தொடுவானம்

By jamunaguru

255K 9.7K 1.5K

கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ.. More

❤ 01 ❤
❤ 02 ❤
❤ 03 ❤
❤ 04 ❤
❤ 05 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤

❤ 35 ❤

5.7K 222 39
By jamunaguru

ஆதியும் மித்ராவும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. அப்போது கவின் அங்கே வந்தான்.

மித்ராவிடம்.. "last month salary.."என ஒரு கவரை கவின் கொடுக்க.. மித்ராவும் அதை பெற்றுக் கொண்டாள்.

ஆதி மித்ராவிடம்.. மாலதியையும் ரவிச்சந்திரனையும் அழைத்து வருமாறு கூறினான்.மித்ராவும் சரியென தலையசைத்துவிட்டு சென்றாள்.

ஆதி கவினிடம்.. பேசிக் கொண்டிருந்தான். "கவின்.. தப்பா எடுத்துக்க கூடாது.. இனிமே சின்ன சின்ன events எதுவும் உங்களுக்கு வராது.. அதெல்லாம் இனி மித்ராவே பார்த்துப்பா.."என்றான் ஆதி.

"மித்ராவோட திறமையும் சேர்த்து மதிக்கிறீங்க.. நிஜமாவே மித்ரா ரொம்ப லக்கி.."என்றான் கவின்.

"முன்னாடியும் நான் சின்ன eventsம் உங்ககிட்ட கொடுத்ததே மித்ராவை பார்க்க தான்.."என ஆதி சொல்ல..

தான் மித்ராவிடம் இருந்து மறைத்தது புரிந்து கவின்.. "ஐயம்.. சாரி.. அது.."என திணறினான்.

"புரியுது.. ஆனா அதுவும் ஒருவிதத்தில நல்லது தான்.. so leave it.."என்றான் ஆதி.

மாலதியும் ரவிச்சந்திரனும் கவினிடம்.. "யாழினி கல்யாணத்துல எல்லா ஏற்பாடும் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு.."என சொன்னார்கள்.

கவினுக்கு கொடுக்க வேண்டிய செக்கை இருவரும் சேர்ந்து அவனிடம் கொடுத்தனர்.

"அடுத்து ஆதி மித்ரா கல்யாணத்துக்கும் நீங்களே எல்லா ஏற்பாடும் பண்ணனும்.."என மாலதி சொன்னார்.

கவினும்.. "கண்டிப்பாக.."என சொன்னான்.

சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கவின்.

ஆதி மித்ரா கௌதம் யாழினி என எல்லாரும் சேர்ந்து இரவு பன்னிரண்டு மணிக்கு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கார்த்தியும் சந்தோஷமாக "தேங்க்ஸ் அக்கா.. தேங்க்ஸ் அத்தான்.."என மித்ராவையும் ஆதியையும் அணைத்துக் கொண்டான்.

யாழினியும் கௌதமும்.. "டாக்டர் சார்.. கேக் கட் பண்ணுங்க.."என கேக் எடுத்து வந்தனர்.

கார்த்தி கேக் கட் செய்து.. மித்ராவுக்கு முதலில் ஊட்டிவிட்டான். மித்ராவும் கார்த்திக்கு ஊட்டிவிட்டாள்.

யாழினியும் கௌதமும் கேக் எடுத்து கார்த்தியின் முகத்தில் பூசிவிட்டனர். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி க்ரீமை பூசிவிட்டு சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

முகமெல்லாம் க்ரீமை பூசிக் கொண்டு.. எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க.. தூக்கம் கலைந்து வந்த ஸ்வேதாவும் சந்திரமதியும் சலித்தபடி மீண்டும் அறைக்குள்ளே சென்றனர்.

மாலதியும் ரவிச்சந்திரனும் வந்து தங்கள் வாழ்த்துக்களை கார்த்திக்கு தெரிவித்தனர்.

"விளையாட்டு லாம் போதும்.. போய் தூங்குங்க.. எல்லாரும்.."என ரவிச்சந்திரன் சொல்லிவிட்டு சென்றார்.

அவர்கள் சென்றும் நெடுநேரம் எல்லாரும் சந்தோஷமாக பேசிக் கொண்டும்.. விளையாடிக் கொண்டும் இருந்துவிட்டு படுக்கச் சென்றனர்.

ஆதியும் மித்ராவும் காலையில் கார்த்திக்கென வாங்கிய புது உடையை அவனிடம் கொடுத்தனர். கார்த்தியும் மகிழ்ச்சியோடு அதை அணிந்து கொண்டான்.

ஆதியும் மித்ராவும் கார்த்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றனர். கார்த்தியின் பேரில் அர்ச்சனை செய்து விட்டு வந்தனர்.

மாலதி.. கார்த்திக்கு பிடித்த உணவுகளை சமைத்திருக்க.. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

கௌதமும் யாழினியும் கார்த்திக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தனர். மாலதியும் ரவிச்சந்திரனும் பிரேஸ்லெட் ஒன்றை பரிசாக கொடுத்தனர்.

ஆதியும் மித்ராவும்.. கார்த்திக்கு தங்கச் செயின் ஒன்றை பரிசளித்தனர்.

ஆதி கார்த்தியிடம்.. "நீ எங்கலாம் போகணும்னு ஆசைப்படுறீயோ.. அங்கலாம் போகலாம்.."என்றான்.

ஆதி மித்ரா கௌதம் யாழினி கார்த்தி.. என எல்லாரும் சேர்ந்து ஊர்சுற்றி விட்டு சாயந்திரம் தான் வீடு வந்து சேர்ந்தனர்.

எல்லாரும் சேர்ந்து இந்த பிறந்த நாளை கார்த்திக்கு மறக்க முடியாததாய் சந்தோஷமானதாக மாற்றியிருந்தனர்.

இரவு உணவுக்கு எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருக்க.. கார்த்தி மித்ராவிடம்.. "அக்கா.. மொட்டை மாடியில உட்கார்ந்து சாப்பிடணும்னு ஆசையா இருக்கு.."என்றான்.

கார்த்தி மித்ராவிடம் ஏதோ சொல்வதை கவனித்த ஆதி.. "என்னடா.. என்ன வேணும்.."என கார்த்தியிடம் கேட்டான்.

"மொட்டைமாடியில போய் சாப்பிடணுமாம்.."என மித்ரா சொன்னாள்.

"ரொம்ப நாளாச்சுல்ல.. போவோமா.."என கார்த்தியிடம் கேட்ட ஆதி.. மாலதியையும் ரவிச்சந்திரனையும் பார்த்தான்.

அவர்களும் சரியென தலையசைக்க.. எல்லாரும் மொட்டை மாடிக்கு சென்றனர்.

ஸ்வேதா சந்திரமதி மகாதேவன் மூவரும் வரவில்லை என சொல்லிவிட்டனர். அவர்கள் ஒதுங்கி இருப்பதும் ஒருவிதத்தில் நல்லது தான் என நினைத்த மாலதியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் இருப்பதால்.. கார்த்தி மித்ராவிடம் ஊட்டிவிடச் சொல்லி கேட்க தயங்கினான்.

ஆனால் அவன் மனம் புரிந்த மித்ராவோ.. அவன் கேட்காமலே.. அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

அவர்களின் பாசத்தை உணர்ந்திருந்த ஆதி.. அவர்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அக்கா.. அத்தான் ரொம்ப ஏங்குறாரு.. அவருக்கும் ஊட்டிவிடுங்க.."என கௌதம் கிண்டலாக சொல்ல.. ஆதி அவனை முறைத்தான்.

மித்ரா புன்னகையுடன் ஆதிக்கும் ஊட்டிவிட்டாள். அதை பார்த்த யாழினி.. கௌதமிடம்.. "நீயும் எனக்கு ஊட்டிவிடு கௌதம்.."என்றாள்.

"அதெல்லாம் முடியாது போ.."என கௌதம் சொல்ல.. அவனை முறைத்த யாழினி.. "அப்ப நான் ஊட்டிவிடுறேன்.."என கௌதமுக்கு ஊட்டிவிட்டாள்.

சலிப்பது போல காட்டிக் கொண்டு.. அவளின் குழந்தைதனத்தை ரசித்துக் கொண்டிருந்தான் கௌதம்.

கார்த்தி போதும் என சொல்லிவிட.. மித்ரா ஆதிக்கு மட்டும் ஊட்டிவிட.. ஆதி புன்னகையோடு மித்ராவுக்கு ஊட்டிவிட்டான்.

தங்கள் பிள்ளைகளின் சந்தோஷத்தை பார்த்து ரசித்தனர் மாலதியும் ரவிச்சந்திரனும்.

"இனிமே வாரத்துல ஒருநாளாவது.. இப்டி மொட்டைமாடியில எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்.."என ரவிச்சந்திரன் சொல்ல.. எல்லோரும் சந்தோஷமாக தலையாட்டினர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லாரும் அங்கையே நின்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்க.. ஆதி மட்டும் தள்ளி நின்று அவர்களை பார்த்தபடி..  ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அதை கவனித்த கௌதம் ஆதியின் அருகில் வந்தான்.. "அத்தான்.. என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க.."என கேட்டான்.

"ஒன்னுமில்லை டா.."என்றான் ஆதி.

"அத்தான்.. ஏன் இன்னும் அமைதியா இருக்கீங்க.. அவங்க பண்ணதை எல்லார்கிட்டயும் சொல்லுங்க.."என்றான் கௌதம்.

ஆனால் ஆதி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

"அத்தை மாமா யாழினி எல்லாரும் அவங்கள வெறுத்தாலும் பரவாயில்லை.. நீங்களும் அக்காவையும் கார்த்தியையும் நினைச்சு கவலைப்படாம இருக்கலாம்.."என்றான் கௌதம்.

"நான் யோசிக்கிறது சரியா இருந்தா.. நீ யாழினி பேர்ல இருக்க சொத்தை வேண்டாம்னு சொல்லுவனு முன்னாடியே அவங்க கெஸ் பண்ணிருக்காங்க..

அதான் ஸ்வேதாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்காங்க.. ஆனா மித்ராவும் நானும் விரும்புறதால அவங்க நினைச்சது நடக்கலை..

அதான் மித்ராவையும் என்னையும் பிரிக்க நினைக்கிறாங்க.. ஆனா அது நடக்காதுன்னு அவங்களுக்கு புரியலை..

அவங்க இப்ப என்ன பண்றதுனு யோசனைல தான் இருக்காங்க.. ஆனா அவங்கள யோசிக்க விடாம பண்ணனும்.."என்றான் ஆதி.

அவன் சொல்ல வருவது புரியாமல்.. "என்ன பண்ண போறீங்க அத்தான்.."என கௌதம் கேட்டான்.

ஆதி தன் மனதில் இருப்பதை கௌதமிடம் சொன்னான்.. கௌதமும் புன்னகையுடன் தலையசைத்தான்.

கௌதம் யாழினி மாலதி ரவிச்சந்திரன் எல்லோரும் கீழே சென்று விட.. மித்ராவும் கார்த்தியும் ஆதியோடு அங்கே நின்றிருந்தனர்.

கார்த்தி ஆதியிடம்.. "தேங்க்ஸ் அத்தான்.."என சொல்ல.. "எதுக்குடா.. தேங்க்ஸ்.."என கேட்டான் ஆதி.

"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. அது உங்களால தான.. அதான்.."என்ற கார்த்தி.. மறுபடியும்.. "தேங்க்ஸ் அத்தான்.."என்றவாறு ஆதியை அணைத்துக் கொண்டான்.

அவன் அன்பில் நெகிழ்ந்த ஆதி.. அவன் தலைவருடியபடி.. "சரிடா.. போய் தூங்கு.."என்றான்.

மித்ரா அவர்களை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார்த்தி அங்கிருந்து சென்றதும்.. மித்ராவும்.. "தேங்க்ஸ்.."என்றபடி ஆதியை அணைத்துக் கொண்டாள்.

"என்ன அக்காவும் தம்பியும் மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கீங்க.. எனக்கு தேங்க்ஸ் லாம் வேண்டாம்.."என்றான் குறும்பாக..

"வேறென்ன வேணும்.."என மித்ரா ஆதியின் முகம் பார்த்தாள்.

"உன் மடியில படுத்துக்கணும்.."என ஆதி சொல்ல.. மித்ராவும் புன்னகையுடன் தலையசைத்தாள்.

அடுத்த நாள் ஹாலில் இருந்த ஆதியிடம்.. "அத்தான்.. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.."என்றாள் ஸ்வேதா.

தன் போனில் மூழ்கியிருந்தவன்.. "கேளு ஸ்வேதா.."என்றான் ஆதி.

"அது.. அது.. நான் படிப்பை முடிச்சிட்டேன்.."என்றாள் ஸ்வேதா.

"அதான் தெரியுமே.. அதுக்கு என்ன.."என கேட்டவன்.. தன் பார்வையை போனிலே வைத்திருந்தான்.

"நா.. நான்.. உங்க ஆபிஸ்க்கு வேலைக்கு வரவா.."என கேட்டாள் ஸ்வேதா.

"நிஜமாவா.."என ஆச்சர்யமாக கேட்டான் ஆதி.

"ம்.."என வேகமாக தலையசைத்தாள் ஸ்வேதா.

"இதெல்லாம் நீ கேட்கணுமா.. நீ எப்ப வேணா வரலாம்.."என்றான் ஆதி.

அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கௌதம்.. "என்ன.. ஆடு.. வெட்டுறதுக்கு தானா வந்து தலையை கொடுக்குது.."என மனதில் நினைத்தபடியே சிரிப்புடன் ஆதியை பார்த்தான்.

ஆதியும் கண்களில் சிரிப்புடன் கௌதமை பார்த்தான்.

"போய் ரெடியாகிட்டு வா.. ஸ்வேதா.. சீக்கிரம் கிளம்பலாம்.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. "என்றான் ஆதி.

"ஆங்.. சீக்கிரம் வந்துடுறேன் அத்தான்.."என சந்தோஷத்துடன் ஸ்வேதா தன்னறைக்கு சென்றாள்.

Continue Reading

You'll Also Like

146K 5.9K 49
உறவுகளின் உன்னதம்
74.7K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
16.4K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...