அத்தியாயம் 14

2.3K 85 4
                                    

ஆண்கள் அனைவரும் அங்குள்ள சோபாவில் அமர்ந்து இருக்க சாதனா தன் அண்ணன் அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தாள். தோழிகள் அனைவரும் அங்கங்கே நின்று இனி நடக்கப் போவது என்ன என்ற ரீதியில் காத்துக்கொண்டிருந்தனர். தர்ஷன் ராஜி வருவது தெரிந்தவுடன் அவள் கண்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டான். இதை அனைவரும் கவனித்தாலும் அவன் மறைந்து நிற்பதே நல்லது என்று நினைத்து அமைதி காத்தனர். வெளியே நின்ற வேலை காரரிடம் ராஜி "அண்ணா உள்ள ருத்ரன் இருக்காரா" என்று கேட்டாள்.

அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் மிகவும் விசுவாசமான நபர்கள் ஏனோ அந்த நல்ல மனிதருக்கு ராஜியை பார்த்தவுடன் பிடிக்காமல் போனது இருந்தாலும் வீட்டுக்கு வந்தவரை வெளியே அனுப்புவது நல்லது அல்ல என்று எண்ணிக்கொண்டு "ஆமா உள்ள தான் இருக்காங்க போய் பாக்கணும்னா போய் பாருங்க" என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த ராஜி உள்ளே சென்றாள்.

அவர்கள் அனைவரும் இருக்குமிடம் வரும்போதே தன்னுடைய சகோதரன் மற்றும் மாமன் மகன்களை பார்த்தவள் என்னவெல்லாம் பேச வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு வந்தாள். அவளுடைய பாவமான முகத்தை பார்த்து சாதனா ருத்ரன் சக்தி சத்யா பாலா மற்றும் அசோக் விக்னேஷ் என அனைவர் முகத்திலும் ஒரு ஏளன சிரிப்பு வந்தது. ஆனால் அதை ராஜி பார்ப்பதற்கு முன்பு மறைத்துக் கொண்டனர்.

ராஜிக்கு தெரிந்தவரை ருத்ரன் குடும்பம் மிகவும் நல்லவர்கள் யாருக்கும் எந்தவித தீமையை செய்ய நினைக்காதவர்கள் அதனால் தன்னுடைய வாழ்வு பறிபோய் விட்டதாக கூறினால் நிச்சயமாக நாம் நினைத்ததை சாதித்து விடலாம் என்று நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து மனதில் சிரித்துக்கொண்டே அவர்கள் இருக்குமிடம் அடைந்துவிட்டாள்.

ருத்ரன் சக்திக்கு கண்காட்ட அதை புரிந்து கொண்ட சக்தி வேகமாக அருகே சென்று "நீ எதுக்காக இங்க வந்த ஏற்கனவே இங்கு எல்லாருடைய நிம்மதியையும் மொத்தமாக சுருட்டிகிட்டு தான போன இப்போ இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துட்டு போக வந்தியா நாங்க எல்லாரும் நடந்த விஷயத்தை எல்லாம் மறந்துட்டு நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கோம் மறுபடியும் அந்த நிம்மதியை எங்க கிட்ட இருந்து பறிக்காதே" என்று கோபமாக கூறினான்.

என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)Where stories live. Discover now