தொடுவானம்

By jamunaguru

255K 9.7K 1.5K

கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ.. More

❤ 01 ❤
❤ 02 ❤
❤ 03 ❤
❤ 04 ❤
❤ 05 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤

❤ 18 ❤

5.5K 234 22
By jamunaguru

ஆதி முகமெல்லாம் வியர்வை வழிய.. பயத்தோடு கீழே வழிந்திருந்த இரத்தத்தை பார்த்தபடி நின்றிருந்தான்.

ஆதியை பார்த்த மித்ரா.. பதற்றத்தோடு.. "ஆதி.. ஆதி.. என்னாச்சு.."என பதறினாள்.

ஆதி இரத்தத்தை வெறித்து பார்ப்பதை கவனித்த மித்ரா.. "ஆதி.. வாங்க போகலாம்.. அந்தக் குழந்தைக்கு ஒன்னுமில்லை.. வாங்க.."என சொல்லியபடி ஆதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

ஆதிக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை வழிய.. உடல் நடுங்க.. மித்ராவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

மித்ராவுக்கு என்ன செய்வதென புரியவில்லை.. ஆதியின் முகத்தில் வழிந்த வியர்வையை தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள்.

"ஆதி.. ஆதி.. என்னாச்சு.."என பதறினாள் மித்ரா.

ஆனால் ஆதி எதுவும் பேசும் நிலையில் இல்லை. "ஆதி.. வாங்க வீட்டுக்கு போகலாம்.."என மித்ரா ஆதியை வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

ஆதியின் அறைக்கு அழைத்துச் செல்லாமல்.. கீழே இருந்த அறையில் இருந்த கட்டிலில் ஆதியை படுக்க வைத்தாள் மித்ரா.

Fanஐ போட்டுவிட்டு.. "ஆதி.. ஆதி.. "என அழைத்தாள் மித்ரா.

ஆதி.. மித்ராவின் முகத்தை பார்த்தான். "ஆதி.. தண்ணீ எடுத்துட்டு வரவா.."என்றாள் மித்ரா.

வேண்டாம் என்பது போல் தலையசைத்தான் ஆதி.

சில நிமிடங்கள் கடந்த பின்.. ஆதி மித்ராவை பார்த்து.. "மித்ரா.. ப்ளீஸ்.. என் கூடவே இரு.."என்றான் கெஞ்சலாய்.

மித்ரா மறுப்பேதும் சொல்லாமல் ஆதியின் அருகிலே அமர்ந்து இருந்தாள்.

ஆதி தூங்கிவிட்டது போல தெரிந்தது. மித்ரா.. பாலை சூடு பண்ணிவிட்டு ஆதியை எழுப்பலாம் என கிச்சனுக்குள் வந்தாள்.

சாரு.. மித்ராவுக்கு போன் செய்து.. சந்துருவோடு வெளியே சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னாள்.

மித்ராவுக்கும் சாப்பிட தோணலை.. ஆதியும் சாப்பிடுவானா.. என தெரியவில்லை.. அதனால் பாலை மட்டும் காய்ச்சினாள்.

பாலை எடுத்துக் கொண்டு ஆதி படுத்திருந்த அறைக்குள் வந்தாள் மித்ரா.

ஆதி எழுந்து ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தான்.

"ஆதி.."என அழைத்தாள் மித்ரா.

ஆதி கலங்கிய கண்களோடு திரும்பினான். அதைக் கண்டு பதறிய மித்ரா.. "ஆதி என்னாச்சு.. ஏன் அழுறீங்க.."என்றாள்.

"மித்ரா.."என அவளை அணைத்துக் கொண்டான் ஆதி.

"மித்ரா.. என்னால தான் எல்லாம்.. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்.."என்றான் ஆதி.

மித்ரா எதுவும் புரியாமல்.. "ஆதி.. என்ன சொல்றீங்க.."என்றாள்.

"மித்ரா.. நான், அம்மா, அப்பா எல்லோரும் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒன்னா வெளியே போனோம்.. அப்ப அம்மா.. இளநீர் கேட்டாங்க.. நீங்க கார்லே இருங்க.. நான் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு.. நான் மட்டும் காரை விட்டு இறங்கிப் போனேன்.. அப்ப.. அப்ப.."என ஆதி சொல்ல முடியாமல் தடுமாறினான்.

மித்ரா ஆதியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு அவன் முகம் பார்த்தாள்.

"அப்ப.. எங்கிருந்தோ.. வந்த லாரி மோதி.. அ.. அம்மா.. அப்பா.. ரோடு முழுக்க அவங்களோட இரத்தம்.. என்னால எதுவுமே பண்ணமுடியல.. மித்ரா.. நான் தான் மித்ரா எல்லாத்துக்கும் காரணம்.. என்னால தான் எல்லாம்.. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவனா இருக்கிறேன் மித்ரா.. நான்.."என ஆதி மண்டியிட்டு அமர்ந்தபடி கதறி அழுதான்.

மித்ராவும் கண்களில் கண்ணீர் வழிய.. ஆதியை எப்படி சமாதானம் செய்வதென தெரியாமல்.. அவன் முன் அமர்ந்தாள்.

ஆதியை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி.. அவனிடம்.. "ஆதி.. இதில உங்க தப்பு எதுவும் இல்லை.. அழாதீங்க.. ப்ளீஸ்.."என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மித்ரா.

மித்ராவின் மடியிலே தலைவைத்தபடி அழுது கொண்டிருந்தான் ஆதி.. நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தது.

அழுது ஓய்ந்த ஆதி.. மித்ராவின் மடியிலே தலைவைத்தபடி கண்ணயர்ந்தான்.

மித்ராவும் ஆதியை பிரிய மனமில்லாமல் அப்படியே இருந்தாள். ஆதி மனசுக்குள்ள எவ்ளோ கஷ்டத்தை வச்சிட்டு இருந்திருக்கான் என மித்ரா அவனுக்காக வருந்தினாள்.

அனிச்சையாக மித்ராவின் விரல்கள் ஆதியின் தலைமுடியை கோதின.

மித்ராவுக்கு ஏனோ கனவு நினைவில் வந்தது. கனவிலும் ஆதி இதே போல் தான் தன் மடியில் படுத்திருந்தான்.. என அதை நினைத்தபடி.. புன்னகைத்தாள்.

அந்த நேரம் கண்விழித்த ஆதிக்கு.. மித்ராவின் முகத்தை தவிர வேறெதுவும் அவன் கண்களுக்கு தெரியவில்லை.

தன்னை மறந்து அவளை இழுத்து.. அவள் இதழ்களில் தன் முதல் முத்தத்தை பதித்தான்.

மித்ராவோ.. ஆனந்த அதிர்ச்சியில் இருந்தாள்.. கனவா.. நனவா.. என அறிய முடியாதவளாய் ஆதியின் முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தான் செய்வதை உணர்ந்த ஆதியோ.. மித்ராவை விட்டு விலகி அங்கிருந்து சென்றுவிட்டான்.

Continue Reading

You'll Also Like

12K 342 34
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
52.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
109K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
49.3K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...