அவருக்கு பிடிச்சது

Začít od začátku
                                    

கதிருக்கு பிடிக்காது ஒரு உணவை மற்றவர்களுக்கு பிடிக்கும் என சமைக்க தயாராக

முல்லை: அது சமைக்க கூடாது

தனம்: ஏன் சமைக்க கூடாது

முல்லை: கதிருக்கு அது பிடிக்காது

தனம்: அவனுக்கு பிடிக்கலனா என்ன.. மத்தவங்களுக்கு பிடிச்சு இருக்குல

முல்லை: அவருக்கு பிடிக்காதத அவரு ஏன் சாப்பிடனும்

தனம்: அவன் எது குடுத்தாலும் சாப்பிடுவான்.. மத்தவங்க அப்படி இல்ல

முல்லை: மத்தவங்க அப்படி இல்லன... அவங்களையும் எது குடுத்தாலும் சாப்பிட நீங்க தான் சொல்லனும்... அத விட்டுடு என் புருஷனுக்கு பிடிக்காதத செஞ்சு அவர சாப்பிட சொல்றீங்க

தனம்: இங்க அப்படி தான்

முல்லை: பிடிச்சத சாப்பிட கூட என் புருஷனுக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா

தனம்: நா செய்றத தான் இங்க அவன் சாப்பிடனும்

முல்லை: அப்படி ஒன்னும் அவரு சாப்பிட வேணாம்

தனம்: அப்ப அவன சாப்பிடாம இருக்க சொல்லு

முல்லை: அவரு ஏன் சாப்பிடம இருக்கனும்...
வகை வகையா சமைக்க தெரிஞ்ச அவரு பொண்டாட்டி நான் இருக்கும் போது..

தனம்: நீ சமைக்க போறியா..

முல்லை: ஆமா..

தனம்: இந்த வீட்ல நா மட்டும் தான் சமைப்பேன்

முல்லை: உங்கள யாரு சமைக்க வேணாம்னு சொன்னா

தனம்: அப்புறம் நீ சமைக்குறனு சொன்ன

முல்லை: நா என் புருஷனுக்கு தான் சமைக்குறேனு சொன்னேன். உங்கள சமைக்க வேணாம்னு சொல்லல

தனம்: ஒரே வீட்ல இரண்டு சமையலா..

அத்த...

லெட்சுமி: ஏன் தனம் கத்துற

தனம்: அவ சொன்னத கேட்டிங்களா

லெட்சுமி: அவ சரியா தான் சொல்றா

தனம்: அத்த.... குடும்பம் பிரிஞ்சுடும்..

லெட்சுமி: நீ அவ சொன்னப்பவே... கதிருக்கு பிடிச்சத சமைக்குறேனு சொல்லி  இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது.

உன்னை விடமாட்டேன் (Stopped)Kde žijí příběhy. Začni objevovat