நீ தான் என்காதலா(முடிவுற்றது)

By ZaRo_Faz

217K 9.3K 3.6K

அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட்... More

என் காதல்-01
என் காதல்-02
என் காதல்-03
என் காதல்-04
என் காதல்-05
என் காதல்-06
என் காதல்-07
என் காதல்-08
என் காதல்-09
என் காதல்-10
என் காதல்-11
என் காதல்-12
என் காதல்-13
என் காதல்-14
என் காதல்-15
என் காதல்-16
என் காதல் -17
என் காதல்-18
என் காதல்-19
என் காதல்-20
என் காதல்-21
என் காதல்-22
என் காதல்-23
என் காதல்-24
என் காதல்-25
என் காதல்-26
என் காதல்-27
என் காதல்-28
என் காதல்-29
என் காதல்-30
என் காதல்-31
என் காதல்-32
என் காதல்-33
என் காதல்-35
என் காதல்-36
என் காதல்-37
என் காதல்-38
என் காதல்-39
என் காதல்-40
என் காதல்-41
என் காதல்-42
என் காதல்-43
என் காதல்-44
என் காதல்-45
என் காதல்-46
என் காதல்-47
என் காதல்-48
என் காதல்-49
என் காதல்-50
என் காதல.-51
அன்பு மக்களே
நன்றிகள்...
(special part)
விளையாட்டுக்கு....
மக்களை நம்பி
எனது பிறந்த நாள்

என் காதல்-34

3.2K 217 70
By ZaRo_Faz

மும்பை மண்ணை தொட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல்.... முதலில் ஒரு ஹாட்டலுக்கு சென்று ரூம் புக் செய்தாள்

ரூம் மிக அழகாக இருந்தது வாசம் வீசிக்கொண்டும் குளிர்ந்து கொண்டும் இருந்தது.... முதலில் ரெஸ்ட் ரூம் சென்று குளித்து விட்டு சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டே டவலை உலர்த்த வெளியே சென்றாள்....
யாரோ முனங்கும் சத்தம் கேட்டதும் டவலை பெல்கனியில் போட்டு விட்டு தலையை திருப்பி தேடினாள் விது

அந்த முனங்கும் சத்தம் மிக அருகில் கேட்டது.. சத்தம் கூடிக்கொண்டு வேறு சென்றது... அவள் சுற்றி சுற்றி பார்தது விட்டு.
"யாரோ வேணும் என்று இப்படி பன்றாங்க" என்று பயந்து கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை லாக் செய்தாள்..... 

தெரியாத ஊர் தெரியாத மொழி தெரியாத மனிதர்கள் என்று கண் திறந்தும் இருட்டில் திரியும் உணர்விது இதற்குள் முனகல் வேறா....

நேரம் இரவு 7மணியை தாண்டி விட்டது டீவி பார்த்துக்கொண்டு இருந்தவள்..
இரவு உணவுக்கான ஓடரை கொடுத்து விட்டு டவலை எடுக்க  கதவை திறந்தாள்...

டவலை எடுக்கும் போது பக்கத்து பெல்கனியில் ஒருவன் தன் கையில் பல வெட்டுக்களை போட்டு கொண்டு அதில வந்த இரத்தத்தை பார்த்து அழுது கொண்டு இருந்தான் அவனை கண்டதும் விதுக்கு தன் பழைய நினைவுகள் வந்து விட்டது...  உடனே அவனை பார்த்து

"அய்யோ அம்மா என்ன பன்றீங்க சார்?"என்று கத்தினாள் பிரச்சிணை என்றாளோ சந்தோசம் என்றாளோ.... முதலில் நம்மோடு அதை பகிர வருவது நம் தாய் மொழி தானே அவளது கூச்சலில் தன் கண்ணீரை துடைத்தவன்  ஒரு பார்வை பார்த்தான் அதில் ஆயிரம் அர்த்தங்கள்...
..பின்பு தலையை கீழே போட்டு கொண்டான்

சிவந்த கண்கள்... கண்ணீருக்கு பதில் இரத்தம் தான் வந்து கொண்டு இருந்தது போல் ஒரு சிவப்பு.... முகமும் அப்படித்தான்.... ரோஜா நிறம் ஆனால் அழுது கொண்டு இருப்பாதால் போலும் இரத்தத்தின் நிறம் கன்னங்கள் மூக்கு... உதடு காது எல்லாம் சிவந்து தொட்டால் இரத்தம் வெளி வந்து விடும் போல் இருந்தது... கையை இருக்க பொத்திக்கொண்டு இருந்தான் அவன் கொடுத்து கொண்டு இருக்கும் அழுத்தத்தில் இரத்தம் அதிகமாக வெளியாகியது....
அவனை பார்க்க கவலையாக இருந்தது விதுக்கு

எட்டினாள் அவனை தொட்டு விடலாம்  தான் 'என்ன பன்னலாம்?' என்று யோசித்தவள் தன் அறைக்குள் சென்று தன் பெஸ்ட் எய்ட்ஸ் பாக்சில் உள்ள இரத்த கட்டுபாடு செய்யும் மருந்தை எடுத்து கொண்டு பெல்கனிக்கு வந்தாள்.... அவனின் கண்கள் மெதுவாக மூட பட்டுக்கொண்டு இருந்தது இதற்கு மேல் இரத்தம் லீக் ஆவது சரியில்லை.... அவனது சிவப்பு முகம் மஞ்சலாகி கொண்டு இருந்தது... உடனே தன் உடலை பாதி பெல்கனிக்கு வெளியே போட்டு அவன் கையை எடுத்து அதில் அந்த மருந்தை வைத்தாள்....

அவனுக்கு பேசும் தெம்பில்லை ஆனால் வித்யா தொட்டதும் மெதுவாக கண்ணை திறந்து பார்த்து.... வாய்க்குள் முனுமுனுத்தான்...
"தும் கவுன் ஹோ? கியா கர் ரஹி ஹோ" என்று விட்டு அவனது கையை இழுத்துக்கொண்டே ஏதோ சொன்னான் "மேரா ஹாத் சோட் தென்" என்றான் அதன் மீனிங் புரியாமல் இருந்தது

'அய்யோ ஹிந்திகாரனா இவன் இப்போ என்ன பன்றது உதவியும் பன்னனும் இவர் பேசுரதும் புரியல்ல ஆரம்பமே சரி இல்லையே' என்று நினைத்த விது அவனை பார்த்து...

"முஸே ஹிந்தி ஆத்தி நெஹி க்யா ஆப் இங்லிஷ் மி பொலேங்கே?" என்றதும் அவன் மயங்கி விட்டான் இரத்தம் வெளியாவது நின்று விட்டாலும் அவன் மயங்கி விட்டான்....

'அய்யயோ நாம பேசின ஹிந்திக்கு பயந்து மயங்கிட்டானா கடவுளே இப்ப என்ன பன்றது இந்த பையன நான் எப்படி மொழி தெரியாத ஊர்ல காப்பாத்துவேன்?" என்று நொந்து கொண்டாள்.....

அவனது கையை விட்டதும் அவன் அப்படியே கீழே விழுந்தான் எட்டினாலும் தொட முடியாமல் போய்விட்டது.... 'அய்யோ' என்று தலையில் அடித்துக்கொண்டவள்.... பெல்கனியை விட்டு உள்ளே சென்று நேரத்தை பார்ததாள் ஒன்பது மணி ஆகி இருந்தது 'இப்ப பக்கத்து ரூம்ல ஹெல்ப் கேக்கவும் முடியல்லயே நைட் டைம் ஆகிருச்சில" என்று பதறிக்கொண்டே தன் ரூமை விட்டு வெளியே வந்தாள்... தன் பக்கத்து ரூம் காரனின் ரூம் நம்பரை பார்த்தவள் ரிஸப்ஷனுக்கு கால் செய்து
அர்ஜென்ட்டாக ரூம் நம்பர் 216 க்கு வருமாறு கூறினாள்....
அவளும் தன் ரூமை லாக் செய்து விட்டு பணபேர்ஸை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்....

சிலர் அவர்களை நோக்கி ஓடி வந்து.... அதில் ஒரு பெண் "யாஹான் கைஸீ பீ ஸமஸ்யா மெம்?என்றாள்....

"மெடம் ஐ டோன்ட நோ ஹிந்தி குட் யு ஸ்பீக் இன் இங்கலிஷ்?" என்றால் விது

"யா சுவர் மேம்...." என்றாள் அவள்

"மெம்.... த பேர்ஸன் நெக்ஸ் டு மை ரூம்...இஸ் ஸீரியஸ்.... ஸோ வி ஹேவ் டு டேக் ஹிம் டு த ஹாஸ்பிடல் கென் யு ஹெல்ப் மீ" என்றதும் அந்த பெண் சாவியை எடுத்து வந்து ஓபன் செய்தாள் விதுவும் அந்த பெண்ணுடன் உள்ளே சென்றாள் விது நேராக பெல்கனி சென்று அவனை காட்டியதும் இரண்டு ஆண்கள் வந்து அவனை எம்பியூலன்ஸ் வரை தூக்கி சென்றான்

வித்யாவும் அவர்களுக்கு பின்னாடியே சென்று அவனுடன் ஆம்பியூலன்ஸ்ஸில் ஏறிக்கொண்டாள்..... அந்த இளைஞன் இன்னும் மயக்கத்தில் இருந்தான்.... அவனை பார்க்க அப்பாவி போன்று இல்லாமல் முகத்தில் குறும்பு மின்னிக்கொண்டு இருந்தது... அவன் மயக்கத்தில் கூட சிரித்து கொண்டு இருப்பது போல் இன்னோசன்ட்டான முகம்.....

அவனது காற்சட்டையில் இருந்த. ஐடி காடை எடுத்து பார்த்தாள்
"நேம் ஆதித்யா சிங்" என்று இருந்தது..
வயது வித்யாவின் வயதே தான் ஆனால் 6மாதத்துக்கு மூத்தவனாக இருந்தான்....

ஸிட்டி கூட மும்பை தான்
"அப்போ எதுக்கு ஹாட்டெல்ல இருக்காரு ஒரு வேலை வைப் கூட கோவிச்சிட்டு இங்க இருக்காறோ என்று அவன் ஹாட்டலில் இருந்ததன் காரணம் தேடிக்கொண்டு இருக்கும் போதே ஹாஸ்பிடல் வந்து விட்டது....
அவனை அட்மிட் செய்து விட்டு விது வெளியே அமர்ந்து இருந்தாள்

இன்னைக்குள்ள எத்தனை பிரச்சிணை எல்லாவற்றையும் கடந்து வாழ்வது தானே வாழ்க்கை.... என்று நினைக்கும் போதே 'யாருக்குடா வேண்டும் இந்த வாழ்க்கை' என்று வாய்விட்டே சொல்லி விட்டாள்.... வெளியே வந்த டாக்டர்....

"வாஹ் தீக் ஹாய் யூ யூஸ் தெக் ஸகதே ஹய்ன்" என்றார்.... விதுவுக்கு ஒன்றும் புரியவில்லை...

"டாக்டர் ஐயம் ப்ரொம் டமில் நாடு ஸோ ஐ டோன்ட் நோ ஹிந்தி" என்றதும் அவர் புன்னகைத்து விட்டு

"ஒகே ஐ வில்.... ஹீ இஸ் ஆல்ரைட் யூ கென் ஸீ தெட் பேஷன்ட்" என்றார் விது புன்னகைத்துக்கொண்டே

"தேங்க் யூ டாக்டர்" என்றாள்

"இட்ஸ் அவர் ப்லஷர்" என்று விட்டு சென்றார் விது மெதுவாக அறையை தட்டியதும்

"யேஸ் கம்மன்"என்றான் அவன்
விது உள்ளே சென்று அவனுக்கு முன் நின்றாள் கையில் கட்டு.... போடப்பட்டு இருந்தது ஸேலைன் ஏற்றபட்டுக்கொண்டு இருந்தது... விது வாங்கி வந்த பழச்சாற்றை கொடுத்தாள்... அவனும் அவளது முகத்தையும் பார்க்காமல் வாங்கி கொண்டு "தெங்க் யு" என்றான்....

விது மௌனமாக நின்றாள்  அவளாகவே
"ஹவ் டூ யு பில் நவ்?" என்று கேட்டாள்
அவனும் சிரித்து கொண்டே...
"ஐயம் ஆல்ரைட்.... மெடம்... தெங்க்ஸ் போர் ஓல்...துமாரா நாம் க்யா ஹே?" என்றான்
விது உடனே

"ஐயம் வித்யா வேல் ப்ரொம் டமில் நாடு..... ஸோ டோன்ட் டோக் வித் ஹிந்தி பிகோஸ் ஐ டோன்ட் நோ" என்றாள்

"ஹேய் ஓவ்ஸம் நைஸ் டு மீட் யு.... வணக்கம்... வித்யா...." என்று விட்டு சிரித்தான் அவன் பேசியதை கேட்டு
"யு நோ டமில்?" என்று கேட்டாள்...

"கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்றான் அவன் அப்படி சொன்னதும் விது சிரித்து விட்டாள்....

"ஓகே அப்படி என்றால் தமிழ் பேசலாமா" என்று கேட்டாள்...அதே சிரிப்போடு
"வை நோட் யா சுவர்..." என்றான்

"ஓகே நீங்க இப்படி ஹாஸ்பிடல்ல நிக்கிறத வீட்டில சொல்ல வேண்டும் சோ உங்க வீட்டு நம்பர் குடுங்க. நான் சொல்றேன்"என்றாள்...

"நோ இட்ஸ் ஓகே....." என்று கூறும் போதே அவனது கண்கள் கலங்கி விட்டது....
இதற்கு மேல் பேசுவது நல்லதல்ல என்று அமைதியாக இருந்தாள்...

"வை டிட் யு கம் மும்பை...?"என்று அவன் கேட்டதும்...
'சொல்லட்டுமா வேண்டாமா என் பர்ஸனல் விஷயம் ன்னு சொல்லாம இருக்கவா இல்லை சொல்லுவமா?'என்று யோசித்தவள்

'சொல்லுவோம் இவரும் மும்பை தானே அப்போ இவர்கிட்ட ஹெல்ப் கேட்டுடே அனுவ கண்டு புடிக்கலாம்' என்று நினைத்து கொண்டு

"எக்சுவலி என்னோட ப்ரன்ட் மும்பைல சைக்லஜிக் ட்ரீட்மன்ட்காக வந்து இருக்கா... அவங்கள பார்க்க தான் நான் இன்னைக்கு வந்தேன் ரூம்க்கு வந்ததும் உங்கள பார்த்தேன் ஸோ இப்போ வரை அவங்களை கண்டு பிடிக்கல... நாளைக்கு தான் அவங்கள தேடி போகனும்" என்றாள்... விளக்கமாக

" டோன்ட் வொர்ரி வித்யா டுமாரோ வி வில் கோ என்ட் சேர்ச் யூ ஆர் பிரன்ட் இன் எவ்ரி ஹாஸ்பிடல்...." என்றான்

விதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது...
அவன் விது பேசும் தமிழை புரிந்து இங்க்லிஷில் பதில் தந்தான்....

"தேங்க் யு சேர்" என்றாள்...

"ஹேய் ஜஸ்ட் கோல் மை நேம்... அயம் ஆதித்யா சிங் ஐ டூ சைக்கொலஜிஸ்ட்" என்று கூறி சிரித்தான்
"ஓஹ்.... ரியலி நைஸ்" என்று விட்டு அமைதியாக நின்றாள்...

பின்பு மொபைலை எடுத்து வட்ஸப்பில் வௌய்ஸ் ரெக்கோட் செய்தாள்....

"அம்மா நான் இப்போ மும்பைல இருக்கேன் ம்மா நாளைக்குள்ள அனுவயும் மகேஷயும் கண்டு பிடிச்சிடுவேன் அப்பாவையும் வைஷுவையும் கேட்டதா சொல்லுங்க பாய் குட் நைட் டேக் கெயார்" என்றாள்.....

அவளை பார்த்து கொண்டு இருந்தவன் வீரிட்டு அழுதான் ஆனால் சத்தம் வராமல் நாக்கையுப் உதட்டையும் கடித்துக்கொண்டான்

என்ன நடந்து விட்டது என்று இப்படி அழுகின்றார் என்று புரியாமல் அவனின் அருகில் சென்று நின்றாள்.....

"ஆதித்யா வட் ஹெப்பன்ட்....?" என்று கேட்டுக்கொண்டே அவனை கூர்ந்து பார்த்தாள்...

எதுவும் பேசாது அழு அழு என்று கண்ணீர் வடித்தான் பின்பு கண்களை துடைத்தவன் கட்டிலை விட்டு எழுந்து ஜன்னலுக்கு அருகில் சென்று இரவு வானில் உள்ள நிலாவை ரசித்தான்.....

அவனுக்கு பின்னால் போய் நின்று கொண்டாள் விதுவுக்கு அவனை பேசி டிஷ்டப் செய்ய பிடிக்காது அவனாக பேசட்டும் என்று அமைதியாக நின்றாள்....

அவளுக்கு திடீர் என்று கதிர் ஞாபகம் வந்து விட்டது ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு கதிருடன் பேசிக்கொண்டு இருந்த போது....

"விது நிலாவ போல நீயும் அழகா இருக்க பட் நிலவு உலகத்துக்கே சொந்தம் நீ எனக்கு மட்டும் சொந்தம் நான் லக்கில..."என்றான் அன்று அவன் கூறியது ஞாபகம் வந்ததும் விம்மி விட்டாள்.... அவளது விம்மல் சத்தம் கேட்டு திரும்பிய ஆதித்யா...."வித்யா வட் ஹெபன்ட்" என்றான் பதற்றத்துடன் அவன் மறந்தும் அவளை தொடாமல் கன்னியம் காத்தான்

விது வானத்தை பார்த்து கொண்டே...
"இந்த நிலா நாம பிறக்கும் போதும் நம்ம கூட இருக்கும் சின்ன பொண்ணா விளையாடும் போதும் இருக்கும்.... இப்பவும் நம்ம கூடவே இருக்கு.... பட் அந்த நிலவ பார்க்கும் போது நமக்குள்ள ஆயிரம் நினைவுகள்.... இருக்கு அத நமக்கு குடுத்தவங்க நம்ம கூட இல்லாம ரொம்ப தூரத்துக்கு போயிட்டாங்க.... இல்ல.... அவங்க குடுத்த நினைவுகளை அழிக்கவும் முடியாம அழிக்கவும் விரும்பாம நாம கஷ்டபடுறோம்ல..." என்றாள் வானத்தை வெரித்து கொண்டே.... உடனே ஆதித்யாவின் கண்கள் குளமாகி விட்டது வித்யாவினதும் தான்....

"என்னோட மோம் மூன் காட்டி டின்னர் குடுப்பாங்க யு அர் கரெக்ட் அந்த மூன் இருக்கு பட் மை மோம்"என்று கூறிக்கொண்டே தலையில் கையை அடித்து அழுதான்

அவனாகவே கீழே அமர்ந்து கொண்டு அழுதான்......வித்யாவுக்கு எதுவும் புரியவில்லை
'அம்மா இல்லைன்னா இறந்துட்டாங்களா' என்று நினைக்கும் போதே அவளுக்கு கண் கலங்கி விட்டது

அவள் குனிந்து அவனது கையை பிடித்து அவனை தூக்கி கட்டிலில் அமர வைத்து விட்டு.... நேராக வெளியே சென்று நர்ஸிடம் பேசி அவனுக்கு உறக்க மருந்து கொடுத்தாள்....

நாளை காலை 10மணிக்கு அவனுக்கு வீட்டுக்கு செல்லலாம் என்று டாக்டர் சொன்னதால் அவள் ஹாட்டலுக்கு சென்று உறங்கினாள்

காலையில் அனுவை சந்திக்கனும் அவளுக்கு நல்ல ட்ரீட்மென்ட் குடுக்கனும் ஆதித்யா கூட பேசி அவருக்கு ஆறுதல் சொல்லனும் அவருக்கு நம்மால முடிஞ்ச ஸொலியூஷன் குடுக்கனும் என்று நினைத்து கொண்டு உறங்கினாள்....

தனக்குள்ளும் ஆயிரம் வலி இருந்தும் தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்காக வாழ்வது தானே சிறந்த பெண்ணுக்கு அழகு.....

வித்யாவும் அப்படித்தான்.... தனக்கென் எதிர்காலத்தை யோசிக்காமல்... தனக்கான கண்ணீரின் முடிவை தேடாது சுற்றியுள்ளவர்களின் கண்ணீரை துடைக்க துடிக்கும் பேதையவள்....

❤சோகங்கள் சுமையானது❤

Continue Reading

You'll Also Like

27.2K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
236K 7.8K 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
9.8K 361 29
தேவதையின் மௌனமான அழுகை
186K 9.7K 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை...