உன்னைச் சேர்ந்திடவே மீண்டும்...

By indumathib

115K 4.1K 674

காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான... More

***1***
***2***
***3***
***4****
***5***
***6***
***7***
***8***
***9***
***10***
***11****
**♥12♥**
**♥*13*♥**
**♥*14*♥**
**♥15♥**
*♥*16*♥*
♥**17**♥
♥*18*♥
°•°•♥19♥°•°•
♡°♥°20°♥°♡
♥°21♥°
◆◆◆22◆◆◆
♥♥23♥♥
24●°♥♥
♥°°♥25....
▪•♥26♥•▪
○◇♥27♥◇□
♥○●28●○♥
♥■□29□■♥
《♡》31《♥》
♥《32》♥
{♥}33{♥}

30♥°°°

2.3K 109 16
By indumathib

சிலையாய் நின்றிருந்தான் ஈஸ்வர்.

இதுதான் என் சத்தியங்கள். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நான் இந்த சத்தியங்களைக் காப்பாற்றுவேன்.
அவன் உயரத்திற்கு எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டு ஹேப்பி பர்த் டே ஈஸ்வர் என்றாள் வெட்கத்துடன்.

அவள் இதழ் பதித்ததில் சுய நினைவிற்கு வந்தவன் நன்றி சதி. நீ...நீ.. கிடைப்பதற்கு நா..நான் என்ய தவம் செய்தேனோ....

ப்ச்சு.... இப்போ நீங்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா??

இல்லைடா... உண்மைலயே... சரி... இப்போ நான் உனக்கு ஒரு வாக்களிக்கின்றேன். என் மனதளவில் என்றும் ஒரு கணம் கூட உன்னை விட்டுப் பிரியமாட்டேன். நீயே விலகிச் செல் என்றாலும் சரி உன்னை விட்டு நான் செல்வதாக இல்லை இது சத்தியம்.

தங்க்யூ ஈஸ்வர். லவ் யூ ஸோ மச்.

லவ் யூ டூ டா...

...வாங்க போகலாம். எல்லோரும் வெயிட் பண்றாங்க..

ரூமை விட்டு வெளியில் சென்றவன், என்ன இந்த வருடம் அலங்காரத்தில் சிறிது மாற்றம் தெரிகிறது...? உன் வேலையா? என்றான் சதியைப் பார்த்து.

ம்...இல்லை. இந்த வருஷம் ஏதாவது ஸ்பெஷலா பண்ணனும்ல?? நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது, அதனால் இருவரும் சேர்ந்து இந்த கேக்கினை கட் செய்யுங்கள் என்றார் அந்த வயதானப் பெண்மனி.

இருவரும் இணைந்து கேக் கட் செய்தனர். பெரியவர்களின் ஆசியைப் பெற்றான்.

ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டனர்.

என்ன அண்ணி அண்ணாவிற்கு பரிசு எதுவும் இல்லையா??

பரிசா?? கொடுக்கனுமா???

என்ன அண்ணி இப்படி கேட்டுட்டீங்க??? என்று சிரித்தாள்.

ஆல்ரெடி கொடுத்தாச்சே.. உங்க அண்ணாவிடம் நீயே கேள் என்ன கொடுத்தேன் என்று??

அண்ணா பார்த்தீர்களா என்னிடமே மறைத்துவிட்டீர்கள்..?

ஏய் இல்லம்மா அவ சும்மா சொல்கிறாள். உனக்கே தெரியாதா அவள் உள்ளே வரும் போது எதும் எடுத்து வந்தாளா? இல்லையா என்று?? எதுவுமே கொடுக்காமல் ஏமாற்றுகிறாள்...என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ஆமாம்.. நான் கூட உங்கள் கையில் எந்தப் பரிசினையும் காணவில்லையே??

அ....து..அது...வந்து... அது ரொம்ப சின்ன கிப்ட் டா அதான் நீ அதை கவனிக்கவில்லைப் போல...

அடிப்பாவி..... அவள் கிப்டை காண்பிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாளே... ஏன்டி இப்படி கோர்த்துவிடுகின்றாய்?? என்று சதியின் காதோரம் கிசுகிசுத்தான்.

பதிலேதும் கூறாமல் நகைத்துவிட்டு.... உங்கள் அண்ணாவிடம் காண்பித்தே ஆகவேண்டும் என்று கேளுடா... என்றாள்.

அண்ணா ப்ளீஸ் காமிங்க...

இல்லடா குட்டி... அவள் பொய் சொல்கிறாள்.

அண்ணா.... இப்போ நீ காண்பிக்கவில்லை என்றால் உன்னுடன் நான் பேச மாட்டேன்.

சதியைப் பார்த்து செல்லமாய் முறைத்தவாறே....அவள் ஏழு என்று ஆரம்பித்தான். அதற்குள்,

ஏழா? ஏழு இல்லைங்க ஒரே ஒரு மோதிரம் தானே... அதை காண்பிக்க இவ்வளவு நேரமா?? என்றாள் சதி..

எ...என்ன... மோதிரம் என்று அவன் புரியாமல் விழிக்க...

ஐ.. அண்ணா மோதிரம் சூப்பர் என்று அவன் கைகளை உயர்த்திப் பார்த்தாள்.

இதை எப்பொழுது போட்டாய் என்றான் ரகசியமாய்....

நீங்கள் தூங்கும் பொழுதே... என்று சிரித்தாள்.

அண்ணா இதை காட்டுவதற்கு இவ்வளவு நேரமா??

இல்லைமா... உங்க அண்ணி போட்டுவிட்டதே எனக்குத் தெரியவில்லை.

போங்க அண்ணா... அது எப்படி தெரியாமல் இருக்கும்...

அவர் தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுதே போட்டுவிட்டேன் டா. அதான் உங்க அண்ணாவிற்கு தெரியவில்லை.

நீங்க சொன்ன ஓகே அண்ணி.. என்று சிரித்தாள் அந்தப் பெண்.

குட்டி... நீயும் உங்க அண்ணி பக்கம் போய்டியா... அதற்குள் இந்த அண்ணணின் பேச்சினை நம்பமாட்டாயா?? இங்க வா நீ...

ஐய்யோ அண்ணி... காப்பாற்றுங்கள்... என்று சதியின் பின்னால் மறைந்தாள்.

நான் இருக்கும் வரை எதுவும் ஆகாது பயப்படாதே டா...

அப்படியா? அதையும் பார்த்துவிடலாம் என்று அவன் துரத்தினான்.

இருவரும் ஓட, விடாமல் துரத்தினான்.

அட என்ன மூன்று பேருக்கும் விளையாட்டு..., வாங்க சாப்பிடலாம்.

இருவரையும் பிடித்து இழுத்தான். ஒரே கையால் இருவர் கழுத்திலும் சுற்றிப் பிடித்தான்.
வாய்..வாய்... சின்ன பொண்ணா இருந்து வளர்ந்திட்டில்ல....! அப்புறம் நீ.... என்னடி ஓவரா பண்ற?? என்றான் சதியைப் பார்த்து...

விடுங்க முதல்ல வலிக்குது..

வலிக்கட்டும் என்று தலையில் செல்லமாய் கொட்டினான்.

போடா என்று கையை உதறிவிட்டு ஓடினாள்.

அவளை பிடிக்க முயல, அதற்குள் போன் வந்தது. போனை எடுத்துப் பேசியவன் கோபமாய் இருந்தான்.

என்னாச்சுங்க ஏன் தீடீரென்று கோபமாய் இருக்கின்றீர்கள்??

ஒன்றுமில்லை சதி. சின்ன பிராப்ளம்.... சால்வ் பண்ணிடலாம்.

சின்ன பிரச்சன்னா ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க? சொல்லுங்க என்னவாகிற்று??

அது ஒன்றுமில்லை டா. இந்த வீட்டினை என்று ஆரம்பித்தவனை இடைமறித்து என்ன பேச்சு? முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்... நாள் முழுவதும் இங்கு தானே இருக்கப் போகிறோம் என்று கையோடு அழைத்துச் சென்றனர்.

அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியாகினான்.

எதுவாக இருந்தாலும் கவலைக் கொள்ளாதீர்கள். நான் இருக்கின்றேன், என்று அவன் கைகளை இறுகப் பற்றினாள்.

அவனும் சிரித்துவிட்டு உண்ண ஆரம்பித்தான். அனைவரும் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் ஆனந்தமாய் இருந்தனர். அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து ஈஸ்வரும், சதியும் மகிழ்ந்தனர்.

இந்த வீடு ரொம்ப ஸ்பெஷல் இல்லைங்க...? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் நம் பிஸ்னஸ் டெவலப் பண்ணிய பிறகு அதிகம் அந்த வீட்டில் தான் இருக்கின்றோம். இனி வாராவாரம் ஒரு நாள் இங்கு வந்துவிட வேண்டும்.

ம் நீ சொல்வதும் உண்மை தான். இந்த வீடு ஸ்பெஷல். அதுமட்டுமில்லை நான் உன்னை முதன் முதலில் சந்தித்ததும் இங்கு தானே.... நீ ஸ்பெஷல் என்றால் இதுவும் ஸ்பெஷல் தானே.. நீ உடன் இருந்தால் போதும்டா.... எதையும் சாதித்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்.

நிச்சயம் உடன் இருப்பேன்.

எங்கு..? உன் தந்தை தான் விட மாட்டேன் என்கிறாரே.... எப்பொழுது தான் சம்மதம் வாங்குவோமோ....

கவலைப் படாதீர்கள் நிச்சயம் நம் காதல் கைகூடும்.

உனக்காகத் தான் நானும் அமைதியாக இருக்கின்றேன். இல்லையென்றால் அவர் அன்று கூறிய வார்த்தைகளை வேறு யாராவது கூறியிருந்தாள் நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. நீ வேண்டுமானால் பார் பொறுமையிழந்து ஒருநாள் நான் உன் தந்தையை.... என்று இழுக்க,

ஐய்யோ ப்ளீஸ் வார்த்தைக்கு கூட இப்படியெல்லாம் பேசாதீர்கள். எனக்கு கஷ்டமாக இருக்கின்றது.

ஏய் லூசு என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா... உனக்காக இன்னும் எத்தனை ஜென்மங்களானாலும் காத்திருப்பேன் மா.

தாங்யூ ஈஸ்வர்.

ஏய்.... தாங்க்யூவா.... என்று அவள் கைகளை இழுத்துப் பின்னிருந்து அணைத்தான்.

Continue Reading

You'll Also Like

174K 389 3
தன் வாழ்வில் நினைத்ததை அடையும் ‌நம் நாயகன் தன் மனம்‌ கவர்ந்த நாயகியை வெல்ல துடிக்கின்றான். சிறகு விரிந்து திரியும் பறவை போல் சுற்றித் திரியும் அவள் த...
143K 4.3K 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai...
35.7K 810 23
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை...
14.9K 616 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள...