பகுதி - 6

4K 195 43
                                    

சூரியன் ஜன்னல் வழியே மெதுவாக எட்டிப் பார்க்க கண்களைச் சிமிட்டிய படி எழுந்து அமர்ந்து கொண்டாள் சாரா.

எழுந்தவள் கட்டிலில் இருந்தவாறே தரையை ஒரு எட்டு பார்க்க படுத்திருந்த அஹமட் ஐ காணவில்லை என்றதும் மறுகணமே கடிகாரத்தைப் பார்க்க அது மணி ஏழு என்பதை அறிவித்தது.

"என்னது  வந்த மொத நாளே இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா அச்சோ!!" என தலையில் கை வைத்துக் கொண்டவள்
விறு விறு என இறங்கி

அஹமட் அஹமட் என அவன் பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லியபடி ஒவ்வொரு இடமாக அவனைத் தேட அவன் இல்லை என்றதும்

"எங்க போய் இருப்பான் இங்க இருக்கிறவங்க கிட்ட கேட்கவும் முடியாது" என யோசிக்கையில் ஆஹ் போன்...போன் பண்ணி கேட்கலாம் என அவள் மண்டையில் பல்ப் எரிந்து யோசனை தோன்றவே

ஓடிச் சென்று நேற்றிரவு வைத்த இடத்தில் போனை பார்த்தாள் ஆனால் அங்கு வெறும் டேபிள் தான் இருந்தது.

எங்க போச்சு என சுற்றும் முற்றும் பார்த்தவள்

தூரத்தில் ஷனாவைக் கண்டதும் பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று "எக்ஸ்கியூஸ் மீ" என அழைப்பது

ஷனாவின் காதுகளில் விழுந்தும் அவள் கேட்காதது போல நழுவ முற்படவே அவள் முன்னே சென்று  அவளை வழிமறித்தாள்.

பதிலுக்கு"என்ன?" என்றாள் திமிரு கலந்த பார்வையோடு

"அது அஹமட் எங்க?" என தயங்கியபடி சாரா கேட்டாள்.

"அவன் காலையிலேயே எழுந்து யாரோ ப்ரெண்ட பார்க்க போய்டான் " என்றவள் அவள் முகத்தைக் கூட பார்க்காமல் நடை போட்டாள்.

இங்க இருக்கிற எல்லோருக்கும் எக்ஸ்ட்ராவா திமிருக்குனு ஒரு நரம்பு இருக்குமோ?! என்ன இப்படி இருக்குதுங்க என புலம்பியபடி திரும்புகையில் ஷீமாவைக் காணவே சரி இவளிடம் கேட்போம் என்ற யோசனையோடு

அந்த டேபிள் மேல் இருந்த போன் ஐ பார்த்தீங்களா?! என கேட்டாள்.

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now