நறுமுகை!! (முடிவுற்றது)

By sweetylovie2496

364K 15.9K 4.8K

என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி... More

நறுமணம் 1
நறுமணம் 2
நறுமணம் 3
நறுமணம் 4
நறுமணம் 5
நறுமணம் 6
நறுமணம் 7
நறுமணம் 8
நறுமுகை 9
நறுமணம் 10
நறுமணம் 11
நறுமணம் 12
நறுமணம் 13
நறுமணம் 14
நறுமணம் 15
நறுமணம் 16
நறுமணம் 17
நறுமணம் 18
A/N
நறுமணம் 19
நறுமணம் 20
நறுமணம் 21
நறுமணம் 22
நறுமணம் 23
நறுமணம் 24
நறுமணம் 25
நறுமணம் 26
நறுமணம் 27
நறுமணம் 28
நறுமணம் 29
நறுமணம் 30
நறுமணம் 31
நறுமணம் 32
நறுமணம் 33
நறுமணம் 34
நறுமணம் 35
நறுமணம் 36
நறுமணம் 37
நறுமணம் 38
charecters
நறுமணம் 40
நறுமணம் 41
நறுமணம் 42
நறுமணம் 43
நறுமணம் 44
நறுமணம் 45
நறுமணம் 46
நறுமணம் 47
நறுமணம் 48
நறுமணம் 49
நறுமணம் 50
நறுமணம் 51
நறுமணம் 52
நறுமணம் 53
நறுமணம் 54
நறுமுகை 55
நறுமணம் 56
நறுமணம் 57
நறுமணம் 58
நறுமணம் 59
நறுமணம் 60
நறுமணம் 61
நறுமணம் 62
நறுமணம் 63
நறுமணம் 64
நறுமணம் 65
நறுமணம் 66
நறுமணம் 67
நறுமணம் 68
A/N
நறுமணம் 69
நறுமணம் 70
நறுமணம் 71
நறுமணம் 72
நறுமணம் 73
நறுமணம் 74
நறுமணம் 75
நறுமணம் 76
நறுமணம் 77
நறுமணம் 78
நறுமணம் 79
நறுமணம் 80
நறுமணம் 81.
A/N

நறுமணம் 39

4.3K 195 45
By sweetylovie2496


முகி pov:

     காலையில அவனுக்காகவே நான் ரெடியாகிட்டு போனேன்....எதாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லுவான்னு பாத்தா சிம்புளா நல்லா இருக்குறன்னு சொன்னான்...அதுவும் என் முகத்தை பாத்து கூட சொல்லல...ஆனா அந்த ரேஷ்மா அவன ஃபார்மல்ஸ்ல நல்லா இருக்குறன்னு சொன்ன உடனே பல்ல காட்டிட்டே நீ கூட ரொம்ப நல்லா இருக்குற...இந்த ட்ரெஸ் நல்லா இருக்குதுன்னு சொல்றான்....அவளும் வெக்கமே இல்லாம அவன் கைய புடிச்சிக்கிட்டு இருக்குறா இவனும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தான்....என்னால அதை எல்லாம் பாத்துட்டு அமைதியா உக்கார முடியல....காலையிலையே காலேஜ்க்கு வந்த முதல் நாளே சண்டை போட வேண்டாம்னு நான் க்ளாஸ்க்கு போரேன்னு போய்ட்டேன்....

அங்க போனதும் நான் தனியா இருக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்....நான் அப்போ நிஷுவ ரொம்ப மிஸ் பண்ணேன்....அவ காலேஜ் திருப்பூர்ல ஜாய்ன் பண்ணிட்டா....சென்னையிலையே கிடைச்சிரும்னு பாத்தோம் பட் சீட் கிடைக்கல.....அவளுக்கு கால் பண்ணிட்டு பேசலாம்னு ஃபோன் எடுத்து கால் பண்ணேன்....

"ஹலோ முகி காலேஜ் போய்ட்டியா....எப்புடி இருக்குது உனக்கு புடிச்சிருக்குதா....ஃப்ரெண்ட்ஸ் யாராவது கிடைச்சாங்களா....."னு கேட்டா

நான் எதுவும் பேசல....என்னன்னு தெரியல அந்த டைம்ல அவள நான் ரொம்ப மிஸ் பண்ணதுனாலையோ என்னமோ கண்ணுல இருந்து கண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சு....

"மிஸ் யூ நிஷு.....நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குது...."னு சொன்னேன்

"ஏ லூசு....அழுகுறியா...."னு கேட்டா

"ம்ம்...."னு சொன்னேன்

"நானும் தான் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணுறேன்....லீவ் விட்டதும் நான் உடனே கிளம்பி வந்துடுறேன்.....அழாத முகி....நீ அழுது என்னையும் அழ வச்சிடாத....நான் என்னைய நானே கஷ்டப் பட்டு சமாதானம் பண்ணி வச்சிருக்குறேன்...."னு அவ சொன்னா

"சரி நான் அழுகல....எப்பவும் நீ என் பக்கத்துல இருப்பியா....இப்ப க்ளாஸ்ல நீ என் பக்கத்துல இல்லாம இருக்குறது என்னமோ தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீல்...."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை....பக்கத்துல யார்கிட்டையாவது பேசு....கண்டிப்பாப உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க ஓகேவா...."

"ம்ம்...."

"சரி முகி எனக்கு காளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு உன்கிட்ட ஈவ்னிங் பேசுறேன் ஓகேவா...."னு சொன்னா

"ம்ம்....பாய் டி...டேக் கேர்...."னு சொல்லிட்டு வச்சிட்டேன்...

அப்போ கிரிஷ் க்ளேஸ்குள்ள வந்தான்....வரும்போது என்னையவே பாத்துட்டு உள்ள வந்தான்....நான் எதுவும் ரியாக்ஷன் காட்டாம அமைதியா உக்காந்துட்டு இருந்தேன்....

"ஹலோ ஃப்ரெண்ட்ஸ்.....வெல்கம் டு ஆல்....உங்க எல்லாரையும் வெல்கம் பண்ணுறதுக்காக ஆடிட்டோரியம்ல அசெம்புள் ஆக செல்லிருக்காங்க நம்ம பிரின்சிப்பில்....ஸோ எல்லாரும் அங்க வந்துடுங்க...."னு சொல்லிட்டு என்னைய பாத்துட்டே வெளில போனான்....

அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் யேர்ஸ் எல்லாரும் ஆடிட்டோரியம் போய்ட்டு உக்காந்து இருந்தோம்.....அப்போ என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்த பொண்ணு என்னைய பாத்து சிரிச்சா.....நானும் அவள பாத்து சிரிச்சேன்....

"ஹாய் என் பேரு ஸ்வாத்தி...."னு சொல்லிட்டு கை நீட்டுனா....

"ஹெலோ என் பேரு நறுமுகை....எல்லாரும் முகின்னு கூப்டுவாங்க...."னு சொல்லிட்டு ரெண்டு பேரும் இண்ட்ரெட்யூஸ் ஆகிக்கிட்டோம்.....அதுக்கப்புறம் நானும் அந்த பொண்ணும் பேசிக்கிட்டே இருந்தோம்....

அந்த பொண்ணு தேனில இருந்து இங்க வந்துருக்கா....தேனினு சொல்லவும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு....

ரெண்டு பேரும் நல்லா க்ளோஸா பேச ஆரம்பிச்சிட்டோம்....

கொஞ்ச நேரத்துல ப்ரின்சிப்பல் சாரும் வந்துட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க....கொஞ்ச நேரத்துல அவரும் பேசி  முடிஞ்சிட்டாரு.....
அதுக்கப்புறம் கிருஷ்ணா அப்புறம் இன்னும் ரெண்டு பேர் ஸ்டேஜுக்கு வந்தாங்க....

அதுல ஒரு அண்ணா பேச ஆரம்பிச்சாங்க

"ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....வெல்கம் எவ்ரி ஒன்.....என் பேரு சக்தி....நான்தான் காலேஜ்ல ஸ்டூடெண்ட்ஸ் போர்ட் ஹெட்....இது எங்களோட மெம்பர்ஸ்...கிருஷ்ணா அண்ட் அருன்....உங்களுக்கு கேம்பெஸ்கு உள்ள எதாவது கம்ப்ளெய்ண்ட் அண்ட் பிரச்சனையினா எங்கக்கிட்ட வந்து நீங்க தாராளமா சொல்லலாம்...அதிகமா பேசி உங்கள போரடிக்க விரும்பல.....இன்னைக்கு உங்க எல்லாரையும் வெல்கம் பண்ணுறதுக்காக நம்ம காலேஜ்ல ஈவ்னிங் ஏழு மணிக்கு வெல்கம் பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்குறோம்.....எல்லாரும் வந்து என்ஜாய் பண்ணுங்க....அண்ட் முக்கியமானது என்னன்னா ஃபங்க்ஷன்கு எல்லா கேர்ல்சும் ஸேரில வரனும் அண்ட் பாய்ஸ் எல்லாரும் வேஷ்ட்டி சட்டையில வரனும்....
இது ஃபர்ஸ்ட் யேர்க்கு மட்டும் இல்லை எல்லா  யேர்ஸ் பாய்ஸ் அண்ட் கேர்ல்சுக்கும்தான் சொல்லுறேன்.....

அவ்வளோதான் ஃப்ரெண்ட்ஸ்.... ...ஈவ்னிங் பாக்கலாம்"னு சொல்லிட்டு போய்ட்டாங்க

சக்தி அண்ணா பேசிட்டு இருக்கும் போதே ஸ்வாத்தி என்னைய கூப்டா....

"முகி....செமையா இருக்குறான்ல...."னு சொன்னா

"யாரு ஸ்வாத்தி...."னு கேட்டேன்

"சக்தி ஸ்டேஜ்ல பேசிட்டு இருக்குறானே....அவன்தான்..."னு சொன்னா

"வந்த அன்னைக்கே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா...."னு சிரிச்சிட்டே கேட்டேன்....

"பின்ன ஸ்கூல்ல தான் மார்க் வாங்கனும்னு எப்ப பாத்தாலும் படி படின்னு வீட்டுல டார்ச்சர்....காலேஜ்ல ஜாலியா இருக்கனுன்றதுக்காதான் நான் சென்னையில ஹாஸ்டலுக்கே வந்தேன்....இதெல்லாம் பண்ணா தான் காலேஜ் லைஃப்கே ஒரு தனி மரியாத இருக்குது மா..வேணும்னா...நீயும் ட்ரை பண்ணி பாரு...."னு சொன்னா

அவ சொன்னது கேட்டு எனக்கு சிரிப்பு வந்துடுச்சு....

"நான் சைட்லாம் அடிக்க முடியாது...."

"ஏன்...முடியாது...."

"ஏன்னா நான் ஆல்ரெடி கமிட்டட்....அங்க  சக்தி அண்ணா  பக்கத்துல பிங்க் கலர்ல ஷெர்ட் போட்டுட்டு நிக்குறான்ல அவன தான் லவ் பண்ணுறேன்...."னு சொன்னேன்

"அடப்பாவி எல்லாரும் காலேஜ் வந்துட்டுதான் கப்புல்ஸ் ஆவாங்க.....ஆனா நீங்க என்னடான்னா கப்புல்ஸ் ஆகிட்டு காலேஜ் வந்துருக்குறிங்க.....என்ன விட படு பயங்கர ஃபாஸ்டா இருக்குற போ...."னு சொன்னா

நான் அவள பாத்து சிரிச்சேன்....

"சரி....அவன் பேரு என்ன....."னு கேட்டா

"யாரு பேரு...." னு கேட்டேன்

"அதான் நீ லவ் பண்ணுறியே அந்த பையன் பேரு...."னு கேட்டா

"அதான் சக்தி அண்ணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாங்களே ...."னு சொன்னேன்

"நான் அவன சைட் அடிச்சிட்டு பிஸியா இருந்ததுல அதெல்லாம் கவனிக்கல...."னு சொன்னா

"அவன் பேரு கிருஷ்ணா...."னு சிரிச்சிட்டே சொன்னேன்..

"ம்ம்....சூப்பர் போ....உங்க லவ் ஸ்டோரிய நான் அப்புறமா கேட்குறேன்....நீ கண்டிப்பா சொல்லனும் ஓகே வா..."னு சொன்னா...

நானும் சிரிச்சிட்டே சரின்னு சொல்லிட்டு தலையாட்ணுனேன்....

அதுக்கப்புறம் எல்லாரும் க்ளாஸ்க்கு போய்ட்டோம்....
காலையில சும்மா இன்ட்ரோ தான் போய்ட்டு இருந்துச்சு....ஸாவாத்தி என்கூட நல்லா பேச ஆரம்பிச்சுட்டா....நிஷு எப்புடி என்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் பேசுனாலோ அதே மாதிரி தான் ஸ்வாத்தியும்....நல்லா பேசுனா....பட் கொஞ்சம் அறுந்த வாலு....க்ளேஸ்ல எல்லாருக்கிட்டையும் வந்த அன்னைக்கே வம்பு இழுத்து ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டா....ஸ்கூல விட காலேஜ்ல வித்யாசமா இருந்துச்சு....ரேஷ்மாவ இவக்கிட்ட சீன் போடவும் அவள செமையா கலாய்ச்சு விட்டுட்டா....

அப்புறம் காலையில ப்ரேக் டைம்ல ஸ்வாத்தி செகெண்ட் யேருக்கு போகனும்னு என்னைய அவக்கூட கூப்டா....

நானும் அவளும்  செகண்ட் யேர்க்கு போய்க்கிட்டு இருந்தோம்....அப்போ கொஞ்சம் சீனியர்ஸ் வெளில உக்காந்துட்டு இருந்தாங்க....

எங்கள பாத்துட்டு எங்க ரெண்டு பேரையும் கூப்டாங்க

"முகி மாட்டுனோம்....ரேகிங் பண்ணபோறாங்கன்னு நினைக்குறேன்...."னு ஸ்வாத்தி சொன்னா

"சரி வா சமாளிப்போம்...."னு மெதுவா அவக்கிட்ட சொன்னேன்

மெதுவா ரெண்டு பேரும் அவுங்க பக்கத்துல போனோம்...

"என்ன ஃப்ர்ஸ்ட் யேரா ரெண்டு பேரும்...."னு கேட்டாங்க

"ஆமா அண்ணா...."னு சொன்னோம்...

"என்னது அண்ணாவா.....அப்புடிலாம் சொல்லக்கூடாது...."னு அந்த கேங்குல ஒருத்தன் சொன்னான்

"சீனியர்ஸ அண்ணானு கூப்டாம பின்ன எப்புடி கூப்டறது...."னு சொன்னேன்

"ஏன் மாமானு கூப்டு....கேட்குற எங்களுக்கும் நல்லா இருக்கும்ல...."னு சொன்னான்

எனக்கு கோவம் வந்துடுச்சு....

நான் அமைதியா மொரைச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்....

"ஐய்யோ பாரு டா மச்சான் கோவம் வருது போல....என்ன மொரைக்குற நாங்க சீனியர்ஸ் நீங்க ஜுனியர்ஸ் ஸோ ஒழுங்கா நாங்க சொல்லுறதை கேட்டா காலேஜ் முடிச்சிட்டு போர் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கலாம்....இல்லன்னா டார்ச்சர் குடுத்துட்டே இருப்போம் எப்புடி வசதி...."னு சொன்னானுங்க

"ரெண்டு பேரும் போய் எங்க எல்லாருக்கும் கேண்டின்ல சூடா காஃபி சமோசா வாங்கிட்டு வந்து குடுங்க....."னு சொன்னாங்க

"சரி...காசு குடுங்க ஸார் போய் வாங்கிட்டு வரோம்..."னு ஸ்வாத்தி சொன்னா

"காசா அதெல்லாம் தர முடியாது....உன் காசுல வாங்கிட்டு வா...."னு ஒருத்தன் சொன்னான்

"என் முகி இந்த காலேஜ்ல பிச்சை எடுக்குறவங்க நிறையா இருப்பாங்க போல...."னு கேட்டா

எனக்கு அவ சொன்னது கேட்டு சிரிப்பு வந்துடுச்சு....

"ஏய் என்ன திமிரா....யார பாத்து பிச்சை எடுக்குறோம்னு சொல்லுற...."னு ஒருத்தன் கேட்டான்

"உங்கள  பாத்துதான் டா சொன்னேன்...."னு சொன்னா

"எவ்வளோ தைரியம் இருந்தா அதை எங்கக்கிட்டையே சொல்லுவ....."னு ஒருத்தன் சொன்னான்

"உங்கள பத்தி உங்கக்கிட்ட சொல்லாம பக்கத்து காலேஜ்லையா சொல்ல முடியும் லூசு.....உன்னைய எல்லாம் அண்ணான்னு கூப்புடறதே பெரிய விஷ்யம்....இதுல உனக்கு மாமா கேட்குதா.....மூஞ்ச பாரு நல்லா தேவாங்கு மாதிரி....இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு ரேகிங் பண்ண வந்துருச்சுங்க.....
படிக்குறது லாவ் பண்ணுறதை கீழ்தரமான வேலை....சீனியர்ஸ்னு மரியாதை குடுத்தா ரொம்ப பண்ணுரிங்க....இதெல்லாம் வேர யார்கிட்டையாவது வச்சுக்கோங்க....

ரேகிங் பண்ணலாம் ஆனா அது மத்தவங்க மனச கஷ்டப்படுத்தாத மாதிரி ஜாலியா ஃப்ரெண்ட்லியா பண்ணிட்டு போய்டனும்...."னு சொன்னா
சுத்தி இருந்தவங்க எல்லா ஸ்டூடெண்ட்சும் அவள ஷாக்கிங்கா பாத்துட்டு இருந்தாங்க....

எனக்கு அவள பாக்கும் போது ரொம்ப பெருமையா இருந்துச்சு....பொண்ணுனா அவள மாதிரிதான் தைரியமா இருக்கனும்னு தோனுச்சு....

"ஏய் ஸ்வாத்தி....நீ இங்க என்ன பண்ணுற...எதுக்கு இவுங்கக்கூட சண்டை போட்டுட்டு இருக்குற."னு சந்துரு அண்ணா வாய்ஸ் கேட்டுச்சு...

நாங்க ரெண்டு பேரும் பின்னாடி திரும்பி பாத்தோம்...அங்க சந்துரு அண்ணா ரிஷி அண்ணா கிருஷ்ணா...சக்தி அண்ணான்னு எல்லாரும் நின்னுட்டு இருந்தாங்க....

"நான் இந்த காலேஜ்ல தான் ஜாய்ன் பண்ணிருக்குறேன்....ரேகிங் பண்ணுறோம்னு ஓவரா பண்ணுனானுங்க அதான் சண்டை போட்டேன்...."னு சொன்னா

"உங்களுக்கு எல்லாம் எவ்வளோ சொன்னாலும் அறிவு இருக்காதா டா....வர்ஷம் வர்ஷம் வருற ஃப்ரெஷர்ஸ் கிட்ட இதே வேலையா இருக்குறிங்க...."னு சக்தி அண்ணா சொன்னாங்க

"இல்ல அண்ணா சும்மா ஜாலியா தான் பண்ணுனோம்...இந்த பொன்னு தான் ஓவரா பேசுனா....அதான் ...."னு அந்த கேக்குற இருந்து ஒருத்தன் சொன்னான்

"டேய் உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.....அதுனால உங்க நடிப்பு என்கிட்ட வேண்டாம்....க்ளேஸ்க்கு போங்க எல்லாரும்....அடுத்த தடவ இப்புடி ஆச்சுன்னா நானே பிரின்சிப்பல் ஸார் கிட்ட கம்ப்ளைய்ண்ட் பண்ண வேண்டியதா இருக்கும்...."னு சக்தி அண்ணா சொன்னாங்க

"ஸாரி அண்ணா ...."னு சொல்லிட்டு அவனுங்க எல்லாரும் போய்டானுங்க

"உனக்கு சந்துரு அண்ணாவ முன்னாடியே தெரியுமா...."னு ஸாவாத்தி கிட்ட கேட்டேன்...

"தெரியுமாவா...தேனிக்கு என் மாமா வீட்டுக்கு போனோம்ல அவரோட பொண்ணுதான் இவ...நம்ம போயிருந்தப்போ மேடம் ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போய்ட்டாங்க இல்லனா அன்னைக்கே இவள பாத்துருப்பிங்க... ."னு சந்துரு அண்ணா சொன்னான்

"இங்க நீ ஜாய்ன் பண்ணுறதா மாமா கூட என்கிட்ட சொல்லல....."னு சந்துரு அண்ணா கேட்டான்

"நான் தான் உனக்கு சர்ப்ரைஸ் தரலான்னு சொல்ல வேண்டான்னு சொன்னேன்....உன்னை பாக்கலான்னு தான் வந்துட்டு இருந்தேன் ஆனா அதுக்குள்ள இவுனங்க ரேகிங் பண்ணுறோம்னு கடுப்பாக்கி விட்டுடானுங்க...."னு சொன்னா

"ஓ அப்புடியா நாங்க என்ன டா கூட்டமா இருக்குதே என்னாச்சுன்னு பாக்க வந்தோம்....
வந்து பார்த்தா நீயும் முகியும் நின்னுட்டு இருந்திங்க........"னு சந்துரு அண்ணா சொன்னான்

அதுக்கப்புறம் நானும் ஸ்வாத்தியும் க்ளாஸக்கு போய்ட்டோம்....

நிஷு ஒரு டைப்னா ஸ்வாத்தி ஒரு டைப்.....இவளும நிஷு மாதிரியே ரொம்ப நல்ல பொண்ணு....
அதுக்கப்புறம் ஈவ்னிங் காலேஜ்ல ஃப்ஙஷன் இருந்ததால சீக்கிரமாவே அன்னைக்கு காலேஜ் விட்டுட்டாங்க....

நான் கிருஷ்ணா மேல கோபத்துல இருந்ததால அவன்கிட்ட சொல்லாம பஸ்ல ஏறி வீட்டுக்கு போய்ட்டேன்...

வீட்டுக்கு போனதும் அம்மா பாட்டி தாத்தான்னு எல்லாரும் காலேஜ் புடிச்சிருக்கா... இன்னைக்கு எப்புடி போச்சுன்னு கேட்டுட்டு இருந்தாங்க....

அப்போ கிருஷ்ணா அங்க வந்துட்டான்....உள்ள வரும்போதே என்னைய மொரச்சு பாத்துட்டே வந்தான்....

நான் அவன கண்டுக்காம அம்மாக்கிட்ட சொல்லிட்டு ரெடியாக மேல போய்ட்டேன்....

நான் ரூமுக்கு போன கொஞ்ச நேரத்துல கிருஷ்ணாவும் என் ரூமுக்கு வந்துட்டான்....

"ஏன்டி பஸ்ல வந்த..."னு கேட்டான்

"நீ பிஸியா இருந்த....அதான் டிஸ்டர்ப் பண்ணவேண்டான்னு நான் கிளம்பி வந்துட்டேன்..."னு அவன பாக்காம சொன்னேன்

"அதெல்லாம் சரிதான்....ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல  கிளம்பிட்டேன்னு....உனக்காக லூசு மாதிரி அரைமணி நேரமா அங்கேயே தனியா வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்...."னு சொன்னான்

"தனியா வெய்ட் பண்ணுனியா அச்சச்சோ அப்ப ரேஷ்மா கம்பெனிக்கு இல்லையா....அவ உனக்கு கம்பெனி குடுப்பானுல நினைச்சேன்...."னு சொன்னேன்

"இப்ப என்ன பிரச்சனை உனக்கு நான் காலையில அவள அழகா இருக்குறன்னு சொல்லிட்டேன் அதான கோவம்...."னு கேட்டான்

"பாரேன் நான் எதுக்காக கோவமா இருக்குறேன்லாம் உனக்கு புரியுதா...."னு கேட்டேன்

"உன்கிட்ட பேசி வேஸ்ட்டு....நான் போய் கிளம்புறேன்....எனக்கு நிறைய வேலை இருக்குது....."னு சொல்லிட்டு போய்ட்டான்

நானும் கோவத்துலையே கிளம்பிட்டு கீழ போனேன்....
அங்க அவன் வேஷ்ட்டி சட்டை போட்டு செமையா நின்னுட்டு இருந்தான்....
முகி அப்புடி பாக்காத அவன் மேல கோவமா இருக்குற மறந்துறாத டின்னு சொல்லிக்கிட்டே பக்கத்துல போனேன்....சுதா மாமா பாட்டி எல்லாரும் என்னைய பாத்து சிரிச்சாங்க....

Krishna and Mughi dress:


"ஏ முகி கடையில பாத்தப்போ நல்லா இல்லாத மாதிரி இருந்துச்சு இந்த ஸேரி கட்டுனா நல்லா இருக்குது டி....உனக்கு பொருத்தமா இருக்குது...."னு சொன்னாங்க

நான் சிரிச்சிட்டே கிருஷ்ணாவ பாத்தேன்...அவன் எதையும் கண்டுக்காம ஃபோனையே பாத்துட்டு  இருந்தான்....

பாக்குறானா பாறேன்....அவன் தப்பு பண்ணிட்டு என் மேல கோவப்படுறான்னு அவனையே பாத்துட்டு இருந்தேன்....

"மா டைமாச்சு...கிளம்புறோம்....அங்க சீக்கிரம் வர சொல்லி மெசேஜ் வருது...."னு கிருஷ்ணா சொன்னான்

அதுக்கப்புறம் நானும் அவனும் ஃபங்ஷன் போய்ட்டோம்...

காலேஜ் போனதும் ஸ்வேதா ......சந்துரு அண்ணா எல்லாரும் ஃபங்ஷன் நடக்குற இடத்துல நின்னுட்டு இருந்தாங்க....

நாங்களும் போய் அவுங்கக்கூட ஜாய்ன் பண்ணிக்கிட்டோம்....

ஃபங்ஷன் போய்ட்டு இருந்துச்சு....எனக்கு தாகமா இருக்குற மாதிரி இருந்துச்சுன்னு தண்ணிக்குடிக்கலான்னு எந்திரிச்சு போனேன்....
அப்ப யாரோ பின்னாடி இருந்து என் கைய புடிச்சு இழுத்தாங்க....இருட்டுல யாருன்னு தெரியல....

நான் கத்த ஆரம்பிச்சுட்டேன்....

"ஷ்ஷ்....நான் கிருஷ்ணா....கத்தாத வாய மூடு...."னு சொன்னான்

"கைய விடு எதுக்கு இப்ப இங்க இழுத்துட்டு வந்த...."னு கேட்டேன்...

"கண்ண மூடு சொல்லுறேன்...."னு சொன்னான்

"நீ சொன்னா நான் செஞ்சிடனுமா....அதுக்கு வேர ஆளப் பாரு...."னு சொல்லிட்டு போக போனேன்....

அவன் கைய புடிச்சு நிறுத்திட்டு என்னைய கிஸ் பண்ணிட்டான்....எனக்கு என்ன நடந்துட்டு இருக்குதுன்னு ஒன்னுமே புரியல....கிருஷ்ணா என்னைய கிஸ் பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை....ஷாக்கிங்கா இருந்துச்சு.....

"காலையிலயும் சரி....இப்ப ஸேரில பாத்தப்பவும் சரி இதைத்தான் பண்ணனும்னு தோனுச்சு.....ரொம்ப ரொம்ப அழகா இருக்குற ஸேரில..காலையில சும்மா உன்னைய வம்பிழுத்தேன்....."னு சொல்லிட்டு என்னைய ஹக் பண்ணிக்கிட்டான்

நான் எதுவும் பேசாம அவனையே பாத்துட்டு இருந்தேன்....

"ஐ லவ் யூ முகி...."னு சொன்னான்

எனக்கு அந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு தெரியல....

"முகி...என்னாச்சு ...."னு கேட்டான்

நான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு அவன ஹக் பண்ணிக்கிட்டேன்....

இப்ப நாங்க ரெண்டு பேரும் பண்ணிட்டு இருக்குறது சரியா தப்பான்னு தெரியல.... கிருஷ்ணா என்னைய கிஸ் பண்ணதுக்கு அப்புறம் கொஞ்சம் பயமா இருந்துச்சு.....ரெண்டு பேரும் தப்பு பண்ணுறமோன்னு தோனுச்சு....அதுக்காக நான் கிருஷ்ணாவ நம்பாம இல்லை....பட்  இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன குழப்பம்.....இதை அவன்கிட்ட சொன்னா அவன் அதை தப்பா எடுத்துட்டு என்கிட்ட சண்டை போட்டுருவானோன்னு நான்  அதைக்காட்டிக்கல.....

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நானும் அவனும் ஃபங்ஷன் நடக்குற இடத்துக்கு போய்ட்டோம்....

நறுமணம் வீசும்...

______________________________________________
Hi frndzz

Update padichitu epudi irukudhunu comment pannunga

Marakkama kandipa vote pannunga




Continue Reading

You'll Also Like

28.1K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
130K 6K 25
சொல்லாத அவன் காதல் உணர்வாளா அவள்..
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...