தொடுவானம்

Por jamunaguru

255K 9.7K 1.5K

கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ.. Más

❤ 01 ❤
❤ 02 ❤
❤ 03 ❤
❤ 04 ❤
❤ 05 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤

❤ 28 ❤

5.7K 237 51
Por jamunaguru

மித்ரா எதற்காக இப்டி நடந்து கொள்கிறாள் என புரியாமல்.. என்ன காரணம் என யோசித்தபடி.. கனத்த மனதோடு வீட்டுக்கு வந்தான் ஆதி.

ஆதி தன்னறைக்கு செல்ல.. அங்கே ஸ்வேதா இருந்தாள்.

அவளைக் கண்ட ஆதி.. "வெளியே போ.."என சற்று மெதுவாக சொன்னான்.

அதை கண்டு கொள்ளாமல் ஸ்வேதா.. "அத்தான்.. நைட் லாம் எங்க போனீங்க.."என பேசினாள்.

"வெளியே போன்னு சொன்னேன்.."என கோபத்தில் கத்தினான் ஆதி.

ஸ்வேதா வெளியே சென்றதும் வேகமாக கதவடைத்தான் ஆதி.

ஆதியின் சத்தம் கேட்டு அங்கே வந்த யாழினி.. "ஸ்வேதா.. அண்ணா இல்லாதப்ப எதுக்கு அவன் ரூமுக்கு போன.. அது அவனுக்கு பிடிக்காது.."என சொல்ல.. ஸ்வேதா கோபமாக அங்கிருந்து சென்றாள்.

யாழினி ஆதியை கூப்பிட்டுக் கொண்டேயிருக்க.. ஆதி கதவை திறக்கவேயில்லை.. அன்று முழுக்க..

"மாம்.. நீங்க சொன்னதால தான்.. எனக்கு கொஞ்சங்கூட பிடிக்காத அந்த ஆதியை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்.. ஆனா அவன் என்னை எப்டி இன்சல்ட் பண்றான் பாருங்க.."என சந்திரமதியிடம் ஸ்வேதா கத்திக் கொண்டிருந்தாள்.

"ஸ்வேதா.. நம்ம காரியம் நடக்கணும்னா நாம பொறுமையா இருந்து தான் ஆகணும்.." என சந்திரமதி சொன்னார்.

"ஆமா.. அவன் வேற யாரையாவது கல்யாணம் பண்ற வரைக்கும் நீங்க பொறுமையாவே இருங்க.."தன் கோபத்தை சந்திரமதியிடம் கொட்டித் தீர்த்தாள் ஸ்வேதா.

மாலதியும் ரவிச்சந்திரனும் கூட பலமுறை கூப்பிட்டும் ஆதி அன்று முழுக்க தன்னறையை விட்டு வெளியே வரவில்லை.

ஆதியை அப்டி பேசியிருக்க கூடாது.. தப்பு பண்ணிட்டேன் என எண்ணி எண்ணி மித்ரா அழுது கொண்டேயிருந்தாள்.

அவள் மேல் கோபமாக இருந்த கார்த்தி.. அவளின் அழுகையை தாங்க முடியாமல்.. "அக்கா சாரி.. நான் உன்கிட்ட அப்டி பேசிருக்க கூடாது.. சாப்பிட வா.. திரும்பவும் காய்ச்சல் வந்துட போகுது.. அழாத.."என அழுதபடியே அவளை சமாதானம் செய்தான்.

அவனையும் கஷ்டப்படுத்த விரும்பாமல்.. மித்ரா சாப்பிட்டாள்..

அடுத்த நாள் காலையில் தான் தன்னறையில் இருந்து வெளியே வந்தான் ஆதி.

ஹாலில் வந்து ஆதி அமர்ந்தான். அவனை கவனித்த மாலதி.. "என்னாச்சு ஆதி.. ஏன் இப்டி பண்ற.."என வருத்தத்துடன் கேட்டார்.

"சாரி சித்தி.. மனசு சரியில்லை.. அதான்.."என்றான் ஆதி.

"ஆதி நீ இப்டி இருந்தா.. யாழினி கல்யாண ஏற்பாடெல்லாம் எப்டி நடக்கும்.. நீதான எல்லாத்தையும் முன்ன இருந்து பார்க்கணும்.."என ரவிச்சந்திரனும் ஆதியிடம் சொன்னார்.

"சாரி சித்தப்பா.. நான் இன்னைக்கே டெக்கரேஷன் வொர்க் லாம் ஆரம்பிக்க சொல்றேன்.."என ஆதி உறுதியளித்தான்.

மாலதி ஆதிக்கு டீ கொண்டு வந்து தந்தார்.. "ஆதி டிபன் இப்ப ரெடியாகிடும்.. சாப்பிடு.."என்றார்.

"இல்லை சித்தி..நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.."என்றான் ஆதி.

"ம்.. சரி.."என்ற மாலதி அங்கிருந்து சென்றார்.

அப்போது அங்கே வந்த யாழினி.. "அண்ணா.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்டி பண்ற.."என கவலையுடன் கேட்டாள்.

"ஒன்னுமில்லை குட்டிமா.."என சமாதானமாய் சொன்னான் ஆதி.

அப்போது ஆதியின் போன் ஒலித்தது.. ரிங்டோனாக மித்ராவின் குரலில் யமுனை ஆற்றிலே.. பாடல்.

போனை அட்டெண் செய்ய மனமில்லாமல் மித்ராவின் குரலை கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி.

"அண்ணா  பெரியம்மாவுக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்ல.. இது யார் வாய்ஸ்.. "என யாழினி கேட்டாள்.

ஆதி பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்.

"சொல்லு ணா.. யார் வாய்ஸ் இது.."என யாழினி மீண்டும் கேட்டாள்.

"உன் அண்ணியோட வாய்ஸ்.."என்றான் ஆதி.

"அண்ணா நிஜமாவா.."என விழிகள் விரிய யாழினி கேட்டாள்.

ஆம் என்பது போல் கண்சிமிட்டினான் ஆதி.

"அண்ணா.. நான் உன்கிட்ட அதுக்கப்புறம் அண்ணி பத்தி கேட்கவே மறந்துட்டேன் பாரு.. அண்ணி பேர் என்ன ணா.."என யாழினி கேட்டாள்.

"மித்ரா.."என சொன்னான் ஆதி.

"அண்ணா நேத்து கூட மித்ரானு ஒருத்தங்க இங்க வந்தாங்க.. எவ்ளோ அழகா இருந்தாங்க தெரியுமா.. நான் அவங்களுக்கு வீட்டை சுத்திக்காட்டலாம்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள அவங்க கிளம்பிட்டாங்க.."என யாழினி பேசிக் கொண்டேயிருந்தாள்.

ஆனால் அவளின் பேச்சு ஆதியின் காதில் விழுந்தாலும் மனதில் பதியவில்லை..

ஆதியின் பார்வை அங்கே மாட்டப்பட்டிருந்த அவன் போட்டோவில் பதிந்தது.

அப்போது.. "யாழினி இங்க வா.."என மாலதி அழைத்தார்.

"ஆங்.. இதோ வர்றேன் மா.."என யாழினி அங்கிருந்து எழும்பினாள்.

ஆதி மனதில் யாழினி சொன்ன வார்த்தைகள் வர.. "குட்டிமா.. ஒரு நிமிஷம்.. மித்ரா பத்தியா சொன்ன இப்ப.."என்றான்.

யாழினியும் ஆம் என தலையசைத்தாள்.

"மித்ரா வரும் போது இந்த போட்டோ இங்க இருந்துச்சா.."என ஆதி யாழினியிடம் கேட்டான்.

"ஆம்.. அவங்க இருக்கும் போது தான் மாட்டினாங்க.."என யாழினி சொல்லிக் கொண்டிருக்க.. மாலதி யாழினியை மீண்டும் அழைக்க அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆதிக்கு மித்ராவின் செய்கைக்கான காரணம் புரிய தொடங்கியது.

மித்ராவை பார்க்கச் செல்லலாம் என நினைத்து கிளம்பினான். ஆதி அங்கே செல்கையில் மித்ரா வேலைக்கு சென்றிருந்தாள்.

கார்த்தி தான் வீட்டில் இருந்தான். கார்த்தி ஆதியிடம்.. "அக்கா.. நேத்து அழுதுட்டே இருந்தாங்க.. வேலைக்கு கூட போகலை.."என்றான்.

"ஒன்னுமில்லை.. சரியாகிடும்.. நான் வர்றேன்.."என சொல்லிவிட்டு ஆதி கிளம்பினான்.

அலுவலகத்திற்கு சென்ற மித்ராவிடம் மஞ்சு.. "உங்களை இந்த அட்ரஸுக்கு கவின் சார் வரச்சொன்னாங்க.. கவின் சாரும் முரளி சாரும் ஏற்கனவே அங்க போயிருக்காங்க.."என சொன்னாள்.

அவள் சொன்ன எதுவுமே மனதில் பதியாமல் ஆட்டோவில் ஏறி அந்த அட்ரஸுக்கு சென்றாள்.

ஆதியின் வீட்டுக்கு வந்திருப்பது கூட அறியாமல் மித்ரா.. நடந்து சென்றாள்.

அங்கே ஹாலில் கவினும் முரளியும் நின்று தங்கள் வேலையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

கவினை பார்த்து விட்டு.. அவனை நோக்கி வந்த மித்ரா.. கௌதம் மேல் தெரியாமல் இடித்து விட்டாள்.

கௌதம் கையில் இருந்த ஜூஸ் டம்ளர் கீழே விழுந்து விட்டது.

"சாரி.. சாரி.. நான் கவனிக்கலை.."என பதற்றமாக மித்ரா சொன்னாள்.

"இதுக்கு ஏன் இவ்ளோ பதறுறீங்க.. ஒன்னுமில்லை.. விடுங்க.."என கௌதம் மித்ராவிடம் சொல்லிவிட்டு.. "அண்ணா.. இதை கொஞ்சம் க்ளீன் பண்ணிடுங்க.."என அழைத்தான்.

அப்போது அங்கே.. "கௌதம்.. என்ன சத்தம்.."என்றபடி யாழினி வந்தாள்.

யாழினியை பார்த்ததும் தான் மித்ரா ஆதியின் வீட்டுக்கு வந்திருப்பதை கவனித்தாள்.

அங்கே வந்த கவின்.. "சாரி சார்.. அவங்க கவனிக்காம வந்துட்டாங்க.."என கௌதமிடம் சொன்னான்.

"Its ok.. நீங்க போய் உங்க வேலையை பாருங்க.."என்றான் கௌதம்.

கவின் மித்ராவிடம் அவளுக்கான வேலையை கொடுத்தான்.

மித்ராவின் உடல் அங்கே இருந்தாலும்.. "ஆதி ஒருவேளை இங்கே இருப்பானோ.. அவனை எப்டி நேரில் பார்ப்பது.."என மனதிற்குள் பரிதவித்தபடி இருந்தாள்.

யாழினி கௌதமிடம்.. "கௌதம்.. அவங்க ரொம்ப அழகா இருக்காங்கல்ல.. எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. ஏன்னு தெரியலை.."என சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கௌதம் அதை காதில் வாங்காமல்.. போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"நான் சொல்றதை கேட்காம போனை பார்த்துட்டு இருக்க.."என அவன் காதை திருகினாள்.

"அவங்க ரொம்ப அழகா இருக்காங்க.. அவங்கள பிடிச்சிருக்கு.. அதான சொன்ன.."என காதை தடவியபடி பாவமாக சொன்னான் கௌதம்..

"கேட்டுட்டு தான் இருந்தீயா.. சாரி.."என்றாள் யாழினி.

மித்ராவின் கண் முன் ஆதியின் புகைப்படம் இருக்க.. அதிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் தவித்தாள் மித்ரா.

அதை கவனித்த யாழினி.. "கௌதம்.. அங்க பாரு.. அவங்கள.."என்றாள்.

"என்ன யாழினி.. ஆதி அத்தான் போட்டோவையே இப்டி சைட் அடிக்கிறாங்க.."என கிண்டலாக கௌதம் சொன்னான்.

ஆனால் ஏதோ யோசனையோடு மித்ராவை பார்த்த யாழினி.. "கௌதம்.. நான் கண்டுபிடிச்சிட்டேன்.."என்றாள்.

"என்ன கண்டுபிடிச்ச.."என கௌதம் கேட்டான்.

"இவங்கள தான் ஆதி அண்ணா லவ் பண்றான்.. இவங்க தான் என் அண்ணி.."என்றாள் யாழினி.

அதைக் கேட்ட கௌதம்.. "என்ன யாழினி.. அண்ணனை சைட் அடிக்கிறவங்கள உனக்கு பிடிச்சிருந்தா அவங்க உனக்கு அண்ணியா.."என கேட்டான்.

"இல்லை கௌதம்.. நான் அதுக்கு சொல்லலை.."என யாழினி கௌதமிடம் சொல்லிக் கொண்டிருக்க..

மித்ராவின் குரலில் யமுனை ஆற்றிலே.. பாடல் ஒலித்தது.

மித்ராவும் தன் குரலை கேட்டு திரும்பி பார்க்க.. அங்கே ஆதி மித்ராவை பார்த்தபடியே.. போனை அட்டெண் செய்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

ஆதி தன் பார்வையை மித்ராவிடம் இருந்து விலக்காமல்.. போனில் பேசி முடித்துவிட்டு.. மித்ராவின் அருகில் வந்தான்.

கௌதம் யாழினியிடம்.. "யாழினி.. நீ சொன்னது கரெக்ட் தான்.. அவங்க தான் உன் அண்ணி.. இங்க இருக்க நம்மளை ஆதி அத்தான் கவனிக்கவே இல்லை பாரேன்.."என்றான்.. மித்ராவையும் ஆதியையும் பார்த்தபடியே.

யாழினியும் தலையை ஆட்டியபடியே மித்ராவையும் ஆதியையும் பார்த்தாள்.

ஆதி தன் மேல் கோபமாக இருப்பான் என நினைத்த மித்ராவோ.. தன் முன் புன்னகையுடன் ஆதி நிற்க.. அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்தபடி நின்றிருந்தாள்.

Seguir leyendo

También te gustarán

94.5K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
74.7K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
49.5K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...