ஹாசினி

By prenica

62.2K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
நீர் வீழ்ச்சி
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1
ஹாசினி

கரடி பொம்மை

2.4K 121 30
By prenica

{really really badly unedited}

If you spot any mistakes. Please message me. Don't embarrass me. Too busy that's why I couldn't able to update little early.

Please please please forgive my mistakes.

Imagine the story.
*****

"சிவா ஹம்சினிக்கு என்ன ஆயிற்று??? அவள் எங்கே?" என்று ஹாரூஷ் பதற்றத்துடன் கேட்டான்.

"ஹாரூஷ் ஹம்சி காட்டுக்குள் மாட்டிக்கொண்டாள்" என்று பதறிக்கொண்டே சிவா கூறினான்.

"என்னடா சொல்லுர??? என்று ஹாரூஷ் கேட்க. சிவா நடந்தது அனைத்தையும் கூறினான்.

"சிவா நீ இவங்க இரண்டு பேரையும் பார்த்துக்கொள். நான் சென்று ஹம்சியை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஹாரூஷ் காட்டுக்குள் சென்றான்.
*****

ஹம்சி வந்த திசையிலேயே திரும்ப ஓடினாள். அவள் கண்களில் ஜீப் தென்பட்டது.

"சிவா எப்படியாவது ஜீப்பை எடு." என்று கூறிவிட்டு வேகமாக சென்று ஜீப்பின் அருகில் நின்று மூச்சி வாங்கினால்.

"சிவா" என்று திரும்பி பார்த்தவள் அப்பொழுது தான் அவள் அருகில் சிவா இல்லாததை உணர்ந்தாள். சிவா, சிவா என்று அடி வயிற்றில் இருந்து கத்தினாள். எந்த பதிலும் கிடைக்காத்தால் அமைதியானால். அவள் சென்று ஜீப்பில் அமர்ந்தாள். காட்டுக்குள் நரி ஊலையிடும் சத்தம் அவளை நடுங்கவைத்தது. அவள் எதிரே இருந்த மரத்தில் இருந்து ஒரு ஆந்தை இவளை கண்டு அலற அடி வயிற்றில் உண்டான் பயம் உச்சி வரை பாய்ந்தது. கண்களை மூடி ஜீப்பில் சாய்ந்து அமர்ந்தாள். விடியும் வரை இவ்வாரே இருந்துவிட்ட முடிவு செய்தாள்.

"ஹம்சி" என்று அவளை அழைக்கும் ஹாரூஷ்யின் குரல் அவளுக்கு கேட்டது. ஆதே குரல் ஹாரூஷ்க்கும் கேட்டது.

"நான் அவளை அழைக்கவே இல்லையே. யார் ஹம்சியை என் குரலில் அழைக்கிறது. ஹம்சி" என்று இம்முறை ஹாரூஷ்யே கத்தினான்.

ஹம்சி அந்த குரல் கேட்கும் திசையை நோக்கி நடந்தாள். ஹாரூஷ் வேகமாக ஓடி வந்து ஜீப்பின் அருகில் நின்றான். அங்கு ஹம்சி இல்லை. ஹம்சி "ஹாரூஷ் ஹாரூஷ் " என்று கத்திக்கொண்டே காட்டின் மறுபுறம் நடந்தால். ஹாரூஷ் "ஹம்சி " என்று மீண்டும் அழைத்தான். ஆனால் அவனுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவன் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுக்கு ஹம்சியை எண்ணி மேலும் பயம் அதிகரித்தது. ஒருவினாடி யோசித்தான்.

"நான் வந்த பாதையில் அவள் எதிரே வரவில்லை. அவள் இங்கும் இல்லை அப்படி என்றால் அவள் எதிர் திசையில் காட்டிற்குள் சென்று இருக்க வேண்டும்." ஹாரூஷ் ஹம்சியை பின் தொடர்ந்தான்.

"ஹாரூஷ், ஹாரூஷ் எங்க இருக்க" என்று கேட்டுக்கொண்டே ஹம்சி நடந்தாள். அவள் ஒரு ஆறு முன் சென்று நின்றாள். நல்லிரவு இருட்டில் ஆற்றில் நீர் ராட்சச வெள்ளம் ஓடுவது போல் அவள் கண்களுக்கு புலப்பட்டது. ஆற்றுக்குள் எட்டி பார்த்தாள். அவள் பிண்பத்தை கண்டாள். சட்டென்று அவள் பின்னால் இருந்து யாரோ எட்டி பார்ப்பதை கண்டு திடுக்கிட்டு திரும்பினாள். எரிந்து போன அந்த உருவம் அவள் முன் நின்றுக்கொண்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டு தடுமாறி ஆற்றில் விழுந்தாள். அந்த உருவம் கையை நீட்டியது. ஹம்சி அதை கவனித்துக்கொண்டே ஆற்றுக்குள் விழுந்தாள். சட்டென்று அந்த உருவம் மறைந்ததும்.

அங்கு ஓடி வந்த ஹாரூஷ். ஹம்சி ஹம்சி என்று கத்தினான். ஆற்றுக்குள் மூழ்கிக்கொண்டு இருந்த ஹம்சியின் காதில் ஹாரூஷ்யின் குரல் கேட்டது. தண்ணீரில் இருந்து ஹம்சி தத்தலித்தாள். அதை கண்டதும் ஹாரூஷ் சட்டென்று ஆற்றுக்குள் குதித்தான். நீந்தி சென்று ஹம்சியை அள்ளி அனைத்தான். அவளை தூக்கிக்கொண்டு ஆற்றில் இருந்து வெளியே வந்தான். ஹம்சி மூச்சி விட இயலாமல் தடுமாறினாள். ஹாரூஷ் அவளை நெஞ்சோடு அனைத்தான். சற்று நேரத்தில் ஹம்சி கண்களை திறந்தாள்.

"ஹாரூஷ் இங்கு இருந்து செல்லலாம்." அவள் கூறியதும் ஹாரூஷ் அவளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து நடந்தான். ஹம்சி தடுமாறி நடந்தாள். ஹாரூஷ் அவள் தோள் மீது கை போட்டு அவளை அனைத்தவாறு நடந்தான். அவர்கள் இருவரும் ஜீப்பின் முன் வந்து நின்றனர். அப்பொழுது ஜீப் தானாக உயிர் பெற்றது. இருவரும் திடுக்கிட்டு ஜீப்பை பார்த்தார்கள். இருவரின் இதய துடிப்பும் அதிகரித்தது. ஹம்சி ஹாரூஷ்யை பார்த்தாள். ஹாரூஷ் ஹம்சியை பார்த்தான். அவர்கள் பயத்தில் என்ன செய்வது என்று புரியாமல் நடுக்கத்தில் நின்றனர்.

"வா போகலம்" என்று ஹாரூஷ் ஹம்சியை அழைத்தான். அவள் பதில் கூறாமல் நடந்தாள். அவர்கள் பின்னால் காய்ந்த இலைகள் நொருங்க யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

"திரும்பி பார்க்கதே ஹம்சி" என்று ஹாரூஷ் கூறினான். ஹாரூஷ் அவளை இருக்கி அனைத்தான். இருவரும் வேகமாக நடந்தனர்.

"என்னை காப்பாற்று" என்று ஒரு பெண் குரல் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டு நின்றனர். "ஹம்சி திரும்பி பார்க்காதே "என்று கூறினான்.

"ஹாரூஷ் யாரோ ஆபத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்" என்று ஹம்சி கூறினாள்.

"ஹம்சி இது உண்மை இல்ல அதை நம்பாதே. வா போகலாம்" என்று அவளை அழைத்தான்.

"ஹம்சி என்னை காப்பாற்று " என்று இம்முறை ஹம்சியின் தாய் குரல் கேட்டது.

"ஹாரூஷ் என் அம்மா" என்று கத்தினால். ஹாரூஷ் அவளை இழுத்து பிடித்தான்.

"ஹம்சி அது உண்மை இல்லை என்னை நம்பு" என்று கூறினான். மீண்டும் ஹம்சியின் தாய் குரல் கேட்டது. சட்டென்று ஹம்சியின் பின்னால் யாரே வேகமாக ஓடியதும் ஹாரூஷ் திடுக்கிட்டு பயத்தை கண்களில் வெளிப்படுத்தினான்.

"ஹாரூஷ் என்னது??? என்று பயத்தில் தடுமாறிக்கொண்டே ஹம்சி கேட்டால்.

"ஒன்றும் இல்லை ஹம்சி வா போகலாம் " என்று அவளை அழைத்தான்.

"ஹம்சி என்னை காபாத்து " என்று அலும் குரலில் அவள் தாய் கத்தியது மீண்டும் கேட்டது.

"ஹம்சி அது உண்மை இல்ல வா போகலாம்" என்று மீண்டும் அழைத்தான்.

"இல்ல ஹாரூஷ் என்ன அம்மா தான் " என்று கூறிவிட்டு மீண்டும் காட்டுக்குள் ஓடினாள். அவளை பின் தொடர்ந்து ஹாரூஷ் ஓடினான். அவன் வேகமாக ஓடியதில் அவன் முன் இருந்த மரத்தின் வேர் ஒன்றை அவன் கவனிக்கவில்லை. அதில் கால் தடுக்கி கீழே விழுந்தான். அவன் நிமிர்ந்து பார்த்த போது ஹம்சி அங்கு இல்லை.
*****

மாலதி உறங்கிவிட்டாள். ஆனால் பூஜாவிற்கு உறக்கம் வரவில்லை. அவள் அறையை விட்டு வெளியே சென்றாள். சிவா தனியாக அமர்ந்து தொலைக்காட்சியில் பாடல் பார்த்துக்கொண்டு இருந்தான். பூஜா அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. பூஜாவின் முகம் வாடியது. சற்று அவனிடம் நெருங்கி அமர்ந்தாள். அப்பொதும் சிவா அவளை கவனிக்காதவாறு அவன் இருந்தான். பூஜா மெல்ல அவன் தோள் மீது சாய்ந்தாள். அவன் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. அதை வெளி படுத்தாமல் அமைதியாக இருந்தான்.

அவள் மெல்ல அவன் கை விரல்களை பிடித்தாள். தன் கை விரல்களுடன் இனைத்துக்கொண்டாள். மெல்ல அவன் கையை உயர்த்தி அலுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். சில் என்று அவன் உடல் சிலுர்த்தது. அவன் பார்வை அவள் மீது பட்டது. அவன் கண்களை காண இயலாமல் வெக்கத்தில் தலை குனிந்தாள். அவன் மொல்ல அவன் முரட்டு   கைகளால் அவள் கன்னத்தை பிடித்தான். பூ போன்ற அவள் கன்னத்தை தன் உள்ளங்கையில் அள்ளியதும், கல் போன்ற அவன் கை பஞ்சு போல் மாறியது. அவன் கட்டை விரலால் அவள் உதடை மெல்ல உறசியதும் அவள் உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்தது. இதய துடிப்ப இருவருக்கும் எல்லை மீறியது. அவள் கண்களை திறந்தாள். அவன் கண்களை கண்டதும் வெக்கத்தில் கன்னம் சிவந்தாள். அவள் நெளிவத்தை கண்டதும். இந்த உலகத்தை வென்றது போல் அவனுக்கு தோன்றியது. நெரம் கடக்காமல் அவளை நெருங்கினான்.

தேனினும் சுவையான அவள் இதழ்களை இவன் இதழாள் மெல்ல சுவைத்தான். அவள் கண்களை இருக்க மூடினாள். இவனது கைகள் அவள் கூந்தலை பற்றியது. அந்த அடர்ந்த காட்டுக்குள் அவன் விரல்கள் கோலம் போட. இவள் நடுக்கம் தாங்காமல் அவன் கையை இருக்கி பிடித்தாள். அவன் தன் ஒரு கையால் வில் போல் வளைந்த சிருத்த அவள் இடையை பற்றி அவளை அள்ளி அவன் நெஞ்சோடு அனைத்தான். வேகத்தில் அவள் கீழ் இதழை மெல்ல கடித்தான். அவள் முனங்கினான். அந்த முனங்கல் சத்தத்தில் அவன் மெய் மறந்தான். இருவரும் சற்று விலகினர். இருவரும் பலமாக மூச்சி வாங்கினர். அவளால் அவன் கண்களை காண இயலவில்லை. தன் முகத்தை அவன் கழுத்தின் இடுக்கில் புதைத்து. அவனை கட்டி அனைத்தாள்.

அவன் அவளை அள்ளி தன் மடியில் அமர்த்தினான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"சிவா என்ன மன்னித்" அவள் வார்த்தையை முடிப்பதற்குள் அவன் அவள் உதட்டில் கை வைத்து தடுத்தான். பின் அவளை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான்.
*****
வேகமாக ஓடி வந்த ஹம்சி. இருட்டில் திக்கு முக்கு தெரியாமல் நின்றாள். நிலா வெளிச்சத்தில் தூரத்தில் சிறு வயதில் அவள் அப்பா கட்டிய மரத்தின் மீது உள்ள வீடு அவள் கண்களுக்கு தென்பட்டது. இரட்டு, காடு அனைத்தையும் மறந்து அவள் அந்த வீட்டின் அருகில் சென்றாள். அவள் வேகமாக மரத்தின் மீது ஏறினாள். அவளுக்கு சிறுவயது ஞாபகங்கள் அலை மோதியது. அந்த வீட்டின் உள்ளே சுற்றி முற்றி பார்த்தாள். அவளின் விளையாட்டு பொருள்கள் அங்கு இருந்தது. அதை மெல்ல தொட்டால். அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு கரடி பொம்மை அங்கு இருந்தது. அதை எடுத்து நெஞ்சோடு அனைத்து அழுக தொடங்கினாள்.

ஹாரூஷ் ஹம்சியை தேடி வெகு தூரம் சென்றான். சட்டென்று ஹம்சி அங்கு அவன் முன் நடந்து வந்தாள். ஹாரூஷ் அவளிடம் ஓடினான்.

"ஹம்சி" என்று கூறினான். அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். "என்ன ஆயிற்று ஹம்சி" என்று கேட்டான். அவள் பதில் கூற தயங்கினாள்.

"எதுவும் இல்லை ஹாரூஷ் வா போகலாம் " என்று மென்மையாக கூறினாள்.

"எதற்காக அப்படி ஓடினாய் ஹம்சி. உன் அம்மா நலமாக இருப்பார்கள் நீ எதற்கும் கவலைப்படாதே. வா " என்று அழைத்து சென்றான். அவன் திரும்பி நடந்ததும். ஹம்சி முகத்தில் வஞ்சகமான ஒரு சிரிப்பு தோன்றியது. இருவரும் அமைதியாக நடந்து சென்றனர்.

"ஹாரூஷ் உன்னால் என்னை காப்பாற்ற முடியாது" என்று சொல்லில் உணர்ச்சி இல்லாமல் கூறினால். ஹாரூஷ் நடுங்கி போனான். அவன் அவளை திரும்பி பார்த்தான். அவள் மெல்ல புன்னகைத்தாள்.

"என் உயிரே போனாலும் உனக்கு ஆபத்து வர நான் விட மாட்டேன்" என்று கூறினான். பின் இருவரும் நடந்து வீட்டிற்கு சென்றனர்.
*****

ஹம்சி இன்னும் அந்த கரடி பொம்மையை கட்டி பிடித்து அழுது கொண்டிருந்தாள். அவள் அவளையே மறந்தாள். தேடி வந்த ஹாரூஷ் என்ன ஆனான் என்று அவள் எண்ணவில்லை.
*****

ஹாரூஷ்யும் ஹம்சியும் வீட்டுக்குள் சென்றானர். அங்கு பூஜாவும் , சிவாவும் இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். ஹாரூஷ்யை கண்டதும் சிவாவும் , பூஜாவும் திடுக்கிட்டு எழுந்தனர். ஹாரூஷ் அவர்களை கண்டு மெல்ல புன்னகைத்தான்.

"ஹாரூஷ் என்ன நீ மட்டும் தனியாக வந்து இருக்க" என்று சிவா கேட்டான்.

திடுக்கிட்டு திரும்பி பார்த்த ஹாரூஷ் அதிர்ந்து போனான்.
*****

Omg don't scold me please.
I know there are lot of mistakes.
But I'm sorry for that because I said I have no one to help me now.
I'm a lonely queen😉😔

My next update will take little longer so please don't scold me.
See ya🙏

Continue Reading

You'll Also Like

29.1K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
882K 86.9K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
9.2K 643 30
தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)
49.4K 4.1K 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...