ஹாசினி

By prenica

62.7K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
நீர் வீழ்ச்சி
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
தீ
ஹாசினி -1
ஹாசினி

ஹாசினி

3.8K 132 59
By prenica

ஹாரூஷ் கட்டுக்குள் நுழைந்தான். அவன் அங்கு வருவதை உணர்ந்த அந்த உருவம் அவனை நோக்கி சென்றது. கதிர் பயத்தில் தலை கால் புரியாமல் ஓடினான். ஹாரூஷ் கதிர் இருக்கும் திசையை நோக்கி ஓடினான். கதிர் தனக்கு முன் ஒரு கல் இருப்பதை கவனிக்காமல் கல் தடுக்க கீழே விழுந்தான். விழுந்த அதிர்ச்சியில் அவன் கத்த ஹாரூஷ் அந்த சத்தத்தை கேட்டு வேகமாக ஓடி வந்தான்.

ஹாரூஷ் கதிரை கண்டதும்." கதிர்" என்று அடி வயிற்றில் இருந்து கத்தினான். கதிர் தன் ஓட்டத்தை நிருத்திவிட்டு திரும்பி பார்த்தான். ஹாரூஷ்யை கண்டதும் கதிர் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.

"ஹாரூஷ்" என்று கதிர் கூற இருள் சூல துடங்கியது. இருவரும் அந்த இருளில் தொலைந்தனர்.
*****
ஒரு மணி நேரத்திற்கு பின் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். ஹம்சி, பூஜா, மாலதி, சிவா அனைவரும் வெளியே இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இருவரையும் கண்டதும் அனைவரும் எழுந்து இவர்கள் அருகில் ஓடினார்கள்.

"கதிர் என்ன ஆயிற்று" என்று அனைவரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.

"முதலில் கதிரின் காயத்திற்கு மருந்து போடுங்கள் அதன் பின் பேசலாம்" என்று ஹாரூஷ் கூறினான். பின் அனைவரும் உள்ளே சென்றார்கள். கதிரின் காயத்திற்கு ஹம்சி மருந்து போட்டால். ஹாரூஷ் ஹம்சியை கவணித்துக்கொண்டு இருந்தான். ஹம்சி ஒவ்வொறு முறை அவனை தொடும்போது அவனுக்கு கோபம் பொங்கியது. பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான். பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள்.

"ஹாரூஷ் என்ன நடந்தது என்று சொல் எவ்வாறு கதிர்க்கு இவ்வளவு காயங்கள் ஏற்பட்டது" என பூஜா கேட்டாள்.

"எல்லாரும் சாப்பிட்டு முடியுங்கள் பின் அதை பற்றி பேசலாம்" என்று ஹாரூஷ் கூறினான். அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். கதிர் தன் அறைக்கு சென்று தூங்கினான்.

"ஹாரூஷ் இப்போதாது கூறு என்ன நடந்தது என்று" என மாலதி கேட்டாள்.

ஹாரூஷ் தயக்கத்தோடு அனைவரையும் பார்த்தான். பின் நிதானமாக தொடங்கினான்.

"நான் கதிரை தேடி வெகு நேரம் காட்டுக்குள் அலைந்தேன் அப்போது திடிரென்று ஒரு உருவம் என்னை நோக்கி வருவதை கண்டேன். திடுக்கிட்டு பயத்தில் நான் மெல்ல அடி எடுத்து வைக்க தடுமாறி ஒரு பள்ளத்தில் விழ சட்டென்று ஒரு கை என்னை பிடித்தது. திரும்பி பார்த்த போது அங்கு யாரும் இல்லை. அடுத்த நொடி கதிர் அலரும் சத்தம் கேட்டு அந்த திசையை நோக்கி ஓடினேன். அப்போது நான் அங்கு கண்ட காட்சி." என்று கூறி பயத்தில் எச்சிலை முழுங்கினான் ஹாரூஷ்.

"அப்போ என்ன நடந்தது ஹாரூஷ்" என்று சிவா கேட்டான். ஹாரூஷ் தயக்கத்தோடு அனைவரையும் பார்த்தான்.

"சொல்லு ஹாரூஷ்" என்று பூஜா கூறினாள்.

"அந்த இடத்தில் கதிர் மட்டும் பயத்தில் நின்றுக்கொண்டு இருந்தான். சட்டென்று அவன் தலையை யாரோ பிடித்து அருகில் இருந்த மரத்தில் வேகமாக தேய்ததை நான் கண்டேன். நான் வேகமாக ஓடி அவன் அருகில் சென்றேன். அவனை இழுக்க முயன்ற போது ஏதோ ஒன்று என்னை தள்ளிவிட்டது. நான் அதிர்ந்து போனேன். பின் வெகு நேரம் முயற்சிக்கு பின் கதிரை மீட்டேன்." என்று ஹாரூஷ் நடந்ததை கூறி முடித்தான். அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். அனைவருக்குள்ளும் பயம் அதிகரித்தது. இதுவரை பயப்படாத ஹாரூஷ் பயந்து இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ந்து உள்ளனர்.
*****
"ஹாரூஷ் நாம சீக்கிரம் ஒரு சாமியாரை அழைத்து வரலாம் டா" என்று சிவா கூறினான்.

"ஆமாம் நாளைக்கே அழைத்து வர வேண்டும்." என பூஜா கூறினாள்.

"ஏன் நாளைக்கு நான் சென்று இப்போலுதே அழைத்து வருகிறேன் " என்று ஹாரூஷ் கூறினான்.

"இப்போவ??? இந்த நேரத்திலா வேண்டாம் ஹாரூஷ்" என்று காதலுடன் ஹம்சி அவனை தடுத்தாள். ஹாரூஷ் அவள் கண்களை கண்டதும் மயங்கினான்.

"இல்லை இப்போதே செல்வதுதான் நல்லது. நாளுக்கு நாள் அந்த பேய்யின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் யாருக்காவது ஆபத்து வந்தாள். அதை என்னால் தாங்க முடியாது. நான் சென்று அழைத்து வருகிறேன்." என்று கூறிவிட்டு ஹாரூஷ் தேவையான பொருளை எடுக்க அவன் அறைக்கு சென்றான். ஹம்சிக்கு அவனை அனுப்ப விருப்பம் இல்லை.

"சிவா நீயும் ஹாரூஷ்யுடன் சென்று வா" என்று ஹம்சி கூறினாள்.

"நாங்களும் சென்றுவிட்டாள் உங்களை யார் கவணித்துக்கொள்வது." என்று சிவா கேட்டான். பதில் கூறாமல் ஹம்சி மேலே சென்றாள். அவள் ஹாரூஷ்யின் அறை கதவை தட்டினாள்.

"உள்ள வாங்க" என்று ஹாரூஷ் குறள் கேட்டதும். மெதுவாக ஹம்சி உள்ளே சென்று கதவை மூடினாள். ஹம்சியை கண்டதும் ஹாரூஷ் சந்தோஷத்தில் மனதில் துள்ளி குதித்தான்.

ஹம்சி அவன் கண்களை காணாமல் அவன் அருகில் சென்றாள். ஹாரூஷ் அவளை கண் இமைக்காமல் கவணித்தான்.

"ஹாரூஷ்." அவள் கண்கள் அவனை கண்டது.

"என்ன ஹம்சி." ஹம்சி பதில் கூறாமல் அவள் உதட்டை கடித்தால். பதற்றத்தில் அவள் கைவிரல்களில் விளையாடினாள். அவள் பதற்றத்தை உணர்ந்த ஹாரூஷ். அவளை நெருங்கினான். அவன் நெருங்கியதும் அவள் உடல் சிலிர்த்தது. அவனால் அவள் உடலில் வந்த மாற்றத்தை கண்டு ஹாரூஷ் மகிழ்ந்தான். அவள் அவனை விட்டு விழகி பின்னால் நடந்தாள். மனம் ஒடிந்த ஹாரூஷ் அவளை இம்முறை நெருங்கவில்லை.

"ஹாரூஷ் நீ தனியா இந்த நேரத்தில் வெளியே போகாதே." என்று மனதில் பயத்துடன் குழந்தை போல் ஹம்சி கூறினாள். அவள் தன்மீது அக்கறை கொண்டு இருப்பதை உணர்ந்த ஹாரூஷ் மகிழ்ந்தான். ஆனால் அதை வெளி காட்டவில்லை.

"இல்ல நான் இப்போ வெளியே போகளேன பெரிய பிரச்சினையில் நாம் சிக்கிக்கொள்வோம். அதனால் நான் செல்வதே உச்சிதம்." என்று ஹாரூஷ் கூறினான்.

"இல்ல ஹாரூஷ் எனக்கு பயமாக இருக்கு என்று." முதல் முறை தயக்கத்தோடு தன் உணர்வை ஹாரூஷ்யிடம் கூறினால். ஹாரூஷ் மகிழ்ந்தாழும் அவள் வெளிப்படையாக தன்னிடம் கூறாதாதை எண்ணி வருந்தினான்.

"நீ எதற்காக பயப்படுகறாய்" என்று ஹாரூஷ் அவள் கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவன் போல் நடித்தான்.

"அது அது வந்து." என்று ஹம்சி தயங்கினாள். ஹாரூஷ் கண்கள் அவள் உதடை நோக்கி நடந்தது. அவளை அள்ளி அனைத்து முத்தமிட வேண்டும் என்று அவன் மனதில் தோன்றியது. எங்கு தன்னை மீறி மீண்டும் அவளை முத்தமிட்டுவிடுவானோ என்று எண்ணி அவளை காணாமல் திரும்பி நின்றான். அவன் திரும்பி நின்றதும் தன்னை பார்க்க அவனுக்கு விரும்பும் இல்லையோ என்று தவராக நினைத்தாள்.

"இங்க இருந்த போ ஹம்சி" என்று ஹாரூஷ் மெல்ல கூறினான்.

"ஏன் ஹாரூஷ் நான் இங்க இருக்கிறது உனக்கு பிடிக்களையா." என்று தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடை தெரிய குழந்தையை போல் வினவினாள். என்ன செல்வது என்று தெரியாமல் ஹாரூஷ் பல்லை கடித்தான்.

"ஹாரூஷ்." என்று மீண்டும் அழைத்தாள். அவன் தன்னை கட்டுப்படுத்தி அவன் உணர்வை தடுக்க தன் மனதில் கட்டிக்கொண்டு இருக்கும் சுவரை அவள் மெல்ல மெல்ல உடைத்துக்கொண்டு இருந்தாள்.

"இங்க இருந்து சென்றுவிடு ஹம்சி. உன் நன்மைக்குத்தான் கூறுகிறேன்." என்று ஹாரூஷ் கூறினான்.

"என் நன்மைக்கா என்ன ஹாரூஷ் கூறுகிறாய். இங்கு எனக்கு என்ன ஆபத்து உள்ளது. ஹாரூஷ் என்னை பார்த்து பேசு." என்று ஹம்சி கூறினாள்.

"ஹம்சி போ." என்று மிகவும் கஷ்டப்பட்டு ஹாரூஷ் கூறினான்.

"நீ சொல்லாம நான் இங்க இருந்து போகமாட்டேன்." என்று ஹம்சி பிடிவாதம் பிடித்தாள். அவளை திரும்பி பார்த்து.

"உன்ன பார்த்தா எனக்கு முத்தம் குடுக்கனு போல இருக்கு டி." என்று ஹாரூஷ் தன் மனதில் புதைக்க நினைத்ததை வார்த்தையால் அவளிடம் கத்தினான். அதை கேட்டு அதிர்ந்து போன ஹம்சி உடல் எல்லாம் சிலிர்த்தது. வெக்கத்தில் தலை குனிந்தாள். அவள் தவராக எண்ணிவிட்டாலோ என்று எண்ணி ஹாரூஷ் பயந்தான். ஆனால் அவள் உணர்வுகளையும் அவன் வார்த்தைகள் தூண்டியதை ஹாரூஷ் கவனிக்கவில்லை. எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாக நின்றார்கள். பின் ஹம்சி அங்கு இருந்து செல்ல திரும்பி நடந்தாள்.

போகதே ஹம்சி என்று ஹாரூஷ் மனதில் எண்ணிணான். அவள் தன்னைவிட்டு விளகி செல்வதை அவனால் ஏற்க்க முடியவில்லை. அவளை தடுக்க எண்ணினான். ஹம்சி சட்டென்று நின்னால். பின் மெல்ல திரும்பி அவனை பார்த்தாள். இருவர் கண்களும் ஒருவருடன் ஒருவர் பேசியது. அவன் அவளை நெருங்கி வந்தான். விளகாமல் அவள் நின்றாள். அவனும் நெருங்கி நின்றான். அவள் அவனை தடுக்கவில்லை. சட்டென்று.

"ஹாரூஷ் நேரம் ஆகிறது கீழே இறங்கி வா" என்று சிவா கத்தினான். மீண்டும் பயம் ஹம்சியை பற்ற ஹாரூஷ்யை பார்த்தாள். பின் வெளியே செல்ல கதவின் அருகில் சென்றாள். அவள் விளகி செல்வதை தாங்க முடியாமல் அவள் பின் சென்று. அவள் கையைய் பற்றி அவளை இழுத்து கதவின் மீது சாய்த்தான். எதுவும் புரியாமல் ஹம்சி திடுக்கிட்டு நின்றாள். சட்டென்று ஹாரூஷ் தன் இதழை அவள் இதழுடன் பதித்தான். ஹம்சி அதிர்ந்தாள். அவனை விளக்கவும் இயலாமல் அனைக்கவும் முடியாமல் நின்றாள். அவன் அவள் இதழை மெல்ல சுவைத்தான். தன் மனதில் இருந்த குழப்பத்தை விடுத்து ஹம்சி அவன் தோளை பற்றினால். அவள் தொட்டதும் ஹாரூஷ் உடலில் மிண்சாரம் பாய்ந்தது. மெல்ல விளகி அவள் கண்டத்தில் முத்தமிட்டான். பின் அவன் நெற்றியில் முத்தமிட்டான். பின் மீண்டும் அவள் இதழை முத்தமிட்டான். தன்னை மறந்த ஹம்சி தன் கட்டுபாட்டை இழந்து அவனிடம் தன்னை ஒப்படைத்தாள். அவள் கைகள் அவனின் தலையை கொய்தது. அவன் கைகள் மெல்ல அவளின் இடையை பற்றி அவனுடன் இருக்க அனைத்தான். அவன் அவள் இடையை பற்றியதும் அவள் உடல் எங்கும் மிண்சாரம் பாய்ந்தது.

இருவரும் தங்களை மறந்து காதலில் மூழ்கினர். மெல்ல அவள் இதழை விட்டு விழகினான். வெக்கத்தில் அவள் தலை குனிந்தாள். அவள் மெல்ல அவளின் அழகை பற்றி அவள் முகத்தை உயர்த்தினான். அவள் மெய் மறந்து அவன் கண்களை பார்த்தாள். இருவரும் வார்த்தைகள் பறிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் கண்கள் பேசுவதையும் தடுக்கவில்லை. வெகு நேர அமைதிக்கு பின்.

"ஹம்சி" என்று ஹாரூஷ் முனங்கினான். அவன் அவள் பேயரை கூறியதும் ஹம்சிக்கு உடல் சிலிர்த்தது. வெக்கத்தில் கன்னம் சிவந்தது.

"ஹம்சி என்ன உனக்கு பிடிக்கும் ஆனா ஏன் என்ன விட்டு விழகி போர? உன் கண்கள்ள என் மேல இருக்க காதல நான் பார்த்து இருக்கேன். அத மறைத்து ஏன் என் கிட்ட இருந்து விழகி போர? சொல்லு ஹம்சி." அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.

"ஹம்சி பதில் சொல்லு."

"ஹாரூஷ்."

"ஹாரூஷ் நேரம் ஆகுதுட சீக்கிரம் வா டா." என்று சிவா கத்த. ஹாரூஷ் பல்லை கடித்தான்.

"ஹாரூஷ் உன் கூட நானும் வரேன்" என்று ஹம்சி கூறினாள். அவன் மெல்ல புன்னகைத்துவிட்டு அவள் கன்னத்தை வருடினான். அவள் கண்கள் தானாக மூடியது.

"ஹம்சி நான் போய்ட்டு சீக்கிரம் வந்துவிடுவேன். நீ எதற்க்கும் கவலைப்படாதே" என்று கூறி அவளை சம்மதிக்க வைத்தான்.

"பத்திரம் ஹாரூஷ்" என்று பயத்துடன் கூறினாள். சட்டென்று மீண்டும் அவள் இதழை ஹாரூஷ் அவன் இதழாள் பற்றினான். இதை எதிர் பார்க்காத ஹம்சியின் இதயம் அதி வேகத்தில் துடித்தது.
*****
ஹாரூஷ் தனியாக காட்டுக்குள் இருட்டில் ஜீப்பை ஓட்டி சென்றான். பயம் மனதில் இருந்தலும் அதை வெளி காட்டாமல் அவன் சென்றான். எவ்வித தடங்கலும் இன்றி அவன் மந்திரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அடைந்தான். அங்கு அவர்களிடம் நடந்ததை கூறி அவர்களின் உதவியை நாடினான். அவர்களும் அவனுக்கு உதவி செய்வதாக வாக்கு அளித்தார்கள். அவர்கள் இரண்டு நாளில் வருவதாக கூறினார்கள். அதன் பின் ஹாரூஷ் அங்கு இருந்து புறப்பட்டான்.

ஹாரூஷ் வீட்டிற்கு திரும்பினான். பயத்தை வெளிப்படுத்தாமல் இருக்க பாடல்களை கேட்டுக்கொண்டே அவன் வண்டி ஓட்டினான். இன்னும் பாதி தூரம் கடக்க உள்ளது. சட்டென்று ஹாரூஷ்க்கும் ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் திரும்ப அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த இடத்தை விட்டு சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம் என்று எண்ணிணான். திடிரென்று அவன் ஜீப் கண்ணாடியை எதற்சியா பார்த்த அவன் தன் பின்னால் யாரோ உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ந்தான். சட்டென்று ஜீப்பை நிருத்திவிட்டு பின்னால் திரும்பி பார்த்தான். அங்கு யாரும் இல்லை. பயத்தில் அவன் கைகள் நடுங்கின. இதய துடிப்பு அதிகரித்தது. அங்கு இருந்து வேகமாக புறப்பட்டான். அவன் யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம் என்று ஜீப்பை திருப்ப முயர்ச்சி செய்தான். ஜீப்பை வேகமாக எடுத்ததும். சட்டென்று ஹம்சியின் உருவம் தன் கார் முன் தோன்றா நிலை தடுமாறி ஜீப்பை திருப்பி ஒரு மர்த்தின் மீது மோதினான்.

"ஹம்சி" என்று பயத்தில் கத்திக்கொண்டே திரும்பினான் ஆனால் அங்கு ஹம்சி இல்லை. பயம் அவனுக்கு மேலும் அதிகரித்தது. கேகமாக வண்டியை வீட்டுக்கு திருப்பினான். ஹம்சிக்கு ஆபத்து என்று உணர்த்தவே அவ்வாறு தோன்றியதா என்று எண்ணிணான். சட்டென்று ஒரு உருவம் நீழ கூந்தலுடன் அவன் வண்டிக்கு முன் ஓடியது. அவன் பயத்தில் வேகத்தை அதிகரித்தான். அவன் 120 வேகத்தில் ஜீப்பை ஓட்டினான். அந்த உருவம் அதைவிட வேகத்தில் அவனுக்கு முன் ஓடியது.
*****
ஹாரூஷ்காக அனைவரும் காத்து இருந்தார்கள். வெகு நேரம் ஆகியும் அவன் வரவில்லை.

"ஹம்சி நம்ம போய் தூங்களாம். ஹாரூஷ் வந்துவிடுவான்." என்று சிவா கூறினான்.

"நீங்க போய் தூங்குங்க நான் இங்கேயே அவனுக்காக காத்துட்டு இருக்கேன்." என்று ஹம்சி கூறினாள்.

அனைவரும் சென்று உரங்கினர். ஹம்சி ஹாரூஷ்யை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயர்சித்தாள். ஆனால் அவன் எடுக்கவில்லை. பயத்தில் அவள் அங்கு அமர்ந்து இருந்தாள். அசந்து அவள் டிவியின் முன்னே உறங்கிவிட்டாள். அவள் உறங்கியதும். அந்த பேய் அங்கு வந்தது. உறங்கிக்கொண்டு இருக்கும் ஹம்சியின் முகத்தை பார்த்தது. அவள் கழுத்தை நெறிக்க அவளை நெருங்கியது.

திடிரென்று அடி வயிற்றில் இருந்து ஒரு பெண் அழும் குறள் கேட்டு ஹம்சி சட்டென கண் விழித்தாள். அவள் முன் இருந்த நார்காளியில் ஒரு பெண் தலைகீழாக இருப்பதை கண்டு அவள் அதிர்ந்தாள். பயத்தில் கண்களை மூடி கத்தினாள். சட்டென்று ஹாரூஷ் அங்கு வந்து அவளை அனைத்தான். அவள் சத்தம் கேட்டு அனைவரும் அங்கு வந்தார்கள். கதிரை தவிர.

"ஹம்சி என்ன ஆச்சி" என்று ஹாரூஷ் பதற்றத்துடன் கேட்டான். அவள் அந்த நார்காளியை காட்டினால்.

"அங்க எதுவும் இல்ல ஹம்சி" என்று ஹாரூஷ் கூறினான்.

"ஹாரூஷ் அந்த அந்த பெண் அங்க தலைகீழாக உட்கார்ந்து இருந்தா. அவ கண்கள் என்னையே பார்த்துட்டு இருந்தது. அவ எரிந்த முகம் பார்க்க மிகவும் பயமாக இருந்து." என்று அழுதாள்.

"ஒன்றும் இல்லை ஹம்சி நீ பயப்படாத. நாங்க இருக்கோம்" என்று ஹாரூஷ் கூறினான். பின் அனைவரும் உறங்க சென்றார்கள்.
*****
"ஹாரூஷ் நேத்து ஏன்டா அவ்வளவு நேரம் ஆனது. மந்திரவாதி என்ன சொன்னாறு??? என்று சிவா கேட்டான். ஆனால் அவன் கேட்ட கேள்விக்கு ஹாரூஷ் பதில் கூறவில்லை. அவன் வேறு யோசனையில் மூழ்கி இருந்தான்.

"ஹாரூஷ்." என்று சிவா அழைத்தான்.

"சிவா நேத்து ஒன்று நடந்தது."

"என்ன டா???

"நேத்து நான் திரும்பி வரும்போது. இங்க திரும்ப வர வேண்டா இங்க இருந்து போய் யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம்னு எண்ணினேன். அப்போ."

"அப்போ என்ன ஆச்சி ஹாரூஷ்."

"ஹம்சி என் ஜீப் முன்னாடி வந்து நின்னா டா."

"ஹம்சி எப்படி டா உன் ஜீப் முன்னாடி வந்து நிற்க முடியும் அவ தான் இங்க இருந்தாளே."

"அந்த பேய் தான் ஹம்சி மாதிரி வந்தது."

"ஓ அப்பறம் என்ன நடந்தது."

"அது நான் வீடு வரவரைக்கும் என் கார் முன்னாடி ஓடி வந்துட்டே இருந்தது டா."

"அவ்வளவு வேகமாவா???

"ஆமாம் சிவா காரவிட வேகமா வந்தது."

"அப்போ அது நம்மல இங்க இருந்து போகவிட மாட்டிங்குது."

"ஆமாம் சிவா அது மட்டும் இல்ல. நீ இன்னொரும் கவனித்தாயா???

"என்ன ஹாரூஷ்?

"ஹம்சி"

"என்ன???

"நீ ஒன்ன கவனிக்கனும். முதல் முற நான் அந்த பேய்ய பார்த்தது ஹம்சி உருவத்துல. அடுத்து மாலதி அவளும் ஹம்சி கிட்ட பேசரதா நெனச்சி தான் அந்த பேய்கிட்ட பேசினா. திரும்ப ஒரு நாள் நான் ஹம்சி குறள் கேட்டு தான் நடு ராத்திரி எழுந்து காட்டுக்குள் போனேன். அதுக்கு அப்பரம் காட்டுக்குள உங்கள காப்பத்தும் போது என்னோடு ஹம்சி உருவத்துல தான் அந்த பேய் நடந்து வந்தது. நேத்தும் ஹம்சி தான் என் கண்ணு முன்னாடி தெரிஞ்சா. மொத்ததுல அந்த பேய் ஹம்சி உருவத்துல தான் நம்ம கிட்ட வருது."

"அப்போ ஹம்சிக்கு பேய் பிடித்து இருக்கா??? என்று சிவா கேட்டான்.

"தெரியல."
*****
"வாங்க எல்லாரும் கண்ணாமூச்சி விளையாடலாம்." என்று மாலதி அழைத்தாள். அனைவரும் விளையாட தொடங்கினார்கள். கதிர் வரவில்லை. அவன் உடல் நிலை சரியாகவில்லை.

முதலில் பூஜா கண்களை கட்டினாள். அவள் அனைவரையும் விரட்டி பிடிக்க. அதில் ஹாரூஷ் அவள் கையில் மாட்டினான். ஹாரூஷ் கண்களை கட்டினான் சிவா.

"ஏய் ஹாரூஷ் மாலதிய தொடு அவள் உன் வலது பக்கம் இருக்கிறாள்." என்று சிவா கூறினான். ஹாரூஷ் அதற்கு தலை ஆட்டினான். பின் அவன் மாலதியை தொட்டுவிட்டான். மாலதியின் முகம் குழந்தையை போல் வாடியது. மாலதியின் கண்களை சிவா இருக்க கட்டினான். பின் விளையாட்டு துடங்கியது. திடிரென்று ஹாரூஷ் ஹம்சி மீது மோதினான். அவள் இதய துடிப்பு அதிகரித்தது. ஹாரூஷ் அவளை காதலுடன் பார்த்தான்.

"ஏய் வாங்க எல்லாரும் சென்று அமர்வோம் அவள் தனியாக விளையாட்டும்." என்று சிவா கூறினான். இரண்டு காதல் பறவைகளும் அங்கு இருந்து சென்று வாசலில் அமர்ந்தார்கள். மாலதி தனியாக தன் கையை நீட்டி அனைவரையும் தேடிக்கொண்டு இருந்தாள். அவளை கண்டு அவனைவரும் சிரித்தார்கள்.

"ஹம்சியை தொட்டுட்டேன்." என்று மாலதி கத்தினால். திடுக்கிட்டு அனைவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். அவளிடன் எழுந்து ஓடினார்கள்.

"மாலதி நீ யாரையும் தொடல." என்று சிவா கூறினான்.

"நான் தான் அவள் பிடித்து இருக்கனே. அவ என் கைல தான் இருக்கா." என்று மாலதி கூறினாள்.

"மாலதி அங்க யாரும் இல்ல ஹம்சி உனக்கு பின்னாடி இருக்கா." என்று ஹாரூஷ் கூறினான்.

"ஏய் விளையாடாதிங்க "என்று ஒரு கையில் அவள் துணியை கலட்டினால். அங்கு அவள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. ஆனால் அவளால் யாரையோ தொடுவதை உணர முடிந்தது. சட்டென்று கையை எடுத்த அவள் மயங்கி விழுந்தாள்.
*****
மாலதியை உறங்கவைத்துவிட்டு. கீழே சென்றார்கள். ஆனால் ஹம்சி மாலதியை கவனித்துக்கொள்ள நான் இங்க இருக்கேன் என்று கூறிவிட்டு அவள் அங்கே தங்கினாள். பூஜா, சிவா, ஹாரூஷ் மூவரும் திரும்ப விளையாட சென்றனர். ஹம்சி மாலதிக்கு பக்கத்திலே அமர்ந்து இருந்தாள்.

"ஹம்சி" என்று சிவா அழைக்கும் சத்தம் கேட்டு ஹம்சி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். அங்கு அவள் பார்த்த காட்சி அவளை நடுங்கவைத்தது. பூஜா, சிவா, ஹாரூஷ்யுடன் இன்னொறு பெண் விளையாடிக்கொண்டிருந்தாள். யார் என்று ஹம்சி அவளை உற்று பார்க்க. அந்த பெண் தலையை திருப்பி மேலே இருக்கும் ஹம்சியை கண்டு சிரித்தால். அவளை கண்டதும் ஹம்சி உயிரே நின்றுவிட்டது.

"ஹாசினி" என்று கத்தியவள் தலை கால் புரியாமல் கீழே ஓடினாள்.
*****

"ஹாசினி" my story title first time I have used in my story. I think you would have guessed who is 'hasini'. I will tell you in the next chapter. Only two are three chapters left. Hope you liked my story. 😘love you.

Continue Reading

You'll Also Like

2.8K 479 10
appadi ethuvum perusa illa.. solra alavuku puthusavum illa.. ஆனா.. முல்லை கதிரை பற்றி ஏதோ எழுதவும் ஏதோ சொல்லவும் aasai ♥️
62.7K 2.7K 21
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன...
20.7K 3.1K 59
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ...
403K 12.8K 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..