விண்மீன் விழியில்..

By lilmisskupkake

72.1K 3.4K 1.3K

காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤 More

௧. காதல் ஏந்திய விழிகள்
௨. தேவை இந்த தேவதையே
௩. விடைக் காணா வினாக்கள்
௪. நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
௫. உடைகின்ற நெஞ்சமே
௬. விபத்தோ சதியோ
௭. கரையும் காதலே
௮. கண்ணீரில் உரையும் கனவே
௯. சிரிக்கும் இதழ்கள்
௧௦. மன்னிப்பாயா
11. ஏனென்றால் காதல் என்றேன்
12. காதல் துளைத்த காதலி
13. தடம் மாறுமொரு இதயம்
14. குழம்பும் குழப்பும் அவள்
15. அலையும் அறையும்
16. சீரானதோ வாழ்க்கை
17. ராகவின் வரவு
18. காதலற்ற கண்கள்
19. அழிவின் ஆரம்பமிதுவோ
20. நிஜத்தின் நிழல்
21. முகவரியில் முதல் வலி
22. மெய் கண்டுக்கொள்வாளா
23. நான்கு மெழுகுவர்த்தி
24. முடுச்சுகளின் ஆரம்பம்
25. மாமா உன் பொண்ண குடு
26. புகைப்படம்
27. உரையாடல்
29. எண்ணம் ஈடேறுமா
30. கல்யாண பேச்சு
31. புது உறவு, புதியவன்
32. கனல்
33. எதிர்பாறா அதிர்ச்சி
34. யாரந்த அவள்
35. அவள்
36. இருவர்
37. குறும்படம்
38. சொல்வதெல்லாம் உண்மை
39. நிழல் எதுதான்
40. நிஜம் இதுதான்
41. நிஜம் இதுதான் (ii)
42. சுயநலம் செய்த தவறு
43. இருவரின் முடிவு
44. முடிவின் விளைவு
45. தாரா

28. விழகும் திரை

1.1K 71 29
By lilmisskupkake

"அதுவும் சரி தான். நானும் இதை அவங்க கிட்ட சொல்லலை. நீங்களும் தெரியாம பார்த்துக்கோங்க." என்ற ரவி,

"சரி அப்போ நான் கிளம்புறேன் அங்கிள்." என்று சொல்லி விடைப்பெறவும், வாசலில் நின்றிருந்த ஆதிரா வேகமாய் பக்கத்து அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

இவ்விருவரின் உரையாடலும் ஏதோ மர்மமாய் இருக்கவும், ஆரவ் மாயாவிடமிருந்து அப்படி எதை இவர்கள் மறைக்க நினைக்கிறார்கள் என்ற கேள்வியோடு குறுக்கே நெடுக்கையும் நடந்தவளுக்கு சிறிது நேரத்திலேயே ராகவும் போனில் பேசிக்கொண்டே அறையைக் கடந்து செல்வது கேட்கவும் மூடிய அறையிலிருந்து வெறும் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தவள் ராகவ் சென்று விட்டதை உறுதிப்படுத்திக்
கொண்டு, மெல்ல பூனை நடைப்போட்டு அவரது அலுவலக அறையை நெருங்கியவள் கதவை தள்ளியவுடன் அது திறந்துக் கொள்ளவும், தனது அதிர்ஷ்டத்தை எண்ணி மனதுக்குள் நகைத்துக்கொண்டவள் உள்ளே நுழைய, அங்கு மேசையில் திறந்திருந்த மேனிக்கு இருந்த லேப்டாப் அவளது கவனத்தைத் திருடியது.

இங்கு ராகவின் அறையிலிருந்து வெளியேறிய ரவி, வீட்டை விட்டு வெளியேற எத்தனிக்கவும் ஆரவ் உள்ளே நுழையவும் சரியாய் இருக்க,

"டேய் ரவி எப்ப வந்த?" என்றான் ஆரவ் முகம் நிறைந்த புன்னகையுடன்.

"இப்போ தான் டா. அம்மா நீ எங்கேயோ வெளில போயிருக்குறதா சொன்னாங்க. அதான் கிளம்பிட்டேன்." என அவன் கூறிய நேரம் அவர்களை நெருங்கிய சுமித்ரா ரவியின் பதிலைக் கேட்டு குழப்பத்துடன் பார்க்க, அவரைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு உதிர்த்து வைத்தான் ரவி.

"சரி நீ உக்காரு. நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்." என ஆரவ் சொல்லி நகரவும் சுமித்ரா எதையோ கேட்க வாய் திறக்க, அதுக்கு முன் சோஃபாவில் போய் வேகமாய் அமர்ந்துக்கொண்டான் ரவி.

'அய்யோ சுமித்ரா ம்மா வேற சந்தேகமா பார்க்குறாங்களே.. ஆரவ்ட்ட எதாவது மாட்டி விட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்.. கடவுளே காப்பாத்து.' என்றவனது வேண்டல் கடவுளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ, அந்நேரம் பார்த்து சரியாய் அர்ஜுனும், திவ்யாவும் அவனிடம் வந்து சேர்ந்தனர்.

"ஹாய் அண்ணா..! எப்படி இருக்கிங்க?" என கேட்டப்படி எதிர் சோஃபாவில் அர்ஜுன்‌ அமர,

"நல்லா இருக்கேன் டா." என அவன் கூறவும் ரவி அமர்ந்திருந்த இரண்டு பேர் அமரும் சோஃபாவில், அவனருகில் தொப்பென அமர்ந்தாள் திவ்யா.

"என்ட சேட்டா சுகந்தனல்லே?" என அவள் குறும்புடன் கேட்க, அவளை ஓரக் கண்ணால் முறைத்தவன்,

"இதை விட்டா உனக்கு வேற எந்த டயலாக்கும் தெரியாதே." என்றான்.

"டயலாக் தானே. நேத்து தான் கும்பகோணம் போற ட்ரைன்ல இரண்டே வாரத்தில் மலையாளம் கத்துக்குறது எப்படின்னு ஒரு புக்கு வாங்குனேன். அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது வேற டயலாக் பேசுறேன்." பார்வையும் கவனமும் கையிலிருந்த போனில் பதிந்திருக்க, குரலில் கேலியுடன் கூறினாள் அவள்.

"ஹ்ம்ம். மலையாளம் கத்துக்குறதுக்கு முன்னாடி  சேட்டனுடைய இன்னொரு அர்த்தம் என்னனு கத்துக்கோ." என்றான் அவன் அர்த்தம் பொதிந்த குரலில்.

அதை உணர்ந்தவளாய் நிமிர்ந்து அவனை ஒரு குழம்பிய பார்வை பார்த்தவள், "அது என்ன அர்த்தம்?" என்று வினவ, அவன் பதில் பேசாமல் மர்மமாய் சிரித்துக்கொண்டான்.

"சரி அதை விடுங்க. உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மிங்கிள் ஆயிட்டாங்க. நீங்க இன்னும் சிங்கிலா சுத்திட்டு இருக்கிங்க?"

"சிங்கம் எப்பவும் சிங்களா தான் சுத்தும்." என காலரை தூக்கி விட்டு கொண்டான் அவன்.

"அந்த சிங்கத்துக்கே இது அசிங்கம். ஒரு பொண்ணை கூட கரெக்ட் பண்ண தெரியலைன்னு சொல்லுங்க." என்றவள், அவனது முறைப்பை பொருட்படுத்தாமல் தனது ஃபோனில் எதையோ தேடி எடுத்து அவனிடம் காட்டி,

"இந்த பொண்ணு எப்படி இருக்கா? செம்மையா இருக்காள? என் பெஸ்ட் பிரண்ட். இன்பேக்ட் உங்க சேனல்லையே எல்லார விட அவளுக்கு உங்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம். அவ உங்களோட பெரிய ஃபேன்." என அவள் அடுக்கவும் அவளை நம்ப முடியாத பார்வை அவன் பார்க்க,

"ஐ க்னோவ். உங்களுக்கு நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். என்ன பண்ணுறது பத்துல ஒருத்தருக்காவது கொஞ்சம் மட்டமான டேஸ்ட் இருக்கத் தானே செய்யும்." என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

"ஏய் நீயெல்லாம் என்னை கலாய்க்குற அளவுக்கு நானாகிட்டேன்ல. நான் தங்கியிருக்க ப்ளாட் முன்னாடி ஆட்டோகிராப் வாங்க டெய்லி ஒரு பெரிய க்யூவே நிக்குது தெரியுமா." என்றான் கெத்தாய். அதை கேட்டு பக்கென சிரித்தவள்,

"ஏது ஆட்டோ கிராப் வாங்க க்யூ நிக்குதா? ஒரு அவசர ஆத்துரத்துக்கு கைய நீட்டின ஒரு ஆட்டோக்காரன் கூட உங்க ப்ளாட் முன்னாடி நிக்க மாட்டான். இதுல க்யூ நிக்கிதாம் க்யூ." என்றாள் சிரிப்பினூடே.

"இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னையெல்லாம் நாய் தூக்கிட்டு போய்டும்."

"சிலப்பேரு வாழ்றதே ப்ரோயோஜனம் இல்லாம இருக்கும் போது, எனக்கு அந்த வாயாவது ப்ரோயோஜனமா இருந்தா தப்பில்லையே." என அவள் விடாமல் குறும்புடன் சொல்லி, "சரி சொல்லுங்க? பொண்ணு ஓகேயா? நம்பர் தந்துடவா?" என்றாள் கேள்வியாய்.

"இப்போ நீ பாக்குற வேலைக்கு என்ன பேரு தெரியுமா?" அவன் கேட்க,

"நாலு பேருக்கு நாலு நல்லது பண்ணனும்னு நினைச்சா நாலு பேரு நாலு விதமா பேசுறதெல்லாம் காதுல போட்டுக்கக் கூடாதுன்னு எங்க அண்ணன் சொல்லிருக்கான் சேட்டா." என்றாள் அவள்.

"அடியே ஒழுங்கா அண்ணன்னு சொல்லு. சேட்டான்னு சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்லுறேன்."

"உங்களை அண்ணன்னு சொல்ல எனக்கு நேச்சுரலா வர மாட்டிங்குதே." என்று விட்டு அவன் முகம் போகும் போக்கை பார்த்தவள், பக்கென சிரித்து

"உடனே மாரி படம் தனுஷ் ரேன்ஜ்க்கு உங்களை நீங்களே ஈமேஜின் பண்ணிக்காதிங்க. அவ்ளோ வர்த்லாம் இல்லை. எனக்கு ஆல்ரெடி இரண்டு அண்ணாஸ் இருக்காங்க. நீங்க சேட்டாவா இருந்துட்டு போங்க. சேட்டான்னாலும் அண்ணன் தானே." என மூச்சு விடாமல் பேசியவளைக் கண்டு பெரு மூச்சு விட்ட ரவிக்கு ஆரவ் எப்போ தான் வருவானோ என்றிருந்தது.

இவ்விருவருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்னும் பாணியில் அர்ஜுன் ஒருப்பக்கம் தன் கைப்பேசியில் மூழ்கியிருக்க, மேலே ஆரவ் அறையில் நுழைந்தவுடன் செய்னை காணவில்லை என ஒப்பு வைத்த அழுத மாயாவை, ரவியிடம் பேசிக்கொண்டிருக்கும் படி கட்டளையிட்டு அவளை ஆரவ் அறையை விட்டு துரத்தி
விட்டிருக்கவும் இவ்விருவரின் கூத்தையும் மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

திடுமென எதையோ கண்டுபிடித்து விட்டது போல் உள்ளே சென்று சாவகாசமாய் கண்ணாடி முன் நின்று தலையை கோதிக்கொண்டிருந்த ஆரவை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தவள்,

"ஆரவ் ஆரவ்.. அங்க பாரேன்." என கிசுகிசுப்பாய் அவன் காதருகில் சொன்னாள். கீழே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த திவ்யாவையும் ரவியையும் காண்பித்து.

"இதுங்களை காட்ட தான் இழுத்துட்டு வந்தியா டி? அவங்களுக்கு என்ன இப்போ?" என ஆரவ் சிடுசிடுக்க,

"ப்ச் உன் டப்சா கண்ணை வச்சி நல்லா பாரு டா. உனக்கு ஒன்னும் தெரியலையா?" என்றாள்.

"ஏன் தெரியலை. நல்லா தெரியுதே." என அவன் சொல்லவும்,

"என்ன தெரியுது என்ன தெரியுது?" என்றாள் ஆர்வமாய்.

"இன்னும் கொஞ்ச நேரம் விட்டா அதுங்க இரண்டும் அடிச்சிக்கிட்டே சாகப் போதுங்கனு தெரியுது." என்றவன் நகர எத்தனிக்க, அவனை பிடித்து நிறுத்தியவள்,

"அடேய் மாங்கா.. வேற ஒன்னும் தெரியலையா?" என்றான் அவளை முறைத்த வண்ணம்.

"என்னடி? வேற என்ன இப்போ தெரியனும்ங்குற?" என்ற அவன் கேள்விக்கு,

"அவங்க இரண்டு பேரையும் பாரேன். ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்குல?" என இரசனையுடன் அவள் சொல்லவும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என யூகிப்பதற்கு அவனுக்கு சில நொடிகள் பிடித்திருக்க, பக்கென சிரித்தான் அவன்.

"எதுக்கு இப்போ சிரிக்குற?"

"இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? உன் கனவு கோட்டைய இப்போவே இடிச்சிடு. நீ நினைக்குறது எல்லாம்  சுத்தமா சரியா வராது மாயா." என்றான் அவள் மனதில் உள்ளதை படித்ததுப் போல்.

"ஏன் ஏன் ஏன் சரி வராது?"

"அவ என் தங்கச்சியா இருந்தாலும் நாங்க ஒரே வயித்துல பிறக்கலையே. அவங்க அம்மா என்னனு நினைச்சிருக்காங்களோ யாருக்கு தெரியும். இதுல நிறைய சிக்கல் இருக்கு மாயா."

"அப்படி என்ன ஆரவ் சிக்கல் இருக்கு. ரவியண்ணாக்கு என்ன குறை சொல்லு? அவன் பேமிலி பேக்ரவுண்டும் பெருசு தானே?" என அவள் கேட்க,

"நீ புரிஞ்சு பேசுறியா இல்லை புரியாம பேசுறியா? அவங்க நேடிவ் கேரளா டி. அவங்க அப்பா அம்மா தமிழ் பொண்ண எடுக்க எனக்கு தெரிஞ்சு சேன்ஸ் இல்லை. அப்படியே அவங்க சைட் ஓகே ஆனாலும், நம்ப சைட் ஓகே ஆகனுமே. போதாததுக்கு அனன்யா அத்தைக்கு ஒரு பையன் இருக்கு. உனக்கு தெரியும் தானே?"

"என்னது அனன்யா அத்தைக்கு பையன் இருக்கா? எங்க இருக்கு?" என்றாள் அதிர்ந்து.

"அவங்களுக்கு டிவர்ஸ் ஆனது தெரியும்ல உனக்கு?"

"தெரியும்."

"அவங்களுக்கு டிவர்ஸ் ஆனோன  அவன் அப்பாவோட அப்ராட் போய்ட்டான். ஆதிரா அவங்க அம்மாவோட இருக்கா‌."

"ஆனா இதுக்கு முன்னாடி அவங்க பையனை பத்தி யாரும் பேசி நான் கேட்டதே இல்லையே. நீயே இப்போ தான் சொல்ற?"

"ஏன்னா அப்படி ஒரு ஜீவன் இருக்குறதே இங்க யாருக்கும் நியாபகம் இல்லை. வளர வளர அவன் போக்கு சரியில்லை அதனால அவனை நம்ப ஃபேமிலிக்கு பிடிக்காம போயிடுச்சி. பட் இயர்லி ஒன்ஸ் அவன் தங்கச்சியையும் அம்மாவையும் மட்டும் வந்து பார்த்துட்டு போவான். ஏற்கனவே அவங்க அம்முவை எனக்கு குடுக்கனும்னு நினைச்சி முடியாம போச்சி. என் தங்கச்சியையாவது அவங்க மகனுக்கு முடிக்கனும்னு நினைக்குறாங்க. நம்ப போய் எதாவது குட்டைய குழப்பிட்டா நம்ப தலை தான் உருளும். அதனால இந்த எண்ணத்தை இங்கயே விட்டுடு மாயா." என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.

அனன்யாவின் மகனை காரணமே இன்றி அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. திவ்யாவை முன் பின் தெரியாத அவனுடன் இணைத்து பார்க்க கூட அவள் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. யாருடன் திவிக்கு திருமணம் நடந்தாலும் அவனுடன்‌ மட்டும் நடக்கக் கூடாது என வேண்டிக்கொண்டவள்,
குழப்பத்துடன் அரை மனதுடன் கீழே சென்றாள்.

நெடுநேரமாய் ஏதோ முக்கியமான அழைப்பில் இருந்த ராகவுக்கு தனது அலுவலக அறையை பூட்டினோமா என்ற சந்தேகம் எழ, வேகமாய் அழைப்பை அணைத்து விட்டு சென்றவர், தான் அறையை பூட்டாமல் விட்டிருப்பதைக் கண்டு தன்னையே சாடிக்கொண்டார்.

லேப்டாப் திறந்த நிலையிலேயே இருக்க, அதை ஷட் டவ்ன் செய்தவர், அனைத்தும் வைத்தது வைத்தப்படி இருப்பதைக் கண்டு பெருமூச்சொன்றை விட்டு லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு வெளியேறி அறையை பூட்டியவர் அறிந்திருக்கவில்லை அவர் வந்தது மிக தாமதமென்று.

அங்கோ ஆதிராவின்‌ அறையில் தனது லேப்டாப்பில் பென்ட் ட்ரைவை பொருத்தியவள், அதில் சுட்டுக்கொண்ட வந்த பைலை ஓபன் செய்து அதிலிருந்த வீடியோவை ப்ளே செய்தாள்.

ராகவ் ரவியிடம் காட்டிய அந்த புட்டேஜை பார்த்து முடித்தவளுக்கு இப்பொழுது அவர்களின் உரையாடலின் அர்த்தம் புரிய, அவள் இதழ்கள் தானாய் முனுமுனுத்தன.

"வாரே வா..!"

விழியின் தேடல் தொடரும்🖤

Continue Reading

You'll Also Like

9K 642 30
தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)
16.2K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
84.5K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
4.8K 522 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை...