உன்னைச் சேர்ந்திடவே மீண்டும்...

By indumathib

115K 4.1K 674

காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான... More

***1***
***2***
***3***
***4****
***5***
***6***
***7***
***8***
***9***
***10***
***11****
**♥12♥**
**♥*13*♥**
**♥*14*♥**
**♥15♥**
*♥*16*♥*
♥**17**♥
♥*18*♥
°•°•♥19♥°•°•
♡°♥°20°♥°♡
♥°21♥°
◆◆◆22◆◆◆
♥♥23♥♥
24●°♥♥
♥°°♥25....
▪•♥26♥•▪
○◇♥27♥◇□
♥○●28●○♥
♥■□29□■♥
30♥°°°
《♡》31《♥》
{♥}33{♥}

♥《32》♥

2.8K 118 22
By indumathib

       ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பதெல்லாம் சினிமாவில் தான் நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மையான அன்பும் பந்தமும் இருந்தால் நம் வாழ்க்கையிலும் அந்த அதிசயம் நிகழும் என்பது தான் உண்மை.

          அப்படித்தான் இன்று சிவ்னேஷ் மட்சியாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது. அவர்களின் உண்மைக் காதல் இன்று முற்றிலுமாய் ஜெயித்துவிட்டது. ஜென்மாங்கள் தானடி நிலைபெற்றுவிட்டது. இத்துனை வருடங்களாக நான் இதற்காகத் தான் என் உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தேன். இனி மீதமிருக்கும் பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்றி விட்டால் நான் நிம்மதியாக போய் சேர்ந்துவிடுவேன்.

     அப்படி சொல்லாதீர்கள். மட்சியா இப்பொழுது எங்கள் பெண் என்றாலும் அவள் உங்களுக்கும் பெண்தான். அவளுக்கென்று நாம் செய்ய வேண்டிய கடைமைகளை நாம் ஒற்றுமையாக இருந்துதான் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

     சரியாகச் சொன்னீர்கள் அப்பா என்று மட்சியாவும், சிவ்னேஷும் வந்தனர்.

    அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாய் வழிய, என்ன நடந்திருக்கும் என்பதை பெரியவர்கள் மூவரும் உணர்ந்தனர்.

    வாம்மா... வந்து அமருங்கள் இருவரும்.

    அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன். இத்துனை வருடங்களாய் என்னை நீங்ஙள் பார்த்தும் என்னிகம் ஒரு வார்த்தைக் கூட பேசமுடியாமல் எப்படி கஷ்டப்பட்டு இருப்பீர்கள்....

     நீ சொல்வதும் சரிதான் மட்சியா. உனக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது நீ என் தந்தையிடம் போக வேண்டும் என்று அடிக்கடி அழுவாய். அப்பொழுது நானும் உன் அம்மாவும் நீ ஏதோ சிறுபிள்ளையாய் இருப்பதால் அவ்வாறு கூறுகிறாய் என்று அதை பெரிது படுத்தாமல் இருந்தோம். ஆனால் நாட்கள் ஓட நீ என் பெயர் சதி என்றும் என் வீடு இதுவல்ல என்னை என் வீட்டிற்கு விடுங்கள் என்றும் அழ ஆரம்பித்தாய். அப்போது தான் மருத்துவர் உதவியால், உனக்கு முன் ஜென்மம் பற்றிய நினைவுகள் வந்திருப்பது தெரிய வந்தது. முதலில் நானும் உன் அம்மாவும் நம்ப மறுத்தோம்,  பிறகு நீ கூறிய அடையாளங்களை வைத்து விசாரிக்கத் தொடங்கினோம். நீ கூறிய அதே அடையாளங்களோடு இந்த வீட்டைக் கண்டதும் நாங்கள் அசந்து போனோம். இப்படி கூட நடக்குமா என்று வியந்தோம். அதன் பிறகு இவரைக் கண்டு நடந்தவை எல்லாம் தெரிந்து கொண்டபோது எங்கள் உடம்பே சிலிர்த்துப் போனது. உன்னை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்ற இவரது வேண்டுதலுக்காக உன்னை இங்கு அழைத்து வந்தோம். ஆனால் நீ அன்று இவரைக் கண்டதும் அப்பா.. என்று அழைத்து மயங்கியும் போனாய். அதன் பிறகு உனக்கு பழைய நினைவுகளும் வரவில்லை. ஆனால் சதியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு எங்களால் சாதாரணமாகவும் இருக்க முடியவில்லை. டாக்டரும் பழைய நினைவுகள் தானாக வந்தால் வரட்டும். ஆனால் நீங்களாக எதையும் அவரிடம் கூறி ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தக் கூடாது. அது உன் மனநிலையை பாதிக்கும் என்று கூறிவிட்டார். பிறகு உன் வழியிலேயே நீ இருக்க வேண்டும். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யட்டும் என்று நானும் உன் அம்மாவும் முடிவு செய்தோம். இன்று வரை எங்கள் பெண்ணாய் நீ எங்களை பெறுமையாய் உணர வைத்திருக்கிறாய் மட்சியா... உன்னைப் போலவே ஈஸ்வரும் இறந்ததால் அவரும் நிச்சயம் மறுஜென்மம் எடுத்திருப்பார் என்று நம்பினோம். அவர் எப்படியாவது உன்னை தேடி வந்து நீங்கள் சேர வேண்டும் என்றும் நினைத்தோம். இன்று அது நடந்துவிட்டது.

      அனைத்தையும் கேட்டு சிலையாய் அமர்ந்து கண்ணீர் வடித்தாள். அவள் கண்களில் நன்றியுணர்ச்சி தான் அதிகமாக இருந்தது. சிவ்னேஷும் அதே நிலையில் தான் இருந்தான்.

    நீண்ட நேர அமைதிக்குப் பின் எனக்கு இன்னும் சில விசயங்கள் புரியவில்லை. அன்று ஏன்.... ஸாரி.. அந்த ஜென்மத்தில் ஏன் நீ... நீங்கள் என் அப்பாவை கொல்ல முயற்சித்தீர்கள் ஈஸ்வர்??

    இல்லையம்மா... நீ மட்டும் அன்று அவசரப்படாமல் இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருக்காது என்றார் சதியின் தந்தை.

       என் பர்த் டே அன்று ஒரு கால் வந்ததே நினைவிருக்கிறதா மட்சியா?

     எதைச் சொல்கிறீர்கள்?? கோபமாய் ஏதோ.... அப்போது கூட சாப்பிட அழைத்துச் சென்றுவிட்டார்களே....

    ம் அதுவே தான். என் தூரத்து உறவுக்காரர் ஒருவர் நம்முடைய அந்த வீட்டை போலிப் பத்திரம் மூலம் அவரது பெயரில் மாற்றிக் கொண்டார். நம் குடும்பத்தோடு காலி செய்து கொண்டு போக வேண்டும் இல்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டித்தான் அந்த கால். நான் அவரிடம் உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று கூறிவிட்டு நாம் வீட்டிற்கான அனைத்து சான்றுகளையும் வழக்கறிஞரிடம் கொடுத்து சில முன்னேற்பாடுகளை செய்தேன். அதைத் தெரிந்து கொண்ட என் உறவுக்காரர் கோபம் கொண்டு என்னை அடிப்பதற்கு ஆள் அனுப்பியுள்ளார்.
அன்று காலை தான் உன் தந்தை என்னை வந்து பார்த்தார். நீ அவரது மனதினை மாற்றிவிட்டாய் என்றும், அவரது முட்டாள் தனத்தினை அழித்துவிட்டாய் என்றும் கூறினார். உறவுகளையும் குடும்பம் என்றால் என்ன என்பதையும் புரிந்து கொண்டார் என்றும் கூறினார். நம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு என்னிடம் மன்னிப்பும் கேட்டார். இர்த சந்தோஷத்தை நான் தான் உன்னிடம் கூற வேண்டும் என்று தான் நான் அன்று சார் உடன் இங்கு வந்தேன். அதற்கு என் உறவினர் அனுப்பிய ஆட்கள் எங்களை பின் தொடர்ந்து வர நான் அதை கவனித்துவிட்டேன். அவர்களிடம் சண்டையிடப் போகத்தான் மற்றவை எல்லாம் நிகழ்ந்தது. ஆயுதம் ஏந்தியது கூட சாரை ஒருத்தன் அடித்துக் கொண்டிருந்தான், அவனை அச்சுறுத்தவே அதைக் கையிலெடுத்தேன். அதற்குள் நீ தவறாகப் புரிந்து கொண்டு ஓடி வர லாரியையும் கண்டு நான் ஒருநிமிடம் துடித்துவிட்டேன் என்று கூறும்போதே அவன் உடல் நடுங்கின.

    ஈஸ்வர்.. காம்டவுன்... ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என அவனை அமைதிப்படுத்தினார் சதியின் தந்தை.

     அடுத்ததாக ஈஸ்வர் சதியின் ஒரே கேள்வி நம் குடும்பம்...??

     இன்றும் அப்படியே கலையாமல் இருக்கிறது நம் கூடு என்றார் சதியின் தந்தை.

   
   இருவரும் அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் பார்க்க... அப்போது தான் இன்னொரு விசயமும் நினைவிற்கு வந்தது. சிவ்னேஷ் இப்போது தங்கியிருக்கும் வீடு தான் முன்பும் அவனுடைய வீடாக இருந்தது என்பது.

       எங்கு இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்?? அந்த வீட்டில் இப்பொழுது நான் மட்டுமல்லவா இருக்கின்றேன்??

    ம்.. ஆமாம் ஈஸ்வர். அவங்க எல்லாரும் இப்போ நம்ம வீட்ல தான் இருக்கின்றான்கள். எனக்கு இன்னொரு வீடு இப்பது தான் உங்களுக்கு தெரியுமே... ஏம்மா சதி உனக்குத் தெரியும்ல.... அங்கதான் எல்லோரும் இருக்கிறார்கள். என்னால் தான் நீங்கள் பிரிந்தீர்கள்... அதற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள நினைத்தேன். அப்பொழுது தான் உங்கள் நினைவாக உங்கள் குடும்பம் இருக்கிறது என்று உணர்ந்தேன். அன்றிலிருந்து நான் அவர்களை என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். எப்பொழுதாவது சதியின் நினைவு வந்தால் இங்கு வருவேன். எங்காவது தூரமாக நின்று சதியைப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுவேன். மற்றவர்களிடமும் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினால் எதையும் யோசிக்காமல் உங்கள் முன் வந்து நின்றுவிட்டால் உங்கள் மன நிலை என்னவாகுமோ என்று பயந்து மறைத்து வைத்திருந்தேன்.

     அப்படியானால் அன்று அலுவலகம் வந்தது???

    நான்தானம்மா... ஆனால் ஈஸ்வரும் அந்த அலுவலகத்திற்கு வருவதைப் பார்த்து நீங்கள் முன்னாடியே பார்த்துக் கொண்டீர்கள் எனத் தெரிந்த சந்தோசத்திலேயே யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டேன்.

    அதே வீடு எனக்கு எப்படிக் கிடைத்தது என்றுதான் புரியவில்லை என்று சிவ் குழம்பினான்.

     இன்னுமும் புரியலையா ஈஸ்வர்? உன்னுடைய அந்த சொந்தக்காரர் அந்த வீட்டை அவர் பெயருக்கு மாற்றிக் கொண்டார். ஒரு அழகான கூட்டையே கலைத்தப் பாவத்திற்கு தண்டனை தரும் விதமாக உன்னை மறுபடி அதே குடும்பத்தில் பிறக்க வைத்து உனக்குச் சேர வேண்டியதை உனக்கே கொடுக்க வைத்துவிட்டார் அந்த கடவுள்.

      சிறுபிள்ளைகளைப் போல் சிவ்வும், மட்சியாவும் மாற்றி மாற்றி அது என்னவாகிற்று, இது என்னவாகிற்று என கேள்விகள் கேட்க அவர்களின் தந்தையும் தாயும் சிரித்துக் கொண்டே அனைத்தையும் விளக்கினர்.

Continue Reading

You'll Also Like

163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????
60.5K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...
2.1K 11 15
என்னதான் பெரியோர்களால் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் ,இருவரும் ஒரு முறையும் சந்தித்ததில்லை என்றாலும் கணவனை விட்டு கொடுக்காத மனைவியுமாய் , மனைவிய...
174K 389 3
தன் வாழ்வில் நினைத்ததை அடையும் ‌நம் நாயகன் தன் மனம்‌ கவர்ந்த நாயகியை வெல்ல துடிக்கின்றான். சிறகு விரிந்து திரியும் பறவை போல் சுற்றித் திரியும் அவள் த...