மரணமா ? மர்மமா ?

By paviethra

37.1K 2.2K 775

#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 ... More

.1.
மன்னிப்பு
.2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
24.
25.
26.
27.
28.
29.
30.

23.

847 62 30
By paviethra

"ஆமாம் !"சற்று மென்னையாக பேச ஆரம்பிக்கிறான் "உன்னை,இதோ இவனை (vp யை கை காண்பித்த படி ),அப்புறம் என் தாயாரை (ரியாவின் அம்மா ),மூவரையும்  கடைசியாக கொல்ல வேண்டுமென வைத்திருந்தேன்.முதலில் உன்னை கொல்ல திட்டம் தீட்டி,உன் வீட்டிற்கு வந்தேன்.புரியவில்லையா? பிரியங்காவாக வந்தது யாரென நினைக்கிறாய் ?"மன்மதனை போல் சிரிக்கிறான்."நான் உன்னை கொல்ல தான் அங்கே வந்தேன்.என் அருகிலிருந்த கத்தியை பார்த்திருப்பாய் என நம்புகிறேன்.உன்னை பார்த்த அடுத்த கனமே,பொய்யான காதலை கொண்ட அந்த இருதயத்தை,கத்தியால் குத்த முடிவெடுத்திருந்தேன்.ஆனால்,என்னமோ தெரியவில்லை ,உன்னை பார்த்த பொழுது.....அந்த உண்மையான அந்த கண்களை பார்த்த பொழுது,எனக்கு..........."வார்த்தைகளை தேடுகிறான்"உன்னை தீண்ட எனக்கு மனம் வரவில்லை.நீ காதம்பரியைப் போல் அல்ல.அவள்,பொய்யாவள்,கேவலம்,அசிங்கம்.நீ உண்மை,தெய்வீகம்,சாந்தம்.உன் கண்களில் உண்மை ஒளிர்ந்தது.உன் சொற்களில் அக்கறை ஒழிந்திருந்தது.நீ என்னை அணைத்த பொழுது,உன் ஸ்பரிசம்..........அது தந்த அரவணைப்பு வேரெதுவும் எனக்கு தந்ததில்லை.நீ அன்பாய் கொடுத்த அந்த உணவில் ,அமிர்தத்தின் சாயல் தெரிந்தது.என் வாழ்வில்,நான் எதற்காக எல்லாம் ஏங்கினேனோ,அதை நீ 15 நிமிடங்களிலே தந்து விட்டாய்.வெளிபடையாய் சொல்ல வேண்டுமென்றால்,என்னுள் எனக்கே தெரியாமல் இருந்த மனிதத்தை எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியவள் நீ ."

ரியாவிற்கு அந்த சொற்கள் அனைத்தும்,அருவருப்பாய் இருந்தது.கண்கள் கடலாயின.

"என்னோடு வந்துவிடு.நாம் வாழலாம்.யாரும் வேண்டாம்.எதுவும் வேண்டாம்.நீ...நான்...மட்டும் வாழலாம்.தயவுசெய்து...இதோ இவனை விட்டு விலகு (vpயை காட்டியபடி ).காதம்பரி ஏமாற்றியது போல்,நீயும் என்னை ஏமாற்றி விடாதே."உடைந்த குரலில்,பரிதாபமாய் பேசினான்.

ரியாவிற்கு இது உபயோகரமாக தோன்றியது.கண்களை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.பெருமூச்சு விட்ட படி,"சரி...நான் உன் கூட வாழ தயார்.உன் கூடவே வந்திருறேன்.ஆனா,எனக்கு நீ ஒரு சத்தியம் பண்ணி கொடுகனும் "

பிரகாசமான ப்ராவதன்,ஆனந்த களிப்பில்,அவளரருகே வந்து,"என்ன வேண்டும்.தயங்காமல் கேள்."

"இல்ல வேணாம்.உன்னால அது முடியாது "

"அய்யோ! தயவுசெய்து கேள்.மன்றாடுகிறேன் "

"நான் உன் கூட வரனும் னா,நீ .....நீ......வந்..து....vp யையும் என் அம்மாவையும் கொல்ல கூடாது.அப்புறம்,இந்த நாடு,பழையபடி மாறனும்.இங்க இருக்குற எல்லாரும் மனுசங்களா மறுபடி மாறனும்.இத நீ நிறைவேத்துற னு சத்தியம் பண்ணி கொடு.நான் உன் கூட வந்துருறேன்."

"நீ உன் உறவுகளுக்காக பரிந்து பேசுகிறாய் சரி.இவ்வுூர் மக்களுக்காக ஏன் கவலை கொள்கிறாய் "

ரியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,நகத்தை கடித்தபடி,"அது......வந்....."எச்சிலை முழுங்கி விட்டு,அவன் வழியிலே போக முடிவெடுத்து "நம்ம வாழ்க்கை நிம்மதியா இருக்கனும் ல.பகையை வளர்த்து வச்சிட்டு,அவங்க வாயில விழுந்திட்டு இருந்தா,நம்ம வாழ்க்கை எப்படி நிம்மதியா இருக்கும் .நீங்களே சொல்லுங்க ?"அவன் இன்னும் குழப்பத்திலேயே இருந்ததை பார்த்த ரியா,"அது............ ,நம்ம குழந்தைக்கு ஆபத்தாயிரும்.நம்ம பிள்ளை நல்லா வளரனும் ல "அந்த சொற்கள் வாயிலிருந்து வந்த பொழுதே நாக்கு கூசியது ரியாவிற்கு.ஆனால்,எதையும் வெளிக்காட்டாமல்,உண்மையாகவே அவனோடு வாழ ஆசைப்படுபவளாய் பேசினாள்.

அவனுக்கு அந்த சொற்கள் தேனாய் இனித்தது.

"சரி,நான் இவையனைத்தையும் செய்கிறேன்.நீ எப்பொழுது இங்கே வருவாய் ?"

"10 நாளுல இங்க வந்துருவேன் "கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள்.

"பிரமாதம் ! பிரமாதம் "என்றபடி ரியாவின் அருகே நடந்து வந்தான்.ரியா குறுகினாள்.மதிலில் ஒட்டிக் கொண்டான்.அவன் அவள் முகமருகே வந்தான்.இருவரின் முகங்களுக்கிடையே,23 இன்ச் இடைவெளி தான் இருந்தது.ரியா கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்,இராட்டினத்தில் பயணம் செய்யும் பொழுது நாம் எப்படி கண்களை மூடுவோம்.கற்பனை செய்து பாருங்கள்.அப்படி ,ஒரு வித பயத்தில்,தன் கண்களை மூடிக்கொண்டாள்.

அவன்,ரியாவின் இரு கரங்களையும் தன் கரங்களுக்குள் கோர்த்து மதிலில் ஒற்றினான்.ரியாவிற்கு உடல் முழுக்க தீ பரவியது போல் இருந்தது.மெல்ல மெல்ல அருகே வந்தான்,அவன் மூச்சுக்காற்று தன் மேல் பட்டது,அருவருப்பாய் இருந்தது ரியாவிற்கு.அவனும் தன் கண்களை மெலிதாய் மூடியபடி அவன் இலக்கை  தேடி,பயணம் செய்ய ஆரம்பித்தான்.

ரியாவிற்கு கண்கள் இருண்டன,கண்கள் வண்ணம் இழந்தன,சருகு மரத்தில் சருகுவது போல் இருந்தது.

பழைய இடத்திற்கே வந்தாள்.

2 மணி நேரம் முடிந்துவிட்டது அல்லவா !!!!

'நல்லவேளை 'என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் ரியா.அருகிலிருந்த vp யைப் பார்த்தாள்.

"ரியா,என்னாச்சு? எனக்கு எதுவும் நியாபகத்துல இல்ல.உன் கிட்ட shirt குடுத்த பிறகு என்னாச்சு ?"

அந்த கேள்வி மின்சாரமாய் உடலெங்கும் பரவியது.என்ன பதில் சொல்ல ? உண்மையை மறைப்பது தான் சரி என்று முடிவெடுத்தாள்.

"ஹே ரியா லூசு !!!!"

"ஆங்...vp...எப்படி sir க்கு நியாபகம் இருக்கும்.sir தான் தூங்கிட்டிங்களே !"

"தூங்குனேனா என்ன ?எனக்கு நியாபகமே இல்ல !"புருவங்களை இனைத்த படி சிந்தித்தான்.தற்செயலாக திரும்பிய அவன்,ரியாவின் அம்மா,ரியாவிற்காக கொடுத்து விட்ட சாப்பாடை பார்த்தான்.
"சரி அத விடு,நீ முதல சாப்பிடு.அப்புறம்..உங்க அம்மா !!!sorry sorry! என் அத்தை திட்டு வாங்க "என்றபடி தட்டை நீட்டினான்.

ஆனந்த கண்ணீருடன் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

மனதில் சிந்தனைகள் :'இனிமேல்,vp யிடமிருந்து விலகனும்.என்னால் அவன் life ல எந்த சேதமும் வர கூடாது.அவன் சந்தோஷமா வாழனும் நான் போன பிறகு.இந்த 10 நாட்களை எப்படியாவது கடத்திவிட்டு................ 'கண்ணீர் வந்தது.vp துடைத்து விட்டான்.நிமிர்ந்து லேசாக புன்னகைத்தாள் ரியா.
"கவலை படாத !பரிகாரத்தை கண்டுபிடிச்சிருலாம் "குழந்தையை சமானதான படுத்துவது போல் பேசினான்.தலையசைத்தாள் ரியா.

தட்டை கீழே kitchen இல் வைப்பதற்காக சென்றாள்.அம்மா யாரிடமோ ,பதற்றுத்துடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.அழைப்பை அவள் துண்டித்த பிறகு,

"அம்மா ,என்னாச்சு,ஏன் tension? யாரு phone ல ?"

"உன் சித்தி தான்.காலை உடச்சுக்கிட்டாளாம்.fracture.நடக்கவே முடியலையாம்.என்னை அங்க வர சொல்லுறா.பிள்ளை வேற 12 th படிக்கிறா.இவ இப்படி படுத்துகிட்டா யாரு பாக்குறது.வேலைக்காரி யலாம் இந்த காலத்துல நம்ப முடியாது.நான் கிளம்பி போறேன்.நீ பத்திரமா இரு "

"ம்ம்...சரி மா."அம்மாவும் விலகி இருப்பது,நல்லதாய் பட்டது.

"Vp தம்பி யை கூப்டுக்கோ ,தனியா இருக்காத "

"மா !!!!!!!!?!!" ராகமாய் பாடினாள்.

"என்ன ?எனக்கு எல்லாம் தெரியும்."என்றாள் ஒரு பார்வையுடன்.அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் ஒழிந்திருந்தன.வாயை ஆச்சிரியத்தில் திறந்தாள்.
"மூடு டி வாயை .தங்கமான பையன் vp.இரு நான் அவன் கிட்ட யே சொல்லிட்டு போறேன் "என்று மாடிக்கு விரைந்து,vp யிடம் தெளிவாக அனைத்தையும் சொல்லி,அவனை அங்கேயே தங்க சொன்னாள்.vp க்கு lottery கிடைத்தாற் போல் மகிழ்ச்சி.

அம்மாவை வழியனுப்பி விட்டு,இருவரும் உள்ளே சென்றனர்.

Take a moment to vote and comment: )

Continue Reading

You'll Also Like

45.5K 1.1K 7
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
39 0 7
கதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை