காதல் ஒரு Butterfly அ போல வரு...

Por Nivithajeni4

102K 4.4K 1.1K

தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந... Mais

Butterfly - 01
Butterfly - 02
Butterfly - 04
Butterfly - 05
Butterfly - 06
Butterfly - 07
2nd Relay Story Update
Butterfly - 08
Butterfly - 09
Butterfly - 10
Butterfly - 11
Butterfly - 12
Butterfly - 13
Butterfly - 14
Butterfly - 15
Butterfly - 16
Butterfly - 17
Butterfly - 18
Butterfly - 19
Butterfly - 20
Butterfly - 21
Butterfly - 22
Butterfly - 23
Butterfly - 24
Butterfly - 25
Butterfly - 26
Butterfly - 27
Butterfly - 28
Butterfly - 29
Butterfly - 30
Butterfly - 31
Butterfly - 32
Butterfly - 33
Butterfly - 34
Butterfly - 35
Butterfly - 36
Butterfly - 37
Butterfly - 38
Butterfly - 39
Butterfly - 40
Butterfly - 41
Butterfly - 42
Butterfly - 43
Butterfly - 44 ( Last Part)
It's Me Raksha
Story Cast
In Happy Mood...

Butterfly - 03

3.4K 138 47
Por Nivithajeni4

சகோதரனாய் ஒருவன்,

தோழனாய் ஒருவன்,

என் வாழ்வில் வந்த 

இரு அழகிய துருவங்கள்.

மூன்றாவது துருவமாய் 

வருவாளா அவள்?

சில நாட்களின் பின் ஸ்ரீதர் கைகளில் கட்டுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தான். அவன் தடுமாறும் வேளை உதவி செய்ய வந்த மூர்த்தியை சந்தர்ப்பத்துக்கு கூட தவிர்த்தான். இதைப் பார்த்ததும் வருந்திய கவின் வரவேற்பறைக்கு வந்ததும்,

"டேய், ஏண்டா... உன் அப்பா உன் மேல இருக்கற பாசத்துல தானேடா உன் கூடவே இருக்க ஆசப்பட்றாரு. அவர ஏண்டா அவொய்ட் பண்ற?" என்க அவனை ஒரு பார்வை பார்த்த ஸ்ரீதர்,

"ஹ்ம்... உனக்கு தெரியாததா? என் அம்மா இறந்ததுக்கப்றம் நான் கூட இவர மட்டும் தான் என் உலகம்னு நெனச்சன். ஆனா இவரு என்னப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம வேற ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனா அப்போ கூட நான் அவங்கள என் அம்மாவா தான் நெனச்சன். ஆனா அவங்க... ஹ்ம், எனக்கு ஒரு சித்தியா கூட நடந்துக்கல. நான் சின்ன வயசுல எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா? அந்த வலியும் வேதனையும் யாருக்கும் புரியாதுடா. நான் நேசிக்குறவங்க எப்பவுமே என்கூட இருக்கரதில்லடா. அம்மா பொய்ட்டாங்க, அவரும் பொய்ட்டாரு. இப்போ நான் உயிரையே வச்சிருந்த அவளும் பொய்ட்டா, கூடிய சீக்கிரத்துல நீயும் கல்யாணமாகி போய்டுவ."

என விரக்தியோடு கூறினான். அதை கேட்ட கவினுக்கு கோபம் வந்தாலும் கூட அவனருகில் சென்று நின்று,

"ஆமாண்டா, நான் கல்யாணமாகி போயிருவன். ஆனா உன்ன தனியா விட மாட்டன். உனக்குன்னு ஒருத்தி வந்ததுக்கப்றம் தான் என் கல்யாணம்."

என்றதும் ஸ்ரீதர் அவனை முறைத்துப் பார்த்து விட்டு அறைக்குள் சென்றான். ஸ்ரீதரின் அறை மொத்தமாக மாறியிருந்தது. நிறப்பூச்சு, பொருட்கள் சுவர்களிலிருந்த படங்கள் எல்லாமே புதிதாய் இருந்தது.

"டேய், கவி... இங்கருந்த போட்டோஸ் எல்லாம்..."

"நான் தான் எடுக்க சொல்லிட்டன். ரூம் பெய்ண்ட் கலர் கூட என் செலக்‌ஷன் தான். நல்லாருக்கா?"

"கேவலமா இருக்கும் போதே நெனச்சன். இது உன் செலெக்ஷனா தான் இருக்கும்னு."

என ஸ்ரீதர் கவினுடன் பழைய மாதிரி பேசுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். அதைப் பார்த்து கவினும் சிரித்து விட்டு சென்றான்.

சில நாட்களின் பின்...

ஸ்ரீதரின் உடல் முழுமையாக தேறியிருந்தது. ஏதோ அவனது மனநிலையும் சற்றே சரியாகியிருந்தது. வழமையான தனது வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்தான் ஸ்ரீதர். அன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன் கைக்கட்டுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு மூர்த்தி வந்து,

"ஸ்ரீ... என்னப்பா வேலைக்கு கெளம்பிட்டியா?"

எனக் கேட்க ஸ்ரீதர் வேண்டாவெறுப்பாக,

"ஆமா"

"ஏன்ப்பா, உடம்பு இன்னும் கொஞ்சம் சரியானதுக்கப்றம் போலாமெப்பா"

"நான் எப்ப வேலைக்கு போகணும், போக கூடாதுன்றத நீங்க சொல்ல வேணாம். எனக்கு தோணுறப்போ நான் போவன். அத யாரும் இங்க தடுக்க வேணாம்."

எனக் கோபத்துடன் கூறி விட்டு ஸ்ரீதர் அங்கிருந்து எழுந்து செல்ல அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மூர்த்தி. அவன் வெளியே வரவும் ஷ்ரவன் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தான். அது start ஆகாமல் மக்கர் செய்து கொண்டிருந்தது. அதை பார்த்த ஸ்ரீதர்,

"டேய், என்னடா வண்டி ப்ராப்ளமா? வா நான் உன்ன காலேஜ்ல ட்ராப் பண்ரன்."

என்றதும் ஸ்ரீதரை முறைத்த ஷ்ரவன், மறுபடியும் தன் வண்டியை எடுக்க முயன்று கொண்டிருந்தான். அதைப் பார்த்து புரியாது நின்ற ஸ்ரீதர்,

"டேய், என்னடா ஆச்சு உனக்கு? இப்போ எதுக்கு என்ன மொறைக்குற?"

எனக் கேட்க, அவனருகில் வந்த ஷ்ரவன்,

"ம்... ஓ, அப்போ உனக்கு என்ன நியாபகம் இருக்கா? நீ இந்த வீட்டுக்கு வந்து எத்தன நாளாச்சு?"

"நான் வந்து 25 வருஷமாச்சு." என்க் ஸ்ரீதரை முறைத்த ஷ்ரவன்,

"ஸ்... அதில்ல, நீ ஹாஸ்பிடல்லருந்து வீட்டுக்கு வந்து எத்தன நாளாச்சு?"

"அ... 2 வாரமாச்சு"

"வந்ததுலருந்து என்கூட பேசுனியா நீ? என்ன அவொய்ட் பண்ணல்ல நீ, இப்போ மட்டும் எதுக்கு வந்து பேசுற? போ..." என அவன் கோபத்தில் முகத்தை திருப்பிக் கொள்ள ஸ்ரீதர் புன்னகைத்தபடி அவன் தோள்களில் கைபோட்டுக் கொண்டு,

"ஹ்ம், உனக்கு இதான் கோவமா? சரி விட்றா, ஏதோ மூடௌட்ல இருந்தன் அதான் சரியா பேச முடில்ல, சாரி... போதுமா?"

"அ... அப்போ சாரி மட்டும் போதாது, ஒரு நல்ல ஹோட்டலா கூட்டி போய் பிரியாணி வாங்கி குடு அப்ப தான் உன்ன மன்னிப்பன்."

"ஏண்டா எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு ன்னு அலையுற?"

"எத விட்டாலும் அத மட்டும் விட மாட்டன். பிக்காஸ் சோறு முக்கியம் டா அண்ணா."

என்று கூற ஸ்ரீதர் சிரித்துக் கொண்டே அவனை அழைத்துச் சென்றான். தன்னுடன் பிறக்காதவன் என்றாலும் ஸ்ரீதருக்கு ஷ்ரவன் மீது அதிக பாசம். ஷ்ரவனும் அப்படித்தான். இருவரும் ஒருவருக்காக இன்னொருவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஷ்ரவனும் தன்னுடைய தேவைகளுக்கும், யோசனைகளுக்கும் ஸ்ரீதரையே நாடுவான். ஸ்ரீதர் ஷ்ரவனை கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றான்.

சீதா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ். அது தான் ஸ்ரீதரின் நிறுவனம். தன்னுடைய அம்மாவின் பெயரில் ஒரு பெரிய கட்டட பொறியியல் நிறுவனம் நடாத்தி வந்தான். அந்த நிறுவனத்திற்க்கு தலைமையாளராக இருந்தது ஸ்ரீதர் தான். அதே நிறுவனத்தில் தான் கவினும் மேலாளராக பணிபுரிகின்றான். இருவரும் இணைந்து தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தனர். அதனால் ஸ்ரீதருக்கும், கவினுக்கும் அந்த நிறுவனத்தில் சம உரிமை இருந்தது. இவர்களின் கடும் உழைப்பில் அந்த நிறுவனம் வெகுவாக வளர்ந்திருந்தது. தற்போது ஸ்ரீதருக்கு விபத்து நடந்ததிலிருந்து கவின் தான் முழு வேலைகளையும் பார்க்க வேண்டிருந்தது. அவனும் அதை பொறுப்பாகவே செய்து கொண்டிருந்தான்.

இன்று சில வாரங்களுக்கு பிறகு ஸ்ரீதர் நிறுவனத்திற்கு வந்திருந்ததால் அங்கு பணி புரிபவர்கள் அவனை நலம் விசாரித்து பூக்கொத்து கொடுத்திருந்தனர். அவற்றை வாங்கிக் கொண்டு தன் காபின்க்கு ஸ்ரீதர் சென்று அமர, அவன் வந்ததை அறிந்த கவின் அங்கு வந்தான்.

"டேய் என்னடா, உடம்பு கொஞ்சம் முழுசா சரியானதுக்கப்றம் வந்திருக்கலாம்ல?"

"ம்... எனக்கு உடம்பு முழுசா சரியாகரதுக்குள்ள, உனக்கு உடம்பு முடியாம போய்டுமோன்னு தான் நான் வந்தன்."

"ஆ?" என கவின் புரியாமல் கேட்க ஸ்ரீதர்,

"நேத்திக்கு உன் அம்மா போன் பண்ணாங்க. நைட் வீட்டுக்கே வர்ரதில்லையாமே நீ? என வேலையையும் சேத்து பண்ற... ஏண்டா..."

"என்ன ஏண்டா? நாம இந்த கம்பனி இப்போ சக்ஸஸ்ஃபுல் ஆ ரன் ஆகறதுக்கு நம்ம உழைப்பு தான் காரணம். அதெல்லாம் வீணா போய்டக் கூடாதில்ல, அதான்."

"ஹ்ம், ஓகே, அதான் நான் இப்போ வந்துட்டன்ல? நீ வீட்டுக்கு கெளம்பு."

"உனக்கு ப்ராப்ளம் இல்லியே..."

"டேய் நான் என்ன சின்ன கொழந்தையா? காலேஜ் டாப்பர், கோல்ட் மெடலிஸ்ட். தெரியும் ல?" என அவன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள சலித்துக் கொண்ட கவின் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டே,

"ஆமா, கோல்ட் மெடல வச்சு ஊறுகா தான் போட முடியும். போடா... நான் ஹாஃப் டேல போறன் பாத்துக்கோ."

"ம்..." எனக் கூறி விட கவினும் தன் வீட்டுக்கு கிளம்பினான். அவன் கிளம்பியதும் தன் வேலைகளை பார்க்க துவங்கினான் ஸ்ரீதர்.

ஒரு வாரத்திற்க்கு பிறகு...

கவின் தன்னுடைய காபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அவனது தொலைபேசிக்கு அழைப்பு வரவே அதை எடுத்தான். அது முன்னால் வரவேற்பறையிலிருந்து வந்திருந்தது.

"ஹலோ..."

"ஹலோ சார், உங்கள பாக்குறதுக்காக பவித்ராங்கறவங்க வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. உள்ள அனுப்பவா?"

என்று அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண் கேட்டாள். பவித்ரா எனும் பெயரைக் கேட்டதும் சற்று யோசித்தவன், ஸ்ரீதரை காப்பாற்றியவள் என ஞாபகம் வர,

"ஓ, அவங்களா? உடனே வர சொல்லுங்க."

"ம்... ஓகே சார்." என அழைப்பை துண்டித்தாள். அடுத்த இரண்டாவது நிமிடம் பவித்ரா கவினின் காபினில் இருந்தாள்.

"ஹாய் பவித்ரா... வாட் அ ப்லசன்ட் சர்ப்ரைஸ் வாங்க உக்காருங்க." என்கவும் அங்கிருந்த கதிரையில் அமர்ந்த பவித்ரா அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு,

"குட் மார்னிங் சார்." என்றாள்.

"அட, என்னங்க நீங்க என்ன போய் சார் ன்னு கூப்டுகிட்டு, கவின் னே கூப்டுங்க." என்று கவின் கூறவும் பவித்ராவும் சற்று தயக்கத்துடன்,

"ம்... ஓகே, கவின்."

"என்ன விஷயம் சொல்லுங்க பவித்ரா..." என கவின் கேட்டான்.

பவித்ரா, கவினிடம் அப்படி என்ன சொல்ல போகிறாள்? பார்க்கலாம்.

To be continued...

Continuar a ler

Também vai Gostar

71.8K 2.2K 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருத...
5.9K 232 19
நாயகியை கனவுகளால் துரத்தும் நாயகன். நாயகியின் கனவு நாயகன் அவளின் கை சேர்ந்தானா?... என்பதே எனது ஜென்மம் தீரா காதல் நீயடி!.
82.1K 1.3K 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால...
4.5K 954 52
ஹுமைரா... அனைவரும் சொல்வதற்கு மாறாக, அவள் சமூகத்தில் மரியாதையுடன் வாழ்வதை விட்டோ, தனது இலட்சியங்களை அடைந்து கொள்வதை விட்டோ அவளது நிகாப் என்றைக்குமே அ...