காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔

נכתב על ידי Shazna_Ishrath

121K 5.2K 1.7K

அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை.. עוד

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 5
பகுதி - 6
பகுதி - 7
பகுதி - 8
பகுதி - 9
பகுதி - 10
பகுதி - 11
பகுதி - 12
பகுதி - 13
பகுதி - 14
பகுதி - 15
பகுதி - 16
பகுதி - 17
பகுதி - 18
பகுதி - 19
பகுதி - 20
பகுதி - 21
Sorry friends
பகுதி - 22
பகுதி - 23
பகுதி - 24
பகுதி - 25
பகுதி - 26
பகுதி - 27
பகுதி - 28
பகுதி - 29
பகுதி - 30
பகுதி - 31
பகுதி - 32
பகுதி - 33
பகுதி - 34
பகுதி - 35
பகுதி - 36
நன்றி

பகுதி - 4

4.7K 211 52
נכתב על ידי Shazna_Ishrath

"நீ என்ன சொல்ர சாரா !! அஹமட் அப்படி எந்த தவறும் செய்ய மாட்டானே?!"

"அது எனக்கும் தெரியும் ஷனா ஆனால் இதில் என்ன கொடுமைனா அதற்கு நான் தான் காரணம்னு சொல்ரான் பாரு நானும் எவ்வளவோ தூரம் சொல்லி பார்த்தாச்சு என்ன பார்த்தாலே எங்க இருந்து தான் அவ்வளவு கோபம் வருதோ!!"

அந்த நாள்....

சந்தர்ப்ப சூழ்நிலை காட்டிய விளையாட்டால் இருவரது திருமணமும் எதிர்பார்க்காத விதமாக நடந்தேறியது.

எங்களுடைய பேச்சை மீறி வேறு ஒருவனை கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல
உன்னை இவ்வளவு காலம் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்போம் ஆனால் நீ இந்த சின்ன விடயத்துல கூட எங்க பேச்ச கேட்கல அதனால் இதற்கு அப்றொம் இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது அங்கே போனால் போனது தான் இதன் பின்னர் இந்த பக்கத்திற்கும் வரக் கூடாது என அந்த வீட்டுடனான அவளின் உறவை முறித்து விட்டார் மாமா நிஸார்.

இதைக் கேட்ட அர்ஷாட் "அவ இங்க வர வேணாம்னா நானும் இங்க இருக்க மாட்டேன் "என்றான் ஆத்திரத்தில்

உடனே "நானா நீ எங்க இருக்க போற ? அவங்க என்னை தானே வர வேணாம்னு சொல்ராங்க நீ எதற்காக "என பேசி முடிப்பதற்கு இடையே

"நீ சும்மா இரு சாரா நான் எங்கயாச்சும் இருந்துகிறேன் " என்று சொல்ல

"நீ எங்க வீட்டுக்கு வாயேன்டா " என்றான் அஹமட்.

"இல்லை டா உங்க வீட்ல சாராவயே ஏத்துபாங்கலான்னு தெரியல இதுல நான் வேற எதற்கு....வேணாம்டா அது நல்லா இருக்காது" என்றபடி அங்கு நின்று இருந்தவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பியவன்
"சாராவை கொண்டு போய் விட்டுட்டு வர யார கூப்பிட்டாலும் வர மாட்டீங்கனு தெரியும் அதனால நான் யாராயுமே கூப்பிட போறதும் இல்ல....வா மச்சான் நாம போகலாம் என்றான் அஹமட் ஐப் பார்த்து.

"டேய்...நீ எதற்காக டா இவங்கள கூப்பிட்டுகிட்டு உன் தங்கச்சிக்கு எல்லாமே நீ தானே அப்போ நீ மட்டும் வந்தா போதும் "
என்ற அஹமட்

சாராவின் கைகளை பிடித்தபடி "வா போகலாம்" என்றான்.

உடனே கையை உதறி விட்டவள் அர்ஷாட் இன் அருகில் சென்று நின்று கொள்ள

"சாரா ஏன்டி இப்படி பண்ர? அவன் ஏதாவது நினைச்சிக்க போறான்" என்றான் மெதுவாக அர்ஷாட்.

"விடு மச்சான் எல்லாம் சரி ஆகிடும் அவளே பயந்து போய் இருக்கா"

"சரி போகலாம் " என கிளம்ப முற்படுகையிலே

"நானா ஒரு நிமிடம்" என்றவள் நடைபோட்ட திசையை அனைவரும் நோக்க

அவளோ யாரோ ஒருவரை தேடி சென்றாள்.

"என்னடா ?!" என அஹமட் அர்ஷாட் ஐ பார்த்து கைகளால் சைகை செய்ய

"கொஞ்சம் பொறு...பார்க்கலாம்" என்றான் அர்ஷாட்.

முதுமையின் அடையாளங்களை முகத்தில் ஏந்தியபடி இயலாமையின் உருவாய் கதிரையில் வீற்றிருந்த தன் பாட்டியின் முன்னே மண்டியிட்டவளாக அமர்ந்து கொண்டு அவர்களது கைகளைப் பற்றிக் கொண்டவள்
"சொல்லு நான் போகட்டுமா?!" என்று கேட்ட வார்த்தைகள் அவர்களை சற்று தடுமாறத் தான் செய்தது.

"எனக்கு தெரியும் சாரா...நீ என்னட்ட சொல்லாம இந்த வீட்ட விட்டு அடி எடுத்து வைக்க மாட்டனு
இங்க பாரம்மா நீ எத பற்றியும் கவலைப்படாத இங்க இருக்குறவங்க நீ எப்படி போனாலும் பரவாயில்லை காசு பணம் தான் முக்கியம்னு எவனோ ஒருத்தன் தலையில உன்ன கட்டி விட தான் பார்த்தாங்க அந்த நேரம் நான் எவ்வளவு துடிச்சன்னு என்னொருத்திக்கு மட்டும் தானம்மா தெரியும் உன்ன பெத்தவங்க ஆசிடன்டுல போய்ச் சேந்ததும்
உன்னை உயிரா நினச்சி வளர்த்தவ நான் நீ நல்லா இருக்குறத பார்க்கனும் என்றது தான் என்னோட ஆசை
இதற்கு மேல இங்க வர முடியாதேன்னு கவலைப்படாத இந்த நரகத்துல இருந்து சுதந்திரம் கிடச்சிருச்சினு நினச்சு சந்தோஷமா இருமா..."என இடையிடையே பாதி வார்த்தைகளை விழுங்கியபடி கஷ்டப்பட்டு கூறி முடித்து விட்டு தன் கைகளை தூக்கி அஹமட் ஐ அழைக்க உடனே அவ்விடத்திற்கு வந்தவன் "சொல்லுங்கம்மா" என்றான்.

"நீ சின்ன வயசா இருக்கும் போதுல இருந்து எனக்கு உன்ன தெரியும்...நீ என் புள்ளய நல்லா பார்த்துக்குவன்னும் எனக்கு தெரியும் " என சொன்னவருக்கு இதற்கு மேல் பேசுவது சிரமம் என்றதும் அவன் கைகளை பிடித்தபடி அழ

"நீங்க எதற்கும் கவலப்படாதீங்கம்மா நான் பார்த்துக்கிறேன்" என்று அவர்களுக்கு நம்பிக்கையளிக்குமாறு பேசி சமாதானப்படுத்திவிட்டு மூவரும் கிளம்பலானர்.

அஹமட் இன் வீட்டை நெருங்க நெருங்க என்ன நடக்குமோ என்ற பயத்தில் சாராவிற்கு இதயத்துடிப்பு எல்லை மீறி அதிகரிக்க அதற்கு ஈடான வேகத்தில் புறப்பட்டது அந்த கார்.

அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்சம் அவளை வாட்டி வதைக்க அதை மெருகூட்டும் வகையில் பயங்கர சத்தத்துடன் அந்த மைதானம் ஒப்ப பங்களாவின் முன் நிறுத்தப்பட்டது வண்டி.

தன் வீட்டாரைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருந்த அஹமட்
அர்ஷாட் ஐ நோக்கி "டேய் நீ இப்படியே போய்டு நான் பேசிக்கிறேன்" என்றாலும் அவன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
"இல்லை டா நானும் வரேன் " என்றான்.

"டேய் ப்ளீஸ்டா சொன்னா புரிஞ்சிக்கோ நீ வந்தா பிரச்சினை பெரிதாகிடும் டா" என அஹமட் கெஞ்சும் தொனியில் பதிலளிக்க

"சரி டா" என்றான் அரைமனதாக

"நீ வா சாரா " என அவளை அழைத்துக் கொண்டு சென்றவன் வீட்டிற்குள் அடி வைத்தது தான் தாமதம்

அங்கிருந்த அனைத்து விழிகளும் இவர்களிருவரை விட்டும் அகல மறுத்தது.

உடனே தரமான சம்பவம் நடக்க போகிறது என புரிந்து கொண்டவன் சரி சமாளிப்போம் என்ற நினைப்போடு "ஷனா இங்க வா" என்றான்.

மறுகணமே எதிரில் வந்து நின்றவளிடம் "இவங்கள கூட்டிட்டு போய் என்னோடு ரூமில் விடு " என கட்டளையிடவே

சரி என தலையசைத்தவள் "வாங்க" என அழைக்க அவளை பின்தொடர்ந்தாள் சாரா.

அவள் சென்றதும் " என்ன எல்லோரும் அப்டியே இருக்கீங்க எங்கிட்ட எதுவும் கேட்கனும் போல இல்லையா?!" என்றான் அஹமட்.

உடனே எரிமலையென வெடித்த  அவன் அம்மா " யாரு அந்த பொண்ணு ?! அதுவும் உன்னோட ரூமில் விடச் சொல்ர " என கேட்க

"ஸாரி மா " என்றான் ஒற்றை வார்த்தையில்.

ஏதோ சரியில்லை என புரிந்து கொண்ட ஷமீனா "என்ன அஹமட் ? இங்க நடக்குற எதுவும் அவ்வளவு நல்லதா இல்லையே?!" என்று சொல்ல

அவன் சொன்ன பதில் அவர்களை நிலைதடுமாறி விழச் செய்யவே சுற்றி நின்றவர்கள் பதறியடித்தவாறு தாங்கிப் பிடித்தனர்.

தொடரும்.....

המשך קריאה

You'll Also Like

249K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
85.8K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
329K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...