நறுமுகை!! (முடிவுற்றது)

By sweetylovie2496

364K 15.9K 4.8K

என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி... More

நறுமணம் 1
நறுமணம் 2
நறுமணம் 3
நறுமணம் 4
நறுமணம் 5
நறுமணம் 6
நறுமணம் 7
நறுமணம் 8
நறுமுகை 9
நறுமணம் 10
நறுமணம் 11
நறுமணம் 12
நறுமணம் 13
நறுமணம் 14
நறுமணம் 15
நறுமணம் 16
நறுமணம் 17
நறுமணம் 18
A/N
நறுமணம் 19
நறுமணம் 20
நறுமணம் 21
நறுமணம் 22
நறுமணம் 23
நறுமணம் 24
நறுமணம் 25
நறுமணம் 26
நறுமணம் 27
நறுமணம் 28
நறுமணம் 29
நறுமணம் 30
நறுமணம் 31
நறுமணம் 32
நறுமணம் 33
நறுமணம் 34
நறுமணம் 35
நறுமணம் 36
நறுமணம் 37
நறுமணம் 38
நறுமணம் 39
charecters
நறுமணம் 40
நறுமணம் 41
நறுமணம் 42
நறுமணம் 43
நறுமணம் 44
நறுமணம் 45
நறுமணம் 46
நறுமணம் 47
நறுமணம் 48
நறுமணம் 49
நறுமணம் 50
நறுமணம் 51
நறுமணம் 52
நறுமணம் 53
நறுமணம் 54
நறுமுகை 55
நறுமணம் 56
நறுமணம் 57
நறுமணம் 58
நறுமணம் 59
நறுமணம் 60
நறுமணம் 61
நறுமணம் 62
நறுமணம் 63
நறுமணம் 64
நறுமணம் 65
நறுமணம் 66
நறுமணம் 67
நறுமணம் 68
A/N
நறுமணம் 69
நறுமணம் 70
நறுமணம் 71
நறுமணம் 72
நறுமணம் 74
நறுமணம் 75
நறுமணம் 76
நறுமணம் 77
நறுமணம் 78
நறுமணம் 79
நறுமணம் 80
நறுமணம் 81.
A/N

நறுமணம் 73

3.3K 174 24
By sweetylovie2496

சக்தி pov:

    நான் உக்கார்ந்து பேப்பர் பாத்துட்டு இருந்தேன்.....அப்போ அதுல அமைச்சர் பையன் கடத்தப்பட்டார்னு நியூஸ் கருந்துச்சு.....கரெக்டா அப்போ வீட்டுக்கு மத்திய அமைச்சரோட பீ.ஏ என்னைய பாக்கனும்னு சொன்னாருன்னு என்கிட்ட சொன்னான்....

"இங்க பாருங்க உங்க அமைச்சருக்கு வேணும்னா அவர வந்து பாக்க சொல்லுங்க....என்னால அவரு சொல்ற இடத்துக்கு எல்லாம் வர முடியாது...."னு சொல்லி விட்டுட்டேன்...

நான் கோபத்துல உக்காந்து இருந்தேன்....அந்த ஆளு தப்பானவன்னு தெரியும் அதோட அந்த ஆளுக்கு எதிரா க்ரிஷ் ஆஜராகிருக்குறான்னு தெரியும்....இவன் மாதிரி ஆளுங்களுக்கு வாதாடி தருறது பாவம்....

"என்னாச்சுங்க ஏன் ஒரு மாதிரி இருக்குறிங்க...."னு ஸ்வாத்தி என் தோல் மேல கை வச்சிட்டு கேட்டா...

"ஒன்னும் இல்ல டா....சின்ன கேஸ் விஷ்யமா யோசிச்சிட்டு இருந்தேன் அதான்...."

"எப்ப பாத்தாலும் கேஸ் நினைப்பு தானா....வர வர பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்டுல இருக்குறேன்றதையே மறந்திட்டிங்க போல...."

"ஏன்டி அப்புடி சொல்லுற....என்னதான் கேஸ் விஷ்யமா இருந்தாலும் உன்னைய நான் விட்டுக்குடுக்க மாட்டேன்...."

"எல்லாம் டைலாக் அடிங்க....அவ்வளோ அக்கரை இருந்தா இன்னைக்கு என்ன நாளுன்னு சொல்லுங்க...."

"இன்னைக்கு செவ்வாய்கிழமை...."

"ஐய்யோ ராமா இந்த மனுஷன கட்டிக்கிட்டு நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்...."

"ஏய் என்ன சொன்னா தான டி தெரியும்...."

"நீங்களும் எதுவும் சொல்ல வேண்டாம்....நானும் எதுவும் சொல்ல வேண்டாம்...."னு கோவமா சொல்லிட்டு போய்ட்டா...

அப்போ அங்க ப்ரவீன் வந்தான்....

"அண்ணி காஃபி...."னு சோஃபால உக்காந்துட்டே கத்துனான்

"இதோ வரேன்....அஞ்சு நிமிஷம்...."னு ஸ்வாத்தி கிட்சன்ல இருந்து கத்துனா...

சொன்ன மாதிரியே அஞ்சு நிமிஷத்துல காஃபி கொண்டு வந்து அவனுக்கு குடுத்துட்டா...

"ஏன் டி இங்க நான் ஒருத்தன் அரைமணி நேரமா காஃபி கேட்டுட்டு இருக்குறேன்....எனக்கு தரல...ஆனா அவன் கேட்ட உடனே தருற...."

"மொதல்ல இன்னைக்கு என்ன நாள்னு கண்டுபுடிச்சு சொல்லுங்க....அதுக்கப்புறம் காஃபி குடுக்குறேன்....சொல்லன்னா டிஃபனும் கட்டு...."னு கோவமா சொல்லிட்டு போய்ட்டா

நான் ப்ரவீன பாத்தேன்....அவன் என்னைய பாத்து சிரிக்க ஆரம்பிச்சிட்டான்

"ஏன்டா சிரிக்க மாட்ட....நல்லா டைம்க்கு எல்லாம் கிடைக்குதுல்ல....உனக்கும் கல்யாணம் ஆகும் அப்போதான் என் ஃபீலிங்ஸ் புரியும்...."

"அண்ணா சும்மா பொலம்பாத....அவுங்க கோவப்படுறதுலையும் ஞாயம் இருக்குது....இன்னைக்கு என்ன நாளுன்னு எனக்கு கூட ஞாபகம் இருக்கு....ஆனா நீ மறந்துட்ட....போய் வீராப்பா தாலி கட்டி அண்ணிய கூட்டிட்டு வர தெரிஞ்சதுல....அதை இந்த பொண்ணான நாள்ல தான் பண்ணுன்றதை ஏன் மறந்த....இன்னைக்கு உங்க கல்யாண நாள் டா...."

"ஐய்யோ மறந்துட்டேன்....அதுக்கு தான் கோவப்படுறாலா....நல்ல வேலை ஞாபகம் படுத்துன...."

"அதான் படுத்திட்டேன்ல இப்பையாவது போய் அண்ணிக்கிட்ட ஸ்கோர் பண்ணு....இல்லன்னா இன்னைக்கு ஃபுல்லா சாப்பாடு கிடைக்காது...."னு‌ சிரிச்சிட்டே சொன்னான்

நானும் சரின்னு சொல்லிட்டு கிட்சன்கு போனேன்....போய் பின்னாடி இருந்து‌ அவள ஹக் பண்ணுனேன்

"இங்க எதுக்கு வந்திங்க...."

"ம்ம் என்‌ பொண்டாட்டிக்கூட ரொமேன்ஸ் பண்ண வந்தேன்...."

"ஓ நான் உங்க பொண்டாட்டின்னு ஞாபகம் இருக்குதா...."

"இருக்குறதுனால தான் உன்னைய கட்டிப்புடிச்சிட்டு இருக்குறேன்...."

"என்ன நக்கலா...."

"ஹேப்பி அனிவர்ஸரி...."

"ம்ம் இப்போதான் ஸாரக்கு இது ஞாபகம் வந்துச்சோ...."

"வேலை டென்ஷன்ல மறந்துட்டேன்...."

"கல்யாணம் ஆகி மூனு வர்ஷம் ஆகப் போகுது ஒரு‌வர்ஷம் கூட கரெக்டா ஞாபகம் வச்சு சொல்லுறது இல்ல....என்னமோ இந்த வர்ஷந்தான் மறந்த மாதிரி பில்ட் அப் வேற...."னு சொல்லிட்டு என்னைய தள்ளி விட்டுட்டா....

நான் திரும்ப அவள என்‌‌ பக்கத்துல இழுத்து கிஸ் பண்ண போனேன் கரெக்டா குழந்தை அழுதுட்டா....

"குழந்தை அழுகுறா....போய் தூங்குங்க நான் கிட்சன்ல வேலை பாத்துட்டு இருக்குறேன்...."னு சொல்லிட்டு என்னைய தள்ளி விட்டுட்டா....

நானும் போய்‌ என் பொண்ண தூக்கி வச்சிட்டு கொஞ்ச ஆரம்பிச்சுட்டேன்....
ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சிம்பிளா பேர்‌ வைக்குற ஃபங்கஷன் வச்சிட்டோம்....மித்ரான்னு‌ பேர் வச்சிட்டோம்....இது ஸ்வாத்தியோட செலக்ஷன்....

நான் குழந்தைய தூக்கிட்டு ஹால்க்கு போனேன்....அங்க ப்ரவீன் உக்கார்ந்து இருந்தான்...

"மித்ரா குட்டி எந்திரிச்சாச்சா சித்தப்பாக்கிட்ட வாங்க...."னு சொல்லிட்டு குழந்தைய வாங்கிட்டு அவனும் கொஞ்ச ஆர்மபிச்சிட்டான்...

எனக்கும் ஸ்வாத்திக்கும் கல்யாணம் முடிஞ்சதும் ப்ரவீன் தனியா போறேன்னு சொன்னான் ஆனா ஸ்வாத்தி வேண்டாம்னு எங்கக்கூடவே இருக்க சொல்லிட்டா...ஸ்வாத்தி ப்ரவீன விட சின்ன பொண்ணுதான்....ஆனா அவன பெத்த பையன போல பாத்துப்பா....ஒருசில நேரம் அவன் எனக்கு தம்பியா இல்ல அவளுக்கு தம்பியான்ற டவுட் அவுங்க பேசுறதை பாக்குறவங்களுக்கு வந்துடும்....

கொஞ்ச நாள்ல என் லைஃப் எப்புடி மாறிடுச்சுன்னு யோசிச்சிட்டே நான் கோர்ட்டுக்கு கிளம்ப போய்ட்டேன்....

நான் கிளம்பிட்டு சாப்டுட்டு கொஞ்ச நேரம் மித்ரா கூட விளையாண்டுட்டு அதுக்கப்புறம் கோர்ட்டுக்கு கிளம்பிட்டேன்....

இப்போ நான் சிட்டில பெஸ்ட் லாயருன்ற பேரு இருக்குது....எந்த கேஸ் எடுத்தாலும் அதுல ஜெய்காம விடமாட்டேன்....

நான் கோர்ட்டுக்கு போனதும் அங்க க்ரிஷ் வெளில நிக்கிறதை பாத்தேன்....

"குட் மார்ணிங் க்ரிஷ்..."

"குட் மார்னிங் அண்ணா...."

"என்ன நீ கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள கோர்ட்டுக்கு வருற....ஜாலியா எங்கையாவது ஹனிமூன் போய்ட்டு வா...."

"இல்ல அண்ணா அந்த மினிஸ்டர் பையன் கேஸ் கடைசி ஹியரிங் இந்த வாரம் வருது....அதுல ஜெய்ச்சே ஆகனும் அண்ணா....அந்த பொண்ணோட அம்மா அப்பா பாவம்...."

"நானும் அந்த கேஸ் பத்தி கேள்வி பட்டேன்.....இன்னைக்கு காலையில நியூஸ் பாத்தியா அவரு பையன யாரோ கடத்திட்டாங்கலாம்...."

"ஆமா அண்ணா பாத்தேன்...."

சொல்ல முடியாது க்ரிஷ் கேஸ்ல தோத்துர கூடாதுன்னு அமைச்சரே தன்னோட பையன எங்கையாவது மறச்சு வச்சாலும் வச்சிருந்துருப்பான்...."

"நானும் அதத்தான் அண்ணா யோசிச்சேன்...இன்னும் மூனு நாள் தான் இருக்குது....நம்ம ஜெய்க்கிறது உறுதி .....அதுக்குள்ள அந்த பொறுக்கி எங்க இருக்குறான்னு கண்டுபுடிக்கனும்....

"கண்டிப்பா டா...இந்த விஷ்யமா எந்த ஹேல்ப் வேணுனாலும் கேளு நான் பண்ண ரெடியா இருக்குறேன்...."

"தேங்க்ஸ் அண்ணா....
இப்பதான் எனக்கு புரியுது....என்னைய ஆக்சிடென்ட் பண்ணி கொள்ள ஆள் அனுப்பினதும் அந்த அமைச்சராதான் இருக்கும்....."

"என்ன சொல்லுற...."னு நான் ஷாக்கிங்கா கேட்டேன்...

அவனும் என்ன நடந்துச்சுன்னு விவரமா சொன்னான்....

"என்ன டா இது....படத்துல வருற மாதிரி சொல்லுற....ஆமா இந்த விஷ்யம் முகிக்கு தெரியுமா...."

"இன்னும் தெரியாது நான் சொல்லல...."

"குட் அப்புடியே மேய்ன்டெய்ன் ஆகிக்கோ....தேவையில்லாம பயப்படுவா.."

"ம்ம் ஓகே அண்ணா...."

"க்ரிஷ் நான் கூட அந்த பொண்ணு ஸ்வேத்தா எப்படி பட்டவன்னு விசாரிச்சேன் அவ காலேஜ் போய்ட்டு....அங்க எனக்கு தெரிஞ்சது வரைக்கும் அவ பசங்க கூட அவ்வளவா பேசமாட்டாலாம்...

ரொம்ப ஷை டைப்னு கேள்வி பட்டேன்....ஆனா அவள அடிக்கடி யாரோ கார்ல வந்து பிக் அப் பண்ணிட்டு போவாங்கன்னு சொன்னாங்க...."

"யாராவது தெரிஞ்சவங்களா இருக்கும்...."

"க்ரிஷ் இங்கதான் நீ தப்பு பண்ணுற....ஸ்வேத்தாவோட அம்மா அப்பா கார் வச்சிருக்குறாங்க....ஆனா பென்ஸ் கார் வச்சிருக்குற அளவுக்கு பண்க்காரங்க இல்ல....விசாரிச்ச வரைக்கும் அவுங்க ஃபேமிலில எல்லாரும் மிடில் க்ளேஸ்தான்.‌.‌..."

"அண்ணா ஃப்ரெண்டா இருக்காலாம்...."

"அதேதான் நானும் யோசிக்குறேன்...."

"ஒருவேலை நம்ம அந்த ஃப்ரெண்ட் யாருன்னு கண்டுபுடிசசிட்டா நம்ம கேஸ் யூஸ் ஆகலாம்....அவுங்க மூலியமா எதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாக்கலாம்...."

"ம்ம் நீங்க சொல்லுறதும் கரெக்ட் தான் ஆனா அவுங்கள எப்புடி கண்டுபுடிக்குறது...."

"அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்குது.....நம்ம ஸ்வேத்தா படிச்ச காலேஜ் போய்ட்டு அங்க கேமரா ரெக்கார்ட்ல அந்த கார் நம்பர் பாத்துட்டோம்னா அந்த கார் யாரு பேருல ரிஜிஸ்டர் ஆகியிருக்குன்னு நம்ம தெரிஞ்சுக்கலாம் அவுங்க அட்ரெஸையும் வாங்கிடலாம்...."

"எல்லாம் சரிதான் அண்ணா...."

"இன்னும் ஏன் வெய்ட் பண்ணிட்டு வா கிளம்பலாம்...."னு சொல்லிட்டு நான் க்ரிஷ கூட்டிட்டு போய்ட்டேன்.....

க்ரிஷ் pov:

நானும் சக்தி அண்ணாவும் போய் வீடியோ பாத்துட்டு இருந்தோம் அப்போ ஸ்வேத்தாவோட ஃப்ரெண்ட்ஸ் ஒரு ப்ளேக் பென்ஸ் காமிச்சு இதுதான் வரும்னு சொன்னாங்க....ஆனா வீடியோல கார் நம்பர் பாதி தெரியல....

எனக்கு அந்த கார எங்கையோ பாத்த நியாபகமாவே இருந்துச்சு ஆனா டக்குன்னு ஞாபகம் வரல....எங்க பாத்தேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்....

"என்ன க்ரிஷ் யோசிச்சிட்டே இருக்குற...."

"ஒன்னும் இல்ல அண்ணா...நான் இந்த கார எங்கையோ பாத்துருக்குறேன்....ஆனா எங்கன்னு தான் தெரியல....."

"சிட்டில இது மாதிரி நூறுக்கும் மேல போகும் வரும்...."

"இல்ல அண்ணா இதுல ஒரு ஸ்பெஷல் இருக்குது நோட் பண்ணுனிங்களா...

இந்த கார்ல ஸ்வேத்தான்ற பேர தலைகீழ எழுதி ஒரு டிசைன் மாதிரி வரைஞ்சிருக்குது...."

"ஆமா டா....நான் இதை கவணிக்கவே இல்ல...."

"ம்ம்....எங்க பாத்தேன்னு தெரியலையே....."

"நல்லா யோசிச்சு பாரு டா...."

"ட்ரை பண்ணுறேன் அண்ணா...."னு சொல்லிட்டு யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்‌.‌..

அப்போதான் எனக்கு சிவா ஞாபகம் வந்துச்சு....அவன் வீட்டுல தான் நான் இந்த மாதிரி கார் பாத்தேன்....ஆனா கண்ணால பாக்குற வரைக்கும் எதுவும் உறுதி பண்ண முடியாது....

நான் சக்தி அண்ணாவ கூட்டிக்கிட்டு சிவா வீட்டுக்கு போயிருந்தேன்....
அங்க போய் பாத்தா அதே மாதிரி கார் நின்னுட்டு இருந்துச்சு....

எனக்கு இப்போ ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிருச்சு....ஸ்வேத்தா வோட ஃப்ரெண்ட் வேற யாரும் இல்ல சிவா தான்.... ஆனா அவன் வெறும் ஃப்ரெண்டு மட்டும் தானா இல்ல அதுக்கும் மேலையான்னு எனக்கு ஒரு டவுட் இருக்குது.....

நான் சக்தி அண்ணாக்கிட்ட இதை சொன்னேன்....அவரும் அதைத்தான் ஃபீல் பண்ணுனாரு

"ஏன் அண்ணா அப்போ அமைச்சர் பையன ஏன் சிவா கடத்திருக்குறக்க கூடாது...."

"அதுனால அவனுக்கு என்ன யூஸ்...."

"அவனுக்கு புடிச்ச பொண்ண அவன் ரேப் பண்ணி பழி சுமத்தி கொண்ணுட்டான்ற ரீசன் போதுமே...."

"நீ சொல்லுறதும் கரெக்ட்டு தான் க்ரிஷ்....."

"அண்ணா பொறுமையா எல்லாத்தையும் பண்ணனும்...."

"சரி டா....என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்லு‌....இப்போ நான் வீட்டுக்கு போயே ஆகனும்....இல்லன்னா எனக்கு நைட்டு சாப்பாடு கிடைக்காது...."

"ஏன்...."னு சிரிச்சிட்டே கேட்டேன்..

"இன்னைக்கு எனக்கும் ஸ்வாத்திக்கும் நாலாவது வர்ஷம் அனிவர்ஸரி...."

"கங்ராட்ஸ் அண்ணா...."

"தேங்க்ஸ் டா....அதான் இன்னைக்கு அவ சீக்கிரம் வந்துருங்க வெளில போகலாம்னு சொன்னா....நான் இப்போ கிளம்புனாதான் கரெக்டா இருக்கும்.....இல்லன்னா சாமி ஆட்டம் ஆடுவா....."

"காலேஜ்ல எல்லாரும் உங்கள் பாத்து பயந்த காலம் போய் நீங்க உங்க வைஃப்க்கு பயப்படுறதை பாக்கும்போது காமடியா இருக்குது...."னு சொன்னேன்...

"இருக்கும் டா இருக்கும்....சரி டா பாத்து போ....எதாவதுன்னா கால் பண்ணு...."னு என்னைய கோர்ட்ல இறக்கி விட்டுட்டு சக்தி அண்ணா கிளம்பிட்டாங்க....

நானும் வேலை எதுவும் இல்லன்னு வீட்டுக்கு கிளம்பிட்டேன்....

போற வழியில எனக்கு சிவாவ பத்தின யோசனைதான் வந்துட்டே இருந்துச்சு....
அவன்தான் அமைச்சர் பையன கடத்துனான்னு எனக்கு தெரியாது....ஆனா அவனா இருந்தா பெரிய தப்பு பண்ணுறான்....அவன் வாழ்க்கைய கெடுத்துக்க என்னைக்கும் நான் அனுமதிக்க மாட்டேன்...
அவனோட அம்மா அப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்கன்னு அமைதியா யோசிச்சிட்டே வந்தேன்....வீடும் வந்துருச்சு....

நான் வீட்டுக்கு போய்ட்டு பெல் அடிச்சேன்....

முகி கதவ திறந்தா....உள்ள போனா அங்க ரிஷி நிஷு சந்துரு ரேஷ்மா....ஸ்வாத்தி சக்தி அண்ணா குட்டி பாப்பா... ப்ரவீன் நர்மதான்னு எல்லாரும் இருந்தாங்க.....

"என்னடி இது...."னு முகிய கேட்டேன்...

"அதுவா ரிஷி அண்ணாவும் சந்துரு அண்ணாவும் வருற திங்கள்கிழமை டெல்லி கிளம்புறாங்க....ஒன்ஸ் போனா....இன்டெர்வ்யூ முடிச்சிட்டு ட்ரெய்னிங் முடிச்சிட்டு தான் வருவாங்க....அதுக்கு தான் ஒரு சின்ன கெட் டுகேதர் ப்ளேன் பண்ணுனோம்...அதோட சக்தி அண்ணாக்கும் ஸ்வாத்திக்கும் இன்னைக்கு கல்யாண நாள்....அதான் மொத்தமா செலப்ரேட் பண்ணலாம்னு எல்லாரையுய் வர சொல்லிட்டேன்...."னு சொன்னா

"ஓ... சரி நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்...."னு சொல்லிட்டு போய்ட்டேன்....

கொஞ்ச நேரத்துல நானும் கீழப் போய்ட்டேன்....எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு சாப்டுட்டு பேசிட்டு ஜாலியா இருந்தோம்....

நறுமணம் வீசும்....

______________________________________________________________________________

Hi frndzz...

Update epudi irukudhunu slunga....
Romba bore adikalanu naemaikuraen....

Padichitu marakkama Kandipa vote pannunga

















Continue Reading

You'll Also Like

74.1K 9.8K 51
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
28.1K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
110K 7.8K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...