ஹாசினி

By prenica

62.1K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
நீர் வீழ்ச்சி
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1
ஹாசினி

காட்டு வழி

2.4K 143 29
By prenica


{unedited} please please  forgive my errors. I didn't correct it properly.sorry 😔
*****

மாலதி அலரும் சத்தம் கேட்டதும் அனைவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அனைவரும் வேகமாக கீழே இறங்கி ஓடினார்கள்.

"பூஜா, ஹம்சி , நீங்க இரண்டுபேரும் இங்கே இருங்க. நாங்க போய் மாலதியை கூட்டிக்கொண்டு வருகிறோம். நீங்க பத்திரமாக இருங்கள்". என்று கூறிவிட்டு சிவா ஹாரூஷ் இருவரும் காட்டுக்குள் நுழைந்தனர்.

சில வினாடிக்கு முன்:
மாலதி தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் எதிரே இருக்கும் மரங்களின் நடுவில் இருந்து ஒரு உருவம் நகர்வதை மாலதி கவனித்தாள்.

"யார் அங்கே??? என்று மாலதி கேட்டாள். பின் அவள் தன்னை மறந்து காட்டுக்குள் நடந்தாள். அவள் பாதி வழி சென்ற பிறகுதான் அவள் தன்னை உணர்ந்தாள். நடு காட்டில் தனியாக நின்றுக்கொண்டு இருந்தாள்.

அப்போது அவள் பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

"யாரது ??? எந்த பதிலும் இல்லை. சட்டென்று அவள் பின்னால் யாரோ வேகமாக ஓடியதும் திரும்பி பார்க்காமல் பயத்தில் ஓடினாள். அவள் வெகு தூரம் ஓடி சென்று. மரத்தின் மீது ஒரு கையும் அவள் நெஞ்சின் மீது ஒரு கையும் வைத்து மூச்சி வாங்கினாள். அப்போது சட்டென மரத்தின் மீது இருந்து ஏதோ விழுந்ததும். பயத்தில் மீண்டும் ஓடினாள்.அவள் எதிரே பத்தடி தூரத்தில் ஒரு மரத்தின் அடியில். ஒரு பெண் திரும்பி அமர்ந்துகொண்டு அடி தொண்டையில் இருந்து அழுதுக்கொண்டு இருந்தாள். அதை பார்த்ததும் மாலதி பயத்தில் எச்சிலை முழுங்கினாள். அவள் இதய துடிப்பு எல்லை மீறியது.

"யார் நீ" என்று அவள் கேட்டதும். அந்த பெண் மெல்ல திரும்பி பார்த்தாள். அவள் முகம் அவள் கூந்தலால் மறைக்கப்பட்டு இருந்தது. அவள் முகம் சரியாக தெரியவில்லை. மாலதி அவளை நோக்கி அடி எடுத்து வைத்தாள். சட்டென்று அந்த பெண்ணின் பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து அவள் கூந்தலை பிடித்து அவளை இழுத்து சென்றார். அந்த பெண் வலியில் கத்தினாள். மாலதி என்ன செய்வது என்று அறியாமல் சிலை போல் நின்று அதை கவனித்துக்கொண்டு இருந்தாள். அந்த பெண்ணை இழுத்து சென்றவர் யார் என்று மாலதிக்கு சரியாக தெரியவில்லை.

அடுத்த வினாடி அந்த பெண்ணை இழுத்து சென்றவர். அவளுக்கு தூக்கிட்டு மறைந்தார். அந்த பெண் மூச்சி விட இயலாமல் துடிதுடித்தாள். இதை கவனித்த மாலதி அந்த பெண்ணை காப்பாற்ற வேகமாக ஓடினால். அவள் நெருங்கியதும் மாலதியின் கண் முன்னே அந்த பெண் மறைந்து போனால். ஓடி சென்ற மாலதி திடுக்கிட்டு நின்றாள். பயத்தில் மீண்டும் ஓடினால் யாரோ மாலதி என்று அழைத்ததும் நின்று திரும்பி பார்த்தாள். அங்கு தூக்கிட்டபட்ட பெண் நின்றுக்கொண்டு இருந்தாள். அவள் ஏதோ கூறியதும் அடி வயிற்றில் இருந்து மாலதி அலரினாள் பின் மாயங்கினாள்.

காட்டுக்குள் ஓடி வந்த சிவா, ஹாரூஷ் மாலதியை கண்டதும் ஓடி வந்து அவளை எழுப்பினர். ஆனால் அவள் கண் திறக்கவில்லை. சிவா அவளை தூக்கி தோள் மேல் போட்டான். பின் அவளை தூக்கிக்கொண்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர்.

அவளை தட்டி எழுப்பினர். ஆனால் அவள் கண் விழிக்கவில்லை.

"சிவா அவ தூங்கட்டும். அவள எழுப்ப வேண்டா" என்று ஹம்சி கூறினாள்.

"சரி". என்று கூறிவிட்டு சிவா எழுந்து அவள் அறையை விட்டு வெளியே சென்றான். அவன் வெளியே செல்லும்வரை பூஜா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். ஆனால் அவன் அவளை பார்க்காமல் சென்றுவிட்டான்.

ஹாரூஷ் மெல்ல கட்டிலை விட்டு எழுந்து நின்றான். அவன் கண்கள் ஹம்சி மீது பட்டது. ஆனால் அவள் அவனை கவனிக்காமல் மாலதியின் அருகில் சென்று அமர்ந்தாள். ஹாரூஷ் பூஜாவை பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அன்று இரவு அனைவரும் நிம்மதியாக உரங்கினர்.
*****
காலை எழுந்ததும் மாலதியை காண சிவாவும், ஹாரூஷ்யும் அவள் அறை சென்றனர். மாலதி கண் விழிக்காமல் உரங்கிக்கொண்டு இருந்தாள். பூஜா , ஹம்சி அமைதியாக அவள் அருகில் அமர்ந்து இருந்தார்கள். மாலதி மெல்ல கண் விழித்தாள்.

அவள் கண் விழித்ததும் அவள் பார்வை ஹம்சி மீது பட்டது. சட்டென்று அவளை பார்த்து பயந்து அவளை விட்டு விழகி சென்றாள். அவளை அனைவரும் ஆச்சிரியமாக பார்த்தனர். மாலதி கண்களில் தெரிவது பயமா, கோபமா, ஏக்கமா என்று யாருக்கும் தெரியவில்லை.

"என்ன ஆயிற்று மாலதி "என்று ஹம்சி கேட்ட உடன் மாலதி கண் கலங்கினாள். ஹம்சி அவளிடம் நெருங்கியதும் மாலதி அவளை நெருங்க விடாமல் தடுத்தாள். ஹம்சி அவளை புரிந்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள். அவளை சிவாவும் பின் தொடர்ந்தான்.

"மாலதி" என்று ஹாரூஷ் அழைத்ததும் மாலதி நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன நடந்தது??? என்று ஹாரூஷ் கேட்டான்.

"ஹாரூஷ் " என்று தயங்கினாள்.
*****
"சிவா கோவிலுக்கு போகலாமா" என்று ஹம்சி கேட்டாள்.

"சரி ஹம்சி எல்லாரையும் அழைத்து வருகிறேன்".

"இல்ல சிவா நீயும் , நானும் மட்டு செல்லலாம்" என்று ஹம்சி கூறினாள்.

"சரி ஹம்சி அவர்களிடம் சொல்லிட்டு வருகிறேன் " என்று கூறிவிட்டு சிவா சென்றான்.

"ஹாரூஷ் நானும், ஹம்சியும் கோவிலுக்கு செல்கிறேம்" என்று கூறினான்.

"நீங்க மட்டுமா??? என்று ஹாரூஷ் குழப்பத்துடன் கேட்டான்.

"ஆமாம் ஹாரூஷ் "

"சரி பத்திரமாக சென்று வாருங்கள் " என்று ஹாரூஷ் கூறினான்.
*****
அவர்கள் இருவரும் ஹாரூஷ்யின் ஜீப்பில் கோவிலுக்கு சென்றனர். அதே சமையம் ஹாரூஷ் மாலதியிடம் நடந்ததை விசாரித்தான்.

"மாலதி நீ எப்படி காட்டுக்குள்ள போன???

"ஹாரூஷ் எனக்கு என்ன நடந்ததுனு தெரியல. நான் ஒருத்தர் நம்ம வீட்டு முன்னாடி நடந்து போனத மட்டும் தான் பார்த்தேன். அதுக்கு பிறகு நான் எனக்கே தெரியாம நடு காட்டுக்குள்ள போய்ட்டேன்".

"அது எப்படி மாலதி உனக்கே தெரியாம போன??? என்று பூஜா கேட்டாள்.

"பூஜா எனக்கு சத்தியமா தெரியல".

"சரி மாலதி அதுக்கு பிறகு என்ன நடந்தது??? என்று ஹாரூஷ் கேட்டான்.

அவள் நடந்ததை அனைத்தையும் அவர்களிடம் கூறினாள். இறுதியாக அந்த பெண் அவளிடம் என்ன கூறினாள் என்று கூற வந்த மாலதி தயங்கினாள்.
*****
"சிவா பழம், காய் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம்".

"சரி ஹம்சி". இருவரும் கடைக்கு சென்றனர்.

அதற்குள் மாலதி அந்த பெண் கூறியதை ஹாரூஷ் , பூஜாவிடம் கூறினால்.

"ஹாரூஷ் அவ என்ன சொன்னா னா... அவ உங்கள விட மாட்டா. அவளுக்கு நீங்க தேவ. அவ உங்கள பார்த்துட்டே இருக்கா. உங்களால் இங்கு இருந்து தப்பி செல்ல முடியாது. இங்கு நீங்கள் தானாக வரவில்லை அவள் தான் உங்களை வரவழைத்தாள். அதுக்கு அப்புறம் அவ சொன்னது என் தலையில இடி விழுந்தது போல இருந்தது".

"என்ன சொன்னா மாலதி".

"அவ........ இன்னும் சில நாட்களில் அவள் உங்களை நெருங்கிவிடுவாள். "ஹம்சியால்"..... இதுக்கு பிறகு அவ மறைந்துவிட்டாள்.

"என்ன மறைந்துடாளா??? இதுக்கு என்ன அர்த்தம்??? என்று பூஜா பயத்துடன் கேட்டாள்.

"ஒரு வேலை ஹம்சியால் நமக்கு ஆபத்து என்று கூற வந்ததோ???" என்று பூஜா கேட்டாள்.
*****
"சிவா நீ போய் சின்ன வெங்காயம் எடுத்துட்டு வா. நான் பழங்கள் எடுத்து வருகிறேன்".

"சரி ஹம்சி".

சிவா வெங்காயம் எடுத்து வர சென்றான். ஹம்சி பழங்கள் வாங்கிக்கொண்டு இருந்தாள். சில வினாடியில் சிவா வெங்காயம் எடுத்துக்கொண்டு ஹம்சியிடம் வந்தான். ஹம்சி அந்த வெங்காயத்தை வாங்கி பார்த்தாள். அதை பார்த்தும் அவள் திடுக்கிட்டு நெஞ்சில் கைவைத்தாள்.

"என்ன ஹம்சி என்ன ஆயிற்று??? என்று சிவா கேட்டான்.

"உன் கூட எல்லாம் எப்படி பூஜா குடும்ப நடத்த போராலோ. அதை என்னி தான் என் நெஞ்சில் கைவைத்தேன்" என்று ஹம்சி கூறினாள்.

"ஏன் எனக்கு என்ன குறைச்சல்???

"உனக்கு எந்த குறையும் இல்ல. இதுக்கு முன்னாடி சின்ன வெங்காயம் பார்த்து இருக்கியா???

"பார்த்து இருக்கிறேன் இதோ உன் முன்னே இருக்கிறதே" என்று அவன் எடுத்து வந்த தட்டை காட்டினான்.

ஹம்சி அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு . அவன் கையை பிடித்து அவளுடன் இழுத்து சென்றாள்.

"இது என்ன தெரிகிறதா??? என்று சின்ன வெங்காயத்தை காட்டினாள்.

"இது என்ன காய் என்று எனக்கு தெரியல ஹம்சி".

"இதுக்கு போயர் தான் சின்ன வெங்காயம்".

"அப்போ நான் கொண்டு வந்தது???

"சின்ன வெங்காயம் கொண்டு வர சொன்ன. நீ பெரிய வெங்காயத்துல சின்ன சின்ன வெங்காயமா பொறுக்கி எடுத்து வந்து இது தான் சின்ன வெங்காயம்னு எனக்கே சொல்லி குடுக்குற".

"சாரி ஹம்சி" என்று வெட்கமே இல்லாமல் சிரித்தான்.

"கூலு, கஞ்சினு எதாவது குடித்து இருந்தாள் தானே சின்ன வெங்காயத்தின் அருமை தெரியும்" என்று ஹம்சி கூறினாள்.

அதற்கு சிவா நக்கலாக சிரித்து விட்டு. " அப்போ ஹாரூஷ்க்கும் கூலும், கஞ்சியும் தானா" என்று கேட்டான்.

அதை கேட்டதும் ஹம்சியின் முகம் மாறியது. அவள் தலை குனிந்தாள்.

"ஐய்யோ என்ன வார்த்தை சொல்லிவிட்டேன். ஹம்சி " என்று சிவா கூறியதும்.

"போலாம் சிவா" என்று கூறிவிட்டு ஹம்சி வெளியே சென்றுவிட்டாள். சிவா பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்ற வழியில் வெரும் மரங்களும், அடர்ந்த காடுகள் மட்டும் இருந்தது. வழியில் இவர்களை தவிர வேறு ஒரு வாகனம்மும் இல்லை. சூரியன் விழகி சென்று இருள் சூழ்ந்தது. சிவா வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தான்.

"சிவா"

"சொல்லு ஹம்சி".

"சிவா நான் பெரிய தப்பு செய்துவிட்டேன்".

"என்ன ஹம்சி கூறுகிறாய்???

"சிவா உங்கள தேவ இல்லாம இங்க அழைத்து வந்து நான் தவறு செய்துவிட்டேன்".

"ஏய் ஹம்சி ஏன் அவ்வாறு நினைக்கிறாய்??? நாங்க இங்க சந்தோசமாக தானே இருக்கிறோம்".

"பொய் சொல்லாதே சிவா. என் வீட்டில் ஏதோ ஒரு தீய சக்தி இருக்ககு. அதை நானே என் கண்களாள் பார்த்து இருக்கிறேன். அதால் நமக்கு என்ன ஆபத்து வரும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன்".

"என்ன முடிவு ஹம்சி???

"அது வந்து சிவா" என்று கூறியவாறே ஹம்சி சிவாவின் திசையில் தலையை திருப்பினாள். அப்போது வண்டியின் பின்னால் ஏதோ இருப்பதை ஹம்சி உணர்ந்தாள். மெல்ல திரும்பி பார்த்த அவள் அதிர்ந்து போனாள். அந்த உருவத்தை பார்த்தும் அதிர்ச்சியில் சிவாவின் கையை பிடித்து கத்தினாள். சிவா பதற்றத்தில் வண்டியை சேற்றில் விட்டு நிருந்தினான்.

"ஹம்சி என்ன ஆயிற்று???

"சிவா வண்டி பின்னாடி யாரோ இருக்காங்க" என்று கண்களை மூடியவாரே ஹம்சி கூறினாள்.

"என்ன கூறுகிறாய் ஹம்சி??? விளையாடாத ஹம்சி" என்று சிவா ஹம்சியை பார்த்தபடியே கூறினான். ஹம்சி பதில் அளிக்காமல் கண்களை மூடியவாரே பயத்தில் நடுங்கினாள். சிவா மெல்ல திரும்பி பார்த்தான். அங்கு யாரும் இல்லை.

"இங்க யாரும் இல்லையே ஹம்சி"
ஹம்சி திரும்பி பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. சிவா வண்டியை எடு போகலாம். சிவா வண்டியை எடுக்க முயற்சித்தான். ஒரு சக்கரம் சேற்றில் சிக்கி இருந்ததால் வண்டியை எடுக்க முடியவில்லை.

"ஹம்சி நான் வண்டியை தள்ளுகிறேன் நீ வண்டியை எடு" என்று கூறிவிட்டு சிவா வண்டியை தள்ளினான். ஹம்சி வண்டியை எடுத்தாள். பல முயற்சிக்கு பிறகு வண்டி நகர்ந்தது. ஹம்சி வேகமாக அலுத்தியதும் அவளால் வண்டியை கட்டு படுத்த முடியவில்லை. அவள் கை மீறி வண்டி முன்னாள் நகர்ந்தது. சட்டென்று வண்டியின் முன் யாரோ வந்ததும் ஹம்சி கட்டுபடுத்த முடியாமல் வண்டியை ஒருவர் மீது ஏற்றினாள். சட்டென்று பயத்தில் வண்டியை நிருத்தினாள். சிவாவும் அதை கவனித்தான். அவன் அவள் அருகில் வந்தான்.

"ஹம்சி வண்டியை விட்டு இறங்காதே நான் பார்க்கிறேன் " என்று கூறிவிட்டு வண்டியின் முன் சென்றான். அவன் முகம் குழப்பத்தில் மாறியதும். ஹம்சி என்ன என்று கேட்டாள். ஓடி வந்து ஹம்சியின் அருகில் அமர்ந்தான்.

"என்ன சிவா???

"சீக்கிரம் வண்டியை எடு ஹம்சி" என்று பதற்றத்துடன் கூறினான்.

"சிவா முன்னாடி".

"ஹம்சி அங்க யாருமே இல்ல"

"என்ன..... என்று அவள் அதிர்ந்தாள்.

"இப்போ பேச நேரம் இல்லை இங்க இருந்து போகலாம்"

ஹம்சி வண்டியை எடுத்தாள். பதற்றத்தில் அவ கைகள் நடுங்கியது.

"சிவா நீ பார்த்தாயா ???

"ஹம்சி நான் பார்த்தேன்".

"சிவா அப்போ என்ன நடந்தது" என்று ஹம்சி குழப்பத்தில் திரும்பி சிவாவை கேட்டாள்.

சட்டென்று வண்டி முன் யாரோ நிற்பதை சிவா கவனித்தான்.

"ஹம்சி" என்று அடி வயிற்றில் இருந்து கத்தினான்.

ஹம்சி திரும்பி பார்த்து வேகமாக அந்த உருவத்தின் மீது வண்டியை ஏற்றாமல் வண்டியை காட்டுக்குள் திருப்பினாள். பயத்தில் வேகமாக வண்டி ஓட்டினாள். சிவாவும் அதிர்ந்து அமர்ந்து இருந்தான்.

"ஹம்சி இது தப்பான வழி வண்டியை நிருத்து" என்று கூறியதும் வண்டியை நிருத்தினாள்.

"வண்டியை பின்னாடி எடு" என்று சிவா கூறினான்.

அவள் வண்டியை எடுக்க முயற்சித்தாள். வண்டி உயிர் பெறவில்லை. மீண்டும் முயற்சித்தாள். வண்டி நகரவில்லை.

"ஹம்சி இங்க இருந்து வீட்டுக்கு எப்படி போக வேண்டும் என்று உனக்கு தெரியுமா???

"தெரியும் சிவா ஒரு 20 நிமிடம் நடந்தாள் வீடு வந்துவிடும்".

"சரி நேரத்தை கடக்காமல் வா போகலாம்".

இருவரும் தொலைபேசியின் ஒளியில் ஒரு ஒற்றை அடி பாதையில் நடந்தார்கள்.

"சிவா பூஜாவை தொலைபேசி மூலமாக அழை"
அவன் முயற்சித்தான் ஆனால் நோ சிக்கனல் என்று காட்டியது. அந்த முயற்சியை கைவிட்டு விட்டு வேகமாக நடந்தார்கள். திடிரென்று ஹம்சி மீதும் சிவா மீதும் யாரோ கைவைத்தார். ஹம்சி சிவா என்று நினைத்து திரும்பினான். சிவா ஹம்சி என்று நினைத்து திரும்பினான். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு உருவம் நிற்பதை கண்டதும். இருவருக்கும் உயிர் நின்றது. பயத்தில் இருவரும் கத்திக்கொண்டு ஓட தொடங்கினர். சிவா சரியான திசையில் ஓடினான். ஹம்சி வந்த திசையிலேயே திரும்ப ஓடினாள்.

சிவா பயத்தில் தன்னை மறந்து ஓடினான். அவன் கண் முன் வீடு தென்பட்டது. ஓடி வந்து வீட்டின் முன் நின்று மூச்சி வாங்கினான்.

"ஹம்சி வந்துடோம்" என்று கூறி திரும்பி பார்த்தான். அங்கு ஹம்சி இல்லை என்பதை உணர்ந்ததும் பதறி போனான். வேகமாக வீட்டிற்குள் ஓடினான்.

"ஏய் சிவா எவ்வளவு நேரம் டா எங்க எல்லாரையும் பயப்பட வைத்துட. எங்க ஹம்சி??? என்று ஹாரூஷ் கேட்டான்.

சிவாவிற்கு பேச்சே வரவில்லை.

"சிவா" என்று ஹாரூஷ் மீண்டும் கேட்டான்.

"ஹாரூஷ் , ஹம்சி"........
*****

Don't scold me. I know I took so long time to update. Please forgive me. This is really unedited part I know there are lot of mistakes.
Please help me. I will correct it. Because I have no one to help me now. So sorry for the errors.
Tell me how was the chapter???

I have also update my new story "My red rose"
Please read that too.
Make me happy by pressing the star 🌟button below your screen.
See you soon with my next update ☺️

Continue Reading

You'll Also Like

8.5K 1.4K 51
இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕
20.5K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
9.1K 642 30
தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)
371 44 7
Oru ponnu kaanama poita aana Ava epudi kanama pona nu yarukum theriyala room vittu kooda veliya varala aana kanom . Oru chinna clue kooda police ku k...