நறுமுகை!! (முடிவுற்றது)

By sweetylovie2496

364K 15.9K 4.8K

என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி... More

நறுமணம் 2
நறுமணம் 3
நறுமணம் 4
நறுமணம் 5
நறுமணம் 6
நறுமணம் 7
நறுமணம் 8
நறுமுகை 9
நறுமணம் 10
நறுமணம் 11
நறுமணம் 12
நறுமணம் 13
நறுமணம் 14
நறுமணம் 15
நறுமணம் 16
நறுமணம் 17
நறுமணம் 18
A/N
நறுமணம் 19
நறுமணம் 20
நறுமணம் 21
நறுமணம் 22
நறுமணம் 23
நறுமணம் 24
நறுமணம் 25
நறுமணம் 26
நறுமணம் 27
நறுமணம் 28
நறுமணம் 29
நறுமணம் 30
நறுமணம் 31
நறுமணம் 32
நறுமணம் 33
நறுமணம் 34
நறுமணம் 35
நறுமணம் 36
நறுமணம் 37
நறுமணம் 38
நறுமணம் 39
charecters
நறுமணம் 40
நறுமணம் 41
நறுமணம் 42
நறுமணம் 43
நறுமணம் 44
நறுமணம் 45
நறுமணம் 46
நறுமணம் 47
நறுமணம் 48
நறுமணம் 49
நறுமணம் 50
நறுமணம் 51
நறுமணம் 52
நறுமணம் 53
நறுமணம் 54
நறுமுகை 55
நறுமணம் 56
நறுமணம் 57
நறுமணம் 58
நறுமணம் 59
நறுமணம் 60
நறுமணம் 61
நறுமணம் 62
நறுமணம் 63
நறுமணம் 64
நறுமணம் 65
நறுமணம் 66
நறுமணம் 67
நறுமணம் 68
A/N
நறுமணம் 69
நறுமணம் 70
நறுமணம் 71
நறுமணம் 72
நறுமணம் 73
நறுமணம் 74
நறுமணம் 75
நறுமணம் 76
நறுமணம் 77
நறுமணம் 78
நறுமணம் 79
நறுமணம் 80
நறுமணம் 81.
A/N

நறுமணம் 1

19.6K 278 92
By sweetylovie2496


நறுமுகை pov:

ஒரு பொண்னு கொஞ்சம் அழகு கம்மியா பொறந்துட்டா.....அச்சச்சோ பொண்னு இப்புடி இருக்குறாளே நாளைக்கு யாரு இவள கல்யாணம் பன்னிப்பான்னு சொல்லி அவ மனச நோகடிக்குறது....

ஒரு பொண்னுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறக்கலன்னா மலடின்னு சொல்லி அவ மனச நோகடிக்குறது....

இப்புடி பொண்ன மட்டுமே குறை சொல்ற சமுதாயந்தாங்க இன்னும் இருக்குது......அது ஏன்னு நம்ம கேள்விக்கேட்டா....அதிகமா பேசாதன்னு நம்மளையே அடக்குறது.....

அப்புடிப்பட்ட சமுதாயத்தைதான் நான் அடியோட வெறுக்குறேன்........

என் பேரு நறுமுகை....எங்க வீட்டு கடைக்குட்டி நான்தான்...

எங்க வீட்டுல நான்...என் அம்மா அப்பா....அக்கா....என்னோட அப்பத்தான்னு அஞ்சு பேரு....

என் அம்மா நாச்சியார் தேவி....அப்பா வடமலையான்......ரெண்டு பேரும் அந்த காலத்துலையே  காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டவங்க.....இன்னும் அந்த அன்பு ரெண்டு பேர்க்குள்ளையும் குறையாம அப்புடியே வாழ்ந்துட்டு வராங்க....

என் அக்கா பேரு தேன்மொழி.....எங்கவீட்டு   குடும்ப குத்துவிளக்கு.......எங்க எல்லாரோட செல்லம்.....என்னைய யார்க்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டா.....நானும் அதே மாதிரிதான்....அவன்னா எனக்கு உசுரு.....

என்னோட அப்பத்தான்  கோமலவள்ளி...ஆனா பெரிய வில்லி😂😂.....
அவுங்களுக்கு என் அம்மாவ பாத்தாலே புடிக்காது....அதுக்கு காரணம் என் அம்மா கொஞ்சம் கலர் கம்மியா இருப்பாங்க.....
அதோட அப்பா அவுங்க பேச்ச கேட்காம அம்மாவ கல்யாணம் பன்னிக்கிட்டதால...
அம்மாதான் அப்பாவ மயக்கி அவங்கக்கிட்ட இருந்து பிரிச்சிட்டதா அவுங்களுக்கு ஒரு அபிப்ராயம்.....
அதுமட்டும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே பெண் குழந்தைங்களா பொறந்துட்டோம் அந்த கோவம்......
அதுனால என் அம்மாவ அவுங்க வார்த்தைகளால வேதனைப்படுத்துவாங்க....

அம்மா அதை எப்பவும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க.....

நீங்களே சொல்லுங்க.....ஒரு பொன்னுக்கு தேவை அழகா???இல்லை நல்ல மனசா??எதுன்னு நீங்க நினைக்குறிங்க.....

அதை என் அப்பத்தான் புரிஞ்சுக்கவே இல்ல....

ஆனா நாங்க பொண்ணுங்களா பொறந்துட்டோம்னு  என் அம்மாவும் அப்பாவும் என்னைக்கும் வருத்தப்பட்டது இல்லை.....
எங்கள அவுங்க பாசமாதான் பாத்துக்கிட்டாங்க....எங்களுக்கு காசு பணத்துக்கு பஞ்சமே இல்லை....தாத்தா அந்த காலத்துலையே ஊருல நிலம் நிறைய வச்சிருந்தாரு....அப்பா ஒரே ஒரு பையன்றதால எல்லாமே அப்பாக்குதான்....

என்னதான் அப்பாக்கு காசு பணம் இருந்தாலும்...எங்க மேல பாசம் இருந்தாலும்.. கொஞ்சம் ஊரு சொல்லுக்கு பயந்து வாழுறவரு....சொல்வார் கேட்பிள்ளை.......

அடுத்தவங்க எதாவது சொல்லிரக்கூடாதுன்னு யோசிச்சு ஒவ்வொரு முடிவையும் எடுப்பாரு....அதுக்கு காரணம் அவரு காதலிச்சு திருமணம் பன்னதால ஊருக்குள்ள அதைப்பத்தி எல்லாரும் ஒருமாதிரி பேசுவாங்க....அதுனால ஊருல எங்களை பத்தி எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு நினைக்குறாரு.....அதுமட்டும் இல்லாம ஊருல என்ன சொல்றாங்களோ அதை அப்புடியே ஏத்துப்பாரு....
அப்புடி யோசிச்சதுனாலதான் என் அக்காவோட கணவுகளுக்கு சமாதிகட்டிட்டு அவள வீட்டுல உக்கார வச்சுட்டாங்க.....

எங்க ஊருல படிச்சவங்க கம்மி....அதுலையும் படிச்ச பொண்ணுங்க ரொம்ப கம்மி.....மிஞ்சி மிஞ்சி போனா எங்க ஊருல பொண்ணுங்க பண்ணென்டாம் வகுப்பு வரைக்கும் படிக்குறதே அதிசயம்.....
எங்க ஊருல வசுந்தரான்னு ஒரு அக்கா இருக்குறாங்க....அவுங்க டவுனுல போய் காலேஜ்ல படிச்சிட்டு வந்தாங்க....அவுங்க படிச்சிட்டு ஊருக்கு வந்தப்போ ஊருல அவுங்களுக்கு  எவ்வளோ மரியாத தெரியுமா.....

அதை பாத்துட்டு என் அக்காக்கும் அதுமாதிரி டவுனுக்கு போய் படிக்கனும்....அவுங்கள பாராட்டுன மாதிரியே அவளும் பாராட்டு வாங்கனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சு....

என் அக்கா போய் அந்த வசுந்தரா அக்காக்கிட்ட அவளும் அவுங்கள மாதிரியே டவுன்ல போய் காலேஜ்ல படிக்கனும் அதுக்கு என்ன பன்னனும்னு கேட்டா....அதுக்கு அவுங்க ஸ்கூல்ல நல்லா படிச்சு நிறைய மார்க் எடுத்தா அவ நினைச்ச மாதிரியே நல்ல காலேஜ்ல படிக்கலான்னு சொன்னாங்க....அப்புடி அவ ஸ்கூல்ல நல்ல மார்க் எடுத்தா அவள நல்ல காலேஜ்ல சேக்குறதுக்கு உதவி பன்றேன்னு சொனாங்க.....என் அக்காவுக்கு அதைக்கேட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிடுச்சு....

எங்க ஊருல ஸ்கூல் இல்லை....நாலு கிளோமீட்டர் தள்ளிதான் ஒரு அரசுப்பள்ளி இருக்குது.....அங்கதான் நான் பத்தாவதும் என் அக்கா பதினொன்னாவதும் படிச்சிட்டு இருக்குறோம்.....

என் அக்கா எப்புடியாவது வசுந்தரா அக்கா சொன்ன மாதிரி நல்ல மார்க் வாங்கிறனும்னு நல்லா படிக்க ஆரம்பிச்சா.....அவளோட எதிர்காலத்தை பத்தி நிறைய கணவு காண ஆரம்பிச்சா.....

ஆனா அந்த கணவெல்லாம் எப்பவும் கணவாவே போகுறமாதிரி என் அப்பத்தான் பன்னிருச்சு.....

நானும் என் அக்காவும் ஸ்கூல்க்கு போய்ட்டு சாய்ங்காலம் வீட்டுக்குள்ள வந்தோம்.....
அப்போ அப்பத்தான் அப்பாக்கிட்ட ரூம்குள்ள  எதையோ பேசிட்டு இருக்குற சத்தம் கேட்டுச்சு....

நானும் என் அக்காவும் மெதுவா போய் என்ன பேசுறாங்கன்னு மறஞ்சு நின்னு  ஒட்டுக்கேட்டோம்.....

"டேய் வடமலை...உன் பொண்ணு இப்ப அவசியம் பள்ளிக்கூடத்துக்கு போகனுமா.....இப்ப அவ படிக்கலன்னா குடிமுழுகி போகுதா என்ன...."னு சொல்லி அப்பத்தான் எங்க தலையில கல்லத் தூக்கி போட்டுருச்சு.....

அப்பா என்ன சொல்லப்போராரோன்னு நானும் என் அக்காவும் அமைதியா நின்னு கேட்டுட்டு இருந்தோம்.....

"மா...அந்த புள்ள இப்பதான் பதினொன்னாவது படிக்குது....பன்னென்டாவது வரைக்கும் படிக்கட்டும்....அவ படிக்க ஆசைப்படுறா...."னு அப்பா சொன்னாரு

"ஏன்டா ஊருல எல்லாரும் அவுங்க பொண்ணுங்கள எல்லாம் பத்தாவதோட படிக்க வைக்குறத நிறுத்திடுறாங்க.....உன் பொண்ணுக்கு மட்டும் என்ன புதுசா படிப்பு......."னு சொல்லுச்சு....

"மா நம்மக்கிட்ட வேலை பாக்குற சுப்பையா பொண்ணு வசுந்தரா டவுன்ல போய் காலேஜ்ல பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்துருக்கு.....அதெல்லாம் படிக்குறப்போ நம்ம தேனு குட்டி படிக்குறதுல்ல என்ன தப்புமா இருக்குது...."

"நாசமா போச்சுப்போ.....ஏன்டா இப்புடி இருக்க....அந்த அறிவுக்கெட்டவன் அவன் பொன்ன டவுனுக்கு அனுப்பி படிக்க வச்சான்.....கடைசில அந்த மேனாமினிக்கி வசுந்தரா என்ன பன்னான்னு பாத்தல்ல.....டவுன்ல படிக்க போன எடத்துல எவனோ ஒருத்தன காதலிச்சிருக்கா....அவன் என்ன ஜாதியோ என்ன கருமமோ.....

நம்ம வீட்டுல நீ இந்த தரித்திரம் புடிச்சவல இழுத்துட்டு வந்து எங்க மானத்தை வாங்கனது பத்தாதா....இப்ப உன் பொன்ன டவுன்கு அனுப்பி படிக்க வச்சு அவளும் உன்னைய மாதிரியே எவனையோ ஒருத்தன இழுத்துட்டு வந்து நின்னு மிச்சம் இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கனுமா....

இதுக்கப்புறமும் உன் பொண்ண அப்புடிதான் படிக்க வப்பேன்னு இருந்தன்னா எனக்கு விசத்தை வாங்கி குடுத்துரு நான் மிச்சம் இருக்குற கௌரவத்தோட போய் சேந்துடுரேன்....டா..."னு சொல்லிச்சு....

"அம்மா....இப்ப என்ன நடந்துருச்சுன்னு நீ செத்து போறேன்னு சொல்ற.....உனக்கென்ன இப்போ தேனுபள்ளிக்கூடத்துக்கு போகக்கூடாது அவளோதான.....சரி நாளையில இருந்து அவ பள்ளிக்கூடத்துக்கு போமாட்டா போதுமா....."னு அப்பா சொன்னாரு

என் அக்காவால அப்பா சொன்னத தாங்கிக்க முடியல....ரொம்ப அழுக ஆரம்பிச்சுட்டா....

"என்னங்க நீங்க.... உங்க அம்மாதான் பழைய காலத்து ஆளு....அவுங்கதான் புரியாம பேசுறாங்கன்னா நீங்களும் புள்ள படிப்ப நிறுத்துறேன்னு சொல்றிங்க....வேண்டாங்க படிக்கட்டும்....அவ நம்ம பொண்ணு தப்பு பன்ன மாட்டா எனக்கு நம்பிக்கை இருக்கு...."னு அம்மா சொன்னாங்க...

"வாய மூடு டி அறிவுக்கெட்டவளே.....
எனக்கு தெரியாதது உனக்கு ரொம்ப தெரிஞ்சுருச்சோ.....இவ்வளோ பேசுற உன் அப்பனுந்தான் உன்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தான்....நீ உன் அப்பன அவுமானபடுத்திட்டு இவன்கூட ஓடிவந்து கல்யாணம் பன்னல.....பேச வந்துட்டா பெருசா....வாலிப வையசுல என்னதான் புள்ளைங்கள அடக்கி வச்சாலும் தப்பு நடக்கத்தான் செய்யும்.....அந்த தப்பு என் வீட்டுல நடக்கக்கூடாதுன்னு நினைக்குறேன்....

உன் வேளைய மட்டும் பாரு தேவையில்லாம இந்த விஷ்யத்துல மூக்க நுழைக்காத...."னு அந்த கிழவி சொல்லிச்சு....

அம்மா அதை கேட்டு அழுதுட்டே போய்டாங்க....

என் அக்கா அழுதுட்டே ஆத்தங்கரை பக்கம் ஓடிப் போனா...நானும் அவ பின்னாடியே அவள கூப்டுட்டே ஓடி போனேன்....

"அக்கா நில்லுக்கா.....ஓடாதக்கா....நில்லு....."னு கத்திட்டே போனேன்....

அவ நான் கத்துனத காதுலையே வச்சுக்காம அழுதுட்டே நிக்காம ஓடிப்போனா.....
அத்தங்கரைக்கு பக்கத்துல போய் குதிக்கலான்னு போனா....

அதுக்குள்ள நான் போய் அவ கைய புடிச்சு நிறுத்திட்டேன்..

"அக்கா....வேண்டாம் கா...உன்னை கெஞ்சி கேக்குறேன் இப்புடிலாம் பன்னாதக்கா....நம்ம அப்பாக்கிட்ட இன்னொரு தடவ பேசிப்பாக்கலாம்....அவரு கண்டிப்பா நீ படிக்க ஒத்துப்பாரு...."னு நான் சொன்னேன்...

"நம்ம அப்பாவ பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டே பேசுறியே முகி....அவரு என்னைக்கு முகி சுயமா முடிவெடுத்துருக்காரு.....ஊரு என்ன சொல்லும்மோ....மத்தவங்க என்ன பேசுவாங்களோன்னு தான கவலைப்பட்டுருக்காரு.....அவரு ஒத்துக்க மாட்டாரு முகி.....என் கணவு எல்லாம் போச்சு முகி.....எனக்கு நிறையா படிச்சிட்டு நம்ம ஊருல வந்து நிறைய பேரு படிக்குறதுக்கு வழிக்காட்டியா இருக்கனும்....நம்ம ஊருலையும் படிச்சவங்க நிறைய பேர உருவாக்கனுன்றதுதான் என் கணவு ....இப்ப அந்த கிழவினால எல்லாமே போச்சு....."னு அழுதா....

"அக்கா அழாதக்கா....நீ அழுகுறத பாத்துட்டு எனக்கும் அழுகை வருதுக்கா...."னு அழுதுட்டே சொன்னேன்

நான் அழுதுட்டே அவள போய் கட்டிப்புடிச்சிக்கிட்டேன்.....
ரெண்டு பேரும் அழுதுட்டே கொஞ்ச நேரம் அதே எடத்துல நின்னுட்டு இருந்தோம்....

"அக்கா....பேசாம அந்த கிழவி தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டு கொன்னுடலாமா கா...அதுனாலதான இவ்வளோ பிரச்சனையும்."னு சொன்னேன்

அவளுக்கு நான் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்துடுச்சு....

"முகி படிக்குறப்பொன்னு இந்த மாதிரி வன்முறையா யோசிக்கக்கூடாது.....இதுதான் என் தலையெழுத்துன்னா நான் ஏத்துக்குட்டுதான் ஆகனும்......"னு சொன்னா

"அப்போ உன் கணவு....."

"அதை நிறைவேத்த தான் என் செல்லம் நீ இருக்குறல்ல....அக்காவோட கணவ நனவாக்குவியா...."னு கேட்டா

"நிச்சியமா பன்னுவேன் கா..உனக்காக நான் என்ன வேணாலும் பன்னுவேன்...ஆனா என்னையவும் உன்னைய மாதிரியே அந்த கிழவி அப்பாக்கிட்ட சொல்லி படிக்க விடாம பன்னிடுச்சுன்னா....."னு கேட்டேன்

"எனக்கு தெரியல டி...அதான் என்னோட பயமும்.....இதுக்குமேல அந்த கடவுள் தான் நம்ம ரெண்டு பேர் மேலையும் கருணை காட்டனும்.....சரி ரொம்ப நேரம் ஆச்சு....அம்மா திட்டுவாங்க ....வீட்டுக்கு போகலாம் வா....."னு சொல்லிட்டு என்னைய கூட்டிட்டு போய்டா....

அதுக்கப்புறம் அக்கா ஸ்கூல்க்கு வரல....எப்ப பாத்தாலும் அக்கா ரூம்ல உக்காந்துட்டு அழுதுட்டே இருக்கும்....எனக்கு அக்காவ அப்புடி பாக்க புடிக்கல....ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...நான் சின்னபுள்ளன்றதால என்னால யாரையும் எதுத்து கேள்வி கேட்க முடியல.....அப்புடியே ரெண்டு வாரம் போச்சு....அக்கா அப்புடியேதான் இருந்தா....

ஒருநாள் நான் ஸ்கூல்கு போய்டு வந்தவொடனே அக்காவ பாக்குறதுக்கு அவ ரூம்க்கு போனேன்....அவ படுத்துருந்தா....
அவ எப்பவும் பகல் நேரத்துல தூங்க மாட்டா....
நான் அவ பக்கத்துல மெதுவா போய் அவள கூப்டேன் அவன் எந்திரிக்கல....அவ பக்கத்துல போய் பார்த்தேன் அவ வாய்ல இருந்து நுறையா வந்துருந்தது....எனக்கு அதை பாத்துட்டு பயமாய்டுச்சு.....

நான் உடனே அம்மா அப்பாவ போய் கூட்டிட்டு வந்தேன்....அவுங்க பாத்துட்டு அவசரமா அவசரமா அவள ஹாஸ்பிட்டல்கு தூக்கிட்டு போனாங்க.....அக்கா பூச்சிமருந்து குடிச்சிட்டான்னு எல்லாரும் சொன்னாங்க....அக்காவுக்கு எதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருந்துச்சு....

எல்லாரும் ஹாஸ்பிட்டல்கு வெளில நின்னுட்டு அழுதுட்டு இருந்தோம்.....

கொஞ்ச நேர கழிச்சு டாக்டர் அக்கா மருந்து குடிச்சு ரொம்ப நேரம் கழிச்சு கொண்டு வந்ததால காப்பாத்த முடியலன்னு சொல்லிட்டாரு.....

நறுமணம் வீசும்......

______________________________________________________________________________________________

Hi frndzzz

Idhu ennoda adutha kadha

Update padichu paathutu epudi irukudhunu slunga

Marakama vote pannunga...

Continue Reading

You'll Also Like

74.1K 9.8K 51
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
148K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
79K 2.5K 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற...
424K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...