அடியே.. அழகே..

By jamunaguru

449K 15K 1.8K

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்ல... More

💕
1💕
2💕
3💕
4💕
5💕
💝
6💕
7💕
8💕
9💕
10💕
11💕
12💕
💞
13💕
14💕
15💕
16💕
17💕
19💕
20💕
21💕
22💕
23💕
24💕
25💕
26💕
27💕
28💕
29💕
30💕
31💕
32💕
33💕
34💕
35💕
36💕
37💕
38💕
39💕
40💕
41💕
42💕
43💕
44💕
45💕
46💕
47💕

18💕

7.5K 309 29
By jamunaguru

சக்திக்கு அர்ஜீன் போட்டோ பார்த்ததும்.. "இவனா இந்திரா மேடத்தோட பையன்.."னு தோணுது..

எப்ப இவனை பர்ஸ்ட் டைம் மீட் பண்ணோம்..

ரகு ப்ரொப்போஸ் பண்ணப்போ.. என்னன்னே புரியாம வந்து என்னை தப்பா பேசுனான்..

ம்.. பர்ஸ்ட் மீட்டிங்.. very bad..

அடுத்தும் அப்டியே தான்..

ஆனா.. போட்டோவுக்கு நல்லா சிரிச்சிட்டே போஸ் கொடுத்துருக்கான்..

அன்னைக்கு பார்க்கும் போது கூட அந்த குட்டிப் பாப்பாகிட்ட கோபப்படாம நல்லா பேசுனான்..

ஆனா உன்னை மதிக்கலை சக்தி.. rejected..னு சொல்லிடலாமா..

இந்திரா மேடம் அன்னைக்கு குழந்தை மாதிரி என்கிட்ட கேட்டாங்க.. அவங்க இதை எப்டி எடுத்துப்பாங்க..

அப்பா அம்மா கிட்ட பேசிப்பாப்போம்..னு சக்தி வரும் போது.. சுந்தரமும் கீதாவும் பேசிட்டு இருக்கிறதை கேட்கிறா.

"ஏங்க சக்தி சரினு சொல்லிடுவா தானே.."

"சம்மதம் சொன்னா எல்லோருக்கும் சந்தோஷம் தான்.."

"எவ்ளோ நல்ல மனசுங்க.. அவங்களுக்கு.. அவங்க கிட்ட சம்பளம் வாங்குற நிலைமைல நாம இருக்கோம்.. ஆனா அவங்க நம்மளை தேடி வந்து நம்ம பொண்ணை கேட்கிறாங்க.."

"அவங்களுக்கு நம்ம பொண்ணை பிடிச்சிருக்கு மா.. அதான்.. அவங்க கஷ்டப்படும் போது ஒதுங்கி இருந்த சொந்தமெல்லாம் இப்ப நல்ல நிலைமைல இருக்கும் போது பொண்ணு கொடுக்க ஓடி வரறாங்க.. ஆனா இந்திரா மேடமும் சரவணன் சாரும்.. பொண்ணு சொந்தத்துல இருக்கணும்னு இல்லை.. நல்ல குணம் இருந்தா போதும்னு நினைக்கிறாங்க.."

"சரி.. பையன் எப்டி.. நல்ல பையனா.."னு கீதா கேட்கிறாங்க.

"ரொம்ப நல்ல பையன் மா.. சொந்தக் கம்பெனில ஒரு வருஷமா எல்லாரையும் போல சாதாரணமா வேலை பார்த்துட்டு இருக்கான்.."

"என்னங்க சொல்றீங்க.. யாருக்கும் தெரியாதா.."

"இல்லை.. எனக்கும் கணபதிக்கும் மட்டும் தான் அவன் இந்திரா மேடமோட பையன்னு தெரியும்.."

"ஏங்க.. அப்டி வேலை பார்க்கணும்.."

"இது அவங்க எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு மா.. கம்பெனி வேலையை ஒரு முதலாளியா இருந்து கத்துக்கிறதுக்கும் ஒரு தொழிலாளியா இருந்து கத்துக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல.."

"அப்பா சம்பாதிச்சதை அனுபவிக்க நினைக்கிற வயசில.. இவ்ளோ சொத்து இருந்தும் வேலை பார்க்கிறதெல்லாம் பெரிய விஷயந்தான்.. இப்டி ஒரு பையன் கிடைக்க நம்ம சக்தி கொடுத்து வச்சிருக்கணும்.."னு கீதா சொல்றாங்க.

சக்தி.. "வேண்டாம்னு நான் ஈஸியா சொல்லிடலாம்.. ஆனா அப்பா அம்மாவோட ஆசை.. இந்திரா மேடமோட ஆசை லாம்.. வேண்டாம்னு சட்டுனு முடிவெடுக்க முடியலையே.."னு நினைக்கிறா.

சக்தி எந்த பதிலும் சொல்லமுடியாம யோசிச்சிட்டே இருக்கா..

சுந்தரம் சக்திகிட்ட.. "சக்தி மா.. இந்திரா மேடம் வந்து பேசிட்டு போனதுக்கு.. நீ என்ன முடிவு பண்ணிருக்க.."னு கேட்கிறார்.

"என்னால தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடியலை ப்பா.."னு சக்தி சொல்றா.

"சக்தி மா.. நாங்க யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டோம்.. நீ சம்மதம் சொன்னா சந்தோஷம்.. இல்லைனா அது உன் முடிவு..னு நாங்க ஏத்துக்கிறோம்.. நீ ரொம்ப குழப்பிக்காத.."னு சுந்தரம் சொல்றார்.

சுந்தரம் பேசினது சக்திக்கு புரிஞ்சாலும் தான் வேண்டாம்னு முடிவெடுத்தா.. அப்பாவும் அம்மாவும் தன்கிட்ட காட்டிக்கலைனா கூட வருத்தப்படுவாங்க.

இந்திரா மேடம் மனசில எவ்ளோ ஆசையோட இந்த பேச்சு எடுத்தாங்க.. அவங்க வருத்தப்படுவாங்க..

எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு எனக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப்போகுது..னு சக்தி யோசிக்கிறா.

ஆனா சம்மதம் சொன்னா.. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க.. அர்ஜீன் என்னை தப்பா நினைச்ச மாதிரி நான் கூட அர்ஜீன் பத்தி யோசிக்கிறது தப்பா இருக்கலாம்.. அது அப்புறமா மாறிடலாம்.. நம்பிக்கையோட சரினு சொல்லலாம்.. னு சக்தி முடிவு பண்றா.

சுந்தரம் கீதா இரண்டு பேர்கிட்டயும் சக்தி.. "அப்பா.. நான் அர்ஜீனை கல்யாணம் பண்ணிக்கிறேன்.."னு சொல்றா.

கீதா.. "ம்.. ரொம்ப சந்தோஷம் டா.. நான் நிவிக்கு போன் பண்ணி சொல்றேன்.."னு சந்தோஷமா சொல்றாங்க.

சுந்தரம்.. "சக்தி மா.. இந்திரா மேடத்துக்கு நீயே போன் பண்ணி சொல்லு.."னு சொல்றார்.

சக்தி சரினு தலையாட்டிட்டு போன் பண்றா.

***

அதே நேரம் அர்ஜீன் வீட்டில இருக்கான்..

இந்திராவுக்கு சக்தி போன் பண்றா.

"ஹலோ.. அம்மு.. ஏன் இரண்டு நாளா போனே பண்ணலை.."னு இந்திரா கேட்கிறாங்க.

"அது.. அது.."

"சரி.. நீ அர்ஜீனை கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லத்தானே போன் பண்ண.."னு சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு சக்திக்கு..

"ஆங்.. ஆமா.."னு சக்தி சொல்றா.

"எனக்கு தெரியும்.. நீ சரினு தான் சொல்லுவனு.." ஆரம்பிச்சு நிறுத்தாம பேசிட்டே இருக்காங்க.

இந்திரா அவ்ளோ சந்தோஷமா பேசிட்டு இருக்கிறத பார்க்க அர்ஜீனுக்கு சந்தோஷமா இருக்கு.

இந்த சந்தோஷத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு தோணுது அர்ஜீனுக்கு..

எல்லாம் சரி.  பொண்ண இன்னும் நான் பார்க்கலையே..னு இப்பதான் அர்ஜீன் யோசிக்கிறான்.

Continue Reading

You'll Also Like

59.4K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...
76.5K 2.5K 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற...
16.7K 879 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
141K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)