அலையும் நிலவும்!!... நீயும் ந...

By bhagiyalakshmi

11.1K 329 185

இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் More

🌊அலை 1🌊
🌊அலை 2🌊
🌊அலை 3🌊
🌊அலை 4 🌊
🌊அலை 5🌊
🌊அலை 6🌊
அலை🌊 7🌊
🌊அலை 8🌊
🌊அலை 9 🌊
அலை 🌊10🌊
அலை🌊 11🌊
அலை🎼12
அலை🌊 13🌊
அலை‌🌊14
அலை 🌊15
அலை 🌊 16
அலை 🌊17
🌊 அலை 18 🌊
அலை 🌊20
அலை 🌊 21
அலை 🌊 22
அலை 23
அலை 🌊 24
அலை 🌊 25
அலை 26
அலை 🌊 27
அலை 🌊 28
அலை 🌊 29
அலை 🌊 30
அலை 🌊 31
அலை 🌊 32
அலை 🌊 33

அலை 🌊 19

434 7 7
By bhagiyalakshmi

ஹாய் பிரெண்ட்ஸ்....

உங்ககிட்ட வாரம் ஒரு காரணத்தை சொல்றது எனக்கே கஷ்டமா தான் இருக்கு... பட் வேற வழி இல்லை..
சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்... என் மகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது... ஆறு வயசு தான் ஆகுது அவனுக்கு... அவன் வலியில் இருக்கும் போது என்னால் எழுத முடியாது... என் சூழ்நிலை புரியும் னு நினைக்கிறேன்... இதுல இரண்டு எபி இருக்கு முடிஞ்சா கமெண்ட் பண்ணுங்க...

மிக்க நன்றி....

அலை 19

.....

பார்வை கையில் இருந்த ஃபைலில் இருந்தாலும் யோசனையுடனே அமர்ந்திருந்தார் தேவராஜ்.

அவருக்கு காபியை எடுத்து வந்த கல்யாணி கணவரின் செய்கையை ஆராய்ச்சியாக பார்த்தவர் "என்னங்க... என்ன ஆச்சு...? ஏன் இப்படி ஃபைலை திறந்து வைச்சிக்கிட்டு வேற எதையோ யோசனைப் பண்ணிட்டு இருக்கிங்க...? குழப்பமாக வினவினார்.

"அது ஒன்னுமில்லை மா வேற ஏதோ ஒரு சிந்தனையில் இருந்துட்டேன்... பச்... சரி அதை விடு... உன் மகன் ஃபோன் பண்ணானா... எப்போ வரானாம்??"

"கேட்டா ஒன்னுமில்லன்னு சொல்றிங்க... ஆனா முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே... குழப்பமா இருக்கிங்கன்னு தெரியுது... ஏதோ மறைக்கிறிங்கன்னும் புரியது... என்னன்னு சொல்லுங்க... அதுவும் இல்லாம புதுசா என்ன என் மகன்னு சொல்றிங்க... அப்போ ஏதோ இருக்கு என்னன்னு சொல்லுங்க... கார்த்திக் என்ன பண்ணான்... சொல்லுங்க..." அவர் காரணத்தை வற்புறுத்தி கேட்க,

"அவன் ஒன்னுமே பண்ணல கல்யாணி.... அதுதான் எனக்கு உறுத்தறது... நாம அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தப்பு பண்ணிட்டமோ!!" மனைவியிடம் தன் சந்தேகத்தை தெரிவித்தார் தேவராஜ்.

கணவரின் வார்த்தைகள் பீதியை கிளப்ப, "உங்களுக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்..."

"கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு திடீர்னு சரின்னு சொன்னான்... நிச்சயம் முடிஞ்ச மறுநாளே அர்ஜூன் கூட மும்பை கிளம்பி போயிட்டான்... அப்புறம் இதை எப்படி எடுத்துக்குறது கல்யாணி எனக்கு என்னமோ தப்பா படுது..."

"என்னங்க‌ என்னன்னமோ சொல்றிங்க... உங்களுக்கு எப்படி இதெல்லாம்..." கல்யாணி கணவனின் முகத்தை தெளிவில்லாத பாவனையில் பார்க்க,

" எனக்கும் முழுசா விவரம் தெரியலை கல்யாணி... ஆனா கார்த்திக்கின் நடவடிக்கையை பார்க்கும் போது நாம தப்பு பண்ணிட்டோம்னு மட்டும் தெரியுது... ஒருவேளை அவனுக்கு இதுல விருப்பம் இல்லையோ!!" அவர் வருத்ததுடன் கூறினார்....

"இல்லங்க நம்ம பையன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்...இதுல அவன் வாழ்க்கை மட்டும் இல்லையேங்க... நீங்க கண்டதை போட்டு குழப்பிக்கிறிங்கன்னு நினைக்கிறேன்... நா... நான் நம்ம கார்த்திக் கிட்ட பேசுறேன்.." அவர் உடனே அலைபேசியை எடுத்தார்...

"பச் கல்யாணி உடனே எதையும் பண்ணாதே... என்னோட யூகம் தான் ஒருவேளை தப்பாக் கூட போகலாம் நீயா எதுவும் கேட்காத புரியுதா.." சற்று கண்டிப்புடன் கூறினார் தேவராஜ்.

மனமே இல்லாமல் அலைபெசியை வைத்தவருக்கு முகமே சரியில்லை தேவராஜின் மனதிலோ ரேவதி அடிபட்ட தினத்தன்று மகன் நடந்து கொண்டதற்கும், இப்போது நடந்துக் கொண்டிருப்பதற்கும் முடிச்சை போட்டது.

தேவராஜ் கார்த்திக்கின் மனதினை கண்டறிவாரா...? இல்லை கல்யாணியின் கூற்றுப்படி மூவரின் வாழ்க்கைக்காக தன்‌ காதலை கார்த்திக் விட்டுக் கொடுப்பானா ???? வரும் நாட்களில் பார்க்கலாம் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை....

...

வலி என்றால் காதலின் வலி தான்

வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்

வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே

உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ

இலை மேலே பனி துளி போல்

இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொன்னே பூந்தேனே

காதல் என்னைப் பிழிகிறதே

கண்ணீர் நதியாய் வழிகிறதே

நினைப்பது தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்

கண்ணே நீயும் தொலைந்ததென்ன

நீரினைத் தேடும் வேரினைப் போல

பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டு மூடும் போது

நூறு வண்ணம் தோன்றுதே

மீண்டும் கண்கள் பார்க்கும் போது

லோகம் சூனியம் ஆகுதே

அவனது, இதயத்தின் வலிகளை உணர்த்தியது போல இருந்தது வைரமுத்துவின் பாடல் வரிகள்... கண்களை மூடி சாய்ந்திருந்தவனின் கவனவத்தை ஈர்த்தது அவனது பிஏ ரகுவின் அலைபேசி அழைப்பு....

"ஹலோ..சார்...."

"யா... சொல்லு.."

"சார்... நான்... ரகு பேசுறேன்... ?"

"தெரியுது மேன் சொல்லு ... வாட் யூ வான்ட்... இந்த நேரத்துல எதுக்கு கால் பண்ற...?" எரிச்சலில் ஒலித்தது அவன் குரல்,

"சார்.... நீங்க எங்க இருக்கிங்க...?"

"வொய் ரகு......‌ இப்போ எதுக்கு என்னை தேடுற...?" என்றுமில்லாமல் ரகுவின் மீது எரிந்து விழுந்தான் கார்த்திக்.

"சார் நீங்க ஒரு வாரமா ஆபீஸ் வரலை..."

"சோ... வாட்... நான் ஆபீஸ் வரலைன்னா என்ன... வொர்க் போயிட்டு தானே இருக்கு..." ரகுவின் கேள்விக்கு கடுகடுத்தான் கார்த்திக்.

அவன் எங்கே வேலை பார்க்கும் நிலையில் இருக்கிறான் எதை தின்றால் இந்த காதல் பித்தத்தை தெளிய வைக்க முடியும் என வழியை தேடிக் கொண்டிருப்பவனுக்கு வேலையை பற்றி மண்டையில் ஏறி விடப் போகிறதா என்ன... இதை அறியாத ரகுவோ,

"வொர்க் போயிட்டு தான் சார் இருக்கு... பட்.. நீ... நீங்க பார்த்து சைன் பண்ண வேண்டிய சில ஃபைல்ஸ் இருக்கு அதான்..." இழுத்தான் ரகு..

ரகுவின் பேச்சில் சற்று நிதானத்திற்கு வந்தவன் "ஓகே... ரகு, நானே மார்னிங் ஆபீஸ் வரேன்..." வேண்டா வெறுப்பாக சொன்னான் அவன்.

"ஓகே.. சார்... தேங்க் யூ சார்... " என போனை வைத்த ரகுவிற்கு,
கார்த்திக்கின் இந்த மாற்றம் வியப்பாய் இருந்தது... இதுவரை ஒரு நாள் கூட அலுவலகம் வராமல் இருந்தது இல்லை... வேலை வேலையென அதை கட்டிக் கொண்டு திரிபவன் இன்று இப்படி மாறி இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

ரகுவிடம் பேசிவிட்டு போனை மெத்தை மேல் எறிந்தவனுக்கோ, நடுக்கடலில் தத்தளிக்கும் படகினை போல மனது ஒரு நிலையில்லாமல் தத்தளித்து கொண்டிருத்தது...

எந்நேரமும் அந்த சாகரத்தில் முழ்கி விடும் அபாயத்தில் இருந்தவனுக்கு‌ அறையில், அந்த மூச்சு முட்டும் சூழ்நிலையில், இருக்க முடியவில்லை.

பால்கனி கதவை திறந்து வெளியே வந்தவன், சுதந்திரமாக தன்னை தழுவி சென்ற ஈரக்காற்றின் இதத்தில், கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு சுவாசம் சீரானது போல இருந்தது...,

மார்ப்புக்கு குறுக்கே கைகளை கட்டி சுற்று சுவற்றின் மீது சாய்ந்து அப்படியே நின்றிருந்தான், தூரத்தில் தெரிந்த இருளையும் நிலவில்லா வானையும் வெறித்தவன், அதன் அமைதியில் மெல்ல விழிகளை மூடினான்.

நிலவில்லா கரு நிற வானத்தில். மின்னி மறைந்த நட்சத்திர சிதறல்கள் அந்த நிலவின் அழகினை வானுக்கு கொடுக்கவில்லையே... இனி இது போலத்தானே என் வாழ்க்கையும் விரக்தியாக மனதில் தோன்ற, இதயத்தில் வேதனை மண்டிய அடுத்த நொடி, பட்டென கண்களை திறந்து, நெஞ்சை நீவி விட்டு, தலையை அழுந்த கோதி, முகத்தை துடைத்தான்.... இதம் கொடுத்திருந்த ஈரக்காற்று கூட இப்போது அவளை‌ தொட்டு தூக்கிய அந்த தருணத்தை அல்லவா‌ நியாபகப்படுத்தி செல்கிறது...

சே... என்ன வலி இது...? உயிரை வேறோடு அறுக்கும் இந்த வலியை நீக்கும் வழியும் தெரியவில்லையே..!!! தன் கையாளாக தனத்தில் கையில் கிடைத்த கண்ணாடி தம்ப்ளர் ஒன்றை, தூக்கி சுவற்றை நோக்கி வீசி எரிந்தான். அது சுவற்றில் பட்டு பளீர்‌ என்ற சத்தத்துடன் சில்லு சில்லாக சிதறியதில் தன்னிலைக்கு மீண்டவன், அங்கு நிற்க முடியாமல் மீண்டும் அறைக்குள் வந்து விட்டான்...

முகத்தை நீரில் அடித்து கழுவிக் கொண்டான். ஒருவாரமாக மழிக்கப்படாத தாடியுடன் கண்கள் உயிர்ப்பின்றி தன் தோற்றத்தை கண்ணாடியில் காண, அவனுக்கே மலைப்பாக இருந்தது. இவ்வளவு என்னை பாதித்து இருக்கிறாளா...??? தலையை உலுக்கி கொண்டு கடிகாரத்தை பார்த்தான்.

நேரம் இரவு பத்தை நெருக்கிக் கொண்டிருந்தது... இரவில் தூங்கியே நாட்கள் சில கடந்து விட்டதென, அவனது உயிர்ப்பில்லாத கண்கள் சொல்லியதில், அடமாக மெத்தையில் சென்று படுத்து கொண்டான்.

புரண்டு புரண்டு படுத்தான்... பத்து, பதினொன்று, பன்னிரண்டு, நேரம் தான் கடந்ததே தவிர தூக்கம் என்பது அவன் கண்களை எட்டவே இல்லை...

தன்னையே வெறுத்தான்.. தன் வாழ்வில் இன்னொருவர் வரப்போகும் இத்தருணத்திலும், ரேவதியை நினைக்கும் மனதினை முற்றிலும் வெறுத்துத் தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.

இதயத்தை ஊசியாய் குத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரணமாக்கும் அவளை பற்றிய நினைவுகளை அழிக்கும் மார்கத்தினை கண்டறிய முடியாமல் எதிலிருந்தோ தப்பிப்பது போல ஓடி வந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறனே... இவன் காதலும் காவிய காதலில் சேர்த்தி தான் என்பதை இவனுக்கு யார் சொல்வது..., இதை விட வேறு ஆதாரமும் வேண்டுமோ, மனம் நெற்றி பொட்டில் அடித்து சொன்னாலும் மூளை அதை நம்ப மறுக்கிறதே,

இன்றோடு நிஷாந்தியுடனான கார்த்திக்கின் திருமண நிச்சயம் முடிந்து வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்து விட்டது. நிச்சயம் நடந்த மறுநாளே தாய் தந்தையிடம் சொல்லிக் கொண்டு நண்பன் அர்ஜூனுடன் மும்பை வந்தவன் தான்... எதன் மேலும் பற்றில்லாமல் அறையிலேயே அடைந்துக் கிடக்கிறான்.

நிச்சய நாளன்று சிரிப்பை பெயருக்கென முகத்தில் ஒட்ட வைத்து, மகழ்ச்சியாக இருப்பதை போல காட்டிக் கொண்டவன், தன் மனதில் சிம்மாசனம்மிட்டு அமர்ந்திருந்தவளை பார்த்த அந்த நொடியிலிருந்து நெருப்பில் நிற்பதை போல அல்லவா அங்கு நின்றிருந்தான்.

உணர்ச்சி குவியலாக தவித்ததே அவன் மனது... இன்னும் அவளை மறக்க முடியவில்லையே... இப்போது கூட அந்நிகழ்வை நினைக்கும் போது

வேதனையாக உணர்ந்தது அவன் இதயம்.... இன்னும் அதை அதிகப்படுத்தவென நிஷாந்தியே அவனை அழைத்திருந்தாள்.

தவிற்க முடியாமல் பேசியை எடுத்து காதில் பொருந்தி "ஹலோ..." என்றான் எவ்வளவு முயற்சித்தும் குரலில் மாற்றத்தை கொண்டு வர முடியாமல் போக அது ஒட்டாத தன்மையுடனே ஒலித்தது.

"ஹலோ கார்த்தி.." வழக்கமான உற்சாகத்துடனும் துள்ளலுடனும் ஒலித்து அவள் குரல்,

"சொல்லு நிஷா... என்ன இந்த நேரத்துல?". பொறுமையாக பேசினான் அவளிடம்,

"உங்களுக்கு கால் பண்ண நேரம் காலம் பாக்கனுமா...?" அவள் குரல் சிணுங்கலாக ஒலித்தது போலவே இருந்தது... பேச வேண்டும்... பேசியே ஆக வேண்டும்... இதற்கெல்லாம் பழகி தானே‌ ஆக வேண்டும்... ஆனால் முடியவில்லையே, ரேவதி இல்லாது வேறு‌ ஒரு பெண்ணுடன் இவ்வாறான சிணுங்கலான ரகசிய பேச்சில் இணைய முடியாமல் தடுமாறிப் போனான் அவன்.

அவன் சத்தமின்றி தன் நினைவில் மௌனமாக இருக்கவும் "ஹலோ கார்த்தி இருங்கிங்களா....?" ஒன்றிற்கு இரு முறை அழைத்தாள் அவனை

"இரு‌.. இருக்கேன் நிஷா இங்க சிக்னல் கிடைக்கலன்னு நினைக்கிறேன் நான் மார்னிங் கால் பண்ணுட்டுமா...?" அவசரமாக சொல்லியவனுக்கு அவள் போனை வைத்துவிட மாட்டாளா என்றிருந்தது.

"ஹோ... பச் எப்பவும் இந்த நெட் வொர்க் இப்படித்தான். உங்ககிட்ட பேசனும்னு எவ்வளவு ஆசையா கால் பண்ணேன் தெரியுமா!!!...?" அவள் சோக கீதம் வாசித்தாள்.

"ஹலோ...‌ஹலோ..." இவன் காதில் விழாதது போலவும் தூரத்தில் குரல் கேட்பது போலவும் விட்டு விட்டு பேசினான்.

"பச் இது வேற.. "சலித்து போனவள் "ஓகே கார்த்தி நாளைக்கு மார்னிங் கால் பண்றேன் நாம வெளியே மீட் பண்ணலாமா நான் நாளைக்கு மும்பை வரேன்..." ஆசையுடன் கூறினாள்.

"இல்ல இல்ல நிஷா நாளைக்கு நான் சென்னை போறேன்..." அவசரமாக வந்தது கார்த்திக்கின் பதில்,

"வாட் நாளைக்கேவா நான் அங்க வரலாம்னு இருந்தேனே ஒரு இரண்டு‌நாள் கழிச்சு போங்களேன் நாமா வெளியே போகலாம் ரெண்டு நாள் உங்க கூடவே இருக்கனும்னு நினைச்சேன்..." அவள் கெஞ்சலாக கேட்டிட

"ஆபீஸ் வொர்க் இருக்கு நிஷா அர்ஜன்டா போகனும்... நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" சட்டென மறுத்தான்.

அவள் முகம் உடனே சோம்பி விட சிறு மௌனத்திற்கு பிறகு "ம் ஓகே சரி நீங்க கிளம்புங்க நான் இங்க வொர்க் முடிஞ்சதும் உங்களை வந்து மீட் பண்றேன்... பட்‌ என் கூட தான் நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணனும் கட்டளையாக உரைத்தவள் ஓகே வா... ஸீயூ கார்த்தி... லவ் யூ ..." குழைந்து வந்த குரலில் கண்களை இறுக மூடி போனை அணைத்து கட்டிலில் வீசியவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்துக் கொண்டான்.

இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோனது போல இருந்தது. அறையில் இருக்கவே பிடிக்கவில்லை போனை செயலிழக்கம் செய்தவன் பால்கனியை நோக்கி நடந்தான்.

'நான் தப்பு பண்றேன்னு தோனுது உன்னை மறக்கனும்னு நினைச்சி மீளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக்கிட்டேன் இனி நானே நினைச்சாலும் தப்பிச்சி வர முடியாது...' நிதர்சனம் உரைக்க ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானித்தான்.

கைகளை தலைக்கு கொடுத்து தூக்கம் வராமல் கண்களை மூடி ஊஞ்சலில் படுத்தவனுக்கு நிச்சயதினத்தன்று நடந்தது யாவும் நிஜ காட்சிகளாக உருவகம் பெற்று கண் முன்னால் ஒளிர்ந்தது.

அந்தி சாயும் மாலை நேரம் வண்ண விளக்குகளின் வர்ண ஜாலத்தில் அந்த இடமே வெளிச்சத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தது...

எங்கும் ஆடம்பரமும், செல்வ செழிப்பும் தாண்டவமாடியது... மலர்ச்சரங்களை கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்த நந்தவனத்தை போல் இருந்த இடத்தில் தான் விழா ஏற்ப்பாடாகி இருக்க, ஒரு மேஜையில் இருண்டு மூன்று நாற்காலி போட்டு ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஈவென்ட் மேனேஜ்மென்ட் பிளானரை வைத்து அழகாக திட்டமிட்டு இவ்வளவு வேலைகளை முடிந்திருந்தனர்.

கார்த்திக் வித் நிஷாந்தி

சஞ்சய் வித் சுஜாதா

இரு ஜோடிகளின் பெயர்களை தங்க நிற பலகையில் சிவந்த ரோஜா வண்ண மலர்களை கொண்டு வடிவமைத்து இருந்தனர். பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது. அது மட்டுமா அழகு இரு ஜோடிகளின் தோற்றம் அதை விட அழகாக இருந்ததே..வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வியக்க வைத்தனரே...

இருவீட்டாரும் வந்த விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, விருந்தினர்களின் உடையும் தோற்றமும் அவர்களை பெரும்புள்ளிகளாக காட்டிக் கொண்டிருந்தது. பெரிய உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள்... இருபக்கமும் அளவாகவே அழைக்கப்பட்டு இருந்தனர். நுனி நாக்கு ஆங்கிலத்தில் சிலர் உரையாடிக் கொண்டு இருந்தனர். சிலர் வியாபாரம் சார்ந்த பேச்சிக்களை பேசிக் கொண்டிருந்தனர்.

"ரகு சாரை உள்ளே அழைச்சிட்டு போ..." தேவராஜின் தொழில் தொடர்பாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ரகுவுடன் அனுப்பி வைத்தார் தேவராஜ்.

தேவராஜின் சொல்லிற்கு தலையை அசைத்து அதை ஏற்றவன் "இப்படி வாங்க சார்" அங்கிருந்த இருக்கையை காட்டி அவர்களை அமர வைத்தவன் கார்த்திக்கின் கண் அசைவில் அவனிடம் சென்றான்.

"அரேன்ஞ்மென்ட்‌ எல்லாம்‌ பக்கா தானே" ரகுவிடம் கேட்டுக் கொண்டே‌ வந்திருந்தவர்களை உபசரித்தான் கார்த்திக்..

"எவிரித்திங் பைன் சார்..." என்றவன் கார்த்திக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து விட்டு மீண்டும் ரகு வாயில் புறம் சென்றான்.

வேலைபாடுகள் நிறைந்த இளம் சந்தன நிற லெகாங்காவில் தேவதையாய் ஜொலித்த சுஜாவின் அழகு அருகே நின்றிருந்தவனை காந்தமாய் கவர்ந்திழுக்க "சுஜிமா யூ லுக்கிங் கார்ஜியஸ் டியர்" குனிந்து அவளின் செவிமடலில் உரைத்த சஞ்சயின், பேச்சில் சிவந்த ரோஜாவாய் முகம் மலர்ந்து நின்றாள் சுஜாதா.

சஞ்சய் மற்றும் சுஜா ஜோடிகள் இருவரும் தங்கள் காதலை கண்களால் பறிமாறிக் கொண்டு அந்த நிகழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டிருந்தனர்.

கார்த்திக்கின் மனநிலை அவர்களுக்கு நேர் எதிராக அல்லவா இருந்தது...

வொய்ன் நிற டிசைனர் லெகங்கா, நிஷாவின் பளீரென்ற கோதுமை நிறத்திற்கு அழகாக பொருந்தி மேலும் அவளது நிறத்தை எடுத்து காட்டிட, அவளது உடைக்கு ஏற்றார் போல அதே வொய்ன் நிற ஷெர்வானியில் அழகனாக காட்சி தந்தான் கார்த்திக்.

முகத்தில் இருந்த வசீகரம் கண்களை எட்டவே இல்லை... ஏதோ கடமைக்கு சிரிப்பது போல இழுத்து பிடித்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். கல்யாணியும் தேவராஜூம் கூட மகனுக்கு இதில் பூரண சம்மதம் என என்னும் அளவிற்கு நன்றாகவே நடித்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை ரேவதியை மறந்தது விட்டது போல தன்னையே தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான்.

அவனை பாராமல் பார்த்துக் கொண்டாள் நிஷாந்தி... "கார்த்தி..." அவனை அருகில் அழைத்தவள் "யூ லுக்கிங் சோ ஹேன்சம் மேன்..." மெல்லிய குரலில் உச்சரித்தவளுக்கு முகம் முழுவதும் சந்தோஷம் விரவிக் கிடந்தது.

அனைவரின்‌ முன்னும் மகிழ்வதை போல காட்டிக் கொண்டவன் "தேங்க்யூ நிஷாந்தி" இதழ் பிரித்து வலிந்து புன்னகைத்தான். இல்லை இல்லை புன்னகைக்க முயன்றான்.

"இப்பவும் நிஷாந்தியா...?" அவள் சிணுங்கிக் கொண்டே மையலாக அவனை பார்க்க,

"சா... சாரி நிஷா... வாய் தவறி சொல்லிட்டேன்... தேங்க்ஸ் ஃபார் யுவர் காப்ளிமென்ட்.... நிஷா" உடனே தன்னை திருத்திக் கொண்டவன் இழுத்து பிடித்த சிரிப்புடனே அவளிடம் கூறினான்.

அவன் தனக்காக சட்டென இறங்கி தன்னை மாற்றிக் கொண்டதில் உச்சி குளிர்ந்தவள், "தேங்கஸ் மட்டுமா நா... நான் எப்படி இருக்கேன் நீங்க சொல்லவே இல்லையே...?" சின்ன வெட்கத்துடன் அவனிடம் கேட்டு நின்றாள்...

உதட்டை குவித்து காற்றை உள்ளிழுத்து வெளியே ஊதியவன் சிரித்து மழுப்ப முடியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான். தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது போல அவஸ்தையில் இருந்திட, "வாட் கார்த்தி எதுவுமே சொல்லல...?" அவள் மீண்டும் அதிலயே நிற்க, தன்னை சமன்படுத்த பற்களை கடித்து வாயில் புறம் பார்வையை பதித்திருந்தவன் வாவ் "இட்ஸ் டிவைன்" என்றான் தன்னை மறந்து.

அதே நேரம் அவர்களை நெருங்கிய மற்றொருவன் " நீங்க தேவதை மாதிரி இருக்கிங்க" என நிஷாவிடம் கூறியிருக்க, அவனை தீ பார்வை பார்த்து வைத்தாள் அவள்.

அழகிய வான் நீல நிற டிசைனர் சுடிதாரில் அங்காங்கே முத்துக்களும் சிறு கொடி போல எம்பிராய்டரி செய்திருக்க, மெல்லிய ஒப்பனையில், அலையலையாய் இருந்த கூந்தலை முன் பக்கம் மட்டும் எடுத்து கிளிப்பில் அடக்கி பின் பக்கத்தை விரித்து விட்டார் போல தேவதையின் மறு பதிப்பாய் தன் தம்பியுடன் சற்று தயங்கியபடி வந்தவளை கண்டவனுக்கு இன்றைக்கு தனக்கு நிச்சயம் என்பதே மறந்து போனது. வைத்த கண் வாங்காமல் அவளையே பாத்தான். இதுவரை அவன் நடித்த அனைத்தும் வீண்‌ என்பதை போல கண்களில் காதலுடன் அவளையே பார்த்திருந்தான்.

இங்கோ நிஷா தன்‌ எதிரே நின்றிருந்தவனை உக்கிரமாக முறைக்க, ஏன் முறைக்கிறிங்க இட்ஸ் எ காப்ளிமென்ட் மேடம் இதுக்கெல்லாம் முறைக்க கூடாது. முக்கியமா சந்தோஷம் தான் படனும் அவன் சாதரணமாக சொல்ல,

"வாட்.." அவள் சற்று குரலை உயர்த்தும் நேரம் தன் பக்கத்தில் எழுந்த சிறு சலசலப்பில் தன்னிலை மீண்டவன் தன்‌ எதிரில் நின்றிருந்தவனை பார்த்து "ஹேய் அர்ஜூன்.... நீயா.. வாட் அ சர்பிரைஸ் மேன்" என்றான் ஆச்சர்யமாக,

"கார்த்தி இவர்..." அவள் தயங்கி இழுக்க,

"நிஷாந்தி... இவன் என்னோட பிரெண்டு பேர் அர்ஜூன்... அர்ஜூன் ஐபிஎஸ்.... இப்போ தான் சென்னையில் இருந்து மும்பைக்கு டிரான்ஸ்பர் ஆகி இருக்கான்."

"டேய் நானும்‌ இங்க தான்டா இருக்கேன்..." அவனுக்கு அடுத்ததாக அவர்களை நெருங்கிய தீபக் தன் நண்பன் அர்ஜூன் தோள் மீது கையை போட்டபடி பேசினான்.

"உன்னை இன்ட்ரடீயூஸ் பண்ணாமலையா இவன் என் பிரெண்ட் ஏசிபி தீபக்... இவன் சென்னையில் இருக்கான்.." என்றான்.

"ஹாய் தீபக்... ஹாய் அரஜூன்..."

இருவரிடமும் முகமன்னாக பேசியவள், "இவங்க ரெண்டு பேரூம் போலீஸ் உங்களுக்கு எப்படி..?" தன் சந்தேகத்தை எழுப்பிட,

"நாங்க ஸீகூல்ல இருந்து காலேஜ் வரையிலும் பிரெண்ட்ஸ்... பட் அவங்க அவங்க ப்ரொபஷன் மாறிடுச்சி.." கார்த்திக்கின் விளக்கத்தில் ஓ என்றவளுக்கு அர்ஜூனை பார்க்கும் போது மட்டும் சற்று கடுகடுவென வந்தது.. நண்பனின் மனைவியாக போகிற பெண் என தெரிந்தும் தன்னிடம் அவன் பேசியது எல்லை மீறியது போல இருக்க அவனை தவறான எண்ணத்தில் பார்த்தாள்.

"நிஷா... டூ மினிட்ஸ் இதோ வந்துடுறேன்.." அவள் அன்னையை பக்கத்தில் இருக்க சொன்னவன் நண்பர்களை தள்ளிக் கொண்டு சற்று தூரம் வந்தான்.

"என்னடா என்ன இதெல்லாம் .... போன்ல என்கிட்ட அப்படி புலம்பின ஆனா இங்க எப்படிடா..?" கார்த்திக்கிடம் சற்று முகத்தை காட்டினான் அர்ஜூன் ...

"என்னை என்னடா பண்ண சொல்ற அவ இன்னொருத்தனை லவ் பண்றப்போ அவகிட்ட என்ன லவ்வை சொல்லி அசிங்கப்பட சொல்றியா.... அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் டா" ரேவதி இருந்த திக்கை பார்த்தபடியே அர்ஜூனிடம் பேசினான் அவன்.

"உன்னை... பச்..." சலித்துப் போன அர்ஜூன் "சரி விடு... நீ இப்போ ஹெப்பியா இருக்கியா..? உன் மூஞ்சியே சொல்லுது அது மிஸ்ஸிங்ன்னு... இதுல அந்த பொண்ணை நினைச்சி பாத்தியாடா...?" கார்த்திக்கிடம் எரிந்து விழுந்தான் அவன் .

"அஜூ ப்ளீஸ் அவன் மேல தப்பு இல்ல டா அவனுக்கு வேற வழி இல்ல... அதான் இதுக்கு சரின்னு சொல்லிட்டான்... விடு இது அவன் ஃலைப் சரியா தான் இருப்பான்" அர்ஜூனின் கோபத்தை குறைக்க முயன்றான் தீபக்.

"ம்..." பெருமூச்சை வெளியேற்றி "சரி டா... சரி இவன் பண்றது எல்லாமே கரெக்ட் தான்... அதை நான்‌ மறுக்கல பட் இப்படி நீ அந்த பொண்ணை நினைச்சி உருகுறதை தான் வேண்டாம்னு சொல்றேன்... எல்லாத்தையும் இங்கேயே மறந்துட்டு புது லைஃபை ஏத்துக்க டிரை பண்ணு... இது உன்னேட லைப் மச்சான் அதை கெடுத்துக்காத" சற்று சமாதானத்திற்கு வந்த அர்ஜூன் நண்பனிடம் நிதர்சனத்தை உரைத்த நிமிடம் கார்த்திக்கின் பார்வை எங்கேயோ வெறித்திருந்தது.

"வா.. வாமா...ரேவதி... வா பா சிவா எங்க அம்மா வரலையா..? அவர்களின் பின்னால் காஞ்சனாவை தேடிய கல்யாணியின் கை பிடித்து தன்னை பார்க்க வைத்தவள், "அம்மா வரலைம்மா நானும் தம்பியும் தான் வந்தோம்" என்றாள்.

"ம்.... சரி எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டாங்க... நானே வீட்டுக்கு வந்து பேசுறேன்... நீங்க ரெண்டு பேருமாவது வந்திங்களே... உள்ள வாங்க... ஏங்க ரேவதி வந்துருக்கா பாருங்க" மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்ற கல்யாணி கணவரிடமும் கூறினார்.

"வா மா ரேவதி வா பா சிவா..." இருவரையும் சேர்ந்து வரவேற்றவர் "கல்யாணி நீ அவங்கள உள்ள கூட்டிட்டு போ..." அவர்களோடு அனுப்பி வைத்த தேவராஜ் தன் நண்பர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்..

"இவினிங்ல இருந்து சுஜி உன்னை தான் கேட்டுக்கிட்டே இருந்தா... நீ வந்தன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா வா.. வா" என உற்சாகத்துடன் பேசியவர்,அவளை சுஜியின் பக்கம் அழைத்து வந்தார்.

"ஹாய் சுஜி வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் சார்..." ரேவதி இருவரையும் வாழ்த்திட,

புன்னகையுடன் அவர்களை எதிர்க்கொண்டாள் சுஜி.

"ஹேய்... ரேவதி எப்போ வந்திங்க ... நீங்க வந்ததுல ரொம்ப ஹேப்பி..." அவளை கட்டிக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இங்கே கார்த்திக்கின் கண்கள் ஆசையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

தான் பேசியும், கவனிக்காமல் நின்ற கார்த்திக்கை கண்டவன் "ஏய் என்னடா அங்க பாக்குற...?‌" என்றான் அர்ஜுன்.

அவன் பார்வை சென்ற திக்கை பார்த்த தீபக் "அஜூ அது கார்த்திக் லவ் பண்ற பொண்ணு டா" அவன் அதிர்ந்து கூறிட,

"யாருடா..?"

"அதோ அந்த நீல நிற சுடிதார்.... "

"டேய்... ம்... இவன் பாக்குற லட்சணத்தை பாத்தியா? இந்த அழகுல நிஷாவை கல்யாணம் பண்ணா அந்த பொண்ணோட நிலைமை... தலையில் அடித்து கொண்ட அர்ஜூன் டேய் கார்த்திக்... டேய்... டேய் மச்சா..." என அவனை உலுக்கி அழைத்தான்.

தன்னிலை மீண்டவன் "அஹ் சொல்லு அஜூ..."

"என்னத்த டா சொல்ல சொல்ற...? இப்படி பாக்குறதுனால ஒரு மண்ணுத்துக்கும் ப்ரயோஜனம் இல்ல மாப்ள... முடிவு எடுத்துட்டா யோசிக்காம நிஷா பக்கத்துல போய் நில்லு..." அர்ஜூன் நண்பனிடம் கூற.

"இல்லடா என்னால முடில அவளை விட்டு..." வார்த்தைகள் வராமல் அவன் கலக்கம் கொண்டு நின்றதும், நண்பர்கள் இருவருக்குமே, அவனை கண்டு வருத்தமாக இருந்தது.

"கார்த்திக் ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப் நீ எது செய்தாலும் அதுல அடிபட போறது மூனு பொண்ணுங்களோட வாழ்க்கை ... எது பண்ணாலும் யோசிச்சி பண்ணு மேன்" அர்ஜூன் கார்த்திக்கின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அவனுக்கும் அது தெரிந்த விஷயம் தானே... மனதில் உதித்த காதலை வார்த்தைகளாக வடிக்கும் முன்னே அதை மனதோடு புதைக்க வேண்டிய சூழ்நிலையை நினைத்து நண்பனை கட்டிக் கொண்டு கலங்கியவன் திடத்தை வரவழைத்துக் கொண்டு நிஷாவுடன் சேர்ந்து நின்றான்.

ரேவதியை அணைத்து விடு வித்தவள் "சஞ்சய்... இவங்க தான் ரேவதி ... இவங்க இல்லனா இப்போ நான் இல்ல... தன் வாழ்க்கை துணையாக வரப்போகும் சஞ்சையிடம் ரேவதியின் முக்கியத்துவம் பற்றி கூறினாள் சுஜாதா.

"என்னங்க நீங்க இன்னும் அதை மறக்கலையா...?" அவளிடம் உரிமையுடன் கடிந்தவள் "அப்படியெல்லாம் இல்லங்க சார் இவங்க இல்லாம போயிருந்தா தான் எனக்கு பிரச்சனை ஆகி இருக்கும்... நான் யாரோ பட் என் மேல ரொம்ப அன்பா இருக்காங்க இப்படி ஒரு நட்பு கிடைக்க நான் தான் கொடுத்து வைச்சிருக்கனும்... நீங்க நிஜமாவே ரொம்ப லக்கி சார் எங்க சுஜா உங்கள ரொம்ப அன்பா பாத்துக்குவாங்க" சஞ்சயிடம் சுஜாவை புகழ்ந்து பேசினாள் ரேவதி.

"கண்டிப்பா நா லக்கி தான் ரேவதி.." காதலாக சுஜாவை பார்த்த சஞ்சயின் விழி வீச்சில் அந்தி வானத்திற்கு இணையாக செம்மை படர்ந்தது சுஜாவின் கன்னத்தில்... இதை கண்டுக் கொண்ட ரேவதி கேலியாக "ஓகே.. ஓகே.. நான் கிளம்புறேன் நீங்க கன்டினியூ பண்ணுங்க" என ரேவதி தன் தம்பியுடன் கிளம்ப முயன்றாள்.

அங்கு வந்த கல்யாணி "வா மா கார்த்திக் கிட்ட போகலாம்..." அவர் ரேவதியை அழைக்க, சட்டென ரேவதியின் முகம் கலவரம் கொண்டது.

"என்னம்மா‌ இங்கேயே நின்னுட்ட இன்னைக்கு என் பையனுக்கும் நிச்சயம்... ஒருத்தரை பார்த்துட்டு இன்னொருத்தரை பாக்கலன்னா எப்படி..." அவளை கார்த்திக்கிடம் அழைத்து சென்றவர் "பேசிட்டு இருங்க இதோ வந்துடுறேன்..." ரேவதியும் சிவாவையும் அவர்களிடம் விட்டுவிட்டு விருந்தினர்களை கவனிக்க சென்றார் கல்யாணி...

அவள் அருகே வர வர இளகி புன்னகைத்திருந்த கார்த்திக்கின் முகம் இறுக்கமாக மாறியது...

'ஏன்டி ஏன் ஏன் இப்படி‌ என்னை உயிரோட வதைக்குற... என் முன்னாடி வந்து என்னை ஏன் நிலைகுலைய வைக்குற.. நான் திடமா இருந்தாலும் உன்னை பார்த்த அடுத்த நிமிஷம் எல்லாம் தவிடு பொடியாடுதே..." மனதில் அவளை வதைத்தவன் அவளை பார்ப்பதை தவிர்த்து பார்வையை வேறு புறம் திருப்பினான். அவளை கண்டதும் நழுவும் தன் மனதினை கட்டுப்படுத்த முடியாது தவித்தான்.

"வாழ்த்துக்கள் கார்த்திக் சார்" சிவா வாழ்த்தை கூறிட அதை வரவழைத்த புன்னகையுடன் ஏற்று நன்றி கூறியவன் ரேவதியை பார்க்ககூட இல்லை ஏன் அவள் புறம் கூட பார்வையை திருப்பாமல் சிவாவிடமே பேசிக்கொண்டு இருந்தான்.

"வா... வாழ்த்துக்கள் சார்" இறங்கி ஒலித்தது ரேவதியின் குரல்

ஏனோ இங்கு வந்த நிமிடத்தில் இருந்து அவனது பார்வை தன்னை தொடர்வது போல் அல்லவா இருக்கிறது... பார்வை அந்த பார்வையில் ஏதோ ஒன்றை கண்டவளால் அவனை நேருக்கு நேர் எதிர்க்கொள்ள முடியவில்லை... எப்போதும் திமிர் என்ற போர்வைக்குள் இருப்பவனது பார்வை இல்லை... நிச்சயம் இது வேறு... அது எது என்பது தான் அவளுக்கு புரியவில்லை...

இறுக்கத்துடன் இருந்தவனது முகம் அவளின் வார்த்தைகளில் ரேவதியையே ஆழ்ந்து நோக்கியது... "தேங்க்ஸ்..." இரும்பின் கடினத்துடன் வெளிப்பட்டது அவனது குரல்... வார்த்தையில் இருந்த கடினமும் அழுத்தமான பார்வையும் அவளை சமநிலையில் இருக்க விடவில்லை...

"வாழ்த்துக்கள் மேடம்" நிஷாவிடம் தன் வாழ்த்தை உரைக்க "தேங்க்ஸ் ரேவதி.." அவளின் வாழ்த்தை ஏற்றுக் கொண்ட நிஷா தன் நன்றியை தெரிவித்திட, அவர்களிடம் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள். போகும் அவளையே துளைத்தது கார்த்திக்கின் கூர் விழிகள்.

விழாவில் நடுநாயகமாக நின்றிருந்தன இரு ஜோடிகளும், அவர்களின் இரு புறமும் அவர்களது குடும்பத்தார் நிற்க தேவராஜ் பேச ஆரம்பித்தார்...

"குட் இவினிங் லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்ஸ்... எங்க அழைப்பை ஏற்று வந்து எங்க பிள்ளைகளின் நிச்சய விழாவை சிறப்பித்த உங்களையெல்லாம் பாக்குறதுல ரொம்ப சந்தோஷம்... இதுவரை தொழில்முறையில் மட்டும் அங்கத்தினரா இருந்த நாங்க இந்த நிச்சயத்தின் மூலம் குடும்ப அங்கத்தினர்களாகவும் மாறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்...."

"என்ன அன்பு நீ என்ன சொல்ற...?" என மைக்கை தன் நண்பன் அன்பரசுவின் கரங்களில் திணித்தார் தேவராஜ்..

"அட என்னப்பா நீ... நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன இனி எல்லாம் ஒன்னு தானே..." தன் நண்பனை சிரிப்புடன் பார்த்தவர், "என் நண்பன் தேவா சொன்னா மாதிரி இந்த நிச்சயத்தின் மூலமா நாங்க ஓரே குடும்பமா மாறுவதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு... இதுவரையிலும் தொழில்ல ஒன்றாக இருந்தோம் இனி உறவிலும் எங்க நட்பு பலப்படும் போது வேற சந்தோஷம் இருக்க என்ன..? இதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம் எங்க குழந்தைகளை வந்திருக்கும் எல்லாரும் வாழ்த்தி ஆசிர்வதிக்கனும்" நெகிழ்ச்சியுடன் கூறியவர்,

"சஞ்சய் என் மருமக கையில அந்த மோதிரத்தை போடுப்பா‌" என்றதும் மாதவி தன் கையில் இருந்த வைர மோதிரத்தை கொடுக்க சுஜாவின் மலர்கரங்களை கைகளில் ஏந்தி நீலத்பல மலரை போன்ற நீண்ட அழகிய விரல்களில் அணிவிக்க மங்கையவளின் பூ மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

"சுஜா... நீயும் சஞ்ஜைக்கு போட்டு விடுமா" என்றதும் மெல்லிய நாணம் எழ, வெட்கத்துடன் நீண்ட வலிய அவன் கரங்களை பற்றியவள் கல்யாணி நீட்டிய வைர மோதிரத்தை அவனுக்கு அணிவித்திட விருந்தினர்களின் ஓ.... என்னும் சத்தத்துடன் கரவொளி எழுந்து அடங்கியது...

"இப்போ கார்த்திக் நீ போடுப்பா..." தேவராஜின் சொல்லிற்கு கல்யாணி மகனிடம் மோதிரத்தை நீட்ட அதை வாங்கவே வெகுவாக தயக்கம் காட்டினான்.

"வாங்குப்பா இந்தா..." கல்யாணி கொடுக்க

"ம் இதோ மா..." கல்யாணிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவன் பார்வை, கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த ரேவதியை தொட்டு மீண்டது... இது, அவள் இருக்க வேண்டிய இடமல்லவா..? இது அவளுக்கு சேர வேண்டிய பொருளல்லவா??... நான்.. நான் அவளுக்கு சொல்லவே முடியாமல் இதயம் தவிக்க மனதை கல்லாக்கிக் கொண்டு நிஷாவின் வெண்டை விரல்களில் அந்த மோதிரத்தை அணிவித்தான்.

இப்போதும் ரேவதிக்கு காரத்திக் தன்னை உறுத்து பார்ப்பது போல இருந்தது... காரத்திக்கின் பார்வையில் ஏதோ ஒன்று அவளை இம்சை செய்து, அவளின் கண்களின் மொழி அவள் இதயத்தை ஏதோ செய்தது.. என்ன இது... இத்தனை பேர் மத்தியில் அவரோட பார்வை என்னை மட்டுமே பார்க்குறா மாதிரி இருக்கே... இது என்னோட பிரம்மையா இல்ல இல்ல இல்ல... உண்மையாவே என்னை தான் பாக்குறாரா...? அவள் எண்ணக்கடலில் சுழன்று கொண்டிருக்கும் நேரம்,

"நிஷா நீயும் போடும்மா" மாதவியின் கரங்களில் இருந்து மோதிரத்தை வாங்கியவள் அவனுக்கு அணிவிக்கும் நேரம் கார்த்திக்கின் பின் நின்றிருந்த அர்ஜூன் தெரிய அவனை வெட்டும் பார்வை பார்த்து முகத்தை திருப்பியவள், கார்த்திக்கின் கரங்களில் மோதிரத்தை அணிவித்தாள். வாவ் என்ற கூவலுடன் அந்த இடம் அதிர கரவொளி எழுந்து அடங்க வெகு நேரம் ஆகியது.....

நண்பர்களின் ஆரவாரத்தில் அந்த கூட்டத்தில் ரேவதியை மறுபடி பார்க்க முடியாது போக, அடுத்த நாளே அர்ஜூனுடன் இருப்பதாக கூறிய கார்த்திக் மும்பை வந்து விட்டான்.

எண்ணம் எங்கெங்கோ பயணித்து இறுதியில் அவளிடமே சென்றைடைய விழிகளில் மெல்ல தூக்கம் தழுவியது.

......

"ஏய்ஈஈஈஈஈ..." என கூவலுடன் எதிரில் வந்த மினி வேனில் மோதாமல் தடுத்த திவ்யா, ஸ்கூட்டியின் ஹென்டிலை திருப்பி மணல் மெட்டில் விழும்படி செய்து கையை தட்டிக்கொண்டு எழுந்தவள், ரேவதியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"பச்... இப்போ எதுக்குடி வண்டியை‌ புடிச்சி ஆட்டினா..." ரேவதி சண்டைக்கு தயாராக...

"ஏய் இந்த உலகத்துல இருக்கியாடி...? இந்நேரத்துக்கு அந்த மினி வேன்ல மோதி என்னை சாகடிச்சிருப்ப டி கொலைகாரி..." அவளின் நெற்றியில் கையை வைத்து தள்ளி விட்டாள் திவ்யா...

"அடியே இம்சை புடிச்சவளே... என்னடி கதையா விடுற... நா.. நான் ஒழுங்கா தான் ஓட்டிட்டு வந்தேன் நீ.. நீ தந்த ஆட்டத்தில் ஏதோ பண்ணிட்ட" திவ்யாவின் மீதே குறை சொல்ல...

"இனி பேசினா வாயை தைச்சி விட்டுடுவேன் பாத்துக்க... என்னடி குடையுது உன் மனசுல? வண்டியை ஓட்டிக்கிட்டே தூங்கிட்டு வர்ற நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன்... ஒரு நாலு நாளா உன் போக்கே சரியில்லையே என்னமோ இருக்கு... என்ன சொல்லு...?" என்றாள் அவளை சரியாக நாடி பிடித்து...

"ஒன்றுமில்லை... பத்துமில்லை.. நான் எதுவுமே நினைக்கலை நீயா கதை கட்டி விடாத புரியுதா..? அவள் சட்டென கூறிவிட்ட போதும் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தென்வோ உண்மை... திவ்யாவிடம் இதை எப்படி சொல்வது என்னும் தெரியவில்லை...

'ஏன்... ஏன்... அந்த பார்வை... உயிரை உருக்கும் பார்வையில் என்னை ஏன் அப்படி பார்த்தாரு.. இதுவரையிலும் திட்டிக்கிட்டே இருந்து போல இருந்தா கூட ஒன்னும் தெரிஞ்சி இருக்காது... ஆனா, இந்த பார்வை என்னை ஏதோ செய்யுதே அய்யோ கடவுளே...." தலையை பிடித்தபடி நின்று விட்டாள்.

"என்னடி தலை வலிக்குதா..." திவி அக்கறையுடன் கேட்டிட,

"அய்யோ செல்லக்குட்டி நல்லா ஐடியா கொடுக்குறியே...." மனதில் தோழியை மெச்சிக் கொண்டவள். முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு "எனக்கு காலையில் இருந்து ஒரே தலை வலி திவி... அதான் ஒரு மாதிரி இருக்கேன் போல வேற ஒன்னுமில்லை..." சமாளிப்பாக கூறினாள்.

"சொல்ல வேண்டியது தானே எருமை... நானே வண்டியை ஓட்டி இருப்பேன்ல இப்பவும் அப்படியே இருக்கா..? டேப்லட் போட்டுக்குறியா...?" திவியின் அக்கறையான பேச்சினில் அவளிடம் பொய் உரைத்ததில் உள்ளம் குறுகுறுக்க,

"இல்ல திவி... இப்போ ஓகே தான்... நீ வண்டியை எடு வேலைக்கு நேரம் ஆகுது..." என்றாள் ரேவதி அந்த பேச்சினை கத்தரிப்பதை போல.

சரி இரு என வண்டிய எடுத்து நிறுத்தி, அவளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவள், ஹேய் கேட்க மறந்துட்டேன் ராகவ் போன் பண்ணினானா??"

'ஆமா ராகவ் ஃபோன்... அச்சோ... மறந்துட்டேனே... கடவுளே... நேத்து காலைல கால் பண்ணி இருந்தான் அம்மா இருந்ததால பேச முடியல இ.. இப்போ என்ன நினைச்சி இருப்பான்... கார்த்திக்கை பத்தி யோசிச்சி யோசிச்சி இதை மறந்துட்டேனே' தலையில் தட்டிக் கொண்டவள் வேகமாக தனது போனை எடுத்து ஆராய்ந்தாள்...

இரண்டு மூன்று தவறிய அழைப்புக்கள் மட்டுமில்லாமல் தொடர்ந்து 40 ஐம்பது குறுந்தகவல் குவிந்து கிடந்தது... "ரேமா என்ன பண்ற... ஏன் போனை எடுக்கவில்லை ... நீ நல்லா இருக்கியாவில் ஆரம்பித்து உன்னை எப்போ பார்ப்பேன்னு இருக்கு ரேமா நான் அங்க வந்துடவா" என்பதில் முடித்திருந்தான்.

சே... இதை எப்படி மறந்தேன் நைட்டு முழுக்க போனை எடுக்கவே இல்ல இந்த ஃபோன் வேற சதி பண்ணுது... அலுத்துப் போனவள் உடனே அவனுக்கு கால் செய்ய அது எடுக்க படாமல் போனது. தவறிய இரண்டு முழு அழைப்புக்களுக்கு பிறகு ஃபோனை ஏற்று பேசினான் ராகவ்...

"ஹலோ..." கடுகடுவென வந்தது அவன் வார்த்தைகள்.

"ஹலோ... ராகவ்... எப்படி இருக்கிங்க உடம்பு எப்படி இருக்கு இப்போ ஓகே வா...." அவனுடைய உடல் நலனை விசாரிக்க

ம் சுரத்தே இன்றி வந்தது அவனது குரல்

அவன் கோவம் புரிய "சாரி சாரி ராகவ் மொபைல் ரிப்பேர் அதான் என்னால ரிப்ளை பண்ண முடியல..." அவள் தவறை உணர்ந்து மன்னிப்பை வேண்டினாள்.

அவன் மௌனம் காக்கவும் "ராகவ் ப்ளீஸ் சாரி" அவள் மறுபடி மன்னிப்பை வேண்ட

"பரவாயில்லை போன் பண்ணிட்ட நீ போன் பண்ண மாட்டேன்னு ல நினைச்சேன்... என் நினைப்பு கூட உனக்கு இருக்கா... கட்டாயத்துக்காக தான்‌ என்னை லவ் பண்றவனுக்கு எதுகாகு போன் பண்ணனும்னு நினலச்சிட்டியா?" கோவமாக பேசினான் அவன்.

"ராகவ் ப்ளீஸ் .... நான் சொல்ல வர்றதை" அவள் கூற வருவதற்குள்,

அவன் அறைக்குள் யாரோ பெண்மணியின் பேசும் குரல் கேட்கவும் சட்டென போனை அணைத்து விட்டான் ராகவ்... இவளுக்குத்தான் ஒரு மாதிரியாகி போனது.

"என்னடி‌ பேசிட்டியா...?"

"இல்ல திவி அதுக்குள்ள யாரோ வந்துட்டாங்க நான் ஆபீஸுக்கு போயிட்டு பேசிக்கிறேன்" தோழியிடம் ஏதோ ஒரு காரணத்தை உரைத்தவள் கவலைபடித்த முகத்துடன் வேலைக்கு சென்றாள்.

அலை அடிக்கும் 🌊🌊

Continue Reading

You'll Also Like

93.1K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
63.9K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
183K 6.1K 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடி...
10.3K 339 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...