அடியே.. அழகே..

By jamunaguru

450K 15.1K 1.8K

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்ல... More

💕
1💕
2💕
3💕
4💕
5💕
💝
6💕
7💕
8💕
9💕
10💕
11💕
12💕
💞
13💕
14💕
15💕
16💕
17💕
18💕
19💕
20💕
21💕
22💕
23💕
24💕
25💕
26💕
27💕
28💕
29💕
30💕
31💕
32💕
33💕
34💕
35💕
36💕
37💕
38💕
39💕
40💕
41💕
42💕
43💕
45💕
46💕
47💕

44💕

7.8K 289 74
By jamunaguru

Sorry Sorry Sorry everyone..😥😥

அர்ஜூன் சக்தியை பார்க்கிறான்.. சக்தி.. "என்ன அர்ஜூன்.. சொல்லு.."னு கேட்கிறா.

"ப்ரீத்தியோட அம்மாவுக்கு ப்ராப்ளம் கொஞ்சம் சீரியஸ் அம்மு.. சர்ஜரி பண்ணாலும் அவங்க உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்றாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"அச்சோ.. வேற டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணலாமா.."னு சக்தி கேட்கிறா.

"ப்ரீத்தியோட பேமிலி டாக்டர் தான் அவங்க.. அவங்க நிறைய பேர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டதா சொன்னாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"அர்ஜூன்.. ப்ரீத்தியோட அம்மாவுக்கு எதுவும் ஆகாது.. சர்ஜரிக்கு அப்புறம் நார்மல் ஆகிடுவாங்க.. feel பண்ணாத.."னு சக்தி சொல்றா.

"ம்.. நம்பிக்கை வச்சு சர்ஜரி பண்ணலாம்னு டாக்டர் சொல்றாங்க.. ஆனா.."

"ஆனா என்ன.."

"சர்ஜரி சக்ஸஸ் ஆனாலும் அவங்க ரொம்ப நாள் வாழ்றது கஷ்டமாம்.. ப்ரீத்தியை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

"அவளுக்கு இப்ப அம்மாவைத் தவிர வேற யாரும் இல்லை.. நல்ல நிலைமைல இருக்கும் போது.. அவளோட அப்பா யாரையும் மதிச்சதில்லை.. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு கஷ்டப்படுறாங்க.. ப்ரீத்திக்கு இனி யார் இருக்கா.. என்னதான் எனக்கு அவ மேல கோபம் இருந்தாலும் அவ இப்ப இருக்கிற நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி எதுவும் பேசாம அர்ஜூனை பார்க்கிறா. அர்ஜூன் எழுந்து பால்கனில போய் நிக்கிறான்.

சக்தியும் அர்ஜூன் பக்கத்தில அர்ஜூன் கையை பிடிச்சிட்டு அவன் தோள்ல சாஞ்சு நிக்கிறா.

"அம்மு.. இன்னைக்கு பௌர்ணமியா.."னு அர்ஜூன் சக்தி கிட்ட கேட்கிறான்.

சக்தி.. "இன்னைக்கு இல்லை.. நேத்து தான் பௌர்ணமி.."னு சொல்றா.

"ம்.."னு அர்ஜூன் சொல்றான்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இரண்டு பேரும் அமைதியா இருக்காங்க..

"அம்மு.. நான் உன் மடியில படுத்துக்கவா.."னு அர்ஜூன் கேட்கிறான்.

சக்தி சிரிச்சிட்டே நிமிர்ந்து அர்ஜூன் முகத்தை பார்க்கிறா. சரினு தலையாட்டுறா சக்தி. அர்ஜூன் அவ நெத்தியில முத்தம் கொடுக்கிறான்.

சக்தி ஊஞ்சல்ல உட்கார்ந்து இருக்க.. அர்ஜூன் அவ மடியில தலைவைச்சு படுத்திருக்கான்.

"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.

"வாழ்க்கை மனுஷங்களை எப்டிலாம் மாத்திடுது இல்ல.."னு அர்ஜூன் கண்ணை திறக்காமலே சொல்றான்.

"ஏன் அர்ஜூன் அப்டி சொல்ற.."னு சக்தி கேட்கிறா.

"ஏனோ எனக்கு ப்ரீத்தியை பார்த்த பிறகு அப்டி தோணுச்சு.. அவ காலேஜ் படிக்கும் போது.. எப்டி இருந்தா.. இப்ப அப்டியே வேற மாதிரி இருக்கா.."னு அர்ஜூன் சொல்றான்.

"என்ன அர்ஜூன் சொல்ற.."னு சக்தி கேட்கிறா.

"அவ கிட்ட ஒரு திமிர் இருக்கும் எப்பவுமே.. எனக்கு ஏனோ அவளை பிடிக்கலை.. உதய்யை தவிர எங்க யாருக்குமே அவளை பிடிக்கலை.."னு அர்ஜூன் சொல்றான்.

"உதய்க்கு ஏன் அவளை பிடிச்சிருந்துச்சு.. உதய் உன்கிட்ட இதை பத்தி பேசினது இல்லையா அர்ஜூன்.."னு சக்தி கேட்கிறா.

"ஒரு தடவை பேசினான்.. அம்மு.. இதே இடத்தில வச்சு.."னு சொல்லிட்டு அர்ஜூன் சக்தியை பார்த்து சொல்ல ஆரம்பிக்கிறான்.

"உதய்யோட அம்மாவும் அப்பாவும் அவன் கூட டைம் spend பண்ணது ரொம்ப கம்மி.. அவன் எங்க எல்லோரோடயும் சந்தோஷமா தான் இருந்தான்.. ஆனா அதெல்லாம் மீறி.. ஏதோ தனியா இருக்கிற மாதிரி.. தனக்குனு யாரும் இல்லைன்ற feel அவனுக்கு இருந்துட்டே இருந்துருக்கு..

ப்ரீத்தி அவன் லைப்ல வந்த பிறகு.. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்..

"எனக்கே எனக்குனு இப்ப தான் ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு.. அவ கூடவே இருக்கணும்.. அவளை எப்பவும் சந்தோஷமா பாத்துக்கணும்.."னு நிறைய கனவு வச்சிருந்தான்.

ப்ரீத்தி அவளோட பிறந்த நாளுக்கு எங்க எல்லோரையும் இன்வைட் பண்ணிருந்தா..

அன்னைக்கு தான் உதய் அவகிட்ட ஐ லவ் யூ சொன்னான். அவ பதில் சொல்லும் முன்னாடி அவளோட அப்பா கூப்பிட்டாங்க அவளை..

"நீ ப்ரீத்தியை லவ் பண்றீயா.."னு ப்ரீத்தியோட அம்மா உதய்கிட்ட கேட்டாங்க..

அவனும் ஆமானு சொன்னான்.

"அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்கு போல.."னு அவங்க உதய்கிட்ட சொன்னாங்க.

அவன் அவ்ளோ சந்தோஷமா இருந்தது அன்னைக்கு தான்.. ப்ரீத்தி உதய்கிட்ட பேசும் முன்னாடி.. ப்ரீத்தியோட அப்பா.. அங்க வந்திருந்த எல்லார் முன்னாடியும் ஒருத்தனை நிறுத்தி அவன் தான் ப்ரீத்தியை கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொன்னார்.

எங்க யாருக்குமே என்ன நடக்குதுனு புரியலை..

அன்னைக்கு நைட் எல்லாம் உதய்.. இது ப்ரீத்திக்கு தெரியாம அவங்க அப்பா முடிவு பண்ணதா இருக்கும்.. அவ நாளைக்கு வந்து கண்டிப்பா என் லவ்வ அக்சப்ட் பண்ணிப்பா..னு சொல்லிட்டு இருந்தான்.

ஆனா அடுத்த நாள் ப்ரீத்தி வந்து.. "எங்க அப்பா எனக்குனு முடிவு பண்ணவரை தான் எனக்கு பிடிச்சிருக்கு.."னு சொன்னா.

உதய் ரொம்ப உடைஞ்சு போயிட்டான்..

"ப்ரீத்தி.. உன் மனசில நான் தான் இருக்கேன்னு.. உங்க அப்பா கிட்ட சொல்லு.. உங்க அப்பா கிட்ட நான் பேசுறேன்.."னு அவன் அவகிட்ட ரொம்ப கெஞ்சுனான்..

ஆனா அவ.. "என் மனசில நீ இல்லை.."னு சொல்லிட்டு போய்ட்டா.

அப்புறம் அவன் அதை நினைச்சு ரொம்ப வருத்தத்தோட இருந்தான். நாங்க எல்லாரும் அவனை எவ்வளவோ சமாதானம் பண்ணோம்.. ஆனா முடியலை..

சூசைட் பண்ணிட்டான்.."னு அர்ஜூன் சொல்லி முடிக்கிறான்.

சக்தி அர்ஜூனை கட்டிப்பிடிச்சு சமாதானம் சொல்றா.

இரண்டு பேரும் நைட் ரொம்ப நேரம் கழிச்சு தூங்குறாங்க. காலையில மணி எட்டு ஆகிடுச்சு..

"அம்மு.. அம்மு.."னு இந்திரா கூப்பிடுற சத்தம் கேட்டு சக்தி கண் முழிக்கிறா.

"அச்சோ.. இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.. அம்மா வேற ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல.."னு புலம்பிட்டே சக்தி எழுந்து போய் கதவை திறக்கிறா.

இந்திரா.. "அம்மு.. என்னாச்சு.. ஏன் இன்னும் தூங்கிட்டு இருக்க.. அர்ஜூன் எங்க.. அவனுமா இன்னும் எழுந்திருக்கலை.."னு கேட்கிறாங்க.

"ம்மா.. அது.. அது வந்து.."னு பதில் சொல்ல தெரியாம சக்தி தடுமாறுறா.

இந்திரா.. சிரிச்சிட்டு.. "சரிடா.. சீக்கிரம் குளிச்சிட்டு வா.. நான் டிபன் ரெடி பண்றேன்.."னு சொல்லிட்டு.. போயிடுறாங்க.

சக்தி அர்ஜூனை பார்க்கிறா.. அர்ஜூன் நெற்றியில கிஸ் பண்ணி.. "அர்ஜூன்.. எழுந்திரு.."னு சொல்றா.

அர்ஜூன் சிரிச்சிட்டே.. "நான் எப்பவோ எழுந்துட்டேன்.. நீ தான் தூங்குமூஞ்சி.. லேட்டா எழுந்திருக்கிற.."னு சொல்றான்.

அதை கேட்டதும்.. சக்தி.. "நான் தூங்குமூஞ்சியா.."னு சொல்லிட்டு அவனை துரத்துறா. இரண்டு பேரும் ரூமுக்குள்ளே ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க..

அவங்க சிரிக்கிற சத்தம்.. கீழ இருக்கிற இந்திராவுக்கும் சரவணனுக்கும் கேட்குது..

"இரண்டு பேரும் சின்ன குழந்தைங்க மாதிரி விளையாடுறத பாருங்க.."னு இந்திரா சொல்றாங்க..

சரவணனும்.. "ம்.. பேரப்பிள்ளையும் வந்துட்டா.. இந்த வீடு இன்னும் கலகலப்பா மாறிடும்.."னு சொல்றார்.

Continue Reading

You'll Also Like

450K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
147K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
27.8K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...