சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 87

262 27 3
By Vaishu1986

அன்று காலை ஒன்பதரை மணியளவில் சந்தனாவுடைய ஸ்கூட்டியை ஓட்டியபடி தன்னுடைய வொர்க்ஸ்பாட்டிற்குள் நுழையப் போனவனுக்கு "ப்ளூமிங் லைஃபின்" பெரிய கதவுகள் இரண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.

"நமச்சு அண்ணா; நமச்சு அண்ணா!" என்று செக்யூரிட்டியை சப்தமாக அழைத்தவன்,

"காலையிலயே மெயின்கேட்ட பூட்டிட்டு எங்க ரவுண்ட்ஸ் அடிக்கப் போய்ட்டாரு இவரு? ஒருவேள மார்னிங் தம்முக்கு கண்டா ஒதுங்கிட்டாரோ...? பட் அதுக்கு கூட இன்னும் டைம் இருக்கே?" என்று நினைத்தபடி அந்த இல்லத்தின் உரிமையாளர் பிரகாஷிற்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

"சொல்லுப்பா ஜெபா....!" என்று கேட்டவரிடம்,

"அங்கிள்.... நம்ம செக்யூரிட்டி நமச்சிவாயம் அண்ணாவ காணும்! மெயின் கேட்டை பூட்டிட்டு எங்க போயிட்டாருன்னு தெரியல; எதுவும் ப்ராப்ளமா அங்கிள்?" என்று கேட்டவனிடம்,

"நான் நம்ம ஹோமுக்கு தான்ப்பா வந்துட்டு இருக்கேன். நீ ஒரு ஃபைவ் மினிட்ஸ் அங்க வெயிட் பண்ணு!" என்று சொல்லி விட்டு வைத்தார் ப்ரகாஷ்.

ஆலெனுடைய அலுவலக சீனியர்களில் இந்த மனிதரும் ஒருவர்! இந்த இடத்தில் அவனால் முழு ஈடுபாட்டோடு ஒன்றி இருக்க முடிகிறது என்றால் இந்த வேலையில் ப்ரகாஷ் அவனுக்கு குடுத்த சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்!

"எட்டு மணி பத்து நிமிடத்திற்குள் உன் ஸீட்டில் இருக்கவில்லை என்றால்...." என்று ஒருநாளும் ப்ரகாஷ் ஜெபாவிற்கு நேர விதிமுறைகள் விதித்ததே இல்லை.
சொல்லப்போனால் காலையில்
எட்டரை மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தவனிடம்,

"இவ்ளோ சீக்கிரத்துல இங்க வந்து நீ என்ன பண்ணப்போற? கொஞ்சம் லேட்டா தான் வாயேன்!" என்று சொல்லி இன்னும் கொஞ்சம் அவனை சோம்பேறி ஆக்கி விட்டதே அவர் தான்!

தன்னுடைய மனைவியினுடைய உடல்நலக்குறைவு காரணமாக அவர்களை இழந்து விட்டவருக்கு வாழ்க்கையில் அடுத்து இயங்குவதற்கான பிடிப்பு என்ன என்ற கேள்வி வர, அவருடைய மகன் சம்பாதித்து அனுப்பியிருந்த பணத்தில் அவருக்கான முதுமை கால இன்வெஸ்ட்மெண்டாக இருக்கட்டும் என்று நினைத்து வாங்கிப் போட்டிருந்த இடத்தில் "ப்ளூமிங் லைஃப்" என்ற முதியோர் இல்லத்தை தொடங்கி விட்டார்.

ஊருக்குள் அவருடைய வீட்டில் தனியாக இருப்பவர், காலையில்
பதினோரு மணிக்கு சாவகாசமாக ஊருக்கு சற்று வெளியே அமைந்திருக்கும் இங்கு வந்து
இல்லத்தில் தங்க வைத்திருக்கும் அனைத்து பெரியவர்களிடமும் ஒரு ஹாய் சொல்லுவது மாதிரியான ரவுண்ட்ஸ் அடித்து விட்டு அப்படியே அவர்களிடம் கொஞ்சம் ஊர்க்கதைகள் பேசிய பிறகு மதியம் அவர்களோடே அமர்ந்து சாப்பிட்டு, பின்னர் சற்று நேரம் அங்கே சாய்ந்து மதிய உறக்கம் போட்டு, மாலையில் இல்லத்தை சுற்றி பயிரிடப்பட்ட பச்சை மரங்கள், செடிகள் இவற்றினூடே காற்றாட ஒரு வாக்கிங் சென்று விட்டு, ஆறு மணியளவில் ஷட்டில், டேபிள் டென்னிஸ் என அன்றைய மூடுக்கு ஏற்ற விளையாட்டை சற்று நேரம் விளையாடி விட்டு, இரவு உணவை முடித்து ஜெபாவுடன் வீட்டிற்கு கிளம்பி விடுவார்.

அந்தந்த வேலைக்கு அமர்த்திய வேலையாட்களை தவிர இல்லத்தின் உள்புற வேலைகள், வெளி வேலைகள் என அனைத்து வேலைகளையும் ஒற்றையாளாய் நான்கு வருடங்களாக தனியே செய்து கொண்டிருந்தவருக்கு இப்போது சில மாதங்களாக ஜெபாவின் வரவு திருப்திகரமாக இருந்தது.

ஒரு துடிப்புள்ள இளைஞன் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு, தங்களுடைய பிள்ளைகள் தங்களுக்கு தராத நேரத்தை இவன் அவர்கள் எல்லாருக்குமாக கொடுத்ததே அந்த பெரியவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

"இப்ப என்ன வயசு ஆகிடுச்சு உங்களுக்கு? அறுபது ட்டூ எழுபது தான? இது ஒண்ணும் சோர்ந்து போயி, பாவமா லுக் குடுத்துட்டு, படுக்கையில விழுந்து கிடக்குற வயசில்ல..... வெட்டியா ஒருத்தரோட ஒருத்தர் வாய் அடிச்சுட்டு நிக்காம, உங்களால முடிஞ்ச சின்ன சின்ன வேலைங்கள நீங்களே செஞ்சுக்கோங்க யங் பீப்பிள்! அது தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுற வேலையா இருக்கலாம், கிச்சனுக்குள்ள போயி காய் கட் பண்ற வேலையா இருக்கலாம். இல்ல மீன் தொட்டிக்கு தண்ணி மாத்துற வேலையா இருக்கலாம்.... இப்டி உங்களால என்ன முடியுதோ அத செய்ங்க; ஓகே.....?" என்ற அவனுடைய துள்ளல் நிறைந்த வார்த்தைகளால் அங்கிருந்த வயோதிகர்கள் சற்றே புத்துணர்வு அடைந்து சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்ததே ஜெபாவினுடைய வெற்றி தான்!

தன்னுடைய தனிமையை விரட்டிய தன் ஹோமின் நண்பர்களும், தான் கொடுத்த மிதமான சம்பளத்தில் அலட்டிக் கொள்ளாமல், எனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று போராட்டம் நடத்தாமல்
அவனுடைய வேலையை சரியாக செய்த ஜெபசேகரனும் ப்ரகாஷிற்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்து போயினர்.

இப்படி பிரகாஷுக்கும், ஜெபாவுக்கும் நன்றாக போய்க் கொண்டிருந்த ப்ளூமிங் லைஃபில் பிரச்சனையை கிளப்புவதற்கென்றே ஒருத்தி கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

"குட்மார்னிங் அங்கிள்! என்ன ஆச்சு உங்களுக்கு? காலையிலயே இவ்ளோ பதட்டம்? பிபி சூட் அப் ஆகிடுச்சா?" என்று அவருடைய வியர்த்து வழிந்திருந்த முகத்தைப் பார்த்துக் கேட்ட ஜெபாவிடம்,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜெபா! KL ல இருந்து எம்பேத்தி வீட்டுக்கு வந்துருக்கா! இது அவளோட வேலை தான்!" என்று பூட்டியிருந்த கதவை சுட்டிக் காட்டி புன்னகைத்தார் பிரகாஷ்.

"ஓ.... உங்க பேத்தி வந்தவுடனே நம்மள தெருவுல நிப்பாட்டிடுவாங்களா அங்கிள்? எதுக்கு இப்ப லாக் பண்ணிட்டு உள்ள உட்கார்ந்துருக்காங்க? ஏதாவது ஸ்ட்ரைக் பண்றாங்களா?" என்று கேட்டவன் முகத்தைப் பார்த்து விட்டு,

"அவளுக்கு அவங்க அப்பா அம்மா கூட இருக்குறது பிடிக்கலையாம்! அதுனால இந்தியாவுலயே இருக்கப்போறேன், இது எங்கப்பா குடுத்த காசுல வாங்குன ப்ராப்பர்ட்டி தான? அதுனால இனிமே இத நான் தான் பாத்துக்கப் போறேன்னு சொல்லி வந்ததுல இருந்து ஒரே அழுகை.... எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல ஜெபா!" என்று சொன்னவரிடம்,

"டோண்ட் வொர்ரி! எங்க அக்காவும் கிட்டத்தட்ட உங்க பேத்தி காரெக்டர் தான்; ஒரு விஷயத்த நினைச்சு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்னா..... அப்புறம் கர்த்தரே வந்து சொன்னாக் கூட மாத்திக்க மாட்டா! இந்த மாதிரியான நிலைமைய சமாளிச்சு எனக்கு நிறைய பழக்கம் இருக்கு! நீங்க இருங்க அங்கிள்!" என்றவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து இல்லத்தின் ப்ரெண்ட் டெஸ்க் லேண்ட்லைன் நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.

"டேய்... உன் அக்கா பெருமைய பத்தி உங்கப்பன் டெய்லி எங்கிட்ட
இருபது நிமிஷம் பேசிட்டு இருக்கான்! நீ அந்தப் பொண்ணைப் போய் எங்கிட்ட திட்டிப் பேசிக்கிட்டு இருக்க! அவ கல்யாணத்துக்கு தான் என்னால வரமுடியாத மாதிரி ஆகிடுச்சு! உன் கல்யாணத்துக்காவது கண்டிப்பா வரணும்!" என்று சொன்னவரை ஒருபார்வை பார்த்தவன்,

"முதல்ல இப்ப எப்டி உள்ள போகப்போறோம்னு யோசிக்கலாமா அங்கிள்?" என்று சொல்லி விட்டு அழைப்பை நிறுத்தி விட்டு அவனே மறுபடி அழைத்தான்.

"என்னடா ஃபோன எடுக்க மாட்டேங்குறாளா?" என்று கேட்டவரிடம்,

"ம்ப்ச்! பக்கி.... கால கட் பண்ணி கட் பண்ணி வெளையாடுறா அங்கிள்!" என்று கோபமுற்ற குரலில் அவளைத் திட்டினான்.

"சரி வா..... போயிட்டு நாளைக்கு வருவோம். எவ்ளோ நேரம் இந்த வெயில்லயே நிக்குறது?" என்று கேட்டு விட்டு திரும்பப் போனவரை தடுத்து நிறுத்தியவன்,

"சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க அங்கிள்..... உங்க பேத்தி சரியான லூசா இருப்பா போலிருக்கு! வாசல்ல நிக்குற செக்யூரிட்டியையும் உள்ள கூப்ட்டுக்கிட்டு, லேண்ட்லைன் காலையும் அட்டெண்ட் பண்ணாம, சிசிடீவியையும் இப்ப வரைக்கும் பாக்காம உள்ள அப்டி என்னத்த தான் பண்ணிட்டு இருக்கா?" என்று சற்றே ஆத்திரமடைந்த படி கேட்ட ஜெபாவிடம்,

"யார் கிட்டயாவது ஒக்காந்து கத சொல்லிக்கிட்டு இருப்பா!" என்றார் பிரகாஷ்.

"நம்ம கதைய இப்ப யாருகிட்ட போய் சொல்றது? முதுகுக்குள்ள ஆறு ஓட ஆரம்பிச்சுடுச்சு எனக்கு!" என்று சொன்னவனிடம்,

"கொஞ்சம் பொறு ஜெபா; கடைசியா நான் இப்ப ஒரே ஒரு முயற்சி பண்ணிப் பாக்குறேன். அதுலயும் அவ வெளிய வரலையின்னா நாம ரெண்டு பேரும் வீட்டுக்குத் தான் கிளம்பணும்!" என்று சொன்னவரின் வார்த்தைகளில் சினம் கொண்டவன் அவரிடம்,

"என்ன அங்கிள் பேசிட்டு இருக்கீங்க? நம்ம ரெண்டு பேருமே எப்டி வீட்டுக்கு கெளம்ப முடியும்? உள்ள யாருக்கும் திடீர்னு ஏதாவது ப்ரச்சன வந்துச்சுன்னா யாரு பார்த்துக்குவாங்க? ஆறு பேர் ஹார்ட் பேஷெண்ட்ஸ்..... உங்க பேத்திய நம்பி எல்லாம் இவங்கள விட்டுட்டுப் போக முடியாது!" என்று உறுதியான குரலில் தெரிவித்தான்.

"யுகிம்மா.... தாத்தா ரொம்ப நேரமா வெளியில நிக்குறேன்டா! நீ என்ட்ரென்ஸ்ல வந்து கதவத் தொறந்து விடுடா....!" என்று அவளுக்கு வாய்ஸ் மெசேஜ் போட்டு விட்டு காத்துக் கொண்டிருந்தார்.

"ரொம்ப நாளா யாருகிட்டயும் எனக்கு இவ்ளோ கடுப்பு வரல. ஆனா இன்னிக்கு வந்துடுச்சு.... உம்மேல; யார்டீ நீ? பெரிய இவளோ.... இந்த சொத்து உங்க அப்பா காசுல வாங்குனதுன்னா, இதத் தூக்கி உங்கையில குடுக்கணுமோ? நீ KL லுல இருந்து இண்டியாவுக்கு வரலன்னு எவன்டீ அழுதான்? உன்னைய மட்டும் இப்ப நான் பாத்தேன்.... இருக்குற கடுப்புல மனுஷஜுஸ் தான் நீ!" என்று மனதிற்குள்ளாக அவளை அரைத்துத் தள்ளி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.

அவரது குறுஞ்செய்தியை பார்த்து விட்ட இரண்டு நிமிடங்களுக்குள் நமச்சிவாயத்தை கேட்டிற்கு அனுப்பி வைத்திருந்தாள் சம்யுக்தா.

"கு....கு....குட்மார்னிங் ஸார்!" என்று சல்யூட் அடித்த படியே குடுகுடுவென ஓடி வந்த செக்யூரிட்டியிடம்,

"வாசல்ல இருக்காம எங்கண்ணா போனீங்க? இனிமே இந்த மாதிரி பண்ணாதீங்க!" என்று சொல்லி விட்டு தன்னுடைய வண்டியுடன் உள்ளே நுழைந்தான் ஜெபா.

"ஸார்.... மேனேஜர் ஸார் என்னைய கோவிச்சுக்குறாரு! என் மேல ஒண்ணும் தப்பில்ல ஸார்;
மேடம் தான் என்னைய உள்ள கூட்டிட்டு....!" என்று பிரகாஷிடம் பவ்யமான குரலில் புன்னகைத்த பிரகாஷ்,

"விடுங்க நமச்சு... இருபது நிமிஷமா வெயில்ல நின்ன கடுப்புல ஜெபா உங்க கிட்ட முகத்தை காட்டிட்டுப் போறான்! இனிமே அவ கூப்டாலும், கேட்டை விட்டுட்டு போகாதீங்க!" என்று அவர் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு உள்ளே சென்றார் பிரகாஷ்.

"நீங்க பேசிட்டு இருங்க. நான் ப்ரேயர் ஹாலுக்கு போயிட்டு வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு அலுவலக அறையை தாண்டி உள்ளே சென்றார் பிரகாஷ்.

"ஹாய்.... ஐ'ம் சம்யுக்தா!
நீங்க தான் இங்க மேனேஜரா வொர்க் பண்ணிட்டு இருக்கீங்களா? நான் மிஸ்டர் பிரகாஷோட பேத்தி! இனிமே இந்த ஹோமுக்கு நான் தான் இன்சார்ஜா இருக்கப் போறேன். எனக்கு இங்க ரொம்பப் பிடிச்சிருக்கு! இங்க இருக்குற அங்கிள்ஸ், ஆன்ட்டீஸ்
நமச்சிவாயம் அங்கிள், எல்லாரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு! அதுனால உங்க ஜாப இனிமே நான் எடுத்துக்குறேன். நீங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்க!" என்று சொன்னவளை அனல் அடங்காத பார்வையால் முறைத்தவன், அந்த அறையின் மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி வைத்து விட்டு அவளுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு தன்னுடைய உடல் சூட்டையும், மூளைச் சூட்டையும் சற்றே மட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

423K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
5.7K 380 10
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
23.8K 1.2K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
190K 5K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...