யாதிரா (COMPLETED )

By GuardianoftheMoon

16.9K 911 207

29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல்... More

டாட்டா 2020
யாதிரா - 1
யாதிரா -2
யாதிரா - 3
யாதிரா - 4
யாதிரா - 5
யாதிரா - 6
யாதிரா - 8
யாதிரா - 9
யாதிரா - 10
யாதிரா - 11
யாதிரா - 12
யாதிரா - 13
கொஞ்சம் பேசட்டுமா?

யாதிரா - 7

961 55 13
By GuardianoftheMoon

"இது நீங்க தானே?"

"இல்ல என் தங்கச்சி. தெரிஜ்சுட்டே கேட்குறீங்க மிஸ்டர் வருண். ரொம்ப கஷ்டப்பட்டு தேடுனீங்களோ?" நக்கலாய்க் கேட்டாள் யாதிரா.

"ஆமாம். நீங்க எப்போதும் இந்த மாஸ்க் போட்டிருக்கீங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது அதான் கூகிள் கிட்ட கேட்டேன் மிச்ச முகத்தைக் காட்டுன்னு. சரி இந்த மாஸ்க் ஐ எடுக்கவே மாட்டீங்களா?"

"மிஸ்டர் வருண் இது என் உயிர் காக்கும் மாஸ்க். எடுக்க முடியாது."

"ஜஸ்ட் முகத்தைக் காட்ட கூடவா?"

"முகம் முக்கியமா உயிர் முக்கியமா நு நீங்களே சொல்லுங்க. நீங்க தனி ரூம்ல ராஜா மாதிரி இருக்கீங்க சோ கோரோணா உள்ள யாரையும் நீங்க மீட் பண்ண போறதில்ல. ஆனா எனக்கு ரிஸ்க் அதிகம். தினமும் புதிய ஆட்களைப் பார்க்குறேன்."

"தனிக் காட்டுக்கு ராஜாவாக இருப்பது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா?" தன்னையும் மீறி வார்த்தைகள் கொட்டின வருணிடமிருந்து.

நிலவை மறைக்கும் மேகமாய் கலகலப்பாய் போய்க்கொண்டிருந்த உரையாடல் திடீரென தடம் மாறியது.

"ஐம் சாரி டாக்டர்."

"கஷ்டத்தை சொல்ல எதற்கு சாரி? பகிர்துக்க தான் மனுஷங்க இருக்காங்க. ஒன்னு கேட்கலாமா, விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்க."

"கேளுங்க."

"ஏன் உங்கள பார்க்க அம்மா அப்பா யாரும் வரல? ரிகவரிக்கு மருந்து விட குடும்பமும் நண்பர்களும் முக்கியம்"

"ப்ர்ண்ட்ஸ் வரல. நான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன். எந்த ப்ரெண்ட் உண்மையா பார்க்க வருகிறான் எவன் மீடியாவுக்கு ஸ்கூப்(scoop) சேகரிக்க வருகிறான் என தெரியவில்லை. குடும்பம்... உங்களுக்கு தான் அம்மாவ தெரியுமே"

"பாடகி வைதேகி. தமிழர்களுக்கு நல்லா தெரிந்தக் குரல்!"

"ஆமாம். அம்மாவுக்கு டிமன்சியா(Dementia). அதுனால அவங்கனால தனியா வர முடியாது. அப்பாவுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை."

பிரபல படத் தயாரிப்பாளரின் மகன் வருண் என யாதிராவுக்கு தெரியும் ஆனால் இருவரிடையில் பேச்சு வார்த்தை இல்லை என்பது புதிய தகவல்.

"தனிமையும் நோய் தான் மிஸ்டர் வருண்."

"இத்தனை வருஷம் நான் என்னைய தனியா தான் பார்த்துக்கிட்டேன். இனிமேலும் அப்படி தான்." வருணின் பதில்  இவள் நைட் ஷிப்ட் போகிறாளென சூடாக ப்ளாஸ்கில்(flask) டீ போட்டுக் கொடுத்த அம்மா சட்டென முன்வந்து நின்றாள்.

"ஒரு நிமிஷம் வருண்," என சொல்லிவிட்டு யாதிரா ஸ்டாப்(staff) அறைக்கு சென்று அம்மா கொடுத்த ப்ளாஸ்க்கை கொண்டு வந்தாள்.

"இந்தாங்க இஞ்சி டீ. என் அம்மா ஒரு ப்ளாஸ்க் நிறைய போட்டுக் கொடுத்தாங்க," என ஒரு பிளாஸ்டிக் கப் ஐ நீட்டினாள்.

இங்கேயே இருக்கட்டுமென அப்பூ போட்ட ப்ளாஸ்க்கை அவன் தலைமாட்டில் வைத்துவிட்டு தன் இதர பணிகளைக் கவனிக்கச் சென்றாள் டாக்டர் யாதிரா. சூடான தேனீர் தொண்டையை நனைக்க எங்கோ ஒரு அம்மா பாத்திரத்தில் பால் காய்ச்சும் பிம்பம் மங்கலாய் மனதில் தோன்றியது வருணுக்கு. இன்னொரு மொடக்கு குடித்ததும் அம்முகம் திரும்பி பார்த்தது, இவனின் அம்மா தான்.

"என் தங்கம், ஏன் டா வயித்த பிடிச்சுட்டு நிக்கிற?" கண்ணீர் கண்களில் தெரியும் பிம்பத்தை மீண்டும் மங்கலாக்க சுய நினைவுக்குத் திரும்பினான். தன் தாய் தன்னை அடையாளம் கண்டு எத்தனை வருடங்களாகி இருந்தன என பெருமூச்சுவிட்டான். அம்மாவைப் பார்க்க ஆசையாய் இருப்பினும் அங்கு அவர் முன் வந்து வருண் நின்றால் அம்மா ஒன்றும் அணைத்து முத்தமிட்டு வரவேற்கப்போவதில்லை. ஆனால் என்ன மாயமோ அப்பாவை மட்டும் நியாபகம் வைத்திருந்தாள். விதி இரக்கம் பார்க்கவில்லை.

நான்காம் நாள்

இரவு 8 மணிக்கு தொடங்கிய யாதிராவின் பணி காலை எட்டு மணிக்கு முடிய கண்ணைக் கசக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். காலையிலேயே மருத்துவமனையிலிருந்து கிளம்பும் முன் வருணிடம் தான் அடுத்த நாள் காலையில் பணிக்கு திரும்புவேன் என சொல்லிவைத்தாள். இல்லையெனில் மீண்டும் டீனுக்கு போன் செய்துவிடுவானே!

ஆட்டோவிலிருந்து இறங்கும்போது ஸ்கூல் வாகனத்துக்காக காத்திருந்த பிள்ளைகளுக்கு பிரேக் டைமில் சாப்பிடுங்களென ரகசியமாய் ஆளுக்கொரு சாக்லட்டை கொடுத்து கிஸ் வாங்கிக்கொண்டாள். வழக்கம்போல் குளித்து முடித்து வரும்போது அம்மா கூப்பிட்டார், "எங்கடி ப்ளாஸ்க்? திரும்ப தொலைச்சிட்டியா?"

"இல்ல மா. என்னைவிட இன்னொருத்தருக்கு உன்னோட டீ தேவைப்பட்டது. அதான் கொடுத்தேன். நாளைக்கு காலைல திரும்ப வாங்கிடுறேன்." அம்மாவின் குரல் கேட்கையில் யாதிராவுக்கு அங்கு தனி மரமாய் திடமாய் வீம்பினால் விட்டுக்கொடுக்காது உட்கார்ந்திருப்பவன் நினைவுக்கு வந்தான். அம்மாவிடம் கதையாய் கொட்ட ஆசை ஆனால் பேஷண்ட் பற்றி யாரிடமும் பேச முடியாததால் அம்மாவைக் கட்டிப்பிடித்துவிட்டு எதுவும் சொல்லாமல் மெத்தையில் சாய்ந்தாள். மனதின் குமுரல்களை தணிக்கவே தூக்கம் மருந்தானது.

யாதிரா துயில் கொள்ள அங்கு வருண் பதற்றத்தில் தூங்க இயலாது காலை 6 மணியிலிருந்து விழித்திருந்தான். ஆடி அசைந்து பத்து மணிக்கு வந்த மேனேஜர் இவனின் கடுகடுத்த முகத்தைப் பார்த்து அன்நாளின் போருக்குத் தயாரானார். முதல் நாள் ஹாட் நியூஸான வருண் இப்பொழுது ஆறிப்போன நியூஸாகிவிட்டான். அவனை ஒப்புதழ் செய்த படங்களில் இந்த நடிகன் நடிப்பானா இல்லை அந்த நடிகன் நடிப்பானா என நியூஸ் வர ஆரம்பித்தது. படுக்கையில் இருப்பவனுக்கு அனுதாபம் கிடைக்கும் வேலைக்கிடைக்காது என தெரிந்தவனின் மனம் பதறியது. முழு மூச்சாய் ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு நடித்துக்கொடுத்து ஆடியோ லான்ச்இல் கைக் காட்டி ரசிகர்களுடன் செல்பி எடுத்து அல்லல்பட்டு ஸ்டார் ஆகியிருந்தான் வருண். எல்லாம் கைக் கூடும் நிலையில் கனவுகள் கரைவதை கண்கள் எப்படி காண முடியும். ஹிந்தி படத்தில் மகனைக் கண்டுக்கொள்ள முடியாத தாய் அவளின் தாய்மொழி தமிழில் படம் நடித்தால் அடையாளம் கண்டுக்கொள்வாள் அல்லது ரசிக்கவாவது செய்வாள் எனும் சிறு ஆசையில் தமிழ்னாட்டிற்கு வந்திருந்தான் வருண். புதிய முயற்சி அவனின் எல்லா முயற்சியையும் அஸ்தியாக்கிவிடும் என அவன் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

முதல் இரு நாட்கள் நச்சரித்த போன் இன்று செவிடன் காது போல் மூடிக்கொண்டிருந்தது. எப்பொழுது ரிகவரி எனக் கேட்ட ப்ரொடியூசர்களும், டைரக்டர்களும், கெட் வெல் சூன் என இன்ஸ்டாகிராமில் மென்சன் செய்த ஹீரோயின்களும் தத்தம் வேலைக்கு திரும்பினர். இவ்வுலகம் நின்றவனுக்கு, ஊனமுற்றவனுக்கு, மந்தமாய் இருப்பவனுக்கு ஒரு போதும் தன் வேகத்தைக் குறைக்காது கருணையின்றி சுழலும். உலக நியதிக்கு வருணும் கட்டுப்பட்டவன்.

எடுபிடி வேலைக்கும், கையொப்பத்திற்கும், போன் கால்களுக்கு மட்டுமென நினைத்திருந்த மேனேஜர் இப்பொழுது அவரின் பல வருட அனுபவத்தின் முனிவராய் தெரிந்தார்.

"என்ன பண்றது நு சொல்லுங்க சார். பண்ணிடலாம்."

ஒரு மனம் இவனின் நிலையை எண்ணி முன்வினையின் பயன் என சிரித்தாலும் இன்னொரு மனதால் இவனை உதாசீனப்படுத்த முடியவில்லை மேனேஜரால்.

"நீங்க இண்டர்வியூ கொடுங்க. ஹாஸ்பிட்டல் லேர்ந்து இண்டர்வியூ கொடுக்கிறது பெரிய ரீச். அப்புறம் சீக்கிரம் ரிகவர் ஆகிடுவேன்னு எனர்ஜியா பேசுங்க."

"சரி"

"மேக்-அப்(make-up) ஆர்டிஸ்ட் கூப்பிடுறேன். உங்க தோற்றம் பளபளக்கனும் அப்போதான் நம்புவாங்க."

"ம்ம்ம்"

பாலிவூட் இன் டாப் ஸ்டார்களில் ஒருவன் கிட்டும் சிறு வழியை வைத்து எதாவது செய்யும் இக்கட்டான சூழ்னிலைக்கு தள்ளப்படுவான் என நினைக்கவில்லை. நிற்காத உலகத்தில் நொண்டியாவது ஈடுகொடுக்கவேண்டும்.

Continue Reading

You'll Also Like

80.2K 10.1K 52
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
457K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
333K 9.6K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...