கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)

By ZaRo_Faz

114K 4.6K 1K

Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ண... More

மன்னிப்புக்காக ஒரு நொடி
❤கானல்-01❤
கானல்-02
❤கானல்-03❤
❤கானல்-04❤
❤கானல்-05❤
❤கானல்-06❤
❤கானல்-18❤
❤கானல்-19❤
❤கானல்-20❤
❤கானல்-21❤
❤கானல்-22❤
❤கானல்-23❤
❤கானல்-24❤
❤கானல்-25❤
❤கானல்-26❤
❤கானல்-27❤
❤கானல்-28❤
❤கானல்-29❤
❤கானல்-30❤
❤கானல்-31❤
❤கானல்-32❤
❤கானல்-34❤
❤கானல்-35❤
❤கானல்-36❤
❤கானல்-37❤
❤கானல்-38❤
❤கானல்-39❤
❤கானல்-40❤
❤கானல்-41❤
❤ கானல்-07❤
❤கானல்-42❤
❤கானல்-43❤
❤கானல்-08❤
❤கானல்-45❤
❤கானல்-09❤
❤கானல்-44❤
❤கானல்-10❤
மக்களை நம்பி
❤கானல்-11❤
❤கானல்-12❤
❤கானல்-13❤
❤கானல்-14❤
❤கானல்-15❤
❤கானல்-16❤
❤கானல்-17❤
மீண்டும்

❤கானல்-33❤

1.7K 107 26
By ZaRo_Faz

"என்னங்க சனாவுக்கு ஏதோ வெளிய தேவை ஒன்னூ இருக்காம் அவ கூட போறதற்கு என்னையும் கூப்ட்றா நான் போகட்டுங்களா?" என்று தமிழிடம் கேட்டதும்

"அப்போ வினோ கூட புது வீட்டுக்கு போக வர மாட்டியா"

"இல்லைங்க சனாவுக்கு ரொம்ப முக்கியமாம் இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கோ நாளன்னைக்கோ நாம வினோ அண்ணா வீட்டுக்கு போயிக்களாம் தானே இது அப்டில்லைங்க"

"நீ மட்டும் போகாத சனா கூட இரண்டு பேரும் சின்னவங்க" என்றான் தமிழ்

"சுமதி அக்கா நான் சனா மூனு பேரும் போவோம்ங்க"

"சரி போயி  வினோகிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிக்கோ இல்லைன்னா கோவ படுவான்"

"ஹம்" என்று முனகிக்கொண்டே சென்றவள்
வினோதிடம் சென்றதும்

"வினோ அண்ணா நான் சனா கூட முக்கியமான விஷயமா வெளிய போறேன் ஸோ உங்க கூட புது வீட்டுக்கு வர முடில்லைண்ணா"

"எனக்கு தெரியும் ப்ரியா நீ போற காரியம் நல்லாவே நடக்கும் நீ போயிட்டு வா" என்றான் சுரேஷீன் மீது மெல்லிய பார்வையை வீசிவிட்டு

ஒரு நாளும் இல்லாது ஹாஷு இப்படி வெளியே செல்வதும்? அதுவும் கூட பரவாயில்லை வினோ தன்னிடம் பேசாமல் இருப்பது? மட்டும் இன்றி சுரேஷை ஓர பார்வை பார்த்து விட்டு ஹாஷுவிடம் பேசியது?  எதுவும் சாதரணமாக படவில்லை தமிழிற்கு

தமிழ் கபடமற்றவன் மனதில் ஒன்றை வைத்து வெளியே பேச தெரியாதவன் வினோவிடம் நெருங்கி

"ஏதாச்சும் பிரச்சிணையா வினோ?" என்று கேட்டான் சிரித்த முகமாக நின்ற வினோ அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு "நீ கேட்குற கேள்வி புரியுது அதற்கான பதில்...

இது ஒன்னும் இன்னைக்கோ நேற்றோ நடந்த பிரச்சிணையில்ல பல வருஷங்களா நடந்துட்டு இருக்குற பிரச்சிணை உன்கிட்ட சொன்னா புரிஞ்சிக்க மாட்டன்னு சிலரும் பிரிஞ்சிடுவோமோன்னு பலரும் சொல்லிட்டு பிரிஞ்சி போனவங்கன்னும்...
எல்லாரும் இங்க இருக்கு நான் கூட இவ்ளோ நாள் உன் நட்புக்கு துரோகம் பன்னிட்டேன் தான் பட் இன்னைக்கு சொல்வேன்"

"சொல்றா என்ன சுற்றி என்ன நடக்குது தயவு செய்து பொடி வெச்சி பேசாம சொல்லேன் தப்பு பன்னவன் தண்டனை அனுபவிக்காமலூம் இருக்க மாட்டாங்க. முட்டாளுங்க தெளியாம இருக்கவும் மாட்டாங்க இதுல நீ நான் பன்ன தப்ப சொல்லேன் சொல்லியும் புரிஞ்சிக்காம போற அளவு நான் கெட்டவனாவே இருக்குறது எனக்கு பிடிக்கலை வினோ" என்றான் கலங்கிய குரலில்
அருகில் வந்த சுரேஷ் "நீ முட்டாள் இல்ல தப்பு பன்னவுமில்லை பட் யாரோ ஒரு அறிவாளியான குற்றவாளி உன்ன தப்பு பன்ன வெச்சி முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க அதற்கு அவங்க பயன்படுத்துற ஆயுதம் தான் அன்பு,நம்பிக்கை"

"நீயுமா சுரேஷ்"

"நீயுமா சுரேஷில்ல தமிழ் நான் தான்யா வினோ ஹாஷு சுமதி தனூஷ் மாமா சனா ன்னு எல்லாரும் ஒன்னா இருக்கோம் உனக்கு எதிரா இல்ல உன் அன்பு, நம்பிக்கையும் அதிகமா இருக்குற ஒருத்தங்களுக்கு எதிரா"

"சுரேஷ் இங்க எதுவும் வேண்டாம் வா மாடி ரூம்க்கு போலாம்" என்று விட்டு தமிழின் கையை பற்றி கூட்டி சென்றான் வினோ

கதவை லாக் செய்தான் சுரேஷ் "டேய் இப்பவாச்சும் சொல்லுங்க" என்று தமிழ் கத்தியதும்

"சொல்றேன்டா" என்று ஆரம்பித்த வினோ "இத பார் தமிழ் உங்க அம்மா சரியில்லை டா..... அவங்க கேடு கெட்ட பெண்ணாக இருக்காங்க" என்றதும் தான் வினோதின் கன்னத்தை பதம் பார்த்தது தமிழின் கை

தமிழ் அடித்தது வலித்தும் அதை பொருட்படுத்தாது

"அவங்க உன் காம்பேனில வர்க் பன்னின அருநாச்சலத்தை கொலை கூட பன்னாங்க அத நேர்ல பார்த்த சாட்ச்சி நம்ம தான்யா தான்" என்றதும்

"வேண்டாம் வினோத் இதற்கு மேல அம்மா பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசினா கவியோட கழுத்துல உள்ள தாலிக்கு நான் பொறுப்பீல்லை" என்றான் கோவமாக கண்கள் இரத்தமென சிவந்து இருந்தது

"பேசுவேன்டா என் கவிக்கு நான் கொடுத்தது தாலிய இல்ல காதல அவளோட தாலி இறக்கி நீ கெட்டவனாகுறதும் இப்போ நீ இருக்குறதும் ஒன்னு தான் டா முட்டாள்"

"டேய் தமிழ் உனக்கே தெரியும் வினோ பொய் பேச மாட்டான் உனக்காக உயிரையும் கொடுப்பான்னு.... அவன நம்ப மாட்டியா டா"

"ச்சீ மூட்றா வாயா சாக விடாம உயிர் தருவான்னு நெனைக்கிர நண்பன் எவ்ளோ முக்கியமோ அத விட ஒரு படி மேல்ல எனக்கு உயிர கொடுத்த என் அம்மா முக்கியம் டா அவங்க நான் கும்பிட்ற சாமி தப்பா பேச எப்டிடா மனசு வந்திச்சி உன்ன தன் பிள்ளையா வளர்த்த தெய்வம் டா என் அம்மா"

"உனக்கு போட்ட சோறு எனக்கும் சோறு போட்டு வளர்த்தவங்க ஒரு நொடி கூட எனக்கு அன்பு காட்டினது இல்லைடா... உன் முன்னாடியும் சுந்தரப்பா முன்னாடியும் போட்டது வேஷம் டா வேஷம்....."

"வேண்டாம் டா வேண்டாம் இதற்கு மேல வேண்டாம்"

"பேசுவேன் தமிழ் உங்கம்மா சுரேஷ அசிங்கமா பேசி கம்பேனிய விட்டு வெளிய போட்டாங்க.... தனூஷையும் மதி அக்காவையும் வாரிசு எதுவும் வந்துர கூடாதுன்னு பிரிச்சி வெச்சாங்க அது பத்தலைன்னு சனாவ அதுல இழுத்து விட்டு சொந்த அக்காவுக்கு தங்ஙச்சிக்கும் பகை உண்டு பன்னிவிட்டாள் சனா சின்ன பொண்ணு அவ பவன் அப்டின்ற ஒருத்தனை காதலிச்சது பொறுக்காம அவங்களையும் பிரிச்சி விட்டா உன் பொண்டாட்டி கிட்ட நாயா வேலை வாங்குற. ஒரு தடவை ப்ரியா கன்னத்துல அறைஞ்சதுல சுரேஷ் வாய் விட்டான்னு அதுல பிரச்சிணை ஆகி தான் சுரேஷும் தானுவும் வெளிய போனாங்க இத்தனைக்கும் நானும் ப்ரியாவும் தான் வாயா மூடிட்டு இருந்து உன்ன இன்னும் முட்டாளிக்கிட்டு இருக்கோம் ப்ரியாக்கு உலக அறிவு இல்லாம அத்தை அத்தைன்னு உங்கம்மா பின்னாடியே சுத்துற அவ அன்னைக்கு மதி அக்காவ பார்க்க அவங்க வீட்டுக்கு உன் கிட்ட சொல்லிட்டு தான் போனா அது தெரியாத உன் அம்மா "எவன் கூடயோ படுத்துட்டு வர்றவள்ன்னூ என் முன்னாடியே கேட்டாங்க அந்த கேள்வியோட ஆழம் தெரியாத ப்ரியா இன்னும் அத்தை அத்தைன்னு சுத்துறா...." வினோத் பேச வேண்டியதை பேசி விட்டு சென்றான்

அருகில் வந்த சுரேஷ் "இதோட உங்க அம்மாவோட கதை முடியல்ல.... தமிழ் இன்னும் கேவலமாக நிறைய இருக்கு முதல்ல அம்மாவ கண்ண மூடிட்டு நம்புறத விட்டுடு புத்திசாலியா வயசுக்கு ஏற்ற மாதிரி யோசிக்க பழகு" என்று விட்டு சென்றான்

இருவரும் பேசியதில் அனைத்தும் தன் காதிற்கு விழுந்தும் அவன் மனம் எதையும் ஏற்க மறுத்தது.....

"அம்மா பற்றி வாய் கூஷாம பேசுறாங்க ச்சீ.... வளர்த்த நன்றி இல்ல இந்த வினோக்கு" என்று நினைத்து மனதினுள் துடித்தான்

"இத அம்மா கிட்டயே கேப்போம்" என்று கீழ் மாடிக்கு வந்து தாயின் அறைக்கு சென்றான்

"என்ன தமிழு இப்போ தான் எல்லாரும் புது வீடு போறதற்கு போறாங்க கண்டிப்பா போக வேண்டிய நீ போகாம என்ன பன்ற.... பாவம் நம்ம வினோ யாருமில்லைன்னு கவலைபட போறான்"

"போகனும் ம்மா வா இரண்டு பேரும் போலாம்"

"இல்ல தமிழ் நான் எவ்ளோ அன்பா நடந்தாகூட. அங்க யாரும் என்ன மதிக்கலை என்ன சுரேஷ் எவ்ளோ கேவலமாக பேசியும் சின்ன பையன் நம்ம பையன்னு விட்டேன் பட் இப்போ ஏனோ எனக்கு அதுலாம் கஷ்டமா இருக்கு ஸோ நீ போயிட்டு வா"

தாய் பேசிய வார்த்தையிலயே புரிந்தது அவள் வேதனையில் இருக்கிறாள் என்று தமிழ் தாயிடம் ஓடி சென்று கட்டி கொண்டு "உனக்கு பலமா எப்பவும் நான் இருப்பேன் ம்மா" என்று விட்டு தாயின் மாய கண்ணீரை துடைத்தவனாக "நம்ம கிட்ட எல்லாமே இருக்கு ம்மா அத விட எனக்கு நீயும் உனக்கு நானும்ன்னு இருக்கோம் இடையில எதற்கு கவலையும் கண்ணீரும்..... நான் யாரையும் எதிர்ப்பேன் உனக்காக ஸோ கவலை படாத நீ உன் வேலைய பாரு"

"ஹம்"

"அம்மா எக்சுவலி அண்ணாவையும் மதி அக்காவையும் பிரிச்சது ஹாஷுக்கு நீ கொடுமை பன்றது சனாவ அவ காதலன விட்டு பிரிச்சதுன்னூ உன் மேல அபாண்டமா பழி போட்றாங்கம்மா..... என்னால அத தாங்கிக்கவும் முடியல்ல சொன்னவங்கள விட்டு விழகவும் முடியல்ல நான் என்ன பன்வேன் நீயே சொல்லு"

"நான்கு பேரு நான்கு விதமா பேசினாங்கன்னு ஒரு நல்லவ கெட்டவ ஆகுறதுவுமில்ல கெட்டவங்க நல்லதாகுறதுவுமில்லை"

"ஆமாம்மா நீ என் குலதெய்வம் தெய்வத்திற்கு தப்பு பன்ன தெரியாது எனக்கு நம்பிக்கை இருக்கு"

"சரி தங்கம் நீ போயிட்டு வா"

தமிழ் சென்றதும்

"ஹேய் ப்ரியா நீ தானா அவன்கிட்ட எல்லாம் புட்டு புட்டு வெச்ச இருக்கு டி சனியனே உனக்கு.... வினோ சொல்றதா இருந்தா எப்பவோ சொல்லி இருப்பான் இது உன் வேலை தான் யேன்னா உனக்கு அந்த மதி கொடுத்த தைரியம் தான் இப்போ உன்ன பேச வைக்குது இனி உனக்கும் என் மகனுக்கும் உறவே இல்லாம பன்னலை.... நான் லேகாவே இல்ல டி"என்று சீறிக்கொண்டே சென்றாள்

வேலைக்காரி அனைவரும் வினோவின் வீட்டூக்கு சென்று விட்டதாள் லேகா யாருமற்ற வீட்டில் ஹாஷுவிற்கு முடிவை எப்படி கொடுப்பது என்று யோசித்தாள்

_______________________________

லொகேஷனை சென்ட் பன்னி விட்டு முவரும் காத்திருந்தனர்.....

"அக்கா,ப்ரியா பப்பு பிங்க் கலர் டீஷேர்ட்ல தான் வருவான் நல்ல கவனமா பாருங்க" என்று விட்டு அவளும் தேடினாள்

தூரத்தில் அச்சு அசல் தமிழ் போன்று பிங்க் கலர் டீஷேர்டில் வந்து கொண்டு இருந்தான் பவன்

"ப்ரியா இவன் தான் அண்ணாவோட பாஸ் ஆஹ்?"

"ஆமா சனா இவர் தான் அவர்... ஓடி போயி பேசுங்க"

"இல்ல கொஞ்சம் நேரம் வைட் பன்னட்டும்"

"வேண்டாம் டி சனா போ போயி பேசு வாழ்க்கைல காத்திருப்பு தேவையில்லாத ஒன்னு காத்திருந்தா நல்லதா நடக்கும்ன்னு சொல்றது எல்லாம் ரீல் தான் போயி பேசு" என்று மதி சொன்னதும் மறைவில் இருந்து கொஞ்சம் வெளிப்பட்டாள்

சனா வருவதையே உத்து பார்த்த பவன் சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் செய்தான் ஆனால் கண்களை தூரத்தில் வந்த. பிங்க் கலர் லெஹங்கா போட்ட சனாவின் மீது வைத்து கொண்டு வைப்ரேட்டில் வைத்த மொபைல் ரிங் ஆனதும் சனா சட்டென்று ஸ்க்ரீனை பார்த்தாள்

"பப்பு காலிங்" என்று இருந்தது
தூரத்தில் நின்ற பவனை பார்த்து புன்னகைத்தாள் அவனும் தான்

இருவரும் அருகில் சென்றதும் மவூனம் பாஷையானது..... இருவரும் பேசிக்காது நிலத்தை பார்த்து கொண்டு இருக்க.... பவன் தான் "யூ லுக்கிங் பியூட்டிபுல் சனூ" என்றான்

அவன் அப்படி சொன்னதும் ஆள் காட்டி விரலை நீட்டி குழந்தை போன்று "பவன் தானா நீங்க" என்று கேட்டாள்

"டவுட்ன்னா உள் மனசுக்கிட்ட கேட்டு பாரு இல்லைன்னா எனக்கு கால் பன்னி பாரு....பேசுவோம் இப்பவே"

சனா அவனுக்கூ கால் எடுத்தாள்

"பொண்டாட்டி காலிங்" என்று இருந்ததை அவனே அவளிற்கு காட்டியதும்

"எனக்கு கண் கலங்குது கட்டி பிடிச்சிக்கவா?" என்று கேட்டதும் இரு கைகளையும் விரித்து

"பர்மிஷன் க்ரேன்டட் மிஸிஸ் பவன்" என்றான் சிரித்த முகமாக அவனை இருக்கமாக கட்டி கொண்டவள் "கல்யாணம் பன்னிக்கலாமா?"

"அதற்கு என்ன இப்பவே உன் வீட்டுக்கு போறோம் உன் பேரன்ட்ஸ்கிட்ட பேசுறோம் அப்பாவ இங்க வர சொல்றோம் திகதி குறிக்கிறோம் அப்பறம் கல்யாணம் தான்" என்றதும்

"நாளைக்கு வீட்டுக்கு வாங்க இப்போ எல்லாரும் அத்தை வீட்டுல"

"சரி இதுவே உங்கள் விருப்பம் என்றாள் இந்த பவன் அதற்கு கட்டுபடுகிறேன்"

"ச்சு போங்க சரி நான் போயீட்டு வர்றேன்"

"எவ்ளோ பேசனும்ன்னு வந்தேன் நீ என்னடான்னா போகனும்ன்ற"

"இன்னைக்கு இது போதும் எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு பேரன்ட்ஸ் சம்மதம் சொன்ன பிறகு எவ்ளோ நேரம் வேணா மீட் பன்னி பேசிக்கலாம்"

"ஒகே ஒகே, பொண்டாட்டி சொன்னா தப்பாது எல்லாம் புருஷன் நல்லதற்கேன்னு எங்கப்பா சொல்வார்"

"அப்போ நீ சொல்லல"

"நான் என் பையன் கிட்ட தானே சொல்லனும் அதற்கு நீ தானே காப்ரேட் பன்னனும்"

"கழுத்துல மஞ்ச கயிற மாட்டி விடுங்க நான் காப்ரேட் பன்றத பற்றி யோசிக்கிறேன்"

"ஒகே பாய் பப்பு"என்றதும்

"பார்த்து போ....இல்ல நான் ட்ரோப் பன்னி விடவா?"

சிரித்த முகமாக "அதுலாம் அப்பறமா ட்ரோப் பன்னிக்கலாம், நீங்க கவனமா வீட்டுக்கு போற வழிய பாருங்க என்றதும் இருவருமே ஒருவர் பின் ஒருவராக பார்க்கை விட்டு வெளியாகினர்

ப்ரியாவும் சுமதி ஆட்டோவில் அமர்ந்து சனாக்காக காத்திருந்தாள் ஆட்டோக்கு முன்னாடி தான் அவன் காரை நிறுத்தி இருந்தான் அவன் ஏறும் வரை பார்த்து நின்றவள் அவன் காரில் ஏறியதும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் ஆனால் பவனோ கண்ணாடி வழியே அவளை பார்த்து கொண்டு நின்றவன் அவளது ஆட்டோ அவனது காரை தாண்டும் போது ஜன்னலினூடே எட்டி பார்த்தான் அவளும் எட்டி பார்த்து விட்டு "பப்பு நீ அச்சு அஷல் எங்க தமிழ மாதிரியே இருக்க" என்று விட்டு சென்றாள்.....

அவள் தமிழின் பெயரை சொல்லி விட்டு சென்றதும் ஒரு சில நிமிடம் ஸ்தமித்தான் பவன்....

அவள் சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றவனிற்கு

சுரேஷ் சில வருடங்களிற்கு முன்னாடி வந்து "டேய் தமிழ் மன்னிச்சிக்கோடா" என்று கேட்டது

கோயில் சென்ற போது ப்ரியா வந்து "என்னங்க வாங்க வீட்டுக்கு போலாம்" என்றது எல்லாம் நினைவுக்கு வந்தது

💘வாழ்வே கானலாய்💘

Continue Reading

You'll Also Like

84.1K 3.2K 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤
3.4K 286 88
அவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
73.8K 9.8K 51
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..