அடியே.. அழகே..

By jamunaguru

450K 15.1K 1.8K

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்ல... More

💕
1💕
2💕
3💕
4💕
5💕
💝
6💕
7💕
8💕
9💕
10💕
11💕
12💕
💞
13💕
14💕
15💕
16💕
17💕
18💕
19💕
20💕
21💕
22💕
23💕
24💕
25💕
26💕
27💕
28💕
29💕
30💕
31💕
32💕
33💕
34💕
35💕
36💕
37💕
38💕
40💕
41💕
42💕
43💕
44💕
45💕
46💕
47💕

39💕

7.7K 300 44
By jamunaguru

அர்ஜூன் சக்தியை பார்த்து.. "என்ன அம்மு கையை வெட்டிக்கலையா.."னு கேட்கிறான்.

சக்தி கண்டுபிடிச்சிட்டானோ.. என்ன பதில் சொல்றது..னு திருதிருனு முழிக்கிறா..

"எ.. என்னது.."னு எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறா.

"கத்தி லாம் பக்கத்தில வச்சிருக்க.. எதுக்கு.. கையை வெட்டிக்குறதுக்கா.."னு அர்ஜூன் கேட்கிறான்.

சக்தி.. அர்ஜூன் இன்னும் கண்டுபிடிக்கலைனு நினைச்சுக்கிறா.

"கையை எதுக்கு வெட்டிக்கப் போறேன்.."னு சக்தி முறைச்சிட்டே சொல்றா.

"அப்டியா.. வேற எதுக்கு.."னு அர்ஜூன் அப்பாவி மாதிரி கேட்கிறான்.

"ஆங்.. அது அது.. ஆங்.. ஆப்பிள் ஆப்பிள் வெட்டுறதுக்கு.."னு சக்தி சொல்றா.

அர்ஜூன் சோபால உட்கார்ந்துட்டு.. சக்தியை பார்த்து.. "ம்.. வெட்டு.."னு சொல்றான்.

சக்தி என்ன எதை வெட்ட சொல்றான் னு முழிக்கிறா.

"என்ன அம்மு பார்க்கிற.. ஆப்பிளை வெட்டு.."னு அர்ஜூன் சொல்றான்.

"ஓ.. ஆப்பிளையா.."னு சொல்லிட்டு சக்தி ஆப்பிள் கட் பண்றா.

அர்ஜூன் சக்தி அனுப்பின போட்டோவை பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டான்..

"என்ன இது.. வளையல் நான் சக்திக்கு இன்னைக்கு வாங்கினது மாதிரி இருக்கு.. அப்ப சக்தி தான் அம்முவா.."னு யோசிக்கிறான்.

ரூம்ல இருந்து வெளியே வந்து அர்ஜூன் சக்தியை பார்க்க.. சக்தி மெசேஜ் டைப் பண்ணிட்டு இருக்கா.

சந்தோஷத்துல அப்டியே சக்தியை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு அர்ஜூனுக்கு.

ஆனா.. சக்தி கிட்ட கண்டுபிடிச்சதை காட்டிக்க வேண்டாம்னு அர்ஜூனும் விளையாடுறான்.

"அம்மு உன் விளையாட்டெல்லாம் என்கிட்ட காட்றீயா.. உன் கையை போட்டோ எடுக்கும்போது நான் வாங்கிக் கொடுத்த வளையலை மறைக்கணும்னு மறந்துட்டீயே.. ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.."னு அர்ஜூன் மனசுக்குள்ள நினைக்கிறான்.

சக்தி.. "திடீர்னு வந்து கையை வெட்டிக்கப் போறீயானு கேட்டதும்.. கண்டுபிடிச்சிட்டானோனு நினைச்சேன்.. நல்ல வேளை இன்னும் கண்டுபிடிக்கலை.."னு நினைக்கிறா.

அர்ஜூன் சக்தி தான் அம்முன்னு தெரிஞ்ச சந்தோஷத்துல அவளை பார்த்து சிரிச்சிட்டே இருக்கான்.

சக்தி.. "என்ன அர்ஜூன்.. சிரிச்சிட்டு இருக்க.."னு கேட்கிறா.

"என் பொண்டாட்டி ஆப்பிள் வெட்டுற அழகே தனி.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி அவனை முறைக்கிறா.

"என்ன அம்மு.."னு அர்ஜூன் அப்பாவி மாதிரி கேட்கிறான்.

"ஒன்னுமில்லை.."னு சக்தி சொல்றா. ஆனா மனசுக்குள்ள.. "ஒருத்தி கையை வெட்டிப்பேன்னு சொல்றா.. அவளுக்கு ரிப்ளை பண்ணாம இங்க வந்து சிரிக்கிறத பாரு.."னு நினைக்கிறா.

அவ மனசுக்குள்ள திட்டுறத நினைச்சு பார்க்க அர்ஜூனுக்கு இன்னும் சிரிப்பா வருது..

இங்க இருந்தா உளறிடுவோம்னு சக்தி ரூமுக்கு போறதுக்காக எழுந்திருக்கிறா.

"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.

சக்தி "ம்.."னு மட்டும் சொல்றா.

அர்ஜூன் சக்தி கையை பிடிச்சு இழுக்கிறான். அர்ஜூன் மடியில விழுந்துடுறா சக்தி..

"என்ன அர்ஜூன்.."னு சக்தி சிணுங்கிறா.

அர்ஜூன் அவ முகத்தை கிறக்கத்தோட பார்க்கிறான். அவ உதட்டை தன் உதட்டால மூடி அவளை பேச விடாம பண்றான்.

அப்புறம் எப்ப.. எப்டி.. ரூமுக்கு போனாங்க.. ரூம்ல என்ன நடந்துச்சுனு லாம் யாரும் கேட்கக்கூடாது.. 😜

காலையில அர்ஜூன் கண்முழிச்சதும் சக்தியை இன்னும் இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிறான்..

சக்தி தூக்கம் கலைஞ்சு.. மணியை பார்க்கிறா.. மணி ஏழு ஆகிருந்துச்சு..

"அச்சோ.. இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.."னு நினைக்கிறா.

அர்ஜூன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.

நேத்து நடந்ததெல்லாம் நினைச்சு பார்த்து அர்ஜூன் நெற்றியில ஒரு முத்தம் கொடுத்துட்டு எழுந்து.. குளிச்சிட்டு ரூம்ல இருந்து வெளியே போறா.

அர்ஜூன் எழுந்ததும் சக்தி கிட்ட விளையாட ஆரம்பிக்கிறான்.. தன் போனை எடுத்து சக்திக்கு மெசேஜ் பண்றான்..

எதுவுமே தெரியாத மாதிரி.. எப்பவும் போல குளிச்சிட்டு ஹாலுக்கு போறான் அர்ஜூன்..

சக்தி.. டீ எடுத்துட்டு வர்றா.. இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு கம்பெனிக்கு கிளம்புறாங்க.

அப்ப தான் சக்தி தன் போனை பார்க்கிறா..

அர்ஜூன்.. "அம்மு.. r u ok.."னு மெசேஜ் பண்ணிருக்கான்..

"கையை வெட்டிக்குவேன்னு ஒருத்தி சொல்றா.. அதை பத்தி கவலையே இல்லாம பொண்டாட்டியை கொஞ்சிட்டு.. இப்ப வந்து.. r u ok.. உன்னை என்ன பண்றேன் பாரு.."னு சக்தி மனசுக்குள்ள நினைக்கிறா.

##குட்டி updateக்கு sry.. இன்னைக்கு சாயந்திரம் அடுத்த update.. Thank you all for your great response..💕😍😍😘😘

Continue Reading

You'll Also Like

3.5K 215 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...
147K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
3.3K 286 88
அவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
183K 6.1K 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடி...