காதல் காற்று வீசும் நேரம்

By exquisite_dawn

167K 5.5K 1.2K

"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை. More

யாழினி
நிபந்தனை
அன்பு மகள்
கௌதம்
போட்டோ
பதட்டம்
பெண் பார்க்கும் படலம்.
சம்மதம்
தடுமாற்றம்.
ஒப்புதல்
முதல் சந்திப்பு
அதிர்ச்சி
திருப்பம்
இன்ப அதிர்ச்சி
நிச்சயம்
நிச்சயம்-2
தலை வலி
கண்டீஷன்
தும்மல்
விருந்து.
பயணம்
ராக்ஷஷி
அணைப்பு
நகைப்பு
முத்தம்
மழை
கல் நெஞ்சக்காரி
க்ரஷ்
ஐஸ் க்ரீம்
I AM SORRY
கடற்கரை
ஆசை
உப்புமூட்டை

திருமணம்

4.3K 166 41
By exquisite_dawn

யாழினி

கண்களில் கண்ணீருடன் நக்ஷத்திராவை அணைத்துக் கொண்டாள். அவளது ஆறுதலாக, அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் நக்ஷத்திரா. யாழினியின் சேலையை யாரோ இழுக்க, கீழே பார்த்தாள் யாழினி. அவளிடம் கைகளை நீட்டிய தேஜை வாரி அணைத்துக் கொண்டாள். அவன் யாழினியின் கலங்கிய முகத்தப் பார்த்து "ஏன் அழுர யாழினி? தாத்தா திட்டிடாங்கலா? " என்று வருத்ததுடன் மழலை மொழியில் கேட்க, கலங்கிய கண்களுடன் இல்லை என்பதுப் போல் தலை அசைக்க, நக்ஷத்திரா தேஜை வாங்கி கொண்டாள். நக்ஷத்திராவின் அணைப்பில் இருத்து தன்னிடம் வர போராடும் தேஜின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

ரக்ஷன் யாழினியிடம் அவளுக்கு பிடித்த சாக்லேடை நீட்ட அவள் இன்னும் அழ ஆரம்பித்தாள். "அக்கா! கம் ஆன்! சாக்லேட பாத்த ஒரு சிரிப்பு வருமே உன்னோட முகத்துல அந்த சிரிப்பு எங்க? அழுதேனா உனக்கு சாக்லேட் தரமாட்டேன், ரொம்ப நேரமா தேஜ் சாக்லேட் கேட்டுட்டு இருக்கான், அவனுக்கு கொடுத்துருவேன் பாத்துக்கோ! " என்று அவன் யாழினியை உற்சாக படுத்த முயற்சிக்க, யாழினி ரக்ஷனை இறுக்க அணைத்துக் கொண்டாள். யாழியை பார்க்க பார்க்க ரக்ஷனின் தொண்டை அடைத்தது.

"யாழினி சின்ன பிள்ளையா நீ! ஹா! என் தங்கம்ல அழக்கூடாதுடா. கண்ண தொடச்சிக்கோமா. பாரு மாப்பிள்ளை உனக்கு வேயிட் பண்றாங்க. " என்று கலங்கிய கண்களுடன் யாழினியை தேற்றினாள் பத்மா. தந்தையை இறுக்க அணைத்த யாழினி மலமலவென கண்ணீர் வடித்தாள். "மிஸ் யு அப்பா! லவ் யு பா! " என்று அழுதவளின் தலையை ஆறுதலாக தலையை தடவியவர், "யாழினி! இப்போ ஏன் நீ அழுற? ம்! " என்று அவளை தேற்றினார்.

காரில் அமர்தவள் கண்ணில் கண்ணீருடன், கை அசைக்க, கார் நகர்ந்தது. தலை குனிந்தவளின் கண்முன் கைகுட்டையை நீட்டினான் கௌதம். வேண்டாம் என்று தலை அசைத்தாள் யாழினி. கன்னத்தில் கண்ணீர் காய்ந்திருக்க, நித்திரா தேவி அவளை அணைக்க, கௌதமின் தோளில் கண் அயர்ந்தாள்.

அவளது கன்னத்தில் தொடுகையை உணர்ந்தவள், தூக்கத்தில் கண்களை திறக்க முயல, அவளது காதருகே  "யாழினி! வீடு வந்திருச்சு எழுந்திரு. " என்று கௌதம் கூற பதறி கண் விழித்தாள் யாழினி.  அவளது பயந்த முகத்தைப் பார்த்த கௌதம், "யாழினி! காம் டவுன்! வீடு வந்திருச்சு அதான் எழுப்புனேன். பதறாத." என்று புன்னகையோடு அவன் வெளியேரி அவள் இறங்க கரம் கொடுத்தான். முதலில் தயங்கிய யாழினி அவனது கரத்தை ஏற்றுக் கொண்டாள்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடியந்தது, யாழினியின் சோர்ந்த முகத்தை பார்த்த ஜெயலஷ்மி, கௌசல்யாவிடம், "கௌசல்யா! நீ அண்ணிய ரூமுக்கு கூடிட்டு போடா. பாரு எவ்வோளோ டயடா இருக்கானு. " என்று கூறியவர், யாழினியை பார்த்து புன்னகையுடன், "போமா, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு." என்று யாழினியை கௌசல்யாவுடன் அனுப்பி வைத்தார். கௌசல்யா யாழினியின் கரத்தைப் பிடித்து "வாங்க அண்ணி நான் உங்களுக்கு என்னோட ரூமா காட்டுரேன். " என்று அழைத்து சென்றாள்.

கௌசல்யா, யாழினியை சரி செய்ய பல விஷயங்களை பற்றிப் பேசியும் யாழினி  பெயரலவில் புன்னகித்தாலே ஒழிய அவளது புன்னகை கண்களை எட்டவில்லை.

  கௌதம்

யாழினி தன் தந்தை அணைத்து அழுததே அவன் நினைவில் நிற்க சிந்தனையில் ஆழ்ந்தான். ( நான் இருக்கும் போதுதான் யாழினி அழுத ஆனாலும்  என்னால ஒன்னும் செய்யமுடியலயே!) யாழினியை அவன் தேடினான். (கௌசல்யா ரூம்முல இருப்பாலோ, இன்னைக்கு அவள சமாதான படுத்தியே ஆகனும். அவா அழும்போது நான் தோத்து போனா மாதிரி இருக்குது.) கௌசல்யாவின் அறைக்கு  சென்ற கௌதம், கௌசல்யா விடம், "கௌசல்யா உன்னைய அம்மா கூப்புடுறாங்க. " என்று கூற, அவனை புரிந்துக் கொண்டு (ம்! நானும் இவுங்கள நர்மலாக்கனும்னு பாக்குறேன் முடியமாட்டேக்குதே. சரி அண்ணன் ட்ரைப் பண்ணட்டும்) அறைவிட்டு வெளியே சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவன், யாழினியின் எதிரே அமர்ந்தான். (எம்புடி ஸ்டார்ட் பண்றது?) . "யாழினி! " என்று அவன் அழைக்க அவனைப் பார்தாள் யாழினி. " கிரிக்கெட் பாப்பியா? " (டேய் கௌதம் இதெல்லாம் ஒரு கேள்வியாடா? ஐயோ என்ன பேசனு தெரியாம ஒலர்ரேனே) என்று அவன் கேட்க புரியாமல் "ம் " கொட்டினாள் யாழினி, "என்? " என்று யாழினி வினாவா, "சும்மா தான் " என்றான். அடுத்து ஏதோ கூற வந்தவன் ஜெயலஷ்மியை அறை வாசலில் காண, அவரிம் ஒரு கேள்வி பார்வையை வீச, "கௌதம், கார்த்திக் ஊருக்கு கிழம்புறான். போய் வழி அனுப்பிட்டு வாடா. " என்று கூறி, நான் பாத்துக்கிறேன் என்பதுப்போல் கௌதமிடம் கண் காட்ட, அவன் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அறை விட்டு வெளியேறினான்.

    யாழினி

அறைக்குள் வந்த ஜெயலஷ்மி, யாழினியின் அருகில் மெத்தையில் அமர்ந்தார். அவளது தோலை அணைத்தவர், "யாழினி! ஏன்மா இவ்வளவு சோகமா உட்கார்த்திருக்க, நீ அழுதத பாத்தா எனக்கே கஷ்டமா இருந்திச்சிமா. நீ இவ்வளவு கவல படுறதுக்கு இதுல ஒன்மே இல்ல. நீ சென்னைலதான் இருப்ப, உனக்கு அப்பாவ பாக்கனும்னு தோனுச்சினா கௌதம் சட்டர்டே, சண்டேல கூட்டிட்டு வர போறான். இதுக்கு போய் குழந்த மாதிரி அழுதுகிட்டு, சிரிமா. நான் உனக்கு இன்னோறு அம்மா அப்படிஎல்லாம் சொல்மாட்டேன். ஆனா உன்னுடைய நல்லத தான் நான் யோசிப்பேன்கிறத மறந்திராத. கௌதம் ஏதாவது தப்பு பண்ணாண சொல்லு அவன நம்ம இரண்டு பேரும் சேந்து வச்சி செஞ்சுரும். அப்புறம் உனக்கு எத பத்தியாவது பேசனும்னாலும் இங்க ஒருத்தி இருக்குறேன்கிறதை மறந்துராத. ஒரு மாம்மியாரும் மருமகளும் சேர்ந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்னு நாமா காமிப்போம். சரியா.  பாரு அழுது கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. போ! போய் முகத்த கழுவிட்டு வா. " என்று யாழினியின் நெற்றியில் இதழ் பதித்தார். யாழினி முகம் கழுவ எழுந்திரிக்க, அவளது கைப்பற்றிய ஜெயலஷ்மி, "அதுக்கு முன்னாடி நான்  யாழினியோட சிரிப்ப பாக்கனும்மே. " என்று புன்கைக்க, யாழினியும் புன்னகைத்தாள் ஆனால் இம்முறை அது அவளது கண்களை எட்டியது.

Thank you for ur support.☺️☺️

If u guys enjoyed the update plssss vote and comment for the update , it means a lot to me.☺️☺️☺️

Bye ⭐ ⭐⭐⭐

Take care ⭐ ⭐⭐

          

Continue Reading

You'll Also Like

1.8K 158 7
She slightly kissed his earlobe😚💋..... He breathed heavily as her touch affects him😊 I don't need to seduce u as long as i have this much effe...
233K 9K 42
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்ல...
766 14 2
அழகிய காதல் கதை ௨லகில் காதல் ௭ன்றும் தோற்பதில்லை காதலா்கள் தான் தோற்கிறாா்கள்.
1.9K 58 2
ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்தவுடன் அடையத் துடிக்கும் திருமணமான ஒரு ஆணின் மனம்... வரம்பு மீறும் அவனுக்கு அவளின் பதில் என்ன?