என் பாதையில் உன் கால் தடம்

By safrisha

5.7K 239 41

அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன்... More

~1~
~2~
~3~
~4~
~5~
~6~
~7~
~9~
~10~
~11~
~12~
~13~
~14~
~15~
~16~
~17~
~18~
~19~
~20~

~8~

155 11 2
By safrisha

"சிந்து என்மேல கோபம் இல்லையே?" பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க சில வினாடிகள் யோசிப்பது தாடையில் விரல் வைத்தவள்

"கொஞ்சம் இருந்திச்சுதான். ஆனா இப்ப வர்ற வழியில காணாம போயிடுச்சினு நினைக்கிறேன்" சிந்தியா முறுவலுடன் கூற.

"ரொம்ப sorry சிந்து! எனக்கே என்னை நினைச்சு கோபம். அப்போ உனக்கெப்படி இருந்திருக்கும். என்னோட பெரிய பிரச்சினையே இதுதான். ஒரு சிடுவேஷனை ஹேன்ட்ல்பண்ண, பேஸ்பண்ண தைரியமில்லாட்டி தன்னால ஊமையாகிடுறேன். அன்னைக்கு நீ பேசினது எதுவுமே தவறு கிடையாது. எனக்கு என்னை நினைச்சே வருத்தம். நான் பேசாம இருந்தது உன்னை ரொம்ப hurt பண்ணியிருக்கும். மன்னிச்சிக்க"

"இட்ஸ் ஓகே. என்னயிருந்தாலும் உன் நிலைமைபத்தி எல்லாம் தெரிஞ்ச நானே அப்படி பேசிருக்ககூடாது. நானும் ரொம்ப Sorry ஷாலு!" வாஞ்சையுடன் சிந்தியாவும் தோழியின் கரம் பிடிக்க

"சரி சரி sorry to sorry சரியாப்போச்சு. இப்ப போவமா?"

"சரி சரி வா. உன்னோட ட்ரைவர் நம்மலை சந்தேகமா பார்க்கிறார். சீக்கிரம் ஏறு கிளம்புவோம்"

ஷாலு ஸ்கூட்டரில் ஏறி வசதியாக அமர்ந்துகொண்டே
"அப்படியெல்லாம் நினைக்க மாட்டார். அவர் ஒரு அப்பாவி. ரொம்ப நல்லவர். உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகந்தானா?" என்றவள் பின்னால் திரும்பி அவளை அவ்விடத்துக்கு கூட்டிக்கொண்டு வந்த ஓட்டுனருக்கு கைகாட்டி விடைகொடுத்தாள்.

"அப்ப உன் லிஸ்ட்டுல யார்தான் கெட்டவங்க?"

"லைப்ல கெட்டவங்கனு கட்டாயம் யாரும் இருக்கவே வேணுமா? 'எண்ணமே வாழ்வு'னு ஒரு புத்தகம் வாசிச்சேன். நாம நினைக்கிறது தான் நமக்கு நடக்கும். நல்லதை நினைச்சா நல்லதே நடக்கும். நானும் எல்லாரையும் நல்லவங்கனே நம்புறேன்"

"இதுக்கு மட்டும் நல்லா தத்துவம் பேசு. மத்த விஷியமெல்லாம் விட்ரு"

"சரி நீ ஒழுங்கா ரோட்ட பார்த்து ஓட்டு"

ஸ்கூட்டர் அவ்விடத்தை விட்டு கிளம்பியதை உறுதிசெய்தபின் வழமைபோல போனை எடுத்து இலக்கங்களை தட்டினார் அந்த ஓட்டுனர்.

"முதலாளி! ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க"

"______"

மறுபக்கம் பதில் கிடைத்ததும் அழைப்பை துண்டித்து அவரும் புறப்பட்டு போனார்.

தோழிகள் இருவருக்கும் வகுப்பு வாசலில் அந்த இளைஞனை காண்பது வாடிக்கையாகிப் போயிற்று. இப்போதெல்லாம் அலட்சியமாகவே அவனைக் கடந்து சென்றார்கள்.

அவர்களது கராத்தே வகுப்பு இன்றுடன் முடிவடைகிறது. அனைவரும் மாஸ்டருடன் நின்று போட்டோ எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்க ஷாலு மட்டும் மிரட்சியுடன் இருந்தாள்.

"இங்க நின்னு என்ன பண்ணிட்டிருக்க?  போட்டோகிராபர் கூப்பிடுறார். வா போவம்" சிந்தியா தோழியை அழைக்க

"இல்ல நீ போ. நான் போட்டோக்கு வரலை"

"ஏன் என்னாச்சு?"

"ஒன்னுமில்லை. நீ போ சிந்து"

"என்னதான் பிரச்சினை உனக்கு. ஒவ்வொரு பேட்ச்சும் கோர்ஸ் முடிய மாஸ்டரோட க்ரூப் போட்டோ எடுக்குறது வழமை. அங்க பாரு அந்த வோல்ல மாட்டியிருக்குல. நாமலும் அப்படியொரு போட்டோ எடுக்க வேணாமா? குயிக்கா வா எல்லாரும் நம்மலை பார்த்திட்டு இருக்காங்க"

இதற்குமேல் சிந்துவிடம் போராட முடியாது என்பதால் போட்டோ எடுக்கும் இடத்திற்கு சென்றாள்.

ஒவ்வொருவரும் அவர்களது உயரத்திற்கேற்ப ஒழுங்கு படுத்தப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டார்கள். ஷாலு சற்றே உயரம் என்பதால் இரண்டாம் வரிசையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டாள்.

போட்டோ எடுத்த பிறகும் ஷாலு அசௌகரியமாகவே தென்பட்டாள்.

போட்டோ பிரதி யாருக்கெல்லாம் வேண்டுமோ அவர்கள் போட்டோகிராபரிடம் அதற்கான பணத்தையும் தங்கள் முகவரியையும் எழுதிக்கொடுத்தார்கள்.

சிந்து எழுதி முடித்ததும் ஷாலுவும் பணத்தை செலுத்திவிட்டு முகவரியை எழுதிக்கொடுத்தாள்.

போன வாரத்துடன் நடன வகுப்பும் முடிந்தது. யோகா வகுப்புக்கு ஒரு தனிப்பட்ட வகுப்பு. அதற்கு சிந்து வருவதில்லை. இனி ஓவியம் வகுப்பு மட்டுமே. அதில் மட்டும்தான் சிந்துவை சந்திக்க முடியும். அதுவும் கூடியது இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே.

கராத்தே வகுப்பு சீக்கிரமே முடிந்துவிட இருவரும் ஆர்ட்ஸ் அகடமிக்கு புறப்பட்டார்கள். ஷாலுவின் அமைதியை உணர்ந்து

"என்ன மேடம் வழக்கமான டயலோக்கை மறந்துட்டிங்க?"

"என்ன டயலோக்?"

"அதான் ஹட்டன் டவுன் தாண்டியதுமே ஒன்னு சொல்லுவிங்களே 'இந்த ரோட்ல இயற்கையை ரசிச்சுட்டே ஸ்கூட்டி ஓட்டனும்'னு"

"ஓஹ் அதுவா!"

"அதே அதே"

"ஆர்ட்ஸ் க்ளாஸும் முடிஞ்சிட்டா ஸ்கூட்டி பின்னாடி உட்கார்ந்து ரசிக்கிற பாக்கியமும் இல்லாம போயிடும்" சோகம் தொய்ந்த குரலில் சொல்ல

"சரி இந்த கோர்ஸ்தான் முடியிதே. நீ ட்ரைவிங் கத்துக்கலாமே. இங்க லேடிஸ் லேர்னர்ஸ் கூட இருக்கு"

"ஊஹூம். அதுக்கு வாய்ப்பில்லை. கொமர்ஸ் என்ட் மெனெஜ்மென்ட் படிக்கிறதுக்காக போரின் இன்ஸ்ட்டிட்யூட் ஒன்னுக்கு அப்ளை பண்ணியிருக்கன். கிட்டத்தட்ட அட்மிஷன் கிடைச்ச மாதிரிதான். நெக்ட் மன்த் அகடமிக் ஸ்டார்ட் ஆகுது"

"வாவ்! கன்கிராட்ஸ் ஷாலு! எவ்வளவு ஹேப்பியான நியூஸ். நான் கேட்காட்டி சொல்லியிருக்க மாட்டியில்ல?" சிந்தியா மனமார தோழிக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தாள்.

"ம்ப்ச்.. நானே இனிமேல் உன்னை பார்க்க முடியாதுன்னு கவலைல இருக்கேன். நீ வேற"

"ஹய்யோ லூசு. என்னை எப்பவேனா பார்த்துக்கலாம். போரின் போற சான்ஸெல்லாம் எல்லாருக்கும் கிடைக்குமா? புது இடம், புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கப்போகுது. அதேபோல நிறைய புது ப்ரெண்ட்ஸும் கிடைப்பாங்க. ஹூம்.. அதுக்குப்பிறகு என்னை ஞாபகம் இருக்குதோ இல்லையோ.. சரி அதைவிடு நெக்ட் மன்த் ஸ்டார்ட்னா எப்ப கிளம்புற?"

"நான் ஒன்னு சொன்னா நீயா ஓராயிரம் யோசிச்சிட்டு கதைப்ப"

"என்ன சொல்லுற?"

"போரின் இன்ஸ்டிட்யூட் னு தான் சொன்னேனே தவிர அங்க போறனு சொன்னேனா?"

"பின்ன? "

"ஒன்லைன் ஸ்டடீஸ். வீட்லருந்தே"

"என்னடி இது அநியாயமா இருக்கு. நா வேணும்னா அங்கிள்கிட்ட வந்து பேசிப்பார்க்கவா?"

"ஹய்யோ வேண்டாம்!"

"எனக்கு புரியவேயில்ல. எதுக்காக அவர் இப்படி பண்ணிட்டிருக்காரு? நீ நோர்மலாத்தான் இருக்க. எனக்கு தெரிஞ்சி அவருக்குத்தான் ஏதோ பிரச்சினைனு நினைக்கிறன்" சிந்தியா சீற்றத்தில் சொல்ல

அதன்பிறகு ஷாலு அமைதியானதும் தான் சொன்னதுதான் தோழியை பாதித்துவிட்டது என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள்.

இருந்தாலும் சிந்தியாவுக்கு கோபம் தீரவில்லை. இதுவரைக்கும் அவள் ஷாலுவின் வீட்டினரை சந்தித்தது கிடையாது. ஆனாலும் அவள் மனதுக்கு அவர்களது வளர்ப்புமுறை ஒருவகை அடக்கு முறையாகவே தெரிந்தது.

அவர்களின் அதீத கட்டுப்பாட்டிலும், கண்டிப்பிலுமே ஷாலுவின் உளவியல் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றியது. 'சிறுவயதிலிருந்து இப்படியென்றால் உள்ளம் பலவீனமாகாமல் என்ன செய்யும்?'

ஆனால் அவர்கள் என்னதான் அவளை கண்டிப்புடன் நடத்தினாலும் ஷாலுவின் வாயிலிருந்து அவர்களை பற்றி குறையாக ஒருவார்த்தை வந்ததில்லை. அதுமட்டுமல்ல மற்றவர்கள் அவர்களை குறை சொல்வதையும் அவள் விரும்புவதில்லை. சிந்துவுக்கும் அவர்களை குறைப்பட வேண்டுமென்று துளியும் விருப்பமில்லை. இருந்தும் தோழியால் அவள் விரும்பியபடி வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வாயிலிருந்து வார்த்தைகள் தப்பி விடுகின்றன.

சிந்துவின் கோபம் தன்னுடைய நலனுக்காக என்பது ஷாலுவுக்கு நன்றாகவே தெரியும். குறுகிய காலத்தில் முளைத்த நட்பென்றாலும் இருவர் மனதிலும் அது ஆழமாக வேரூன்றி விட்டிருந்தது.

'பாவம்! சிந்துதான் என்ன செய்வாள்? அவள் அறியாத பக்கங்கள் என் வாழ்வில் நிறைய உள்ளதே!' என ஷாலு சிந்தியாவை சமாதானம் செய்தாள்.

"சிந்து! தயவுசெய்து கோவிக்காதடி. இதுல அவரோட தலையீடு எதுவுமில்ல. எனக்குமே இந்த அமைதியான இடத்தை விட்டுட்டு எங்கயோ தெரியாத நாட்டில போய் இருக்கறதுல விருப்பமில்ல. அதுக்காகவுந்தான் ஒன்லைன்லயே படிக்கலாம்னு இருக்கன்"

"என்னவோ.. உன் விருப்பம். நீ ஹேப்பியா இருந்தா சரி" சிந்தியா அப்போதைக்கு அந்த பேச்சை முடித்துக்கொண்டாள்.

"சரி உனக்கொரு குட்நியூஸ் இருக்கு" ஷாலு உற்சாகமாக சொல்ல

"நீ முதல் விஷயம் என்னான்னு சொல்லு. அது குட்டா பேட்டான்னு நான் டிசைட் பண்ணிக்கிறன்" இன்னும் சிந்தியாவின் மனநிலை சீராகவில்லை.

"ஓஹ்! அந்தளவு என்னை நம்பிக்கை இல்லையோ?"

"இப்ப சொல்றியா இல்லையா?"

"ஓகே கூல் கூல்! சொல்றேன். நீ அன்னைக்கு ஒருநாள் வருத்தப்பட்டில எங்கேயும் வெளியில போக வரமாட்டிங்குறேன்னு"

"அன்னைக்குனு இல்ல. இப்பவுந்தான்"

"முழுசா சொல்ல விடேன்"

"சரி சொல்லு"

"உங்கூட வெளில போறதுக்கு.. ஐ மீன் உன்னோட சேர்ந்து ஊருசுத்த எனக்கு வீட்ல பேர்மிஷன் கிடைச்சாச்சு"

"என்ன ஷாலு வீட்ல யாருக்கும் எந்த வருத்தமும் இல்லைல? சுகமா இருக்காங்கல்ல?"

"உனக்கு கிண்டலா? நானே பிடிவாதம் பிடிச்சு பேர்மிஷன் வாங்கிட்டு வந்தா நீ கலாய்க்கிற" என்று சிந்தியாவை முறைத்தாள்.

"இல்லமா உங்க வீட்டாளுங்க ஆர்மிமேன் கணக்கா ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களே. என்ன திடீர்னு டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷனை மீறியிருக்காங்க"

"சரி சரி முறைக்காத இன்னைக்கே போறோம்? எங்க போகலாம் நீயே சொல்லு"

"இன்னைக்கில்ல ஆர்ட்ஸ் கிளாஸ் பைனல்டே. க்ளாஸ் முடிஞ்சதும் போகலாம்"

"மகாராணியின் விருப்பம்!" என்று குனிந்து ஏற்றுக்கொள்ள ஷாலு மனம்விட்டு சிரித்தாள்.

Thanks for reading!
If u like this story pls support me with ur vote

Continue Reading

You'll Also Like

363 44 7
Oru ponnu kaanama poita aana Ava epudi kanama pona nu yarukum theriyala room vittu kooda veliya varala aana kanom . Oru chinna clue kooda police ku k...
20.3K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
5.7K 239 20
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்தி...
210 1 45
investigating story.... ruthless cold blooded murder.... investigation by our hero Manikandan and his team.