யாதிரா (COMPLETED )

By GuardianoftheMoon

16.6K 907 207

29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல்... More

டாட்டா 2020
யாதிரா - 1
யாதிரா -2
யாதிரா - 3
யாதிரா - 4
யாதிரா - 5
யாதிரா - 6
யாதிரா - 7
யாதிரா - 8
யாதிரா - 9
யாதிரா - 10
யாதிரா - 12
யாதிரா - 13
கொஞ்சம் பேசட்டுமா?

யாதிரா - 11

827 54 8
By GuardianoftheMoon

அதன் பின் ஆல் வெல் மருத்துவமனையில் ஒவ்வொரு முறை போன் அடித்தாலும் யாதிராவின் மனம் படபடத்தது. ஆனால் வருண் அல்ல. வருண் மீண்டும் போன் செய்ய மூன்று நாட்களாயின.

"மிஸ்டர் வருண், எப்படி இருக்கீங்க?"

"டாக்டர், நீங்க சொன்ன மாதிரி என்னோட ரோலை(role) செகண்ட்(second) ஹீரோவுக்கு விட்டுக்கொடுத்துட்டேன். நான் படத்துல அரை மணி நேரம் வந்தாலும் ஆச்சரியம் தான்."

"ம்ம்ம். அடுத்த மூனு நாள் என்ன பண்ணீங்க?"

"தூங்குனேன். பசித்தபோது சாப்பாடு ஆர்டர் செய்தேன். நல்லா தான் இருக்கேன்."

அவனின் பதில் அவன் நன்றாக இல்லை என்பதை சொன்னது.

"வாக்கிங்?"

"வீல்சேர் இல்லாம என்னால ஒரு கிலோமீட்டர் கூட நடக்க முடியாது. வீல்சேர்ல போக எனக்கு இஷ்டம் இல்ல, பரிதாபமா பார்ப்பாங்க." வலியை விட சுயமரியாதை குத்தியது.

"சரி வருண். வீல்சேர் இல்லாமல் 500 மீட்டர் நடந்துட்டு வாங்க"

"ம்ம்ம்"

"நீங்க என் கிட்ட பொய் சொல்லல, உங்க கிட்டயே பொய் சொல்லுறீங்க. வாக்கிங் போங்க. அதோடு வழில ஒருத்தருக்கு 50 ரூபாய் பிச்சை போடுங்க. டாக்டராக சொல்றேன் இதுவும் உங்களோட ப்ரிஸ்கிரிப்ஷன்(prescription) தான். போனை வச்சிடுறேன்." வருண் எப்படியாவது யாரிடமாவது பேச வேண்டும், இன்னொரு மனிதனைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்பதே யாதிராவின் ஆசை. தனியாய் தொலைந்த ஆட்டை(goat) இவள் தான் மந்தையில் சேர்க்க வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் வருணுக்கு வெளியில் போக விருப்பம் இல்லை. தூக்கமும் உணவும் சௌகரியமாய் அவனை சூழ்ந்திருந்தன. ஆயினும் எப்பொழுது போன் செய்தாலும் தனக்காக போன் எடுத்து நல்ல விதமாக பேசும் அவளுக்காகவாவது இதை செய்யவேண்டுமென தோன்றியது. தன்னைப் பற்றி யோசிக்கும் அம்மனதுக்காக முதல் முறையாக 6 நாட்களுக்குப் பின் வீட்டிலிருந்து காலடி எடுத்து வைத்தான். ஒரு கிழவர் அவனை ஓவர்டேக் செய்த காமடியும் நிகழ்ந்தது. அவள் சொன்னது போல் வீட்டிலிருந்து 500 மீட்டர் நடந்து மெயின் ரோடுக்கு வந்தான். இப்போது பிச்சைக்காரனைத் தேட வேண்டும். தூரத்தில் தெரிந்த டீ கடையின் அருகே கண்டிப்பாக பிச்சைக்காரர்கள் இருப்பர் ஆயினும் நடக்க மாச்சலாக இருந்தது.

யாதிராவின் மாஸ்க் போட்ட முகம் தோன்ற காலை இழுத்துக்கொண்டு நடந்தான் டீ கடைக்கு. எதிர்பார்த்தது போல் அங்கே ஒரு பிச்சைக்காரன் இருக்க அவன் தட்டையில் 50 ரூபாயைப் போட்டு வாழ்த்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.

அடுத்த நாள் ஆல் வெல் மருத்துவமனையில் அலைப்பேசி அடித்தது.

"எப்படி இருக்கீங்க வருண்?"

"இருக்கேன். வாக்கிங் போனேன். பிச்சை போட்டேன். ஆனா பட வாய்ப்பு எதுவும் வரல."

யாதிரா அவன் பதிலைக் கேட்டு சிரித்தாள். "சரி, இன்னைக்கு 600 மீட்டர் நடந்து 100 ரூபாய் பிச்சை போடுங்க. எல்லாம் உங்கள தேடி வரும்."

"நடுத்தெருவுக்கு போ நு சொல்றீங்க"

"காசு இல்லைன்னா சொல்லுங்க, நான் அனுப்புறேன். பேஷண்ட் கிட்ட காசு இல்லைன்னா சொந்த காசுல மருந்து வாங்கி போடுறது மாதிரி இதுவும்."

"அதுலாம் இருக்கு டாக்டர்"

"வரும் வருண். நம்புங்க"

இன்று மீண்டும் மெயின் ரோட்டின் டீ கடைக்கு சென்றால் அங்கு அதே பிச்சைக்காரன் தன் நண்பனைக் கூட்டிவந்திருந்தான். 50 ரூபாய் பிச்சைப் போடக் காரணமிருக்கும் என யூகித்தவன் இச்சந்தர்பத்தை வீணாக்காது மீண்டும் வந்திருந்தான்.

"என்ன, தோஸ்தா?"

பிச்சைக்காரன் சிரித்தான். ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்து டீயும் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு திரும்பினான் வருண். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் ஆல் வெல் மருத்துவமனைக்கு போன் வந்தது. அவனின் அன்றைய செயல்களைக் கேட்டுவிட்டு, அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு ஒரு புதிய டாஸ்க் கொடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் போனை வைத்தாள் யாதிரா. உடம்பு குணம் ஆக ஆக அதிக தூரம் நடக்க சொன்னாள். பின் சைக்கிள் ஓட்ட சொன்னாள். டிரைன் ஸ்டேஷனில் நிற்க சொன்னாள். 4 கிலோமீட்டர் நடந்து ரோட்டுக் கடையில் சாப்பிட சொன்னாள். பீச்சில் சுண்டல் விற்பவனுக்கு உதவ சொன்னாள். ஒரு முறை மும்பையில் தமிழ் ஆள் ஒருத்தருடன் உரையாட சொன்னாள்!

இளையராஜா பாட்டு ஒன்றை ஸ்பீக்கரில் போட்டு டிரைன் ஸ்டேஷனில் ஒரு பென்ச் இல் உட்கார்ந்தான் வருண். இதைத் தவிர வேறு எப்படி தமிழ் ஆளைக் கண்டுப்பிடிப்பதென தெரியவில்லை.

"தமிழா?" ஐந்து நிமிடங்கள் எடுத்தன.

"ம்ம்ம்"

"இங்க உட்கார்ந்து பாட்டு கேட்குறீங்க."

"எல்லா இடத்துலயும் ராஜா பாட்டு கேட்கலாம்."

எவ்ளோ நாள் ஆச்சு தமிழ்ல பேசி என்றவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டான். இவ்வாறாக யாதிரா அவனை மக்களோடு பின்னிப்பினைத்தாள். அதுவும் சாதாரண மக்களுடன் அவனை இணைத்தாள். அவனின் தனிமையை துரத்தினாள்.

யாதிரா சொல்லாமலேயே வருண் வெளியே செல்ல ஆரம்பித்தான். பின், அவனை சினிமா துரை நண்பர்களைக் காணுமாறு கேட்டுக்கொண்டாள்.

"எப்படி டாக்டர்? 5 படம் பண்ண வேண்டியவன் இப்ப ஒரு படம் கூட கைல இல்லாம அவங்க முன்னாடி போய் நிக்க முடியும்? என்னோட தோல்விய குத்திக்காட்டிட்டாங்கன்னா?"

"அவங்க குத்திக்காட்ட மாட்டாங்க. உங்களுக்கு தான் அப்படி தெரியுது மிஸ்டர் வருண். ஜஸ்ட் ஒரே ஒரு சினிமா துரை நட்பை போய் பாருங்க."

தனது முதல் படத்தின் கேமரா மேன் ஆக இருந்தவருக்கு போன் செய்து அவருடன் டின்னர் சாப்பிட்டான். அவனுக்கு குருவாக, guardian angel ஆக, நண்பராக, அவ்வப்போது தந்தையாகவும் இருப்பவர் அவர். நீ நல்லா வருவடா என வாழ்த்தி கண் கலங்கி அவனுக்கு ஆறுதல் அளித்தார். எல்லா சந்திப்பும் இப்படி இனிப்பாய் இருந்ததென பொய் சொல்ல விருப்பம் இல்லை, கசப்பும் கலந்திருந்தது. பணம் இருந்தால் மரியாதை தரும் உலகமிது. வெறுங்கையுடன் வருபவனை தட்டிக்கழித்தவர்களும் இருந்தனர்.

ஒவ்வொரு நாளும் ஆல் வெல் மருத்துவமனையில் அடித்த போன் இப்பொழுது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அடித்தது.

நான்கு மாதங்கள் கழித்து வருண் நடித்திருந்த டபுள் ஹீரோ படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அவன் திரையில் முதல் 30 நிமிடங்கள் வந்தான் இருப்பினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தான் அவனின் கதாபாத்திரம் மூலம். அதற்கு பின் சில இயக்குனர்கள் வருணை அணுக கஷ்டப்பட்டு கிட்டிய வாய்பை ஒழுங்காக பயன்படுத்தும் நோக்கத்தில் ஒரே ஒரு கதையை மட்டும் தெரிவு செய்தான். எப்பொழுது தயாரிப்பாளர் பிடித்து ஷூட்டிங் நடக்குமென அவனுக்கு தெரியவில்லை ஆனால் நல்ல கதை என அக்கதையை இறுக பிடித்துக்கொண்டான்.

"டாக்டர் யாதிரா, இப்படத்துக்காக வெயிட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த படம் ஸ்கிரிப்ட்லயே நின்னுடுமோ நு பயமா இருக்கு."

"மிஸ்டர் வருண், நல்ல முடிவா நு சினிமா துரைல இருக்கிற உங்களுக்கு தான் தெரியும். ஒரு முறை வீழ்ந்தவன் மறு தோல்விக்கு அஞ்சமாட்டான். இந்த படம் என்ன ஆகுனாலும் நீங்க தைரியமா அடுத்ததை சந்திக்கனும்."

"ம்ம்ம். அப்புறம் டாக்டர், முன்னாடி டெய்லி போன் பண்ணேன். இப்போ வாரத்துக்கு ஒரு தடவ போன் பண்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க"

"தன்னோட பேஷண்ட் குணமாகி வீட்டுக்குப் திரும்பினா டாக்டருக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இல்ல. நீங்க உங்க வாழ்க்கைக்கு திரும்புவது எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம்."

யாதிராவை சந்தித்து கிட்ட தட்ட ஐந்து மாதங்கள் ஆகியிருக்கும் இருந்தும் அவள் பேஷண்ட் - டாக்டர் உறவைக் கண்ணியமாகக் கட்டிக்காத்தாள். ஒரு விதத்தில் அது சந்தோஷமாக இருந்தாலும் இருவருக்கிடையில் தூரம் நீண்டதும் கசந்தது. வருணால் என்ன சொல்ல முடியும்? சொன்னாலும் யாதிரா ஏற்கப்போவதில்லை.

வருண் போனை வைத்தான்.

Continue Reading

You'll Also Like

365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
184K 6.1K 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடி...
101K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom