ஹாசினி

By prenica

62.7K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
நீர் வீழ்ச்சி
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1

ஹாசினி

3K 151 65
By prenica

"ஹம்சி சென்னைக்கு போனது நான் என் அப்பா கூட இந்த வீட்டிற்கு வந்தேன். இங்க நான் சின்ன வயசுல இருந்த வளர்ந்ததால எனக்கு இங்க இருக்க பயம் இல்ல. வந்த இரண்டு நாள் நானும் அப்பாவு சந்தோசமாக இருந்தோம். இரண்டு நாளுக்கு அப்புறம் கதிர் இந்த வீட்டிற்கு வந்தான். அவன நான் அன்னைக்கு தான் முதல்ல பார்த்தேன். அவன் என் அப்பாவோட (business partner).

அப்பா என்ன கூப்பிட்டாரு. "ஹாசினி இவர் தான் கதிர். உனக்கு இவர கல்யாணம் செய்து வைக்க நான் முடிவு செய்து இருக்கேன் மா." எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

"நீங்க பயப்பட வேண்டாம் யோசிச்சி சொல்லுங்க." என்று கதிர் சொன்னான். யோசிக்காம பிடிச்சி இருக்குனு சொல்லிட்டேன். அது தான் நான் செய்த முதல் தவறு. அவன பத்தி முழுசா தெரிந்துக்கொள்ளாம அவன ஏத்துக்கிட்டேன். அடுத்த நாள் என்ன அவன் கோவிலுக்கு அழைத்து போனான். அப்பா தான் அனுப்பி வைத்தார். அப்போ மனசு விட்டு பேசினோம்.

ஒரு வாரம் இப்படியே போச்சு. அப்போ வீட்டில வேலை செய்ய பல்லவியும், ஒரு ஆலும் வந்தான். அவங்க புதுசு. எனக்கு பழக்கம் இல்ல. அவங்க கிட்ட நெருங்கி பழக எனக்கு விருப்பம் இல்ல. ஆனா பல்லவி கதிர கவனிக்கிறத நான பாத்தேன். அப்போ கதிர்கிட்ட சொன்னேன். அவன் புதுசா கேக்கிற மாதிரி நான் சொலுரத கேட்டான். நானும் அவன நம்பிட்டேன். அன்று இரவு அப்பா அவரச வேலையா ஒரு இடத்திற்கு போக வேண்டியது இருந்தது. போய்ட்டு காலைல வரதா சொல்லிட்டு போனாரு.

அன்று இரவு.
         நான் என் ரூம்க்கு தூங்க போய்ட்டேன். திடிரென்று என் தூக்கம் களைந்தது. நான் தண்ணி குடிக்க கீழ இறங்கி வந்தேன். அப்போ பின் புறம் எதோ சத்தம் கேட்டது போல இருந்தது. நான் பின் வாசல் பக்கம் போன. அப்போ பல்லவியும் கதிரும் முத்தம் கொடுக்கிறத பார்த்தேன். நான் உணர்ச்சிவசப்பட்டுடேன்.

"கதிர்" அவங்க இரண்டு பேரும் அதிர்ந்த போய் என்ன பார்தாங்க. இத ஒடனடியா என் அப்பா கிட்ட செல்ல மேல இருக்க என் ஃபோன்ன எடுக்க ஓடினேன். அவங்க என்ன தொடர்ந்து வந்தாங்க. அப்போ எதிர்க் வந்து வேலைக்காரன் ஒரு கம்பியால என் மண்டைல அடிச்சான். நான் மயங்கி விழுந்தேன். கொஞ்ச நேரத்துல கண் திறந்து பார்த்தா நான் காட்டுக்கு நடுவுல படுத்து இருந்தேன்.

"அய்யா கண்ண விழித்துடா." கதிர் என் கண் முன்னாடி வந்து நின்னான்.

"என்ன மா வலி எப்படி இருக்கு?" பாசமாக கேட்பது போல நடிச்சான். "என்ன டி உன் அப்பாகிட்ட சொல்ல ஓடுரியா? அதுக்கு நீ உயிரோட இருந்தா தான முடியும்?"

"கதிர் என்ன விட்டு விடு."

"உன்ன விடுவதா? முடியாது. உன் அப்பா என்ன பாட்னரா ஏத்துக்கிட்டானே தவிற. முதல் மறியாத எனக்கு கிடைக்கள. அது வேணும்னா உன்ன கல்யாணம் செய்யனும். அப்போ மொத்த சொத்தும் என் போர்க்கு வந்துடும். இது தான் என் திட்டம். ஆனா இப்போ உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி. அதனால என் திட்டத்த மாத்திக்கிட்டேன். உன்ன கொன்றுவிட்டு உன் தங்கையை திருமணம் செய்துக்கொள்ள." என் உயிரே நின்றுவிட்டது. இத தடுக்கனும் அதனால நான் இங்க இருந்து தப்பிக்கனும்.

என் இரண்டு கையிலயும் மண்ண அள்ளி அவங்க முகத்துல போட்டேன். அங்க இருந்து ஓடினேன். ஆனா என் தலையில அடி பட்டு இருந்தாள என்னால ஓட முடியல. திரும்பவும் என் தலையில கம்பியால கதிர் வேகமா அடிச்சான். தல சுத்தி கீழ விழுந்தேன். எனக்கு கண் சரியா தெரியல.

"தப்பிக்கவா பாக்குர? " கம்பியால பலமா என் கால் எழும்பு உடையிர அலவுக்கு கதிர் அடிச்சான். வலி தாங்க முடியாம கத்தினேன். "கத்துறத நிருத்து" அப்படினு சொல்லி என் முகத்துல அடிச்சான். உயிர மட்டும் பிடிச்சிட்டு நான் பொனமா இருந்த. செத்த பாம்ப அடிக்கிற மாதிரி என்ன அடிசிட்டேய் இருந்தாங்க. கடைசியா என் மேல எண்ணை ஊத்தி என்ன உயிரோட எறிச்சாங்க. நான் துடி துடித்து செத்தன்.

அடுத்த நாள்.
          காலை என் அப்பா வீட்டுக்கு வந்தார்.

"ஹாசினி எங்க மா இருக்க?" என் அப்பா என்ன கூப்டார் ஆனா நான் ஆவர் பக்கத்தில் இருந்தும். அவரால என்ன பார்க்க முடியல. கதிர் வந்தான்.

"ஆங்கில் ஹாசினி." கண்களை துடைப்பது போல் நடித்தான்.

"என்ன ஆச்சி." என் அப்பா பதறினார்.

"ஹாசினி யார் கூடவோ ஓடி போய்டா ஆங்கில்." என் அப்பா இடிஞ்சி போய் கீழ உட்காந்தார். அவர் ஒரு வார்த்த கூட போசல. நான் அந்த மாதிரி செய்து இருக்க மாடேனு என் அப்பா சொல்வார்னு நான் எதிர் பார்த்தேன். ஆனா அவர் கதிர் சொன்னத நம்பிடார். அது என் கோபத்த அதிகரிச்சது. அதுக்கு அப்பரம் என் வீட்ல இருக்க எல்லாரும் கதிர் சொன்னத நம்பினாங்க. அப்போதான் இவங்கல நான் வெறுத்தேன். இவங்கல பழிவாங்க இந்த வீட்டிற்கு இவங்கல கொண்டு வர நான் முயர்சி செய்தேன். உங்க விடு முறையை பயன்படுத்தி நான் தான் உங்களை வரச்செய்தேன்.

நான் தான் கதிர், பல்லவி, அந்த வேலைகாரனையும் கொன்றது. இப்போ என் குடும்பத்தையும் கொள்போகிறேன்.

"ஹாசினி கதிர் செய்த தவறுக்கு ஹம்சி என்ன செய்வா?"

"என் ஹாருஷ் ஹம்சிய காபாற்ற நினைக்கிறியா?"

"ஹாசினி ஹம்சி எந்த தவறும் செய்யல."

"தவறு செய்யலயா? அவ என்ன அவமானமா நினைத்தா ஹாருஷ். அதனால தான் நான் இருந்ததே அவ உங்க கிட்ட சொல்லல."

"இல்ல ஹாசினி நீ நினைக்கின்றது தவறு. அவ உன்ன அவமானமா நினைக்கள உன் பொயர் கொட்டுவிடகூடாது என்று தான். அவ எங்ககிட்ட இருந்து மறைத்தாள்."

"போதும் ஹாருஷ் எனக்கு எல்லாம் தெரியும்." வெளியே வண்டி வரும் சத்தம் கேட்டு ஹாசினி ஹம்சி உடலைவிட்டு பிரிந்தாள். ஹம்சி மயங்கி விழுந்தாள். ஹாருஷ் ஹம்சியை துக்கி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். அப்போது ஹம்சியின் பெற்றோர் வந்தார்கள். ஹம்சி கண் விழித்தாள்.

"ஹம்சி "என்று அவள் தாய் வந்து அனைத்துக்கொண்டார்.

"என்ன நடந்தது?" என்று அவள் அப்பா கேட்டார்.

"அப்பா" என ஹம்சி அவரை அழைத்தாள். அவள் அப்பா வந்து அவளை அனைத்தார். "அப்பா" என்று கண் களங்கினால்

"என்ன மா நடந்தது?"

"அப்பா ஹாசினி"

"ஹாசினியா? அவளுக்கு என்ன? அவ வந்து இருக்காலா?"

"அப்பா ஹாசினி செத்துடா பா" என ஹம்சி கதறினால். அதை கேட்டு தாயும் தந்தையும் உடைந்து போனார்கள். நடந்த அனைத்தையும் ஹம்சி கூறினால். அதை கேட்டு இரு மனமும் உடைந்துப்போனது.

"ஐய்யோ என் பொண்ண நான் இழந்துடேனே." என அவள் தந்தை கதறினார்.

"அப்பா ஹாசினி இங்க தான் இருக்கா. அவ அத்மா சாந்தி அடையல."

"ஹாசினி........ அப்பாவ பார்க்க வா மா." யார் கூப்பிட்டும் ஹாசினி வரவில்லை.

"ஹம்சி போகலாம் ஹாசினி வரமாட்டா." என ஹாருஷ் கூறினான். எல்லோரும் புறப்பட்டனர். சட்டென்று வீட்டின் வாசல் கதவு மூடப்பட்டது அனைவரும் திடுக்கிட்டனர்.

"ஹாசினி." என்று ஹம்சி அழைத்தாள். யாரோ சமையல் அறையில் நடந்து செல்வதை ஹம்சி கண்டாள். அவளை பின் தொடர அடி எடுத்தாள்.

"ஹம்சி எங்க போர?" என்று ஹாருஷ் கேட்டான்.

"ஹாருஷ் சமையல் அறையில் ஹாசினி இருக்கிறாள்"

"இல்ல ஹம்சி."

"இல்ல இருக்கா." அவன் கூறுவதை கேட்காமல். ஹம்சி சமையல் அறை சென்றாள். அவளுடன் ஹாருஷ்யும் சென்றான். அங்கு யாரும் இல்லை.

"ஹம்சி இங்க யாரும் இல்ல." என ஹாருஷ் கூற. அதை கேட்டு ஹம்சி தலை ஆட்டினாள். பின் இருவரும் வெளியே செல்ல திரும்ப. ஹம்சி அவள் பின் யாரோ இருப்பதை உணர்ந்தாள். அவள் மெல்ல திரும்பி பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. அவள் மூச்சி விட்டாள்.

"ஹாருஷ் " என்று திரும்பி அழைக்க. ஹாருஷ் இடம் இருந்து பதில் வரவில்லை. "ஹாருஷ்" என்று மீண்டும் அழைத்தாள். இருட்டில் அவளுக்கு அங்க பக்கம் இருப்பது கண்களுக்கு தெரியவில்லை. "ஹாருஷ் எங்க இருக்க?" ஹாருஷ் இடம் இருந்து பதில் வராததால் அவன் அருகில் இல்லாதததை உணர்ந்து. அவள் இதயைய துடிப்பு அதிகரித்தது. சட்டென்று அவள் பின்னால் இருந்து ஒளி வர திரும்பி பார்த்தாள். பார்த்தும் இதய துடிப்பு நின்றது. அவள் நின்றுக்கொண்டு இருப்பது சமையல் அறையில் இல்லை. மாடில் உள்ள (store room) தனி அறையில். இந்த அறையில் தான். அவள் சிறு வயதில் ஹாசினி உடன் விழையாடிய பொருள்கள் அனைத்தும் உள்ளது. இந்த அறையில் இருந்து தான் ஹாருஷ் ஒரு முறை ஹாசினியின் புகை படத்தை ஹம்சினியுடையது என்று எண்ணி எடுத்து வந்தான். அந்த அறைக்கு எவ்வாறு வந்தோம் என்று தெரியாமல். ஹம்சி பயத்தில் உரைந்து போனால். அந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டது. ஹம்சி குழப்பத்துடன் வெளியே நடந்து சென்றாள். அவள் அம்மா அவளை அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் தன்னை மறந்து மாடியில் நடந்து சென்றாள். மாடியின் விழும்பிர்க்கு சென்றாள். மாடியில் இருந்து குதிக்க தயார் ஆனால். அவள் குதிக்க கால் எடுக்க ஹாருஷ் அவளை பிடித்து இழுத்தான்.

"ஹம்சி" என்று அவன் குறள் கேட்டதும் அவள் மயக்கம் தெளிந்தது.

"ஹாருஷ்" என்று அவனை அனைத்தாள். ஹாருஷ் அவளை கீழே அழைத்து சென்றான். அனைவரும் பயத்தில் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

"ஹாசினி உன் கோபம் சரியானது. உன் கோபத்திற்கு என் உயிரை எடுத்துக்கொள். மற்றவறை விட்டு விடு." என்று ஹம்சி கூறினாள்.

"ஹம்சி என்ன சொல்கிறாய்? " என்று ஹாருஷ் பதரினான்.

"ஹாருஷ் தெரிந்தோ தெரியாமலோ இது நான் செய்த தவறு. இதற்க்கு தண்டனையும் என்னையே வந்து சேரும். நான் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்."

"ஹம்சி இதுல உன் தவறு எதுவும் இல்ல எல்லாம் என் தவறு." என்று அவள் அப்பா கண் கலங்கினார். "இது என் தவறு என்னை மன்னித்துவிடு  ஹாசினி" என்று கதறினார்.

"ஹாசினி அவங்க செய்த தவற உணர்ந்துடாங்க. இதுக்கு மேலையும் அவங்கல நீ தண்டிக்க நினைக்கிறியா? அப்போ உனக்கும் அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல." என ஹாருஷ் கூறினான். சட்டென கதவு திறக்கப்பட்டது. அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

"அவ மன்னிச்சிட்டா" என ஹாருஷ் கூறினான்.

"எல்லாரும் போகலாம்" என்று மாலதி கூறினாள். அனைவரும் வெளியே சென்றனர். அனைவரும் காரில் அமர்ந்தார்கள். ஹம்சி அந்த வீட்டை திரும்பி பார்த்தாள். அவள் கண் கலங்கினாள். ஹாருஷ் வண்டியை ஓட்டினான். அனைவரும் புறப்பட்டனர். ஹம்சியும் ஹாருஷ்யும் முன் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள். ஹம்சி அழுதுக்கொண்டேயே இருந்தாள். சட்டென்று ஹாருஷ் வண்டியை நிருத்தினான். அனைவரும் அவனை பார்த்தார்கள். ஆனால் அவன் பார்வை வண்டியின் முன் இருந்தது. அனைவரும் அவன் பார்வையை பின் தொடர்ந்து பார்த்தார்கள்.

"ஹாசினி" அவள் காரின் முன் நின்றுக்கொண்டு இருந்தாள். அவள் கண்களில் அமைதி தெரிந்தது. அனைவர் மனமும் அமைதி அடைந்தது. அவள் புன்னகைத்துவிட்டு காற்றோடு காற்றாக மறைந்துசென்றாள்.
*****
3 வருடங்களுக்கு பின்.
          "ஹாருஷ் நம்ம மாலதி கல்யாணத்திக்கு எத்தன நாள் முன்னாடி போலாம்?"

"இரண்டு நாள் முன்?"

"சரி. சிவாவும் பூஜாவும் (honey moon) முடிந்து வந்துவிட்டார்களா?"

"இல்ல டி அவன் இதோடு 3 ஆவது முறை (honey moon) போறான். இன்னும் எத்தனை முற போவானோ."

"ஹாருஷ் நான் என்ன ஆடை அணிந்துக்கொள்வது?"

"ஹம்சி புதுசா வாங்கிகோ."

"லவ் யூ ஹாருஷ்."

"அப்பா"

"சொல்லுடா."

"எனக்கும் புதிய ஆடை வேணும்."

"சரி டா ஹாசினி. நம்ம கடைக்கு போகலாமா?"

"போலாம் பா"

"நீங்க கீழ போங்க நான் வறேன்." என்று ஹம்சி கூறினாள். பின் ஹாசினியின் புகை படத்தை பார்த்து மெல்ல சிரித்தாள்.

"ஐ மிஸ் யூ ஹாசினி."
       

❤️சுபம்❤️

Continue Reading

You'll Also Like

139K 6.5K 59
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது...
477K 12.7K 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று...
19.1K 465 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
74.1K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤