யாதிரா (COMPLETED )

By GuardianoftheMoon

16.9K 911 207

29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல்... More

டாட்டா 2020
யாதிரா - 1
யாதிரா -2
யாதிரா - 4
யாதிரா - 5
யாதிரா - 6
யாதிரா - 7
யாதிரா - 8
யாதிரா - 9
யாதிரா - 10
யாதிரா - 11
யாதிரா - 12
யாதிரா - 13
கொஞ்சம் பேசட்டுமா?

யாதிரா - 3

1.1K 60 19
By GuardianoftheMoon

பால்கனியில் டீ டம்ளருடன் நின்றவள் கீழே ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் காலனியின் ஒவ்வொரு பிள்ளைக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவர்களின் அம்மாவுடனும் பேச்சு வார்த்தையில் இருந்தாள். எல்லாம் அதே சளி, காய்ச்சல், உடம்பு வலி என்ன பண்றது யாதிரா எனும் கேள்விகள் தான். முடிந்த அளவுக்கு அவர்களை கிளினிக்(clinic) செல்லுமாறு கெஞ்சினாலும் வீட்டு அபார்ட்மண்டிலேயே ஒரு திறமையான டாக்டரை வைத்துக்கொண்டு வெளியே அலைய யாருக்கும் ஆசை இல்லை.

"அடுத்த காலனிக்கு நாம வீடு மாறுனா எம் மக பிஸியோதிரபிஸ்ட் இல்ல நர்ஸ் நு சொல்லிடு மா."

"சொல்றேன். இப்போ உப்புமா சாப்டு. லஞ்ச் பேக் பண்ணி வச்சிர்கேன். அப்பாவும் நானும் சந்தைக்கு போறோம்."

"ஒகே! டாட்டா! வரும்போது எனக்கு எதாவது வாங்கிட்டு வா," குழந்தைகள் பெரியவர்களைக் கேட்பது போல் யாதிராவும் கோரிக்கை வைத்தாள். உப்புமாவை முழுங்கிவிட்டு backpackஐ எடுத்துக்கொண்டு மீண்டும் ஓலா ஆட்டோவில் ஏறினாள்.

ஆல்-வெல் மருத்துவமனையின் வளாகத்தினுள் உள்ளே செல்ல முடியாமல் பல பத்திரிக்கையாளர்கள் வாசலில் இடம் பிடித்து நின்றனர். நேற்றையக் கூட்டம் குறைந்திருக்கும் என நம்பியவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும் உள்ளே செல்லும் ஆட்டோ இன்று வெளியே நிறுத்தப்பட்டது. செகியூரிட்டியிடம் தன் முகத்தைக் காட்டினாள் யாதிரா. "சாரி மா. இந்த நியூஸ் ஆளுங்களோட பைக், கார் எதுவும் உள்ள போகாம இருக்க எல்லா வாகனத்தையும் கேட் இலேயே நிறுத்த வேண்டி இருக்கு. நீ போ மா," என வழியனுப்பினார் செந்தில் அண்ணா.

நிறைந்திருந்த கூட்டத்தைக் கண்டு பிரமித்தாள், அதைவிட அதிகம் பதற்றமடைந்தாள் யாதிரா. நோயாளிகளின் பாதுகாப்புக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் பாதிப்பு உண்டாகுமே என எரிச்சல் அடைந்தாள். நைட் ஷிப்ட் டீம் எதையெல்லாம் கையாண்டிருக்குமோ என மூளை கணக்குப்போட்டது. அவளின் எண்ணங்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் நைட் ஷிப்ட் இன் ​​​​​Emergency Consultant , ரமேஷ், இவளிடம் வேலையை ஒப்படைக்க வந்தார்.

"எப்படி டாக் இருந்தது நைட் ஷிப்ட்?"

"சூப்பரா இருந்துச்சு!"

"என்ன சர்காஸமா?"

"ஹே.. இல்ல டாக். புது கேஸ் கம்மியா வந்துச்சு. ஏற்கனவே அட்மிட் ஆகியிருக்க யாரும் சீரியஸ் ஆகல. என்னாலயே நம்ப முடியல! இந்த மாதிரி ஒரு ஷிப்ட் நான் என் வாழ்க்கைல பண்ணதில்ல. கடவுள் இருக்கார் நு இப்போ நம்புறேன்!"

ஆம், டாக்டர் ரமேஷுக்கு வேலையின் மிக அமைதியான நாளாகவும் யாதிராவுக்கு மிக சுவாரஸ்யமான நாளாகும் அமைந்திருந்தது.

"அப்புறம், டீன் எதாவது கேட்டாரா வருண் கேஸ் பத்தி?"

"ம்ம்ம். நைட் அந்த ஆளு புல் அவுட். எழுந்திரிக்கவே இல்ல சோ டீன் கிட்ட ரிப்போர்ட் பண்ண எதுவுமில்ல. டீன் சொன்னாரு உன் கிட்ட தான் ரிப்போர்ட் கேட்கனும்னு."

"தலை 8 மணிக்கே வந்துட்டாரா?!!" யாதிராவின் கண்கள் விரிந்தன.

"அதான் சொன்னேனே... இன்று அபூர்வமான நாள் நு. அந்த நடிகன் இங்க இருக்கிறதால நிறைய சிக்கல் இருக்காம். அதான் வந்துட்டாரு சீக்கிரமே. நீ போய் பாரு."

"உங்களுக்கு தான் தெரியுமே. நான் ஹாஸ்பிட்டல்ல கால் வைத்ததும் பேஷண்ட்ஸ் ஐ ஒரு தடவ பார்த்துட்டு தான் மீட்டிங்க், ரிப்போர்ட் எல்லாம்னு."

"தெரியும் டாக்டர் யாதிரா. அவர்கிட்டயும் சொல்லிட்டேன் நீ 9 மணிக்கு அவர் ஆபீஸ் வருவன்னு."

"தாங்ஸ் ரமேஷ்! யூ ஹேவ் அ குட் ஸ்லீப் மேன்!"

"நைட் தூங்கிட்டேன். இன்னைக்கு ஊர் சுத்தலாம்னு இருக்கேன். டாட்டா!"

நமக்கும் தான் அதிர்ஷ்டம் நு ஒன்னு இருக்கே... ஐ மீன் இல்லையே, குதூகலமாய் சென்ற ரமேஷைக் கண்டு யாதிரா சிரித்தாள்.

மீண்டும் மாஸ்க், face shield, gloves என தன் பணியைத் தொடங்கினாள் யாதிரா. முக்கால்வாசி பேஷண்ட்ஸ் விழித்திருந்தனர். தாதியர்கள் காலை உணவு பரிமாறுவதும் சில சின்ன வேலைகளைப் பார்ப்பதுமாய் பம்பரமாய் சுழன்றனர். வழக்கம் போல் தூங்கிக்கொண்டிருந்தவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் ரிப்போர்ட் ஐ மட்டும் படித்துவிட்டு இரவு ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா என கண்காணித்துவிட்டு அடுத்த பெட் கு நகர்ந்தாள் யாதிரா. விழித்திருந்தவர்களிடம் இலையை தட்டி எழுப்பும் சூரியவொளியாய் மெல்லிய குரலில் அவள் கேட்டாள், "எப்படி இருக்கீங்க?" அவ்வொரு கேள்வி போதும் ஒரு மனிதன் தான் படும் சங்கடத்தையும் கவலையையும் கொட்ட. சிலரின் கவலையான பதில்களுக்கு ஆறுதல் அளித்தாள் அதோடு அவர்களின் கவலைகளையும் ஆராய்ந்தாள். எமெர்ஜன்சி வார்ட் முழுக்க தன் கருணையைக் கொட்டியதும் தனி வார்டில் தனியாய் இருக்கும் வருண் நினைவுக்கு வந்தான். சிக்கலை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

யாதிரா அவனின் அறைக்கு வெளியே நின்று கதவின் சிறு கிளாஸ் கண்ணாடியின் வழியே நடப்பவற்றை உற்றுனோக்கினாள் காரணம் உள்ளே நர்ஸ் ஹேமா நின்றார். வருணின் கைகள் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் நீண்டு பேசின. நேற்று அப்பா என நினைத்தவர் இன்று மேனேஜர் என புலப்பட்டது யாதிராவுக்கு. மேனேஜர் கைக் கட்டிக்கொண்டு கேட்க ஹேமா அவசரமாக காலை உணவு இருந்த தட்டை, கோப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளின் விரல்களில் ஒரு நடுக்கம் தெரிந்தது. டிராலியைத்(trolley) தள்ளிக்கொண்டு ஹேமா வெளியேற அங்கு யாதிரா நிற்பதைக் கண்டு பெருமூச்சு விட்டாள்.

"உங்கள திட்டுனாரா?" யாதிராவுக்கு தன் டீம்(team) இன் மேல் உள்ள பாதுகாப்புணர்வு தலைத்தூக்கியது.

"இல்ல டாக்டர். மேனேஜர தான் திட்டுராரு ஏன் இந்த மோசமான ஹாஸ்பிட்டல்ல வந்து சேர்த்த நு. அப்புறம் உங்கள திட்ட ரெடியா வார்ம்-அப் (warm up) பண்ணிட்டு இருக்காரு," ஹேமா எச்சரித்தாள்.

"ப்ப்ச்ச் அதுல்லாம் நான் பார்த்துக்குறேன்."

"எல்லாத்துலயும் குறைக் கண்டு பிடிக்கிறாரு மனுஷன்." ஹேமா புகார் அளித்தாள்.

"ஹே.. அந்த மனுஷன் என்ன நல்ல நிலமைலையா இங்க வந்திருக்கார். அடிபட்ட மனிதனின் வேதனை நமக்கு தெரியாது, அவங்களுக்கு தான் தெரியும். நீ போ, நான் பார்த்துக்குறேன்" யாதிரா கதவைத் தட்டி தன் இருப்பை உணர்த்தினாள்.

"குட் மார்னிங் மிஸ்டர் வருண். எப்படி இருக்கீங்க?"

பொறியில் சிக்கிய எலியை சும்மா விடுமா பூனை. "நீங்க தான் நேத்து டியூட்டில இருந்த டாக்டரா? Why am I receiving such poor treatment? I don't want to speak to you. Call your dean."

எல்லாம் எதிர்பார்த்தது தான். சற்று தள்ளி நின்று போனை எடுத்து டீனுக்கு அடித்து அவரிடம் விஷயத்தை சொன்னாள். பின், டீன் வரும்வரை தன்னால் எப்படியாவது உதவ முடியுமா எனக் கேட்டவளுக்கு அநாகரிகமாய் பதில் வந்தது, "ஒன்னும் புடுங்க வேண்டாம்". மேனேஜரும் யாதிராவும் தரையைப் பார்த்துக்கொண்டு அமைதியாய் காத்திருந்தனர். 

டீன் வந்ததும் தன் புகாரை முன் வைத்தான் வருண், "நான் வெளிய போயி உங்க ஹாஸ்பிடல்ல பேஷண்ட்டை கவனிக்க மாட்டேங்குறீங்கன்னு சொன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல. நீங்க எப்படி என்னைய தனி வார்ட் ல வைக்காம பத்தோடு பதினொன்னா எமெர்ஜென்சி வார்ட்ல வைக்கலாம்? என்னோட பிரைவஸிய பத்தி நினைக்கவேயில்ல. ஐ அம் அ ஸ்டார்(I'm a star)! இங்க பாருங்க உங்க டாக்டர் பண்ண வேலைய," என வருண் தனது போனைக் காட்டினான். அதில் ​​​​stretcherஇல் மயக்கத்திலும் வலியிலும் படுத்திருந்த வருணின் படம் தெரிந்தது. "எல்லா வெப்சைட் இலும் வந்துட்டு. இதுக்குதான் தனி ரூம்னு சொன்னேன். Who will answer for these photos leaked to the media?" வருணின் போனை எட்டிப் பார்த்த யாதிராவுக்குத் தூக்குவாரிப்போட்டது. மூர்த்தி இவனை தனி ரூமுக்கு தள்ள இவள் தான் கோரோனா டெஸ்ட் எடுக்காமல் அவனைக் கொண்டு செல்ல முடியாதென எமர்ஜென்சி வார்ட் இல் அட்மிட் செய்தாள். வருணின் stretcher ஐ சுற்றி நான்கு பேஷண்ட்ஸ் இருந்தனர். ஆனால் அவர்கள் வயசானவர்கள். ஹாஸ்பிட்டல் ஊழியர் அல்லது தாதி ஒருவர் தான் இப்படத்தை மறைமுகமாக எடுத்திருக்க வேண்டும் என யூகித்தாள்.

டீன் யாதிராவை பார்த்தார், "இவர் அட்மிட் ஆனதுமே தனி ரூம் நு சொன்னேனே, ஏன் போல்லோவ்(follow) பண்ணல?"

"சார், இவருக்கு கோரோணா..." அவள் சொல்லி முடிப்பதற்குள் டீன் குறுக்கிட்டார். "நீங்களா முடிவு எடுக்காதீங்க. நான் சொல்றத பண்ணுங்க அது போதும். சாரி சார். இவங்களோட immaturity and irresponsibility கு நான் பொறுப்பேத்துகுறேன். இனிமே உங்க முழு பிரைவஸிக்கு நான் கேரண்டி," மிக்ஸிக்கு கேரண்டி கொடுப்பதுபோல் டீன் சொன்னார். கஸ்டமர் திருப்திக்கு ஆட்டை பலி கொடுக்க வேண்டும் அல்லவா.

டீனின் மன்னிப்பில் குளிர்காய்ந்த வருணின் கோபம் இப்பொழுது தான் தன் உடல் நிலையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. "நேற்று என்ன நடந்துச்சு, என்ன சர்ஜரினு யாருமே எனக்கு இன்பார்ம்(inform) பண்ணல," வருண் தனது அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தான்.

"சொல்ல விட்டியா நீ? அதுக்குள்ள தான் டீன கூப்டு நு கத்திட்டியே," யாதிராவின் மைண்ட் வாய்ஸ்.

மறுபடியும் டீன் யாதிராவை நோக்கினார். எப்படி இருந்தாலும் வருண் தன் பேச்சைக் கேட்கப்போவதில்லை என தெரிந்தவள் வருணுக்கு புரியாவிடினும் பரவாயில்லை என மெடிக்கல் வார்த்தைகளில் டீனுக்கு முழு கேஸ் விவரங்களை ஒப்பித்தாள். அவளின் பதிலைக் கேட்டு திருப்தியடைந்த டீன் வருணிடம் திரும்பினார், "மிஸ்டர் வருண், உங்களோட எல்லா பிரச்சனையையும் solve பண்ணிட்டோம். எமெர்ஜன்சி உயிர் போகும்னு தான் சர்ஜரி செஞ்சாங்க டாக்டர் யாதிரா. அவங்க ரொம்ப திறமைசாலி சோ உங்களுக்கு எந்த post-op complicationsஉம் ஏற்படல. நீங்க ரிகவர் ஆனதும் டிஸ்சார்ஜ் ஆகிடலாம். இது என்னோட பர்ஸனல் போன் நம்பர். என்ன வேணும்னாலும் தயங்காம கால் பண்ணுங்க. மத்ததைலாம் நான் பார்த்துக்குறேன்," என டீன் மண்டையை ஆட்டிவிட்டு வெளியேறினார். டீன் நம்பர் தந்ததால் அமைதியான வருண் அவரிடம் மறு பேச்சு பேசவில்லை.

டீன் வெளியேறியதைக் கண்ட யாதிரா தானும் தன் இதர வேலைகளில் ஈடுபட எத்தணித்தாள். கதவைத் திறந்தவள் ஒரு நொடி தயங்கினாள். என்னமோ அவளைத் தடுத்தது. என்னமோ அல்ல, அவளின் மனசாட்சி. "ஷபா..இந்த மனசாட்சியோட குரலுக்கு odd பட்டன் இருந்தா நல்லா இருக்கும்," என நொந்துக்கொண்டு மீண்டும் வருணின் படுக்கை அருகே நின்றாள் எவ்வித சூடு, சொரணையும் இன்றி(இந்த மருத்துவம் படிக்க வந்ததுமே அதை அடகு வச்சாச்சு).

"மிஸ்டர் வருண், உங்க ஹெல்த் பத்தி உங்களுக்கு கவலைகள் இருக்கலாம். எதாவது கேள்விகள் இருந்தா கேளுங்க. பதில் சொல்ல நான் இருக்கேன். "

"Actually, I have a question" வருண் ஆரம்பித்தான்.

Continue Reading

You'll Also Like

206K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
48.9K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
238K 7.8K 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
333K 9.6K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...