சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.8K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 90

311 25 4
By Vaishu1986

மறுநாள் காலையில் வாக்கிங் முடிந்து வந்த ஆலெனிடம் "மாமா.... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று கதிர் சொல்ல ஆலென் தன்னுடைய மருமகனைப் பார்த்து புன்னகைத்த படி,

"சொல்லுங்க மாப்ள.... என்ன பேசணும்?" என்று கேட்டார். இவன் தன் அப்பாவிடம் மனதில் உள்ளதை தயங்காமல் பேசி விடுவானா? எப்படி விஷயத்தைப் பேசப் போகிறானாயிருக்கும்? என்ற ஆர்வத்தில் சந்தனாவும் அங்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

திருமணம் முடிந்த பிறகும் ஆலெனை ஸார் என்றும் சுமலதாவை அம்மா என்றும் அழைத்துக் கொண்டிருந்தவன், தன் மனைவியின் அன்புக்கட்டளையால் ஆலெனையும் சுமலதாவையும்  சிரமப்பட்டு முயன்று மாமா அத்தை என்று அழைக்கப் பழகியிருந்தான்.

தன்னுடைய மகளும் மருமகனும் கணவரின் முன் அமர்ந்திருந்தப்பதைப் பார்த்த சுமலதாவும் ஆலெனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"தண்ணி அது
ரொம்ப குளிருதே
ஷவரு அது
தலையில் இடிக்குதே
சோப்பு அது
கையில் வழுக்குதே
பல்லி அது
சொவத்தில் நிக்குதே!"

என்று தன்னுடைய சொந்த ட்யூனில் சொந்த வரிகளைப் பாடிக் கொண்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தான் ஜெபா.

"மாமா..... செஞ்சுட்டு இருந்த வேலைய விட்டுட்டு நம்ம ஆரம்பிக்கப் போற ட்ராயிங்க் ஸ்கூல பாத்துக்குறேன்னு சொன்னது நீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா! நான் என் சைடுல அந்த ஸ்கூலுக்கு பிள்ளைங்க வர்றதுக்கான வேலைங்கள செஞ்சுட்டு இருக்கேன்! சஞ்சீவ் அவன் சைடுல இடத்துக்கான ரெஜிஸ்ட்ரேஷன், கட்டடத்த கட்டுறதுன்ற வேலையப் பாத்துட்டு இருக்கான். உங்களால முடிஞ்ச வேலையா நீங்க எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனுமே மாமா?" என்று ஆலெனிடம் விண்ணப்பித்தான்.

"உங்களுக்கு என்ன மாப்ள உதவி வேணும்? சொல்லுங்க அதெல்லாம் ஆலென் கண்டிப்பா செய்வாரு. என்னால முடிஞ்சா நானும் செய்றேன்!" என்று கதிரிடம் சொன்ன சுமலதாவின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனா லேசாக சிரித்தாள்.

"ஏய் சந்து.... எதுக்குடீ சிரிக்குற?" என்று கேட்ட சுமலதாவிடம்,

"கதிர் ஆலென ரோடு ரோடா நடக்க வைக்கப் போறான்மா! நீயும் அந்த பாதயாத்திரையில கலந்துக்கப் போறியா?" என்று கேட்டாள்.

"சந்து என்ன மாப்ள சொல்றா?" என்று கேட்ட ஆலெனிடம் சற்றே தயங்கிய குரலில்,

"இல்ல மாமா! அவங்களோட
சின்ன தேவைக்காக ரோட்டுல வரையுற கலைஞர்கள்ல ஆர்வம் இருக்குற சில பேரை
நம்ம ட்ராயிங்க் இன்ஸ்டிடியூட்ல சேர்த்து அவங்களுக்கும் அடிப்படையில இருந்து சில விஷயத்த சொல்லித் தரலாம்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்குது! நூறு பேர் காசு குடுத்து கத்துக்குறத பத்து பேர் இலவசமா கத்துக்கட்டுமே.... இந்த கலைஞர்கள் எங்க எங்க இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் எடுத்துட்டு வந்தீங்கன்னா, நான் அவங்க கிட்ட நம்ம ஸ்கூல பத்தி பேசி புரிய வைப்பேன்.
இத உங்களால செய்ய முடியுமா? இந்த ஐடியாவப் பத்தி நீங்க
என்ன சொல்றீங்க மாமா?" என்று கேட்டான் கதிரேசன்.

"நல்ல விஷயம் தான் நல்லா செய்யலாம் மாப்ள!" என்று சொன்னவரிடம்,

"ஆலென் இதுக்கு நான் வரல.... நீ மட்டும் போயிட்டு வா! ரோட்டுல வரையுறவங்க கூட எல்லாம் பேச நம்மளால முடியாதுப்பா!" என்று சொன்ன சுமலதாவின் இயல்பை அங்கு யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரால் கண்டிப்பாக அந்த காரியத்தை செய்ய முடியாது என்று வீட்டினர் அனைவருக்கும் தெரியும்.

"அத்தை.... நீங்க ட்ராயிங்க் ஸ்கூலோட அட்மினிஸ்ட்ரேஷன மட்டும் பாத்துக்கோங்க. மாமாவும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. மாசாமாசம் ஸ்ட்டூடெண்ட்ஸ் கிட்ட மறக்காம ஃபீஸ வாங்கிடுவீங்களா? இல்ல.... நம்ம தாராள மனசோட யாருக்குமே ஃபீஸ் வாங்காம க்ளாஸஸ் நடத்துவோமா அத்தை?" என்று கேட்ட கதிரிடம்,

"ஐயோ மாப்ள.... ஃப்ரீயா கிடைக்குதுன்னா, அந்த விஷயத்துக்கு வேல்யூவே இருக்காது! அந்த ஸ்கூலோட பில்டிங் கட்ட, சொல்லித்தர்ற பொருளெல்லாம் வாங்க நீங்க காச செலவழிப்பீங்க தான? அந்த பணத்த நமக்கு யார் தருவாங்க? அதெல்லாம் ஒவ்வொரு ஸ்ட்டூடெண்டுக்கும் ஃபீஸ் கண்டிப்பா வாங்கணும்!" என்று சொன்ன சுமலதாவிடம் பெரிதாக தலையாட்டினான் கதிர்.

"ஓகே ஆலென்.... இத உங்கிட்ட பேசி உன்னோட ஒப்பீனியன் கேட்டுடுவோம்னு நாங்க நினைச்சோம். கேட்டுட்டோம். கதிர் நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?" என்று கேட்ட சந்தனாவிடம்,

"இரு மோளே.... சாப்ட்டுட்டு போலாம்!" என்றார் ஆலென்.

"ம்ஹூம்! அங்க பாகேஸ் ஆன்ட்டி எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நாங்க கிளம்புறோம் ஆலென், அம்மா பை ம்மா.... டேய் தம்பிப்பையா கிளம்புறோம்டா!" என்று சத்தமாக குளியலில் இருக்கும் ஜெபாவிடமும் சொல்லி விட்டு சந்தனா அவளுடைய அறைக்குள் சென்றாள்.

"மாமா.... நான் உங்களுக்கு ஏதாவது கஷ்டம் குடுக்குறேனா?" என்று தயக்கத்துடன் அவரிடம் கேட்டான் கதிர்.

தன் அப்பனிடம் இந்த மாதிரியான கேள்வியைக் கேட்கும் எண்ணமாவது முதலில் தோன்றுமா என்று நினைத்த கதிருக்கு அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆலெனிடம் இப்போது கேட்ட உதவி கொஞ்சம் அளவில் பெரியதோ என்ற எண்ணத்தில் வந்து முடிந்தது.

"ஒரு பிஸினஸ ஸ்டார்ட் பண்ணும் போது இதுல இருந்து நமக்கு எவ்வளவு ஆதாயம் கிடைக்கும்னு யோசிக்காம, இதுல இருந்து எத்தனை பேருக்கு நல்லது கிடைக்கும்னு யோசிக்குறீங்க பாத்தீங்களா..... இந்த இயல்போடயே கடைசி வரைக்கும் இருங்க மாப்ள; மாறிடாதீங்க! ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவிய உங்களுக்கு செஞ்சு தர்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! இப்ப கிளம்புங்க..... நாம இன்னிக்கு இல்ல நாளைக்கு நைட் நீங்க இங்க வரும்போது இதப்பத்தி இன்னுங்கொஞ்சம் தெளிவா பேசிக்கலாம்!" என்று சொன்ன ஆலெனிடம்,

"ரொம்ப தேங்க்ஸ் மாமா! வர்றேன் மாமா, பை அத்தை!" என்று கவலை அகன்ற மனத்துடன் சொல்லி விட்டு புறப்பட்டான் கதிர்.

வீட்டுக்குச் சென்று சந்தனாவிற்கு பை சொல்லி அவளை பார்லருக்கு அனுப்பி வைத்தவன், தன்னுடைய அன்னையை கடையில் கொண்டு சென்று விட அவருடன் ரெடிமேட்ஸ்க்கு கிளம்பினான்.

"கதிரு.... சந்தோஷமா இருக்கியா சாமி? முகமெல்லாம் ஒரேடியா மலந்துருக்கு?" என்று மகனின் மகிழ்ச்சியைப் பார்த்து அவரும் புன்னகைத்து பிள்ளையிடம் கேள்வி கேட்டார் பாகேஸ்வரி.

"ஆமாம்மா..... காலையில நினைச்ச காரியம் ஒண்ணு சரியா நடந்துடுச்சு! அதுனால சந்தோஷமா இருக்கேன்!" என்றான்.

"என்னய்யா..... பாப்பாவ கூட்டிக்கிட்டு பத்து நாளைக்கு ஏதாச்சு ஊருக்குப் போயிட்டு வருவன்னு பாத்தா காரியம் சரியா நடந்துடுச்சு; அதுனால சந்தோசமா இருக்கேங்குறியே கண்ணு! ஒன்னைய என்னா சொல்றது?" என்று கேட்டவரிடம்,

"ஒண்ணும் சொல்ல வேண்டாம்! இப்ப நானோ அவளோ உங்கள விட்டுட்டு எங்கயும் நகருற மாதிரியில்ல.... உங்க மருமக கல்யாணத்தன்னிக்கே உங்க கஷ்டத்துல நானும் பங்கெடுத்துக்குறேன்னு சொல்லாம சொல்ல என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியுந்தான? அப்புறம் எதுக்கு இந்த கேள்வியெல்லாம்.....? நாங்க சந்தோஷமா இருக்கோம் ஆனா வெளியூருக்குப் போய் ஊரு சுத்துற அளவுக்கு சந்தோஷமா இல்லம்மா! அவளோட அம்மா வீட்டுக்கு நைட் போயிட்டு காலையில வர்றதுக்குள்ள பத்து தடவ என்னைய பாகேஸ் ஆன்ட்டி தேடுவாங்கன்னு சொல்லிடுறா; இவ எங்க உங்கள தனியா விட்டுட்டு ஊருக்கு வர்றது? நிஜமாவே நாங்க இல்லாம உங்களுக்கு ராத்திரியில ஒண்ணும் கஷ்டமா இல்லையேம்மா?" என்று விளக்கமும் அளித்து விட்டு இத்தனை கேள்விகளையும்
கேட்டான் கதிர்.

"ஒரு கூடு அத விட்டு இன்னொரு கூடுன்னு இருந்தவய்யா நானு..... இப்பத்தான் எங்கூட்ட விட்டு கொஞ்சம் வெளியவே எட்டிப் பாக்குறேன். இந்தக் காலத்து பொம்பளப் புள்ளைங்கள எல்லாம் நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க வெளிய வர்றாங்க; தைரியமா சொந்த கால்ல நிக்குறாங்க; இந்த சமுகத்த ஒத்தையாளா சந்திக்குறாங்க..... இந்த மாதிரியெல்லாம் உங்கம்மாவும் கொஞ்சமாவது வளர வேண்டாமாய்யா? இதுல எங்கிட்ட நீயி தனியா வீட்டுக்குள்ள பூட்டிக்கிட்டு தூங்குறதுக்கு பயமாயிருக்கான்னு கேக்குற? என்ன சாமி இது?" என்று சொன்ன அன்னையிடம் புன்னகைத்தவன்,

"சரிம்மா.... இனிமே இந்த கேள்விய உங்க கிட்ட நான் கேக்கல!" என்றான்.

மகனுடன் பத்து நிமிடங்களில் கடையை அடைந்த பாகேஸ்வரி தங்களுடைய பணியாளர்கள்
அனைவரின் காலை வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டபடியே கதிருடைய கையில் கடைச்சாவியைக் கொடுத்து கடையை திறக்கச் சொன்னார்.

தினமும் தன்னை வாகனத்தில் அழைத்து வரும் மகன் கைகளால் கடையின் வாசலை திறக்கச் சொல்வது பாகேஸ்வரிக்கு பழக்கமாகி விட்டிருந்தது. அவன் திறந்து வைத்தால் வியாபாரம் நன்றாக நடக்கிறது என்று அந்த தாய்க்கு ஒரு எண்ணம்!

கடை திறக்கப்பட்டதும் கடையின் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையாருக்கு ஒரு பூஜையை செய்து விட்டு கடையின் கல்லாவிற்கு மேற்புறத்தில் கதிர் காலேஜில் படிக்கும் போது தனக்கு வரைந்து தந்திருந்த மதுரை மீனாட்சி அம்மனின் போட்டோவிற்கு தூபம் காட்டி விளக்கேற்றி விட்டு, அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரேஸ் ரெடிமேட்ஸில் கடையின் முதலாளி சீட்டில் அமர்ந்திருந்தார்.

வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்தின் அதிமுக்கிய வரவேற்புக்கு உரியவர் என்ற காந்தியின் வாசகம் அவரது இருக்கைக்கு பின்னால் ஃப்ரேம் செய்து வைக்கப்பட்டிருந்தாலும், பாகேஸ்வரி பிரத்யேகமாக
இந்தக் கடையின் பணியாளர்கள் எனக்கு கதிரைப் போல மிகவும் முக்கியமானவர்கள் என்ற வாசகத்தை தன்னுடைய மனதிற்குள் எழுதி வைத்திருந்தார்.

பத்தரை மணியளவில் முதல் மாடியில் பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் பிரிவில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் கடைச் சிப்பந்தி வைரமுத்துவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

"ஏங்க.... இந்த ட்ரெஸ்ஸ ஆன்லைன்ல வாங்குனா கண்டிப்பா உங்க கடை ரேட்ட விட கம்மியா தான் இருக்கும்! நாலு வயசு குழந்தைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்ல ஃப்ராக் வாங்குனா அது மூணு நாலு மாசத்துக்குள்ள பத்தாம
போயிடுது!" என்ற வாடிக்கையாளரின் பொறுமலைக் கேட்ட கதிருக்கு ஏனோ சிரிப்பு வந்தது.

அவன் இப்படி தன் குழந்தையின் ஆடை விலை அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படுவதற்கு அவனுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்று நினைத்து ஏங்கினான்.

"நல்லா வாங்குங்க ஸார்.... டீவி, ப்ரிட்ஜ், கட்டிலு, பீரோ, துணி, நகை எல்லாத்தையும் ஆன்லைன்லயே வாங்கி உள்ளூர் வியாபாரியோட வயித்துல அடிச்சிட்டு வெளிநாட்டு மொதலாளிட்ட கொண்டு போய் உங்க பணத்த கொட்டுங்க!
எங்களுக்கு ஹோல்சேல் ப்ரைஸ் எவ்ளோ வருதோ அதுல கொஞ்சம் லாபம் வச்சு தான் எங்க கடையில பொருள விக்க முடியும்! நீங்க எடுக்குற துணியெல்லாம் சின்னதாகிடுதுங்குறதுக்காக நாங்க என்ன உங்களுக்கு இலவசமாவா துணிய குடுத்துட்டு இருக்க முடியும்?" என்று அவரிடம் எதிர்வாதம் புரிந்தான் வைரமுத்து.

தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, "முத்து.... என்ன இங்க பிரச்சன?" என்று கேட்ட முதலாளி அம்மாவிடம் வைரமுத்து நிலைமையை விளக்கினான்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

82.1K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
5.4K 348 10
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...
167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...