக்கு மட்டும் கஷ்டம் தந்து மத்த பிள்ளைங்க நல்லா இருந்தா நா நல்ல அம்மா இல்ல..
என்னோட எல்லா பிள்ளைங்களும் நல்லா இருக்கனும்...

மூர்த்தி மூனு பேரும் சேந்து உங்களால முடிஞ்ச அளவு மூட்டைய இறக்குங்க...

கூட கொஞ்சம் ஆள வேலைக்கும் வைச்சுக்கோங்க....

கதிர் தனியா இப்படி வேலை செய்யக் கூடாது...

அவனுக்கும் குடும்பம் இருக்கு...

யாருக்காகவும் அவன் உடம்ப அவன் கெடுத்துக்க கூடாது..

அவன நம்பி அவன் மனைவி இருக்கா... அவ ஆதங்கம் சரியானது தான்...

அவ புருஷன் கஷ்டப்படுறது அவளுக்கு கஷ்டமா இருக்கு..

இனி இந்த வீட்ல இந்த பிரச்சினை திரும்ப வரக்கூடாது.

தனம் நீ மறுபடியும் இந்த பிரச்சினைய கிளப்பாத புரியுதா...

கதிரு இன்னைக்கு கடைக்கு போகாத வீட்ல ஓய்வு எடுப்பா

கதிர்: முல்லையை பார்க்க

உன்னை விடமாட்டேன் (Stopped)Where stories live. Discover now