♥**17**♥

2.5K 111 15
                                    

     காலை சீக்கிரம் கண் விழித்தாள். வெகு சீக்கிரத்தில் அலுவலகத்திற்கு தயாராகினாள். எப்பொழுது சிவ்வை பார்ப்போம் என்று ஆவலாக எதிர் நோக்கினாள். கால் செய்வோமா.. என யோசித்துவிட்டு, வேண்டாம்.. வேண்டாம்.. அவன் நேரில் வந்தபிறகே கேட்கலாம்.. அவ்வளவு ஒன்றும் அவசரம் இல்லையே.... என தனக்குள் பேசிக் கொண்டு, இன்று ஏனோ நேரம் போகவே மாட்டேன் என்கிறதே என்று சலித்துக் கொண்டாள்.

அம்மா.. சாப்பாடு ரெடியா??

   எல்லாம் ரெடிம்மா... நீ வா, வந்து சாப்பிடு...

    இல்லைம்மா.. அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை ஒன்று இருக்கின்றது... அதை முடித்தாள் தான் எனக்கு பசியே எடுக்கும். அதனால் நான் அங்கு சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்... பாக்ஸில் போட்டுவிடுங்கள்.

     மறக்காமல் சாப்பிட்டுவிடு... மறந்துவிட்டேன் என்று மாலையில் வந்தாய்... அவ்வளவு தான் என்று சற்றே அன்புடன் அதட்டினார் உவள் தாயார்.

    சரிம்மா... கண்டிப்பாக சாப்பிட்டு விடுகிறேன். நான் வருகிறேன்....

    வேகவேகமாய் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். சிவ்னேஷிற்கு கால் செய்தாள்.

     சொல்லுங்க மை டியர் மட்சியா..

    சிவ் கிளம்பிட்டியா டா? எங்கு வந்து கொண்டிருக்கின்றாய்...

   ஏன்டி என்னவாகிற்று...?

   அது... ஒ..ஒன்றுமில்லை... சும்மா தான்... நான் கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டேன், அதான் நீயும் வந்தால் பேசலாம் என்று... அதான் வேறொன்றும் இல்லை..

      அப்படியா... என்னப் பேசப் போகிறாய் டார்லிங்...

    நீ முதலில் எப்போது வருவாய் என்று சொல்...

    நான் இன்று விடுப்பு எடுத்திருக்கின்றேனே.... உன்னிடம் சொல்வதற்கு மறந்துவிட்டேன். இரவு தான் நினைவு வந்தது. அப்போது கால் செய்தால் நீ எடுக்கவில்லை.

      என்ன விடுப்பா?? என்ன திடீரென்று?? நீ இதுவரை விடுமுறையே எடுத்தது இல்லையே....

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin