அடியே.. அழகே..

By jamunaguru

448K 15K 1.8K

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்ல... More

💕
1💕
2💕
3💕
4💕
5💕
💝
6💕
7💕
8💕
9💕
10💕
11💕
12💕
💞
13💕
14💕
15💕
16💕
17💕
18💕
19💕
20💕
21💕
22💕
23💕
24💕
25💕
26💕
27💕
28💕
29💕
30💕
31💕
32💕
33💕
34💕
35💕
36💕
37💕
38💕
39💕
40💕
42💕
43💕
44💕
45💕
46💕
47💕

41💕

8.4K 281 39
By jamunaguru

அர்ஜூன்.. "அம்மு.. ஏன் என்னை பார்க்க வரலை.. ஏன் எதுவும் சொல்லாம என்னை விட்டு போன.."னு சக்தி கிட்ட கேட்கிறான்.

"எனக்கு உன்னை பிடிச்சிருந்துச்சு.. அது காதலா.. இல்லையானு என்னை நானே குழப்பிட்டு இருந்தேன்..

அப்புறம் அது காதல் தான்னு எனக்கு தோணுச்சு.. ஆனா உனக்கும் அதே மாதிரி தோணிருக்குமா.. இல்லையானு.. தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன்.."னு சக்தி சொல்றா.

அர்ஜூன் அவ எல்லாத்தையும் சொல்லட்டும்னு அவளையே பார்த்துட்டு இருக்கான்..

"நான் உன்னை பார்க்கிறதுக்காக கிளம்பும் போது.. சிவா போன் பண்ணி கோவிலுக்கு வரச் சொன்னான்.. அங்க என் ப்ரெண்ட் மதி அவ லவ் பண்ண பையனை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க இருந்தா..

ப்ரெண்ட்ஸ் எல்லாரும் வீட்டில பேசலாம்னு அவகிட்ட பேசி பார்த்தாங்க.. ஆனா அவ கேட்கலை..

அவளோட அம்மா அப்பாவும் வந்து அவகிட்ட கெஞ்சுனாங்க.. ஆனா அவங்கள மீறி அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா.."னு சக்தி சொல்லிட்டு அர்ஜூனை பார்க்கிறா.

அர்ஜூன்.. "ம்.. சொல்லு.."னு சொல்றான்.

"அப்ப அவளோட அம்மா அப்பா ரொம்ப அழுதாங்க.. எனக்கு ஏனோ அவங்கள பாத்தப்ப என்னோட அப்பா அம்மா முகம் நியாபகம் வந்துச்சு..

நானும் எதுவுமே தெரிஞ்சுக்காம உன்னை நேரில பார்க்கிற அளவுக்கு வந்துட்டேன்.. அப்ப அவளை மாதிரி அப்பா அம்மாவை மீறி நடந்துக்கிற மனநிலையும் வந்துடும்னு பயம் வந்துச்சு..

இது காதல் இல்லை.. வெறும் ஈர்ப்பு.. இதிலிருந்து வெளியே வந்துடணும்னு உன்கிட்ட இருந்து விலகிட்டேன்.."னு சக்தி சொல்றா.

"வெறும் ஈர்ப்புனு நினைச்சு உன்னால கடந்து போக முடிஞ்சுதா அம்மு.."னு அர்ஜூன் கேட்கிறான்.

சக்தி இல்லைனு தலையாட்டுறா.

"அர்ஜூன்.. உனக்கு அம்மு மேல.. லவ் இருந்துச்சா.."னு சக்தி கேட்கிறா.

அர்ஜூன் சக்தியை பார்க்கிறான்.. சக்தியும் அர்ஜூன் பதிலை எதிர்பார்த்து அவன் முகத்தை பார்க்கிறா.

அர்ஜூன் சக்தியை கையை தன் கைக்குள்ள எடுத்து வச்சுக்கிறான்.

"அம்மு.. உனக்கு நியாபகம் இருக்கா.. லவ் பத்தி பேச்சு வந்தப்ப.. நீ அம்மா அப்பாவோட லவ் பத்தி சொன்ன.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியும் அது நியாபகம் வந்து தலையாட்டுறா.

"அப்ப ரொம்ப நேரம் டைப் பண்ணேன்.. ஆனா குட் நைட்னு மட்டும் பதில் அனுப்புனேன்.. அப்ப என்ன டைப் பண்ணேன் தெரியுமா.."

"என்ன டைப் பண்ண.."

"அம்மு.. நீ சொன்ன இந்திரா சரவணனோட ஒரே பையன் அர்ஜூன் நான் தான்.. எனக்கு வரப்போற மனைவி எப்டிலாம் இருக்கணும்னு நான் கற்பனை பண்ணேனோ.. அவளுக்கு வச்ச செல்லப்பேர் அம்மு.. அதனால தான் நான் உன்கிட்ட பேசினேன்.. எனக்கு நிறைய தடவை உன்கிட்ட பேசும் போது.. நீ தான் எனக்கானவ..னு தோணுது.. நீ இதை எப்டி எடுத்துப்பனு தெரியலை.. வாழ்க்கை முழுக்க நீ என்கூட வருவீயா.. இதான் நான் டைப் பண்ணேன்.."னு அர்ஜூன் சொல்றான்.

"அப்புறம் ஏன் அர்ஜூன்.. நீ அனுப்பலை.."னு சக்தி கேட்கிறா.

"அம்மு.. உன் மனசில நான் இருக்கேனானு தெரியாம நான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்.. இதை மெசேஜ்ல சொல்றதை விட நேரில தான் சொல்லணும்னு தோணுச்சு.."னு அர்ஜூன் சொல்றான்.

"உன்னை நேரில பார்க்கும் போது.. நான் உதய் பேரை ஏன் வச்சிருந்தேன்னு சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா.. நீ வரலை.. சரி இந்த ரிலேஷன்ஷிப் இதுக்கு மேல போகாததே நல்லதுனு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. ஏன் எதுக்குனு தெரியாம அந்த பிரிவு.."னு அர்ஜூன் சொல்றான்.

"சாரி அர்ஜூன்.."னு சக்தி சொல்றா.

"அம்மு.. எதுக்கு சாரிலாம் சொல்ற.. நீ பண்ணது சரிதான்..

ஒரு வேளை அப்பவே நாம நேரில பார்த்திருந்தா.. நாம ஒருத்தரை ஒருத்தர் தப்பா தான் புரிஞ்சிட்டு இருந்திருப்போம்.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியும் ஆமா னு தலையாட்டுறா.

"அம்மாவுக்கு தான் thanks சொல்லணும்.. அவங்க தான் தெரிஞ்சோ தெரியாமலோ  என் அம்முவை என்கூட சேர்த்து வச்சிட்டாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க.

இந்திரா போன் பண்றாங்க அந்த நேரம்.. "அம்மா எங்களைலாம் மறந்துட்டு அங்கையே செட்டிலாகிட போறீங்களா.."னு சக்தி கேட்கிறா.

"அம்மு.. அப்டிலாம் இல்லைடா.. நீங்களும் இங்க வந்தா கொஞ்ச நாள்ல கிளம்பிடலாம்னு நினைச்சேன்.."னு இந்திரா சொல்றாங்க.

அர்ஜூன் அதுக்கு.. "ம்மா.. இப்போதைக்கு அங்க வரமுடியாது.. அடுத்த வாரம் ஆடிட்டிங் இருக்கு.. இண்டர்வியூக்கு வேற ப்ளான் பண்ணிருக்கேன்.."னு சொல்றான்.

"ம்.. சரிடா.. அப்ப நாங்க அடுத்த வாரத்துல அங்க வந்துடுறோம்.."னு இந்திரா சொல்றாங்க.

அப்புறம் கொஞ்ச்சசசசசசச... நேரம் சக்தி இந்திரா கிட்ட பேசிட்டு போனை கட் பண்றா.

அர்ஜூனும் சக்தியும் டின்னர் முடிச்சிட்டு ரூமுக்கு வர்றாங்க.. சக்தி படுக்கப் போறா..

"அம்மு.. இங்க வா.."னு அர்ஜூன் பால்கனில இருந்து கூப்பிடுறான்.

"என்ன அர்ஜூன்.."னு சக்தி கேட்கிறா.

"இங்க உட்காரு கொஞ்ச நேரம்.."னு அர்ஜூன் சக்தியை பால்கனில இருக்கிற ஊஞ்சல்ல உட்கார வைக்கிறான்.

"எதுக்கு அர்ஜூன்.."னு சக்தி அர்ஜூனை பார்க்கிறா.

"இந்த ரூம்ல எல்லாம் என்னோட விருப்பப்படி டிசைன் பண்ணதுனு சொன்னேன்ல.. இந்த ஊஞ்சல் எதுக்கு தெரியுமா.."

"எதுக்கு.."னு சக்தி கேட்கிறா.

"இப்டி.. உன் மடியில தலைவைச்சு படுக்கத்தான்.."னு சொல்லிட்டு அர்ஜூன் சக்தி மடியில தலைவைச்சு படுக்கிறான்.

சக்தியும் அர்ஜூனும் ஏதேதோ பேசிட்டே இருக்காங்க.. ரொம்ப நேரம்..

சக்தி அர்ஜூனோட தலைமுடியோட விளையாடிட்டு இருக்கா. அர்ஜூன் கண்ணை மூடி படுத்திருக்கான்.

"அர்ஜூன்.."னு சக்தி கூப்பிடுறா.

"ம்.."னு அர்ஜூன் கண்ணை திறக்காமலே கேட்கிறான்.

"உதய் எப்டி இறந்தான்.."னு சக்தி கேட்கிறா.

Continue Reading

You'll Also Like

143K 6.5K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
24.3K 1.1K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்
14.1K 629 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...