இதுவும் காதலா?!!!

By LakshmiSrininvasan

233K 9K 1.4K

திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக... More

முதலில் கொஞ்சம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
இன்னும் கொஞ்சம்...

அத்தியாயம் 13

4.2K 181 20
By LakshmiSrininvasan

கிருஷ்ணா லண்டனில் கம்பெனி அமைப்பதற்கு என போக வர இருந்து கொண்டிருந்தான். நாளும் பொழுதும் ஓடியது.நிரஞ்சனா அவள் குழந்தையுடன் அவள் வீடு சென்றிருந்தாள். ராதாவின் வளைகாப்பிற்கு வேலைகள் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது. ஒரு வாரம் முன்பே சமையல்காரி சுமதி ராதாவின் வீட்டுற்கு செல்ல கிளம்பினாள்.

வேணி அவளிடம்,"சூடு சுமதி, ராதா என்ன எல்லாம் கேட்கிறளோ அத்தனை செய்து கொடுக்கணும், அந்துக்கு உன்னை அங்க அனுப்புறேன்" என்றாள் சற்று கண்டிப்பு கலந்த தொனியில்.

"சரிம்மா" என்றாள் அவள் அமைதி மாறாத குரலில்.

ராதா வீட்டில் அவள் போய் நிற்கவும், ராதாவின் தகப்பன் உடனே கிருஷ்ணாவை கூப்பிட்டார்.

"என்ன கிருஷ்ணா எதுக்கு குக் எல்லாம்? நாங்க ராதாவை நல்லா பார்த்துக்க மாட்டோமா?" என்றார் சாதாரணமாக.

"ஓ குக் வந்து இருக்காங்களா? குட், அங்கிள் நீங்க பார்த்துக்க மாட்டீங்கன்னு அனுப்பிருக்க மாட்டாங்க, ராஸை இன்னும் நல்லா பார்த்துக்க தான் அனுப்பிருப்பாங்க, ப்ளீஸ் டோண்ட் மைண்ட் அங்கிள்" என்றான் அமர்த்தலாக.

"ம்ஹூம்.. ஓகே எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை, எனிவேஸ் தேங்க்ஸ் கிருஷ்ணா" என்றுவிட்டு போனை வைத்தார் அவர்.

"இட்ஸ் ஓகே அங்கிள்" என்றுவிட்டு அவன் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அன்று வளைகாப்பு,வெங்கடேசனும் வேணியும் கொள்ளாத சந்தோஷத்தில் உலகத்தையே அழைத்து இருந்தனர். அந்த ஊரில் இருந்த அத்தனை கோவில்களிலும் அன்று அதிகாலை முதலே பூஜை ஏற்பாடாகியிருந்தது. வீட்டில் நூற்றுகணக்கான பண்டிதர்களும் ஐயர்களும் வந்து ஹோமம் வளர்த்தனர்.

கிருஷ்ணாவும் ராதாவும் சற்று நேரம் ஹோமத்தில் அமர்ந்து இருந்தனர். கிருஷ்ணா சற்று நேரத்திற்கு எல்லாம் தலைமை புரோகிதரிடம் கேட்டு கொண்டு ராதாவை கீழே இருந்த அறையில் ஓய்வெடுத்து கொள்ள அனுப்பி வைத்தான். மகன் ஒற்றையாய் பூஜையில் இருப்பதை பார்க்கவும் , வேணி அவனை எழுப்பிவிட்டு தான் தன் கணவருடன் வந்து பூஜையில் அமர்ந்தாள். சிரித்து கொண்ட மகனை பார்த்து "கடைசியில் வந்து சேர்ந்துக்கோங்க, நீயும் ரெஸ்ட் எடு சாயங்காலம் வளைகாப்பில் உனக்கும் தான் வேலை இருக்கும்" என்று கூறி எழுப்பி விட்டாள்.

அந்த அறையில் சற்று சாய்வாக அமர்ந்து இருந்த மகளிடம் சாரதா. "ம்ஹூம், கிருஷ்ணா வந்து உன்ன பொண்ணு கேட்டப்போ கூட எனக்கு கொஞ்சம் கோவம் தான், என்னடா கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்ஸே இல்லாமே இந்த பையன் இப்பிடி பேசுறானேன்னு..ம்ச்.. உன் வாழ்க்கை எப்பிடி இருக்குமோன்னு கொஞ்சம் பயம் கூட இருந்துச்சு சின்னு,ஆனா இந்த ரெண்டு நாளும் இந்த வீடு உன்ன தாங்குறது பார்த்ததிலே அப்பாபாபாபா..எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடா" என்று நிறைவாய் சிரித்தாள் அன்னை.

சிரித்த ராதா, கதவருகே கிருஷ்ணா வருவதை பார்க்கவும் "ஹாய் கிச்சா" என்றாள்.

சாரதா திரும்பி பார்த்துவிட்டு மரியாதைக்காய் எழுந்தாள்.

"ஹாய்டா" என்றபடி உள்ளே வந்தவன் ராதாவிடம் வந்து நின்றவன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டான். மாமியாரிடம் திரும்பி "நீங்க எதுக்கு ஆன்டி நிற்கிறீர்கள்? உட்காருங்க.." என்று ராதாவை பார்த்து சிரித்தவன் "நாங்க இப்பிடி தான்" என்றவன் ராதாவை தன்னோடு சேர்த்து கொண்டான்.

சாரதா சிரித்துகொண்டு அமர்ந்தாள்.

"யூ லுக் டல் கிச்சா, ஸ்லீப் ஃபார் சம் டயம்..ஆமா எங்க நம்ம கேங், எல்லாரும் எப்ப வர்றாங்க?" என்றாள்.

"ஆல் ஆர் ஆன் தி வே ராஸ், தே ஸூட் பீ ரிச்சிங் பை லஞ்ச் ஈவினிங் எல்லாரும் வந்துடுவாங்க" என்றவன் "நான் இங்கேயே படுத்துக்கிறேனே" என்றவன் அத்தோடு நில்லாமல் மறுபுறம் அந்த கட்டிலில் வந்து படுக்கவும் சாரதா சட்டென எழுந்து "சரி நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் பண்ணுங்க" என்றபடி நகரப்போனாள்.

படுத்து கொண்ட கிருஷ்ணா ராஸின் வலது கையை பிடித்து கொண்டு "நீங்க பாட்டுக்கு பேசுங்க ஆன்டி, ஐ வில் நாட் கெட் டிஸ்டர்ப்டு..நான் தூங்கிடுவேன்" என்றவன் ராஸுடன் சிறுகுழந்தை போல வம்பிழுத்து கொண்டு இருந்தான்.

"ம்ஹூம்.." என்று சிரித்து கொண்டு எழுந்து சென்றாள் சாரதா.அவள் வாசல் கடக்கும் வரையில்

"ஹே இப்ப மட்டும் எத்னிக் உனக்கு கம்பர்டபிளா இருக்கா?" – கிருஷ்ணா.

"ம்ஹூம் இல்ல கிச்சா" என்று சிணுங்கினாள் ராதா.

"அப்ப கழட்டிடு" என்று சிரித்தான் அவன்.

"இடியட், டர்டி டாக்" என்று அருகில் இருந்த தலையணையில் ரெண்டு அடி போட்டாள்.

"கவுன் போட்டுகளாமே சொன்னே ராஸ்" என்றான் அவன் கடகடவென சிரித்தபடி.

"எப்படா உனக்கு லண்டன் ப்ளைட்?" – ராதா.

"நாளைக்கு மார்னிங் 6" – கிருஷ்ணா.

"எப்ப ரிட்டர்ன்?" – ராதா.

"ம்..வேலை முடிஞ்சதும்..ஐ திங் டே ஆஃப்டர்" - கிருஷ்ணா

நிறைந்த மனசுடன் நினைவின்றி டயனிங்கிற்கு வந்தவளிடம், சந்திரா "அம்மா, டீ எதுவும் சாப்பிடுறீங்களா?" என்றாள்

நினைவு களைந்த சாரதா, மலர்வாய் சிரித்துவிட்டு "இல்லம்மா ஒண்ணும் வேண்டாம், நீ நல்லா இருக்கியா? உனக்கு ஏதுவும் சாப்பிட கொண்டு வர சொல்லட்டா" என்றாள் அவள் பதிலுக்கு.

சந்திரா சிரித்து கொண்டு "என்னாச்சும்மா, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? இது எங்க வீடும்மா" என்றாள்.

சாரதா சிரித்து கொண்டு "மனசு நிறைஞ்சு இருக்கும்மா, எனக்கு இனி வாழ்க்கையிலே எதுவுமே வேண்டாம்" என்றாள் பூரிப்பாய்.

"ஏன்மா ரொம்ப எமோஷனலா இருக்கீங்க" என்றாள் சந்திரா.

"எங்க சின்னுவை நினைச்சு எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்மா" என்றாள் கொள்ளாத பூரிப்புடன்.

"ம்ஹூம்..அம்மா நாங்களே எங்க அண்ணிக்கு பிள்ளைங்க மாதிரி தான், அப்ப ராதாவை எப்பிடி வச்சுக்குவாங்க, இதுல என்னம்மா ஆச்சரியம்" என்றாள் சாதாரணமாக.

"ம்ம்.. நான் கேள்விபட்டிருக்கேன்..ஆனா இன்னிக்கு என் பொண்ணு அப்பிடி இருக்கிறதை பார்க்கிறதுக்கு அவ்வளவு நிறைவா இருக்கும்மா. அவ கஷ்டபடுவான்னு அவளை ரெஸ்ட் எடுக்க கிருஷ்ணா அனுப்பினாரு, அவரு கஷ்டபடுவாருன்னு அவரை அனுப்பிட்டு அவங்க அப்பா, அம்மா பூஜையில் உட்கார்ந்தாங்க...ம்ஹூம்..எங்க வீட்டுக்கு இங்க இருந்து வேலைக்கு ஆளு, தினமும் வந்து போக நர்ஸ்..ம்ஹூம்..இந்த நிமிஷம் கடவுள் வந்து என் உசிரை எடுத்தா கூட நான் சந்தோஷமா போயிடுவேன்மா" என்றாள் நெகிழ்ச்சியாக.

"அய்யே என்னம்மா நீங்க இப்பிடி எல்லாம் பேசிகிட்டு? ராதா இந்த வீட்டு தேவதைம்மா இத இங்க இருக்க யாருமே இல்லைன்னு சொல்லமாட்டாங்க, எங்க வேலைகாரங்க உட்பட" என்று அமர்த்தலாக சிரித்துவிட்டு வேறு பேச்சு பேசலானாள்.

சாயங்காலம் ரிஃப்ரெஸ் ஆகி வளைகாப்பிற்கு முழு அலங்காரத்துடன் ராதா அமர்ந்து இருப்பதை பார்க்கையில் அம்மன் நேரில் இறங்கி வந்தது போல் இருந்தாள். அவளோடு அவள் நட்பு வட்டம் வந்து சேர்ந்தது. முதலில் வேணி மருமகளுக்கு ரெண்டு கைகளில் வைர வளையல் இட்டாள், அடுத்து தாய் வீட்டில் இருந்து சாரதா ரெண்டு வைர வளையலும் பத்து தங்கவளையலும் இட்டாள். அடுத்தடுத்து வந்தவர்கள் கண்ணாடிவளை, தங்க வளை என மாற்றி மாற்றி போட்டதில் அவளின் முழங்கை வரையில் வளையல் உருண்டோடியது.

இரவு சாப்பிட உட்காரும் போது அவளால் கைகளை தூக்கவே முடியவில்லை. மெதுவாக வேணியிடம் "அம்மா நான் கண்ணாடி வளையல் மட்டும் போட்டுகிட்டு மிச்சத்தை கழட்டிகட்டுமா?" என்றாள் ராதா.

"அதி" என்று ஏதோ பேச வாயெடுத்தவள் அதற்குள் மகனை பார்த்தாள் ,அவன் "ராஸ் நீ கையை குடு" என்றபடி அவன் வளையல்களை கழட்ட ஆரம்பித்தான்.

"ஓ காட் கிருஷ்ணா உன் லவ்வுக்கு அளவில்லாமே போச்சுடா" என்ற டீனா "இட்ஸா எ கஸ்டம் கிருஷ்ணா அவங்க வீட்டுக்கு போய் கொஞ்சம் கழட்டிகலாம்" என்றாள்

"என் டார்லிங்க கஷ்ப்டுத்துற எந்த கஸ்டமும் எனக்கு வேண்டாம்.." என்றவன் "ம் ராஸ் தட் ஹேண்ட்" என்றான். அவளும் எதுவும் பேசாமல் மறுகையை அவனிடம் கொடுத்துவிட்டு வேணியை பார்த்தாள்.

அவள் மெலிதாய் சிரித்து கொண்டு "அது என்னடா, அப்ப பிள்ள எப்பிடி கஷ்டபடாமே பெத்துக்க முடியுமா?"

"உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு ராஸ் லெட்ஸ் டூ சீ செக்ஸன்" என்றான் கிருஷ்ணா ராதாவிடம் தாயை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

"உரேய் அது இன்னும் கஷ்டம்டா" என்றாள் அன்னை.

"நீ பேசாமே என்னோட லேபர் ரூமில் இரு கிச்சா" என்றாள் ராதா சிரித்து கொண்டு.

"அஸ்கு , அதெல்லாம் முடியாதும்மா..நான் ஹாஸ்பிட்டலிலேயே இருக்க மாட்டேன்..குழந்தை பிறந்ததும் அடுத்த நிமிஷம் நான் வந்துடுவேன்" என்றான் அவன் சிரித்து கொண்டு.

"திருட்டு தடியா" என்று அவன் காதை திருகினாள் ராதா.

"ஆஆஆஆ.. இவ்வளவு பேர் இருக்கீங்க யாராவது எதாவது சொல்லுறீங்களா பாருங்க" என்றான் சுற்றி நின்றவர்களை பார்த்து.

எல்லோரு கொல்லென்று சிரித்து கொண்டு ஒரு குரலில் "எதுக்குப்பா, உன் டார்லிங் உன்ன அடிக்கிறா வாங்கிக்க" என்றார்கள்.

கிருஷ்ணா அசராமல் எல்லோர் சிரிப்பிலும் சேர்ந்து கொண்டு ராதாவிற்கு சாப்பாடு அனைத்தும் ஊட்டிக் கொண்டே தானும் சாப்பிட்டான்.

வாசல் வரை ராதாவுடனே ஒட்டிக் கொண்டு வந்தவன் ராதா காரில் ஏறும் முன் சட்டென அவளை திருப்பி அவள் இதழில் அழுத்தி முத்தமிட்டான். எல்லாரும் சந்தோஷ சங்கடத்தில் நெளிந்து கொண்டே சிரித்தார்கள்.

அவனிடம் இருந்து விலகியவள் "டேய், ஃபார் ஏ சேஞ்ச் கொஞ்சமாவது வெட்க படு கிச்சா" என்றாள் ராதா அடிகண்ணில் அவனை பார்த்தபடி இதழை துடைத்து கொண்டு.

"அது இந்த ஜென்மத்திலே நடக்காது ராதா" என்றாள் சந்திரா சத்தமாக சிரித்து கொண்டு.

கிருஷ்ணா அவம் குடும்பத்தை பார்த்து சிரித்தபடி "அப்ப உனக்கு வேண்டாமா..அப்ப திருப்பி கொடுத்திட்டு கிளம்பு" என்றான் கிருஷ்ணா கள்ளமாய் சிரித்தபடி.

"இடியட்" என்று நறுக்கென கிள்ளிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்தவள் "செட்டப் கீது புடிச்சிடாதே..பிச்சிபுடுவேன் பிச்சு" என்றாள் சிரித்து கொண்டு.

"ம்..ட்ரை பண்ணுறேன்" என்று விளையாட்டாய் பேசியவன் "டேக் கேர் ராஸ்" என்றான்.

"பை கிச்சா" என்றாள் ராதா. கார் அங்கிருந்து அள்ள அள்ள குறையாத சந்தோஷத்தோடும் பூரிப்போடும் ராதா வீட்டை நோக்கி கிளம்பியது.

Continue Reading

You'll Also Like

122K 3.1K 20
சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு...
141K 4.9K 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம்...
72.1K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
203K 6.5K 40
முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ...