உன்னைச் சேர்ந்திடவே மீண்டும்...

By indumathib

115K 4.1K 674

காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான... More

***1***
***2***
***3***
***4****
***5***
***6***
***7***
***8***
***9***
***10***
***11****
**♥12♥**
**♥*13*♥**
**♥*14*♥**
**♥15♥**
*♥*16*♥*
♥**17**♥
♥*18*♥
°•°•♥19♥°•°•
♡°♥°20°♥°♡
♥°21♥°
◆◆◆22◆◆◆
♥♥23♥♥
♥°°♥25....
▪•♥26♥•▪
○◇♥27♥◇□
♥○●28●○♥
♥■□29□■♥
30♥°°°
《♡》31《♥》
♥《32》♥
{♥}33{♥}

24●°♥♥

2.4K 113 7
By indumathib

       அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     மட்சியாவின் தந்தை அந்த முதியவரைப் பார்த்து விழித்தார்.

   அவரோ கண்ணால் நடப்பது எல்லாம் சரி என்பதைப் போல சைகை செய்தார்.

       மட்சியா சிவ்னேஷிடம் கூற ஆரம்பித்தாள்.

      அந்த முதியவரைப் பார்த்து இவர் என் அப்பா... என்றாள்.

    சிவ்னேஷ் அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.
என்ன மட்சியா கூறுகிறாய்?? இவர் எப்படி... எனில் இவர்கள் இருவரும்?? என்றான் அவளுடைய தாய், தந்தையைக் காட்டி....

     இவர்களும் தான்....

   அங்கிள்... அங்கிள்... ம..மட்சியாக்கு ஏதோ...

   இருங்க சிவ்னேஷ்... அவள் பேசுவதை முழுமையாகக் கேளுங்கள்.

      நான் உங்களை ஈஸ்வர் னு கூப்பிட்டேன். ஆனாலும் நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணீங்க.. ஏன்??

   அது.... அப்படியா கூப்பிட்ட?? நான் கவனிக்கலை இந்த டென்சன்ல...

    இல்லை சிவ்... அதுதான் உன் நேம்...

   மட்சியா என்ன உளறுகிறாய்....

    நான் சதி....

   ச...சதியா..?

    என்னோடு வா... என்று அவன் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

     அந்த வீடு இருந்தத் தெருவின்  முனையில் சென்று அங்க பாரு சிவ்.

    என்னதுடி..? அங்க எதுவும் இல்லை.

    நல்லா பாரு சிவ் என ரோட்டின் அருகில் அழைத்துச் சென்றாள்.
    இந்த இடம் உனக்கு நியாபகம் வரவில்லையா??

   இ...இது.. இங்க....இங்க....

     லாரி ஒன்று வேகமாய் வந்தது.... அதன் ஹாரன் சப்தம் இதயத்தைக் கிளித்தது...

மட்சியா சிறிது தள்ளிப்போயி நின்றாள். இப்போது....? எனக் கேட்டாள் சிவ்வைப் பார்த்து.

      லாரி அவளை நோக்கி வருவதைக் கண்டு.... சதி...என்று கத்தியவாறே அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான். என்னடி செய்கிறாய் நீ.... மறுபடி ஒருமுறை உன்னை இழக்க நான் தயாராய் இல்லை. இல்லை.... உன்னை நான் இழக்க மாட்டேன்.... "நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆகவிட மாட்டேன்".....

பயத்தோடு அவளைப் பார்க்க... லாரியோ சற்று வளைந்து போனது. அப்போது தான் புரிந்தது லாரி போகும் பாதை அந்த இடத்தில் வளைந்துவிடும் என்பது...

     "நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆகவிட மாட்டேன்" இந்த வார்த்தையோடு தான் நம் வாழ்க்கையும் அன்று.... என்று தழுதழுத்தாள்.

     அந்த நிமிடங்களை...... நினைத்து பதட்டமானான்.

      இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கினர்.

   அப்பா... சீக்கிரம் வாங்கப்பா... லேட் ஆகிறது.

   இரும்மா..... வரேன்... நான் வேற எங்கயாவது போலம்னு சொன்னா.. நீ அந்த அநாதை ஆசிரமத்திற்கு தான் போக வேண்டும் என்கிறாயே?? ஏம்மா.... உன் பிறந்தநாள் அதுவுமா அங்கதான் போகனும்னு அடம்பிடிக்கிறாயே???

    அப்பா.... உங்களுக்கு என்னைப் பிடிக்குமா பிடிக்காதா??

நான் என்ன கேட்கிறேன்... நீ என்ன கேட்கிறாய்??

     சொல்லுங்கப்பா....

   நீதான்டா என் உலகமே... உன்னை பிடிக்காதுனு நான் எப்படிடா சொல்வேன்.

    அப்போ எனக்கு பிடிச்சதுலாம் உங்களுக்கும் பிடிக்கும். அங்க வாங்க கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.

    என்னமோம்மா... உன் சந்தோசத்திற்காக வரேன்.

    ம்.. சரிப்பா... நீங்க வந்தா போதும்.

    தனது 24 வது பிறந்தநாளை முதல் முறையாக அநாதை ஆசிரமத்தில் கொண்டாட முடிவெடுத்திருந்தாள். பேப்பரில் வந்த செய்தித் துணுக்கு ஒன்றைப் பார்த்துவிட்டு தான் இந்த முடிவுக்கு வந்தாள். நீங்கள் ஒருமுறை உங்கள் விஷேசத்தில் அளவிற்கு மிஞ்சி செய்து வீணாக்கும் உணவு இங்கு பலருக்கு உயிர் வாழ உதவும் என்ற வரிகளைப் படித்து உணர்ந்தாள், ஒருவேளை உணவிற்காக இந்த உலகில் எத்தனையோ பேர் தவிக்கின்றனர் என்று, அந்த அளவிற்கு அவள் ஏழ்மை நிலை என்ன என்பதைக் கூட தெரியாமல் வளர்ந்திருந்தாள். அவள் தந்தை அந்த அளவிற்கு வளர்த்திருந்தார். தாய் இல்லாத பெண் என்று வெகு செல்லமாய்... அக்கறையாய் வளர்த்திருந்தார். அவள் கேட்டு இல்லை என்று வார்த்தையே வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் அப்படித்தான்.

    அங்குதான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன் என்று அடம்பிடித்துக் கிளம்பினாள்.

    அங்கு சென்று அனைவருக்கும் உணவு வழங்கி, அங்கு அவளால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.

     எல்லா வருடத்தையும் விட இந்த வருடம் தான் அவள் பிறந்தநாளை வெகு நிம்மதியாய் ஆனந்தமாய் உணர்ந்தாள். அந்தக் குழந்தைகளின் வாழ்த்துகளும், அவர்கள் முகத்தில் இருந்த சந்தோசமும் அவள் மனதை நெருடியது.

    ரொம்ப நன்றிங்க....

குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.

     ஐ ஆம் ஈஸ்வர். நானும் இவங்கள்ல ஒருத்தன் தான். இங்க எங்க வீட்டுக்கு ஹெல்ப் பன்றதுக்கு வயதானவர்களும், யாருமற்றவர்களும் மட்டுமே வருவார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு இளம் பெண் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. நன்றி....

     இதற்கு ஏன் நன்றி கூறவேண்டும்...? நான் செய்தது எதுவுமே இல்லை.. ஏதோ என்னால் முடிந்தது மட்டுமே.... நீங்கள் நன்றி கூற வேண்டுமென்றால்... செய்தித்தாளில் என்னை கவனிக்க வைத்த அந்த வரிகளை விளம்பரமாய் கொடுத்தார்களே அவர்களுக்கு நன்றியைக் கூறுங்கள்.

     எனக்கு எப்படிங்க நானே நன்றி சொல்லிக்குவேன்!!!!

    என்ன நீ...ங்களா??? நீங்களா அந்த செய்தியைக் கொடுத்தது?? எனிவே... நான் தான் நன்றி சொல்லனும் உங்களுக்கு. நீங்கள் மட்டும் அந்த வரிகளை போடாமல் இருந்திருந்தாள் வழக்கம் போல் ஒரே தவறையே மீண்டும் செய்திருப்பேன். பார்ட்டி, டின்னர்னு ஏகப்பட்டது வீண் செலவாகியிருக்கும். ஆனால் இன்னிக்கு நிம்மதியா இருக்கு.

      ம்.... ஸாரிங்க... உங்க பிறந்த நாளுக்கு கொடுப்பதற்கு எதுவுமில்லை. முன்கூட்டியே தெரிந்திருந்தாள் ஒரு சின்ன நினைவுப் பரிசைக் கொடுத்திருப்போம்.

    நினைவுப் பரிசா??? அது இறுதியாய் வருபவர்களுக்குத் தானே?? நான்தான் இனி இங்கு அடிக்கடி வருவேனே.... அதுமட்டுமில்லாமல் நான் தான் முன்பே கூறினேனே நிம்மதியாய் உணர்கிறேன் என்று,  நிம்மதியை பரிசளித்துவிட்டு  பரிசளிக்கவில்லை என்று கூறினால்....?

    ஓ.... சந்தோசம்... உங்க நேம் ...?

     சதி.

   சதியா??

   ம் ஆமாம்...

   என்ன பெயருங்க இது?? இதற்கு அர்த்தம் என்ன??

    அர்த்தம்லாம் நமக்குத் தெரியாதுங்க. ஆனால் என் அம்மா வச்ச பேரு.... கடவுளோட பேருனு என் அப்பா தான் அடிக்கடி சொல்வாரு.

     ம்... சரிங்க.... நைஸ் நேம்..

    தாங்க்யூ...

     அண்ணா... இங்க வாங்களேன்... என்று ஒரு பெண் கூப்பிட இதோ வரேன்மா என்று ஓடினான்.

     எதிரே வந்த வயதான பெண்மனி ஒருவர்... போப்பா போ.... அவள் நீ கொடுத்தா மட்டும் தான் சாப்பிடுவாளாம்... ரொம்ப அடம் பிடிக்குறா...என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
எப்பவும் இப்படிதாம்மா.... அவன் வந்தால் சான் சாப்பிடுவேன், அவன் கொடுத்தால் தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிப்பா.... இதே வேலை இவளுக்கு....

    அண்ணன் தங்கச்சி இரண்டு பேர் மட்டும் இங்க இருக்காங்கலாம்மா??

    அட... அவங்க இரண்டு பேரும் சொந்தம்லாம் இல்லம்மா...அந்த பொண்ணு இப்போ இரண்டு மாசத்துக்கு முன்னாடிதாம்மா வந்தா.... இந்த வட நாட்டுக் காரனுங்க கொள்ளையடிச்சுட்டு போனதுல இவங்க குடும்பமும் ஒன்னும்மா. இந்த புள்ளை பள்ளி கூடத்துக்கு போன நேரத்தில வீடு புகுந்து கொள்ளையடிச்சுட்டு அவ அம்மா அப்பாவையும் கொன்னு போட்டுட்டானுங்க பாவிங்க. அப்போ ஈஸ்வர் தம்பி பிஸ்னஸ் விசயமா அங்க போனப்போ இந்த புள்ளையப் பார்த்து கூட்டிட்டு வந்திடுச்சு. வந்த புதுசுல அழுதுட்டே தான் இருந்தா... தம்பிதான் மெல்ல தேத்தி வச்சிருக்காரு...

    ஓ... அப்போ ஈஸ்வர்??? அவரு எப்படி இங்க??

    என்னம்மா இப்படி கேட்டுட்ட.... இந்த வீடே அவரோடது தான்....

   சதி மிகவும் ஆச்சரியமானாள்.
என்ன...?

    ஆமாம்... அந்த தம்பி சின்ன வயசுலயே அவங்க அம்மா, அப்பாவ இழந்திருச்சிம்மா... இந்த வீடு மட்டும் அதுக்குனு சொந்தம்மா இருந்தது. இதுவே வேற பையனா இருந்தா இந்த வீட்டை இன்னேரம் வித்துட்டு போயிருப்பாங்க. ஆனால் இந்த தம்பி இதை ஆசிரமமா மாத்தி இத்தனைப் பேருக்கு அடைக்கலம் கொடுத்துட்டு இருக்கு. இவ்ளோ நாள்ல கஷ்டத்தை நாங்க உணர்ந்ததே இல்லை... ஆனால் இப்ப கொஞ்ச நாளா தான் ஈஸ்வருக்கு பிஸ்னஸ்ல லாஸ் வந்து கஷ்டப்படுது. ஆனா தம்பி கெட்டிக்காரரு... சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடும். இப்போ நீங்க கொடுத்த உணவு கூட எங்களைவிட எதுவுமே கிடைக்காத மற்ற ஆசிரமங்களுக்குத் தான் செல்கிறது... அதுல எங்க எல்லோருக்கும் ஒரு சந்தோஷம். எதுவும் இல்லைனாலும் இப்படி வாங்கிக் கொடுக்குறதுனால எங்களுக்கும் ஒரு நிம்மதி....எல்லாம் தம்பினால தான்.

     அவனைப் பற்றிக் கேட்கும் போது அவளை அறியாமல் அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவனைக் காண கண்கள் தேடின....

Continue Reading

You'll Also Like

143K 4.3K 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai...
178K 4.5K 25
Completed.. Thanks for ur support.. friends..😊😊
60.6K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...
149K 5.4K 36
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthala...