சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.7K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 70

364 28 8
By Vaishu1986

"இது சந்துவும் சஞ்சீவும் சேந்து எடுத்த முடிவும்மா! கதிருக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நம்ம சந்துவும், பாகேஸ்வரியும் தான் எல்லா சொத்துக்கும் ஓனர்ஸா
இருக்கப்போறாங்க..... இவங்க ரெண்டு பேரும் ப்யூட்டி பார்லர், ரெடிமேட்ஸ் ரெண்டையும் கவனிச்சுட்டா ட்ராயிங்க் ஸ்கூல கவனிக்க ஒரு ஆள் வேணும்ல.... அந்த வேலைக்கு தான் நான் போகப் போறேன். அதுவும் சம்பளத்துக்கு தான்..... நம்ம ரெண்டு பேரோட பிக்ஸட் ஸேவிங்ஸ் நம்ம பிள்ளைங்களுக்கும்,
பேரன் பேத்திக்கும் தான்! மத்தபடி வீட்டோட மாச செலவ பாத்துக்க இனிமேலும் நானும், ஜெபாவும் கொண்டு வர்ற சம்பளம் தான்..... மேனேஜ் பண்ணிடலாம்ல சுமா?" என்று கேட்ட தன்னுடைய கணவரிடம் பெரிதாக தலையாட்டிய சுமலதா,

"உங்க வேலையில என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் ஹெல்ப் பண்றேன் மிஸ்டர் ஆலென்!" என்றார் புன்னகைத்த படி.

எதார்த்தத்தை புரிந்து கொண்ட அந்த தம்பதிகளுக்குள் இனி வரப்போகும் ஒரு புதிய மாறுதல் நல்ல விதமான மாறுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

"டாட் மாம்.... என்ன உங்கள தனியா
விட்டா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க! எங்க பக்கத்துல வாங்க!" என்று தன்னுடைய அன்னை, தந்தையை கையைப் பிடித்து இழுத்த சந்தனா பாகேஸ்வரி, கல்பனாவையும் அழைத்து வந்து அவர்களுக்கும் கேக் ஊட்டி விட்டாள்.

"டேய் சஞ்சீவு.... ஐ லவ் யூ டா தலைவா! ஆ சொல்லு.... கேக்கு சாப்ட வாயத் தொறடா!" என்று சொன்ன ஜெபசேகரனிடம்,

"மைண்ட் யுவர் லாங்குவேஜ் மிஸ்டர் ஜெபசேகரன்! எனக்குப் போய் நீ எதுக்குடா ஐ லவ் யூ சொல்ற முண்டம்!" என்று சொல்லி பல்லைக் கடித்தான் சஞ்சீவ்.

"நீ செய்யுற வேலையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா தண்டம்!" என்று சொன்னவன் சஞ்சீவின் வாய்க்குள் கேக்கை மெல்லமாக திணித்து அவனுக்கு ஒரு டிஷ்யூவையும் கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.

"ரேஷன்.... ப்ளீஸ்டா! நான் என்ன செய்யட்டும்? எனக்கு ரொம்ப உறுத்துது!" என்று சொன்னவளிடம்,

"உனக்கு உறுத்தும்..... நீ அதுக்கு ஒருக்க எங்கிட்ட மொகத்த தூக்குவன்னு நெனச்சேன்டீ! அத மாதிரியே கரெக்டா உறுத்துதுன்னு சொல்ற..... எவன் உன்னைய பொடவையெல்லாம் கட்டிக்க சொன்னான்? பாக்குறதுக்கு என்னவோ கும்முன்னு தான் இருக்க... ஆனா இந்த ப்ளவுஸ் தான உனக்கு உறுத்துது?" என்று அவளிடம் கேட்டான் கதிர்.

"அடேய்.... நான் என் ப்ளவுஸ் உறுத்துதுன்னு சொல்லலடா! பாகேஸ் ஆன்ட்டிட்ட இன்னும் உண்மையெல்லாம் சொல்லாம இருக்குறது தான் உறுத்துதுன்னு சொன்னேன். அவங்க என்னமோ என்னை ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சு அப்டி இப்டின்னு பாராட்டி பேசிட்டே இருக்காங்க ரேஷன்!" என்று சொன்ன தன்னவளின் கன்னத்தைக் கிள்ளியவன்,

"உங்க மாமியார் உங்கள பாராட்டுனா அத என்ஜாய் பண்ணுங்க மேடம்! அத உட்டுட்டு உறுத்துது அது இதுன்னு சொல்லிட்டு.... நான் கூட உறுத்துதுன்னு நீ சொன்ன ஒரு வார்த்தையில உன் ப்ளவுஸ் வரைக்கும் போயிட்டேன் பாரு!" என்று சொல்லி அவளிடமிருந்து ஒரு மிதியைப் பரிசாக வாங்கிக் கொண்டான்.

எந்தக் காலத்திலும் சிறு வயது சந்தனாவின் செயல்களை கதிர் பாகேஸ்வரியிடம் சொல்ல விடப்போவதில்லை என்று தெளிவாக தெரிந்து கொண்ட சந்தனா, தன்னுடைய மனதிற்குள்ளாக இருந்த அரிப்பை அப்படியே மறந்து விடுவது தான் சரியென்று நினைத்தாள்.

அவள் அப்படி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜெபா கூட்டத்தில் இருந்து தனியே வந்து நின்றான்.

"ஹாய் ஆல்.... எங்க அக்கா, அத்தானோட என்கேஜ்மெண்ட் பங்ஷன்ல வந்து கலந்துக்கிட்ட உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! நான் முதல்லயே சொன்ன மாதிரி இப்ப நான் பாடப்போற இந்த பாட்ட என்கேஜ்மெண்ட் கப்பிள்ஸ்க்கு டெடிகேட் பண்றேன்!" என்று சொல்லி விட்டு பாடலை பாட ஆரம்பித்தான்.

"கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு
தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல
துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே
அந்த தேன் குயிலே

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும்
சுகமான துன்பம்
உன் வான் எங்கும்
அவளின் பின்பம்

ஐந்து நிமிடங்கள்
அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்து தேர் ஆனால்
என் மனசுக்குள் சத்தம்
இடும் பூவானாள்
என் பருவத்தை பயிர்
செய்யும் நீர் ஆனாள்

என் நெஞ்ச குளத்தில்
பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்கும் முன்
நெஞ்சத்தில் குதித்தாள்

விழியால் நெஞ்சுடைத்து
விட்டால் ஸ்பரிசங்களால்
பின் இணைத்துவிட்டாள்

என்று பாடி முடிக்க அங்கிருந்த அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

"டேய்..... ரேஷன்! இது தான் நான் கேட்ட எக்ஸைட்மெண்ட்.... ஜெபா ஒரு புரஃபொஸனல் சிங்கர் மாதிரி
எவ்ளோ அழகா பாடுறான் பாத்தியா.....? ஆனா ஏன்டா இவ்ளோ பழைய பாட்ட பாடுறான்....?" என்று கேட்டவளிடம்,

"மேடம் முந்தியெல்லாம் நம்மள சொடக்குப் போட்டு தான கூப்டுவீங்க! இந்த பாட்டுல கை தட்டி அழைத்தாள்னு இருக்கு.... அவ்ளோதான் வித்தியாசம்! இந்தப் பாட்டு நான் அவன்ட்ட கேட்ட நேயர் விருப்பம் சூபொ! என் சாப்பாட்டுல என்னத்தடா கலந்து குடுத்த.... எனக்கு ரொம்ப வயிறு வலிக்குதுன்னு ஒருநாள் சாயந்தரம் வீட்டுக்கு வந்து டிபன் சாப்ட்டு முடிச்சவுடனே எங்கிட்ட கத்துன தெரியுமா?" என்று சிரித்த படி சொன்னவனிடம் தன் நினைவலைகளில் இருந்து அவன் சொன்ன சம்பவத்தை தேடிப் பார்த்தாள் சந்தனா.

"ஆமா.... எனக்கு அப்பல்லாம் என்ன நடந்தாலும் உம்மேல தான் கோபம் கோபமா வரும்! ஏன்னா ஒரு மொற மொறச்சாலும் நீ தான நான் திட்டுறத எல்லாம் பேசாம வாங்கிக்குவ?" என்று சொன்னவளிடம்,

"அதில்லடா செல்லம்! அன்னிக்கு தான் குட்டிப் பாப்பாவுல இருந்து மொத மொதல்ல ஒரு பொண்ணா மாறுன.... அது கூட புரியாம எங்கிட்ட வந்து சண்ட போட்டுட்டு போன.....! அன்னிக்குல இருந்து உன்னை நினைச்சு கொஞ்சம் கிறக்கமா இருந்துச்சுன்னா இந்தப் பாட்ட போட்டு கேக்க ஆரம்பிச்சுடுவேன்! அதுனால இந்தப் பாட்டு நமக்கு கொஞ்சம் மனசுக்கு நெருக்கமான பாட்டு!" என்று அவளுக்குப் பதில் சொன்னான் கதிர்.

"டேய்... என்ன மாதிரி ஆளுடா நீ? எதுக்கு இதப் பண்றன்னு ஒரு கேள்வி கேட்டா அதுக்குப் பின்னால ஒரு கதையே வச்சிருக்க! லஷ்மி பெயிண்டிங், துப்பட்டாவ வெட்டி வச்சது, ஜோடி படத்தோட பாட்டு, என்னோட ப்யூபர்டி, பரத் சுசீலா பத்தின கற்பனைன்னு எத்தனை விஷயத்த மனசுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்க? ஊத்துத்தண்ணி மாதிரி தோண்ட தோண்ட வந்துக்கிட்டே இருக்கும் போலிருக்கு.....!" என்று கேட்டவளிடம்,

"பின்ன.... சும்மாவா லஷ்மி? ரொம்ப வருஷம் உன்னைப் பத்தி நான் யார் கிட்டயும் பேசுனதேயில்ல; அதே சமயத்துல உன்னைப் பத்தி யோசிக்காம ஒருநாள்கூட இருந்ததுமில்ல..... அதுக்காக உயிரே ஒருவார்த்தை சொல்லடீன்னு புலம்பி தாடிய தடவிக்கிட்டு இருந்தேன்னு தப்பா நினைக்காத! பாதி நேரம் உன்னைய திட்டிக்கிட்டே தான் இருந்துருக்கேன். கண்ணுல படுறீ.... உன் கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுறேன்னு தான் நிறைய சொல்லியிருக்கேன்!" என்று சொன்னான் கதிர்.

"அதான் தெரியுமே.... மொத தடவ பாத்தப்பவே கழுத்தத் தான புடிச்சு நெறிச்ச! பட் அன்னிக்கு என்னை இவ்ளோ லவ் பண்ணப் போறன்னு உனக்குத் தெரியாதுல்லடா?" என்று தலையை சரித்து கேட்டவளிடம்,

"அதெல்லாம் தெரியும்..... என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு நீ கேட்டதுல எனக்கு எவ்வளவு கோபமோ அவ்வளவு நிம்மதியும் தான்! ஒருவழியா என் சூபொ எங்கிட்டயே வந்து சேர்ந்துட்டான்னு நிம்மதியா இருந்துச்சு!" என்று மெதுவான குரலில் சொன்னவனிடம்,

"அப்ப உள்ள ஒண்ண வச்சுக்கிட்டு வெளிய பெரிசா ஸீன் போட்ருக்க.... ஒன்னைய!" என்று கையை ஓங்கிக் கொண்டு வந்தவளிடம்,

"ஏய்.... அடிக்குறதுன்னா அத அப்புறமா பண்ணுடீ! இப்ப எல்லாரும் பாக்குறாங்க!" என்று எச்சரித்தான் கதிர்.

இப்படியாக கதிர் சந்தனாவின் நிச்சயதார்த்ததுக்கான பார்ட்டி சிறப்பான முறையில் முடிந்து ஆலெனும், சுமலதாவும் சந்தனாவும், ஜெபாவும் அவர்களுடைய வீட்டுக்குப் புறப்பட்டனர்.

கிளம்பும் முன் அவளது கையைப் பிடித்து அவள் உள்ளங்கையில் பெருவிரலால் வருடியவன், "உன் ரேஷன் ஷாப்புக்கு உங்கூடவே வரணும் போல இருக்காம் சூபொ!" என்றான்.

"யாராவது பாக்கப் போறாங்க.... கைய விடு கதிர்!" என்றவள் ஜெபாவுடன் வண்டியில் ஏறிக் கொள்ள ஆலெனும் சுமலதாவும் ஒரு ஆட்டோவில் முன்னால் கிளம்பினர். அவளுக்கு பை சொல்லி விட்டு கதிரும் ஜனார்த்தனன் எடுத்து வந்திருந்த தன்னுடைய வண்டியில் ஏறிக் கொண்டான்.

காரில் அமர்ந்தவுடன் "டேய்.... எல்லாம் ஓகே தான? நீ ஹாப்பியா?" என்று கேட்ட கல்பனாவிடம்,

"எல்லாம் நல்லா தான் இருந்தது... ஆனா இன்னிக்கு நைட் நீங்க, சஞ்சீவ் எல்லாரும் ஊருக்குக் கிளம்பிடுவீங்க; அதான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு!" என்றான்.

"அதுக்கென்னடா....? உன் கல்யாணத்துக்கு மறுபடியும் இங்க வந்துட்டாப் போச்சு!" என்று சொன்னவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்துப் புன்னகைத்தான்.

கதிர் வீட்டிற்குள் தன்னுடைய காரை பார்க் செய்ததும் பாகேஸ்வரியின் கண்கள் முதலில் தன்னுடைய கணவரைத் தான் தேடி சலிப்படைந்தது.

"என்ன பாக்குறீங்க? அந்த ஆள தேடி தேடி ஓய்ஞ்சு போகணும்ங்குறது உங்க தலையெழுத்து போல? வரும்போது வருவான். அக்கா, பிள்ளைங்கள கூட்டிட்டு உள்ள போங்க!" என்று தன் அன்னையிடம் சொன்னவன் வீட்டிற்குள் போகாமல் காரில் சாய்ந்து வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

"இவ்வளவு நேரம் நல்லா தான கதிர் இருந்தீங்க? வீட்டுக்குள்ள வந்தவுடனே அப்செட்டா?" என்று அவன் தோளில் கைவைத்து கேட்ட ஜனார்த்தனனிடம்,

"இல்ல ஸார்.... நான் எங்க அம்மாவ எவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டாலும், அவங்கள முழுசா என்னால சந்தோஷமா வச்சுக்க முடியல. எங்கப்பன் பண்ற வேலையால, இல்லன்னா அவன் பேசுற பேச்சால அவங்க நிறைய வருத்தப்படுறாங்க!" என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

"பாஸ்.... ஏதாவது ஒரு தப்பு மட்டும் பண்றவராயிருந்தா அவர திருத்த ஒரு முயற்சியாவது பண்ணலாம்.
குடி, திருட்டு, ஏமாத்துவேல, சோம்பேறித்தனம், பணம் கையில இருந்தா அத செலவழிக்குறதுல ஊதாரித்தனம்னு உங்க அப்பாட்ட அத்தன கெட்டதும் சேந்துருக்கு! ஸோ அவர நாம திருத்த முயற்சி பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்!" என்று கதிரிடம் சொன்னான் சஞ்சீவ்.

"யாரு அவன திருத்த முயற்சி பண்றது? அவன் இங்க இருக்குற வரைக்கும் பணம் நகைக்காக
எங்கம்மாவ கொலை பண்ணிடாம இருக்கணும்! அவங்க கிட்ட கொஞ்சமாவது பாசம் இருக்குற மாதிரி நடிச்சுட்டாவது இருக்கணும்! இவ்வளவுதான்.... அவன் விஷயத்துல நான் வேணும்னு நினைக்குறது! டேய் சஞ்சீவ் இன்னிக்குல இருந்து நான் தம்மு, தண்ணி ரெண்டையும் முழுசா நிப்பாட்டிடப் போறேன். நீயும் அப்பப்ப எங்கூட ரெண்டு மூணு பெக் எடுத்துப்பேல்ல? சாயந்தரம் நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு இனிமே குடிக்க மாட்டோம்னு சாமி முன்னால சத்தியம் பண்ணப் போறோம்! அந்த பழக்கத்த இன்னிக்குல இருந்து விட்டு ஒழியப் போறோம்! எங்கப்பன மாதிரி நம்ம குடிக்குற குடியால மத்தவங்க கண்ணீர் விட மாட்டாங்க தான்; இருந்தாலும் நாம நமக்கு வரப்போற பொண்ணோட சந்தோஷத்துக்காகவும், குடும்பத்தோட சந்தோஷத்துக்காகவும் இதச் செய்யப் போறோம். நீ என்ன சொல்ற?" என்று கேட்க,

"சூப்பர் பாஸ்! நம்ம கோவிலுக்குப் போறப்ப அந்த மாப்புக் குச்சியையும் தூக்கிட்டுப் போய்டலாம்.... அவனும் லைஃப்ல நிம்மதியா இருக்கணும்ல?" என்று கேட்ட சஞ்சீவையும், கதிரையும் இந்த இரு இளைஞர்களின் சிந்தனை எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று நினைத்து பெருமிதமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜனார்த்தனன்.

சிறுநகை மலரும்!


Continue Reading

You'll Also Like

422K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...
90.2K 2.7K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
78.1K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...