தேடல் - 25

Start from the beginning
                                    

" வாடை சேரும் பேராழி
நியாபகங்கள் ஆறாய் சிதறி
தூங்கப் போகும் செல்லம் யார்
விடைகள் ஏந்தும் ஆறை பார்

இந்த நீரில், நீ போனால்
தீர்வு காண, பாதை உண்டாகும்
மூழ்கி உள்ளே திளைப்பாய்
நீ ஆழம் போனால், தொலைவாய்

அவள் பாடுவாள் நீ கேட்பாயா?
அங்கங்கே பார் அவள் மாயங்கள்
பயம் தோன்றினால் உடைப்பாயா?
அவளை நீ எதிர்கொள்வாயா?

வாடை சேரும் பேராழி
அங்கொரு அன்னை நினைவாய் உலவி
எல்லாம் தொலைந்து போனாலும்
மீண்டும் வந்து, உன் கை சேரும் " என அப்பாட்டு முடிவடையவும் யாரி சத்யாவின் நெஞ்சிலே கண்கள் மருகி உறக்கத்தை தழுவ ப்ரஜின் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த டிவினின் தோளிலே சாய்ந்து உறங்கியிருந்தான்...

சக்தி தன் மகள் உறங்கி விட்டாளா என பார்க்க அவன் மகளோ அவனை மார்த்து கை தட்டி மற்றொரு பாட்டை போட கூறினாள்...

சக்தி : என்ன குட்டிமா நீ தூங்க டைமாச்சு பேபி என தூக்கி பாவமாய் கூற சனாயா கண்டு கொண்டதை போலே இல்லாமல் அவன் தலை முடியை பிடித்து இழுக்க சரியாக நிரன் வினயோடு உள்ளே வந்த அஜிம்சனா " குட்டி சனா " என ஓடி வந்து சனாயைவை தூக்கி கொண்டாள்...

அஜிம்சனா : குட்டி சனா... இங்க பாரு இங்க பாரு... நான் தான் பெரிய சனா.. என் செல்லமே... என்ன பாரு டி நா வந்ததுலேந்து நீ தூங்கிக்கிட்டே இருக்கியே... இங்க பாரு இங்க பாரு அப்பா முடில விளையாடுவோமா... ஹான் கார் ஓட்டலாம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என சக்தி கத்த கத்த கேட்காமல் அவ்விரு சனாக்களும் சக்தியின் தலையை பிடித்து கொண்டு கற்பனை கார் ஓட்டத் தொடங்கியிருந்தனர்...

சனாயா சிரித்து சிரித்து அஜிம்சனாவின் கூந்தலோடு விளையாட அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே யாரியை ப்ரஜினோடே கட்டிலில் படுக்க வைத்த சத்யா நிரனின் பரிசோதனையை பற்றி கேட்க தொங்கினான்...

வினய் அங்கு நடந்ததை கூறி பெருமூச்சு விட டிவினும் சக்தியும் நீண்ட சிரிப்பலையை எழுப்பியடங்கவும் சத்யா மெடர்மான் மற்றும் அல்ற்றா மூன் நாயகர்களுக்கும் உரிமை படிவங்களெடுக்க முடிவு செய்தான்...

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)Where stories live. Discover now