நறுமுகை!! (முடிவுற்றது)

Від sweetylovie2496

364K 15.9K 4.8K

என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி... Більше

நறுமணம் 1
நறுமணம் 2
நறுமணம் 3
நறுமணம் 4
நறுமணம் 5
நறுமணம் 6
நறுமணம் 7
நறுமணம் 8
நறுமுகை 9
நறுமணம் 10
நறுமணம் 11
நறுமணம் 12
நறுமணம் 13
நறுமணம் 14
நறுமணம் 15
நறுமணம் 16
நறுமணம் 17
நறுமணம் 18
A/N
நறுமணம் 19
நறுமணம் 20
நறுமணம் 21
நறுமணம் 22
நறுமணம் 23
நறுமணம் 24
நறுமணம் 25
நறுமணம் 26
நறுமணம் 27
நறுமணம் 28
நறுமணம் 29
நறுமணம் 30
நறுமணம் 31
நறுமணம் 32
நறுமணம் 33
நறுமணம் 34
நறுமணம் 35
நறுமணம் 36
நறுமணம் 37
நறுமணம் 38
நறுமணம் 39
charecters
நறுமணம் 40
நறுமணம் 41
நறுமணம் 42
நறுமணம் 43
நறுமணம் 44
நறுமணம் 45
நறுமணம் 46
நறுமணம் 47
நறுமணம் 48
நறுமணம் 49
நறுமணம் 50
நறுமணம் 51
நறுமணம் 52
நறுமணம் 53
நறுமணம் 54
நறுமணம் 56
நறுமணம் 57
நறுமணம் 58
நறுமணம் 59
நறுமணம் 60
நறுமணம் 61
நறுமணம் 62
நறுமணம் 63
நறுமணம் 64
நறுமணம் 65
நறுமணம் 66
நறுமணம் 67
நறுமணம் 68
A/N
நறுமணம் 69
நறுமணம் 70
நறுமணம் 71
நறுமணம் 72
நறுமணம் 73
நறுமணம் 74
நறுமணம் 75
நறுமணம் 76
நறுமணம் 77
நறுமணம் 78
நறுமணம் 79
நறுமணம் 80
நறுமணம் 81.
A/N

நறுமுகை 55

3.6K 194 61
Від sweetylovie2496


முகி pov:

    நான் ரேஷ்மாவ பாத்து சிரிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்....அவ அமைதியா என்னைய பாத்துட்டே நின்னுட்டு இருந்தா....

"என்ன ரேஷ்மா இப்புடி நீ அமைதியா நின்னா என்ன அர்த்தம் சொல்லு....வழக்கமா கெத்தா வீர வசனம்லாம் பேசுவ அதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்....எங்க எனக்காக பேசு பாக்கலாம்...."னு சொன்னேன்...

"ஏய் என்ன திமிரா.....இப்ப என்ன வேணும் உனக்கு....."னு கோவமா கேட்டா

"அப்பா இத இதைத்தான் நான் எதிர்பாத்தேன்....தேங்க்ஸ் டி செல்லம்....ஆமா என்ன கேட்ட எனக்கு என்ன வேணும்னுதான சொல்லுறேன் அதுக்குதான கூட்டிட்டு வந்துருக்குறேன்...."னு நான் சொன்னேன்...

அவ என்னைய பாத்துட்டு மொரச்சிட்டே நின்னுட்டு இருந்தா....

"இனிமேல் நீ கிரிஷ் கிட்ட நெருங்கவே கூடாது.....அவன பத்தின நினைப்ப அடியோட எடுத்துடனும்...."னு சொன்னேன்

அவ நான் சொன்னதை கேட்டு திமிரா சிரிச்சிட்டு பேச ஆரம்பிச்சா...

"என் அண்ணா சொல்லி என் அம்மா சொல்லியே கேட்காத நான் அஃப்ட்ரால் நீ சொல்லி நான் கேட்பேன் நினைக்குறியா...."னு கேட்டா

"ம்ம் கரெக்ட்டு தான் நீ இதைத்தான் சொல்லுவன்னு எனக்கு நல்லாவே தெரியும்....
ஆனா நீ நான் சொல்லுறதை கேட்கலன்னா உன் அம்மா பண்ண கேவலமான விஷ்யத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டியது வரும்...."

"என்ன டி ரொம்பதான் மெரட்டுற....ஆமா எங்க அம்மா தான் உன்னைய கொலப் பண்ண ட்ரை பண்ணுனாங்க....அதையும் தாண்டி  பொலைச்சிக்கிட்டியே.....
உன்கிட்ட இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்குது.....உன்னால என்னையோ என் அம்மாவையோ ஒன்னும் பண்ண முடியாது...."னு சொன்னா

"அம்மு குட்டி நான் என்ன நினைச்சேனோ அதைக் கரெக்டா பேசிட்ட டா....ஒரு நிமிஷம் இரு.....அம்மா ஸ்வாத்தி ஷுட்டிங் முடிஞ்சு மா நீ வாமா...."னு ஸ்வாத்திக்கு ஃபோன் பண்ணி சொன்னேன்....

அவளும் வந்துட்டா....அவக்கிட்ட ஃபோன் வாங்கி வீடியோவ ப்ளே பண்ணிக்காட்டுனேன்.....

ரேஷ்மா மூஞ்சில ஈ ஆடல.....

"ஆதாரம் இருக்கா ஆதாரம் இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருந்தியே.....இதோ பாரு ஆதாரம்....நல்லா நச்சுன்னு இருக்குதா..நான் கூட டைமாகும்னு நினைச்சேன்.....நீ என்னடான்னா டக்குன்னு உன்மைய ஒத்துக்கிட்டு.....நேரத்தை மிச்சம் படுத்திட்ட......"னு சொன்னேன்....

அவ அமைதியா நின்னுட்டு இருந்தா....

"ஏன்டி நீயெல்லாம் வில்லியா இருக்குவே ப்ரயோஜனம் இல்ல....சரியான காமெடி பீஸா இருக்குற....நான் உன்கிட்ட தனியா பேசணும்னு கூப்டுறேன்....எதுக்கு கூப்டுறேன்னு யோசிக்க மாட்ட......இப்புடியா உன்மைய ஒத்துக்குறது.....உனக்கு ட்ரெய்னிங் பத்தாது ரேஷ்மா....உன் அம்மாவ நல்லா ட்ரெய்னிங் குடுக்க சொல்லு ஓகேவா.....அவுங்க உள்ள போனதுக்கு அப்புறம் நான் உனக்கு ட்ரெய்னிங் தரேன்...."னு சிரிச்சிட்டே சொன்னேன்...

அவ அழுகுற மாதிரி போய்ட்டா....

"அச்சச்சோ ஸ்வாத்தி இங்க பாரு டி ரேஷ்மா கண்ணுல கண்ணீர் வருது.....உன்னால நம்ப முடியுதா...."னு கேட்டேன்

ஸ்வாத்தி என்னைய பாத்து சிரிச்சிட்டே இல்லன்னு சொன்னா....

"இங்க பாரு இது என்கிட்ட சேஃப்டியா தான் இருக்கும்....எதாவது ஏடாக்குடமா பண்ணுறன்னு தெரிஞ்சது....அப்புறம் இந்த வீடியோ எங்க போகனுமோ போய்டும்.....

அதுனால ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ.....வரேன் செல்லம் பாய்.....அப்புறம் அம்மாவ ரொம்ப கேட்டேன்னு சொல்லு...."னு சிரிச்சிட்டே சொல்லிட்டு போய்ட்டேன்....

நானும் ஸ்வாத்தியும் க்ளேஸ்க்கு நடந்து போய்க்கிட்டே இருந்தோம்....

"என்னால இன்னும் நம்ப முடியல டி...அம்மானா பிள்ளைங்க பண்ணுற தப்ப திருத்தக்க தான் சொல்லுவாங்க....ஆனா இங்க என்னடான்னா பொண்ணு பண்ணுறது தப்புன்னு தெரிஞ்சும் அம்மா அவக்கூட சேந்துக்கிட்டு இவ்வளோ கீழ்த்தரமான வேளைய பண்ணிருக்குறாங்க.....
சி என்ன அம்மா டி அவுங்க....."னு ஸ்வாத்தி சொன்னா

"இப்ப தெரியுதா ரேஷ்மா ஏன் இப்புடி இருக்குறான்னு......அவளுக்கு சரியான வழிக்காட்டுதல் இல்ல டி....இப்பக்கூட அவ திருந்தலன்னா அவள என்ன பண்ணுறதுன்னு தெரியல டி.....அவ நல்லவதான் டி ஆனா அவளக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும் அவ்வளோ தான்....."னு சொன்னேன்

"ஏய் நீ என்ன பெரிய மஹானா அவள மாத்தரேன் வைக்குறேன்னு சொல்லிட்டு இருக்குற.....அவ எல்லாம் என்னைக்கும் திருந்தவே மாட்டா....ஒழுங்கா கொண்டு போய் இந்த வீடியோவ சுப்பு அங்கிள் கிட்ட குடு....
தப்பு பண்ணுனாங்கள்ல அப்போ தண்டனை கிடைச்சே ஆகனும்....."னு சொன்னா

"இல்ல டி....நான் இந்த வீடியோவ ரேஷ்மா அம்மாவ மாட்டி விடனுன்றதுக்காக உன்னைய எடுக்க சொல்லல.....எனக்கு அதுல விருப்பமும் இல்லை....ஏன்னா ரேஷ்மா அப்பா ரொம்ப நல்லவரு டி.....அவருக்கு உன்மை தெரிஞ்சா கண்டிப்பா மனசு உடைஞ்சி போய்டுவாரு....

என்னால ஒரு குடும்பம் பிரியக்கூடாது.....அதுவும் என் ரிஷி அண்ணாக் குடும்பம் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்....அதான் என்னோட ஆசையும்....."னு சொன்னேன்

"லூசா டி நீ....அப்புறம் எதுக்கு இந்த வீடியோவ எடுக்க சொன்ன......பெரிய தியாகி மாதிரி பேசுறா.....எந்தக் காலத்துல இருக்குற இப்ப எல்லாம் பழிக்கு பழி வாங்குனாதான் இந்த
உலகத்துல வாழ முடியும்....இப்புடி அநியாயத்துக்கு நல்லவலா இருக்காத....."னு சொன்னா

"பழிக்கு பழி எல்லா விஷ்யத்துலையும் வாங்க முடியாது ஸ்வாத்தி.....அது நிரந்தர தீர்வும் இல்லை....நான் அப்புடி பண்ணுறதால என்ன கிடைக்கும் சொல்லு.....எனக்கு இதுதான் சரின்னு தோனுது.....எனக்காக ரிஷி அண்ணா நிறைய பண்ணிருக்குறான்....அவன் குடும்பத்த நான் எப்புடி கெட்டு போகனும்னு  நினைப்பேன்....இந்த விஷ்யம் கடைசி வரைக்கும் நான் யாருக்கிட்டையும் சொல்ல மாட்டேன்.....
இந்த வீடியோ நான் உன்னைய எடுக்க சொன்னதுக்கு காரணம் ரேஷ்மாக்கு ஒரு பயம் இருக்கனுன்றதுக்காக தான்.....
மத்தபடி ஒன்னும் இல்ல.....

ரேஷ்மா அம்மா பண்ணுன தப்புக்கு கண்டிப்பா தண்டனை உண்டு....அதை அந்த கடவுளே பாத்துப்பான்.....நான் எதுவும் பண்ணப் போறது இல்ல....

இது நான் அவளுக்கு குடுக்க போற கடைசி சேன்ஸ் இதுலையும் அவ மாரலன்னா அதுக்கப்புறம் பாத்துக்கலாம்....."னு சொன்னேன்

"என்னமோ பண்ணு....நான் எதுவும் சொல்லுறதுக்கு இல்ல....ஆனா ஒன்னு இனிமேல் அந்த ரேஷ்மாவ பாரு ஒரு வழிப் பண்ணுறேன்....நீ வேணும்னா போதி தர்மரா இருந்துக்கோ என்னால எல்லாம் அப்புடி இருக்க முடியாது......."னு சொன்னா

நான் அவள சிரிச்சிட்டே பாத்துட்டு இருந்தேன்.....

"ஆமா நான் கேட்கனும்னு இருந்தேன்....ரேஷ்மா அம்மாதான் உன்னைய கொலைப் பண்ண ட்ரை பண்ணேனாங்கன்னு உனக்கு எப்புடி தெரியும்...சக்தி என்கிட்ட நீ மயக்கமா இருந்ததா சொன்னான்....."னு ஸ்வாத்தி கேட்டா...

"அதுவா.....கிரிஷ் வர சொன்னதா நினைச்சு நான் அந்த லெட்டர பாத்துட்டு பின்னாடி போனேன்....அங்க போய்க்கிட்டு இருக்கும் போதே யாரோ என் மூக்குல துணி வச்சு மூடிட்டாங்க.....நான் அவுங்கள தள்ளி விடுறதுக்காக எவ்வளவோ போராடி பாத்தேன் ஒரு கட்டத்துக்குமேல என்னால முடியல.....மயக்கம் வர ஆரம்பிச்சிடுச்சு.....நான் மயக்கம் போட்டுட்டேன் ஆனா அங்க பேசுறது எல்லாம் கேட்டுதான் இருந்தேன்....பாதி மயக்கத்துல இருந்தேன்....என்னைய தூக்கிட்டு போய் எங்கையோ போட்டுட்டாங்க.....

அதுக்கப்புறம் ரேஷ்மா அம்மா அங்க வந்தாங்க என்கிட்ட வந்து அவுங்க பேசுனாங்க....அவுங்க பேசுறது என் காதுல கேட்குது ஆனா என்னால கண்ணத் திறக்க முடியல....அப்புறம் கொஞ்ச நேரத்துல சுத்தமா எனக்கு சுயநினைவு போய்டுச்சு....அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியாது.....

அப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்....என்னைய பின்னாடி வர சொன்னதுல இருந்து எல்லாமே ரேஷ்மா பண்ணின வேலைன்னு....."

"எம்மாடி என்ன ஒரு வில்லத்தனம்.....ஆனா தேங்க் காட் உனக்கு எதுவும் ஆகல...."னு சொன்னா

நானும் ஆமான்னு சிரிச்சிட்டே ஆமான்னு தலையாட்டுனேன்....அப்புறம் ரெண்டு பேருமே க்ளாஸ்க்கு போய்ட்டோம்.....

அன்னைக்கு ஃபுல்லா நல்லா போச்சு....வழக்கத்துக்கு மாறா ரேஷ்மா ரொம்ப அமைதியா இருந்தா....

சாய்ங்காலம் நான் கிரிஷ் கூட வீட்டுக்கு போனேன்....சுப்பு அப்பா ஹால்ல உக்காந்து இருந்தாங்க....

"முகி ஒரு நிமிஷம் இங்க வா மா...."னு சொன்னாரு

நானும் அவரு பக்கத்துல போனேன்.....
அவரு என்கிட்ட ஃபோன் குடுத்து அந்த ஃபங்ஷன்ல எனக்கு லெட்டர் குடுத்தது யாருன்னு அடையாளம் காட்ட சொல்லி என்கிட்ட கேட்டாரு.....

எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல....

நான் சொன்னா ரேஷ்மா அம்மா மாட்டிப்பாங்கன்னு நான் யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்.....

"அப்பா எனக்கு சரியா ஞாபகம் வரல...."னு சொன்னேன்

"நல்லா ஞாபகம் படுத்தி பாரு முகி....."னு சொன்னாரு

"பா எனக்கு சரியா ஞாபகம் வரல....நான் ஞாபகம் வந்தது உடனே உங்கக்கிட்ட சொல்லுறேன் பா....."னு சொன்னேன்

அவரும் அதுக்கப்புறமா என்னைய விட்டுட்டாரு.....

நான் ரூம்ல போய் உக்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன்...

நான் பண்ணுறது சரியா தப்பான்னு எனக்கு தெரியல....நான் ரேஷ்மா அம்மாவ காட்டிக்குடுக்க மாட்டேன்....இது முட்டாள்தனமான முடிவா இருக்கலாம் ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல.....

என் மனசுல தோனுனதை நான் பண்ணுறேன்......நான் எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்....
இதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு பாப்போம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.....

க்ரிஷ் என் ரூமுக்கு வந்தான்.....

"முகி அம்மா உன்னைய காஃபி குடிக்க கூப்டுறாங்க...."

"வரேன்னு சொல்லு டா...."னு சொன்னேன்

அவனும் சரின்னு சொல்லிட்டு போய்ட்டான்....

நான் போய்ட்டு காஃபி குடிச்சிட்டு எல்லாருக்கூடவும் சிரிச்சி பேசிட்டு இருந்தேன்.....

அப்போ அப்பா ஃபோன் வந்துருக்குதுன்னு அட்டென்ட் பண்ண போய்ட்டாரு.....

அவரு திரும்பி வரும்போது கொஞ்சம் பதட்டமா வந்தாரு.....

அம்மா அவருக்கிட்ட என்னாச்சுன்னு கேட்டாங்க....

"சுதா நம்ம ரிஷி அம்மாக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டு ஹாஸ்பிட்டெல்ல சேத்துருக்காங்களாம்.....கொஞ்சம் சீரியஸான கண்டிஷன்ல இருக்குறதா சொல்லுறாங்க....நான் போய் என்னாச்சுன்னு பாத்துட்டு வந்துடுறேன்....."னு சொன்னாரு

எனக்கு அதைக்கேட்டுட்டு ஷாக் ஆகிடுச்சு.....
என்ன சொல்லுறதுன்னு தெரியல....

நறுமணம் வீசும்.....

______________________________________________

Hi frndzz

Ellarum update padichitu epudi irukudhunu slunga

Kandipa vote pannunga...

Sry for d delay frndzz....

Time kaedaikavae maataengudhu frndzz konjam busy schedule...adan late aagudhu frndzz....Konjam adjust panikonga.....And keep supporting me frndzz...



   

Продовжити читання

Вам також сподобається

146K 5.9K 49
உறவுகளின் உன்னதம்
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
110K 7.8K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...
148K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.