அலை 🌊20

229 12 2
                                    

ஒரு வார காலம் என்பது இரண்டு வாரமாக மாறி போக, அது எப்படி போனது என்பதே தெரியவில்லை… பறவையை போல கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்கள் சட்டென  பறந்து விட்டிருந்தது… அர்ஜூன் கூறிய சில விஷயங்கள் கார்த்திக்கின் மனதினை   சமநிலைக்கு எடுத்து வந்திருந்தது.

முதல் வாரமே வருகிறேன் என கூறியவன் தீபக் மற்றும் அர்ஜூனுடன்  நாட்களை கடத்தி விட்டு  இன்று தான் சென்னை திரும்பி இருந்தான்.

வரும் போதே ஒரு தெளிவான முடிவுடன் தான் வந்தான். இனி ரேவதியை பற்றி எக்காரணத்தை கொண்டும் நினைப்பதில்லை… அவளை  பார்ப்பதில்லை… என்பது தான் அது…

அதுமட்டுமின்றி நிஷாவுடன் ஒரு சுமுகமான மனநிலையில் இருக்க நினைத்தவன்,.  முதல் வேலையாக சென்னைக்கு வந்து விட்டதை அவளுக்கு தெரிவித்து சென்னைக்கு அழைத்திருத்தான்.

பார்த்தாலே முகத்தை திருப்பி கொள்பவன், ஒருதலை காதலுக்கே  இந்த அளவுக்கு  உருகுபவன், தன்னை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என அழைத்தவுடன், சிறகில்லாமல் வானில் பறந்தவள், அடுத்த இருநாட்களில் கிளம்பி வருவதாக தகவலை தெரிவித்து இருந்தாள்.

ஒரு வித தெளிவுடன் அலுவலகம் நுழைந்தவனை ரகு வாயில் புறத்தில் வந்து வரவேற்றான்.

*குட் மார்னிங் சார்…"

"குட் மார்னிங் ரகு…" பளிச்சென தெளிந்த முகத்துடன், எப்போதும் போல சிறு கீற்றாய் புன்னகைத்து,   அடுத்த அடுத்த வேலைகளை விசாரித்துக் கொண்டே சென்றான்…

ரகு தான் அகல விரிந்த கண்களுடன் அவனை பார்த்தான். கடந்த ஒரு‌மாத காலமாக இறுகிப் போய் சிரிப்பையே மறந்து சுற்றி வந்தவரா இவர்… தான் போனில் பேசிய போது கூட சிடுசிடுவென எரிந்து விழுந்தவர்…    இன்று எதுவுமே நடவாதது போல சாதரணமாக அதுவும் புன்னகையுடன் இருப்பது அவனுக்கு பெருத்த ஆச்சர்யத்தை கூட்டியது.,  கார்த்திக் அறியாதவாறு தனது அதிர்ச்சியான முகபாவத்தை மறைத்தவன்,

மலமலவென்று அவனுக்காக காத்திருந்த வேலைகளை பட்டியலிட்டவாறு, அவனுடன் அறைக்குள் நுழைந்தான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now