அவதார புருஷரின் சுயசரிதை

By ATA_Tamil

4 0 0

தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் அருளிய சத்தியத்தின் தமிழ் மொழிப... More

Untitled Part 1

4 0 0
By ATA_Tamil

தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் அருளிய சத்தியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:-

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அல்லது மிகச்சிறந்த திருப்புமுனையைப் பெறும்பொழுது, நீங்கள் எந்த விதமான கொண்டாட்டத்தை மற்றும் எந்த வழியில் உங்களுக்கு நீங்களே சலுகைக்காட்ட விரும்புகிறீர்களோ அவ்வழி 'ஃபலா' என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. 'ஃபலா' என்றால் தமிழில் பலன் என்று பொருள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள் 'ஃபலா' என்ற வார்த்தை வெறும் 'விளைவு'என்பதை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் நீங்கள் எவ்வழியில் அந்த விளைவுகளை அனுபவிக்க மற்றும் கொண்டாடவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நான் என் வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்த மிகப்பெரிய 'ஃபலா', ஒரு கிண்ணம் தயிர் சாதம் அல்லது பாரம்பரியமான உப்பு குறைவான புளியோதரை இவைகள்தான்.
எனக்கு மிகவும் எளிமையான மற்றும் சாத்விகமாக சுவைமிகுந்த வாழ்க்கை முறையை வழங்கியதற்காக எனது குருமார்கள் மற்றும் அருணாச்சலத்தின் (திருவண்ணாமலை) வாதாவரணம் (சுற்றுச்சூழல்) அமைப்பிற்கு மிகவும் நன்றி உணர்வோடு இருக்கிறேன்.
யாருடைய வாழ்வின் 'ஃபலா' (பலன்) மிகஎளிமையாகவும், சாத்விகமாகவும் உள்ளதோ, அவர் ஜீவன்முக்தியை வாழவும் வெளிப்படுத்தவும் செய்கின்றார்.
மேலும் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், பரிமாணத்திலும் ஒரு அரசனைவிட உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்.

உங்கள் ஒவ்வொரு நாள் செயல்பாடுகளிலும் பயம் மற்றும் பேராசை தொடர்பான குறுக்கீடு மற்றும் அனுமானங்களைக் காலாவதியாக்கும் நுட்பமே 'ராஜவித்யா' என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் இருப்பில் உள்ள பயம் மற்றும் பேராசையை தொடர்பற்ற தாக்கி பூமியில் வாழும்பொழுதே கடவுளைப்போல வாழ்வதே ராஜவித்யா ஆகும்.
வாழ்வில் எளிமையான சாத்வீகமான 'ஃபலா' - பலனை வளர்ப்பதே ராஜவித்யா குருகுல மாணவர்களுக்கான முதல்பாடம்.
'பரமசிவோஹம்' (நீங்கள் பரமசிவம்) என்ற உயர்ந்த சத்தியத்திற்கு உங்கள் மனம் மற்றும் உளவியல் இருப்பின் அடிப்படையை விழிப்புணர்வோடு உயத்தும்பொழுது, பயம் மற்றும் பேராசையை போன்ற குறையுணர்வுகளை பொறுத்தமற்றதாக ஆக்கிவிடுகின்றீர்கள்.
நான் கண்டறிந்த மிகப் பெருமைக்குரிய உயர்வான ஒரு சத்தியம் என்னவெனில், இந்துமதத்தில் மிகத் துல்லியமான சத்தியம் என்பது ஞானத்திற்கான சாதனையாகவும் தீர்வாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ராஜவித்யா குருகுல மாணவர்களும் இந்த சிறந்த ஜீவன் முக்தி அறிவியலின் மிகச் சிறந்த ஒளியாகவும், தலைவர்களாகவும் திகழ்வதற்கான தீவிரமான சிறப்பு சக்தி வெளிப்பாடு பயிற்சி இப்பொழுது பெறப்போகிறார்கள்.
மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்ட மிக்பெரியக் குற்றங்களில் ஒன்று, இந்தப் புனிதமான 'ஜீவன்முக்தி அறிவியல்' அழிக்கப்பட்டதும் ஒவ்வொரு குழந்தைக்கும், மனிதனுக்கும் இதை கற்பிக்க அனுமதிக்காததும்தான். 

மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு கைலாயத்தின் ராஜவித்யா குருகுலம் மூலமாக இந்த அறிவியலைக் கற்பிப்பதும், ஜீவன் முக்த சமுதாயத்திற்கான எதிர்கால தலைவர்களை உருவாக்குவதும் எனது முதல் பொறுப்பு.
உலகம் முழுவதுமுள்ள பல்வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் 100க்கும் மேற்பட்ட இந்துமத பொறுப்புக்கள் மற்றும் 1000 இந்து சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் 10000 பெரும்பாண்மை இந்து பாரம்பரியங்கள் (ஞான சக்தி மண்டலங்கள்), ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரமங்கள் மற்றும் கோவில், துறவி மடங்கள் (100000) ஆகியவை கணிசமான செல்வவளம் இருந்தும்கூட அடுத்த தலைமுறை ஜீவன் முக்த தலைவர்கள் இல்லாமல் தொடர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன, மெதுவாக இவை அழிவை எதிர்கொள்கின்றன.
இந்த மரணம் உண்மையில் மனித இனத்தால் பொறுத்துக்கொள்ள முடியாத இந்துமதத்தின் மரணமாக இருக்கும்.
இந்து பெற்றோர்கள் பொதுவாக எளிமையான, வசதியான, இனிமையான கல்வி, தொழில், வீடு, குடும்ப வாழ்க்கை போன்றவற்றையே தங்கள் குழந்தைகளுக்கான ஒரே வாழ்க்கை முறையாக நினைத்துப்பார்க்கும் இக்காலத்தில், சில துணிச்சலான, தைரியமான (தீராஹ) பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என்னையும், இந்து மதத்தை உயிர்பிக்கும் என் பார்வையையும் (vision) நம்பி, ராஜவித்யா குருகுலத்தின் அங்கமாக மாற முடிவு செய்திருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறையினர் இந்த ராஜவித்யையின் முக்கியத்துவத்தை உணரவும், அவர்களை இந்த ராஜவித்யாவில் கற்றுத்தேர்ந்தவர்களாகவும் மற்றும் அவர்களை ஜீவன் முக்த சமுதாயத்தின் எதிர்கால தலைவர்களாக ஆக்கவும் மற்றும் அனைத்து இந்து அமைப்புக்களின் காலியிடங்களை நிரப்பவும்;, இந்த மொத்த ஞான சக்தி மண்டலத்தை உயிர்ப்பிக்கவும், இறுதியாக இந்த முழு ஜீவன் முக்த சமுதாயத்தையே உயிர்ப்பிக்க நான் பொறுப்பு எடுக்கிறேன்.

என்னையும், மனித இனத்திற்கான எனது பார்வை (Vision)மீதும் நம்பிக்கை கொள்ள போதுமான துணிச்சலும், தைரியமானவர்கள் யாரோ அவர்கள் குஜராத், மதுரை, இச்சாபுரம், பிடதி, திருவண்ணாமலை மற்றும் நிறைய இடங்களில் நடைபெறும் எங்கள் ராஜவித்யா குருகுலங்களுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்ப நான் மனமார வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இதுவே மனித இனத்திற்கும், இந்து மதத்திற்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த சேவை.
ஞான சக்தி மண்டலத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, ஜீவன்முக்தியை வாழும் மனிதர்களை எதிர்கால இந்து சாம்ராஜ்யங்களின் குரு மகாசன்னிதானங்கள், ஆச்சார்ய மஹாமண்டலேஸ்வரர்கள், ஜகத்குருமார்கள், பீடாதீஸ்வரர்கள், மடாதிபதிகளாக பயிற்சி அளித்து உயர்த்துவது மிக அவசியமான ஒன்றாகும்.
இந்த சத்தியத்தை உலகத்தோடு பகிர்ந்து, அனைவரையும் வளப்படுத்துங்கள், ஆனந்தமாக இருங்கள்!





Continue Reading

You'll Also Like

18.9K 2.7K 22
දන්නවද ආර්ය්‍ය..❟ පෙති තලලා මල කැඩුව පමණටම බඹරෙක්ට මලක් අයිති වුන්නැහැ..! සේමිය- උබ කියන මගුලක් මට තේරෙන්නෑ ඕයි හැබැයි මෙච්චරයි බඹරෙක් නෙවෙයි මොකෙක්...
57.2K 1.2K 26
.. a story, of a girl who has a condition that could change her life for the greater good. Loni has a medical condition that stopped her from develop...
64.3K 2.7K 23
Story about a married couple who's life was so toxic to live in. ⚠️ !!!𝗔𝗧𝗧𝗘𝗡𝗧𝗜𝗢𝗡!!!⚠️ ♡ This story is going to contain domēstic abu$e, so r...
8.1K 158 25
It's classification day for Riley. he is finally 18 but when he gets his results things turn for the worst quickly when he has to stay with his broth...