சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 66

263 26 6
By Vaishu1986

"ஏய்.... என்ன நீ பாட்டுல எதஎதயோ பேசிட்டே போயிட்டு இருக்க?  உம் பிள்ளை பேசுறது சரியான்னு நீயே சொல்லு பாகேஸ்வரி! என் வீட்ல வேல பாத்து சந்து முன்னால கையக்கட்டி நின்ன ஒரு பையன நான் எப்டி அவளுக்கே கல்யாணம் பண்ணித் தர முடியும்? இந்த ஆலெனுக்கு தான் கொஞ்சங்கூட அறிவேயில்ல; நீயாவது யோசிச்சு இது தப்புன்னு உம்பிள்ளைகிட்ட சொல்லு!" என்றார் சுமலதா.

"இல்ல சுமாம்மா....! கதிரு பண்றது எதுவும் எனக்கு தப்பா தெரியலங்க.... அவன் ஆசைப்பட்ட பொண்ண மொறயா பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்; நம்ம பாப்பா கூட அந்த மாதிரி தானுங்கம்மா நெனைக்குது! அது கதிர்ட்ட போயி நின்னு உன்னைய கல்யாணம் கட்டிக்கிட எனக்கு இஷ்டமில்ல; வெளிய போடான்னு ஒருவார்த்த சொல்லட்டும்! நாங்க இப்பவே இப்டியே எறங்கிப் போயிடுறோமுங்க..... மத்தபடி எப்பவோ நாங்க உங்க கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குனோமுன்ற ஒரே காரணத்துக்காக கதிர பாப்பாவுக்கு கல்யாணம் பண்ணித்தர மாட்டேன்னு சொல்லாதீங்கம்மா! எங்க வீட்டுக்கு வரப்போற உங்க மகள நாங்க தங்கமாப் பார்த்துக்குவோமுங்க சுமாம்மா! பிள்ளைங்களுக்கு வேண்டியது உங்க சம்மதமும், ஆசிர்வாதமும் மட்டுந்தாங்க!" என்று சுமலதாவிடம் சொன்னார் பாகேஸ்வரி.

"அடடா.....! கதிர்; அம்மா நம்ம பேசுறதுக்கு எல்லாம் சான்ஸே குடுக்க மாட்டாங்க போலிருக்கேடா? நாகர்கோவிலுக்கு வந்ததுல இருந்து ரொம்ப க்ளியர்கட்டா பேசுறாங்க இல்ல?" என்று கல்பனா கதிரிடம் கேட்க அவன் கல்பனாவைப் பார்த்து தலையாட்டினான்.

"என்னடா மண்டைய மண்டைய ஆட்டுற! ஏதாவது பேசேன்!" என்றவளிடம்,

"பாப்பாங்க ரெண்டு பேரையும் எங்கயாவது வெளிய கூட்டிட்டுப் போகச் சொல்லணும்கா!" என்று சொன்னவன் சஞ்சீவிடம் கண்ஜாடையில் குழந்தைகளைக் காட்டி ஜனார்த்தனனை கை காட்டினான்.

சஞ்சீவ் கதிரிடம் ஒருமுறை தலையசைத்து விட்டு ஜனார்த்தனனிடம் சென்றான்.

"மிஸ்டர் ஜனா..... பிள்ளைங்க இந்த அட்மாஸ்பியர்ல இருக்க வேண்டாம்! பாருங்க.... இப்பவே நடக்குறது எதுவும் புரியாம முழிச்சுட்டு ஒக்காந்துருக்காங்க. நீங்க அவங்கள கூட்டிக்கிட்டு ஒரு ட்ரைவ் போயிட்டு அரைமணி நேரம் கழிச்சு வாங்க!" என்று தன்னை மெதுவாக சற்று தள்ளி நகர்த்திச் சென்று தன்னிடம் சொன்ன சஞ்சீவிடம்,

"நீங்க சொல்றது எனக்கு ஓகே தான் மிஸ்டர் சஞ்சீவ்..... ஆனா கதிர் தப்பா எடுத்துப்பாரோன்னு தெரியலங்க!" என்று கேட்டவன் தன்னுடைய மனைவியை நோக்கி "ஸ்ஸ்.....ஸ்ஸ்" என்று வாயால் சப்தமிட்டான்.

"பிள்ளைங்கள கூட்டிட்டு வெளிய போகட்டுமா?" என்று சைகையில் கேட்டவனிடம் தலையாட்டிய கல்பனா கதிரின் கார் சாவியை அவனிடமிருந்து வாங்கி தன்னுடைய கணவனிடம் கொடுத்து விட்டு சந்தனாவின் அருகில் நின்று கொண்டாள்.

"எங்கப்பா போறோம்? அம்மா, மாமா, பாட்டி, அங்கிள்லா வரலையே?" என்று கேட்ட தன்னுடைய மூத்த மகளிடம்,

"நாம ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாம் வெண்ணு! அதுக்குள்ள எல்லாரும் பேசி கதிர் மாமா மேரேஜ் டேட்ட பிக்ஸ் பண்ணிடுவாங்க.... அப்புறமா நம்ம வீட்டுக்குப் போலாம்!" என்றான் ஜனார்த்தனன்.

சந்தனா கதிரின் ஒரு கையைப் பற்றியிருந்தாலும் தனது அன்னையையும் பார்த்து, பாகேஸ்வரியின் பேச்சையும் கேட்டு செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தாள். கல்பனா சந்தனாவின் முதுகில் மெல்ல நிமிண்டி,

"ஏய்.... இங்க என்ன சர்க்கஸா நடக்குது? ஆன்னு வாயத் தொறந்து பாத்துட்டு இருக்க? சொல்லு.... எல்லாரும் உன் வார்த்தைய தான் எதிர்பாத்துட்டு இருக்காங்க!" என்றாள்.

சந்தனா முகத்தை நிமிர்த்தி கதிரைப் பார்க்க அவன் ஒருமாதிரியான இறுக்கத்துடன் அவளருகில் நின்று கொண்டிருந்தான். முன்பெல்லாம் கோபத்தை அடக்கும் சமயங்களில் இதுபோலத் தான் இறுகி நிற்பான்.

தான் இப்போது பேசியே ஆக வேண்டிய சமயம், மனம் விட்டுப் பேசினால் தான் எல்லாம் சரியாகும் என்று நினைத்தவள் தன்னுடைய அன்னையின் அருகில் சென்று அமர்வோம் என்று நினைத்து நகரப் போக அவனது இறுக்கமாக கைப்பிடி அதற்கு இடமே கொடுக்கவில்லை.

நான்கு வயது குழந்தையின் கையை கூட்டத்தில் பற்றிக் கொண்டு நடக்கும் பெற்றவனுடைய பிடி போல் இந்தப் பிடியை என்னால் கடைசி வரை விட முடியாது என்று சொல்வது போல பிடித்திருந்தான்.

சந்தனா தன்னுடைய அன்னையையும், ஆலெனையும் ஒருபார்வை பார்த்து விட்டு சுமலதாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"அம்மா..... நான் கதிர தான்மா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். இங்க இப்ப நாம பேச ஆரம்பிச்சு பத்து நிமிஷம் கூட ஆகல. வெண்மதி, இளமதியோட அப்பா அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வெளிய போய்ட்டாங்க..... ஆனா கதிர் வீட்லயோ, கல்பனா வீட்லயோ அப்டியெல்லாம் யாரும் வெளிய போக வேண்டிய அவசியமே இருக்காதும்மா! ஒரு வீடுன்னா அதுல இருக்குற ஆளுங்க சந்தோஷமா இருக்கணும்ல? நானும், ஆலெனும், ஜெபாவும் இங்க சந்தோஷமா இல்லம்மா...... சும்மா அவரவர் வேலையப் பாத்துட்டு நாலு பேரும் ஒரே ரூஃபுக்குள்ள இருக்கோம். அவ்ளோதான்! நான் கல்யாணம் பண்ணிக்கப் போற வீட்லயாவது இப்டி ஒரு சூழ்நிலை இருக்க வேண்டாம்னு நினைக்குறேன்மா!" என்றவளிடம்,

"ஏய்.... எலா மாட்லாடுதாருவே நுவு? நீங்க இங்க ஏன் சந்தோஷமா இல்ல? நான் உங்களுக்காக என்ன செய்யல? நான் சினிமாவுல சம்பாதிச்சது, வீடு, சொத்துன்னு வாங்குனது எல்லாமே உங்கள நினைச்சு உங்களுக்காக செஞ்சது தானே? இந்த வீட்டுக்கு வந்தது, பணத்த எண்ணி எண்ணி செலவு பண்றது..... மிடில் க்ளாஸ் ஆன்ட்டி மாதிரி ஒரு உப்பு சப்பேயில்லாத வாழ்க்கைய வாழுறது; இது எல்லாமே தான் எனக்குப் பிடிக்கல; ஆனா நம்ம குடும்பத்துக்காக நான் அத அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருக்கலையா? இதுக்கு மேல நான் என்ன செய்யணும்னு நீ எதிர்பாக்குற சந்து?" என்று தன் மகளிடம் கேட்டார் சுமலதா.

"சுமா...... இவ்ளோ பெரிய கேள்வியப் போயி சந்து மோள்ட்ட கேட்டு அவள ஏன் கஷ்டப்படுத்துற.... பாவம்; உன் மேல வச்ச பாசத்தால இந்தக் கேள்விக்கு அவளால சரியா பதில் சொல்ல முடியாதும்மா! பொண்ணு பாக்கன்னு ஒரு குடும்பத்த வரச் சொல்லி ஒக்கார வச்சுட்டு, அவங்க முன்னால நம்ம கதையப் பேசுறது சரியில்ல தான்..... பட் என்னிக்காவது ஒரு நாள் நமக்கு ஒரு க்ளாரிட்டி வரணுமே? அது இன்னிக்கா இருந்துட்டுப் போகட்டும்! கதிர் ஒக்காருப்பா.... மோளே நீயுந்தான் கதிர் பக்கத்துல ஒக்காரு மோளே!" என்று சொன்னவர் தன்னுடைய மனைவியை ஒருபார்வை பார்த்தார்.

"நான் என்ன தப்பு தான் பண்ணுனேன் ஆலென்?" என்று  சுமாவின் கண்களில் தென்பட்ட தவிப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.... ஆனாலும் மகள் சொன்ன
நானும், ஆலெனும், ஜெபாவும் இங்க சந்தோஷமா இல்லம்மா;  சும்மா அவரவர் வேலையப் பாத்துட்டு நாலு பேரும் ஒரே ரூஃபுக்குள்ள இருக்கோம். அவ்ளோதான்..... என்ற வார்த்தை அவரை பேசியே ஆக வேண்டிய தீவிர நிலைக்குத் தள்ளியது.

"சுமா..... நீ எனக்காக ஒன்னோட பேமிலிய தூக்கிப் போட்டுட்டு என்கூட வந்த! ஒரு பொண்ணு நம்மள முழுசா நம்பி நம்ம கூட வாழ வர்றது எவ்ளோ பெரிய விஷயம்ல?
அந்த செகண்ட்ல நான் முடிவு பண்ணுனேன்.... இனிமே என்னோட வாழ்க்கையில, என் பொண்டாட்டிக்காக எத வேணும்னாலும் விட்டுக் குடுக்கலாம்னு...... அந்த ஒரு முடிவ எடுத்துட்டு, உனக்காக இன்னிக்கு வரைக்கும் நிறையவே தான் விட்டுக் குடுத்துருக்கேன் சுமா.....!"

"சினிமாவுல நடிச்சு நீ கோடி கோடியா சம்பாதிச்ச.... ஆனா வீட்ல ஒருநாளாவது, ஒரு வேளையாவது உனக்கு தெரிஞ்சத சமைச்சு அத என்னோடயும், பிள்ளைங்களோடயும் சேந்து ஒக்காந்து சாப்பாடு சாப்ட்ருக்கியா? இல்ல....!  வீட்டையும், குழந்தைங்க ரெண்டு பேரையும் பாத்துக்கணும்னு என்னோட வேலைய விடச் சொன்ன..... அன்னிக்குல இருந்து இப்ப வரைக்கும் ஆலென் எனக்காக உன்னோட வேலைய விட்டியே..... அது உனக்கு ஓகேதானான்னு ஒரு கேள்வி கேட்டியா? இல்ல.....! அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து பிள்ளைங்க ரெண்டும் ஒரே நாள்ல கீழ வந்து மனசளவுல படாதபாடு பட்டு ஒரு நிலையில வந்து நின்னுச்சுங்களே? அவங்க ரெண்டு பேரையும் உம்பக்கத்துல ஒக்கார வச்சு ஏதோ நம்ம நேரம்.... கொஞ்சம் மோசமான சிச்சுவேஷன்  வந்துடுச்சு; பட் இதுல இருந்து நம்ம கண்டிப்பா மீண்டு வருவோம்னு ஒரு தைரியத்தயாவது குடுத்தியா.....? அதுவும் இல்ல.....!"

"பெத்து மட்டும் போட்டுடுவேன்; வாழுறது, வளருறது எல்லாம் நீயே தான் பாத்துக்கணும்னு சொல்றதுக்கு பிள்ளைங்க என்ன க்ரோட்டன்ஸ் செடியா சுமா? டீவி சீரியல்ஸ், போன் அரட்டை, ஏஸி போட்ட ஒரு நாலு சுவத்துக்குள்ள தூக்கம், சாப்பாடுன்னு இந்தக் குடும்பத்தோட எந்த பிடிப்புமே இல்லாம உன்னோட உலகத்துல நீ தனியா இருந்துட்டு உனக்கு நான் என்ன செய்யலன்னு கேக்குறியே? ஒரு நல்ல அப்பா அம்மாவா நம்ம பிள்ளைங்களுக்கு நம்ம எதுவுமே செய்யல சுமா! இப்ப சந்துவுக்கு அவ விரும்புன வாழ்க்கையாவது குடுக்கலாமே? என்ன சொல்ற?" என்று கேட்ட தன்னுடைய கணவரின் பேச்சில் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தார் சுமலதா.

இத்தனை வருடங்களாக தன்னுடைய மனதிற்குள்ளாக வைத்து குமைந்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் இன்று ஒரே நாளில் ரத்தின சுருக்கமாக தன் மனைவியிடம் கொட்டி விட்டார் ஆலென். என்ன ஒன்று அவர் சுமலதா மீது அடுக்கிய குற்றச்சாட்டுகளின் வீரியத்தை தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கணவன் சொன்னது போல கல்யாணம் முடிந்த மறுநாளில் இருந்து இன்றுவரை தனக்கான ஒரு தனி உலகத்தில் தான் இருந்திருக்கிறோமோ என்று நினைத்த சுமலதாவிற்கு அந்த உண்மை கனிந்த நெருப்பு தணலில் அவரை வாட்டி எடுத்தது போல சுட்டது.

"அப்போ நான் சந்துவுக்கும், ஜெபாவுக்கும் இதுவரைக்கும் நல்ல அம்மாவா இருக்கலையா ஆலென்?" என்று அடிபட்ட குரலில் தன்னுடைய கணவரிடம் கேட்ட பாசக்கார பிள்ளைகள் இருவருக்கும் பொறுக்கவில்லை.

"மாம்.... யார் சொன்னது நீங்க நல்ல அம்மாவா இருக்கலைன்னு! வீ லவ் யூ மாம்!" என்று சொல்லி தன்னுடைய அன்னையின் தோள் தழுவிக் கொண்ட ஜெபா ஆலெனிடம்,

"ஆலென்......ப்ளீஸ்! டோண்ட் டூ திஸ்; பொண்டாட்டி தப்பு பண்றப்ப, அப்பவே அதப் பேசுவோம், தப்புன்னா தப்புன்னு சொல்லிக் கண்டிப்போம்னு இல்லாம எல்லாத்துக்கும் பேசாம இருந்தது உன் தப்புப்பா! இப்ப ஒரே நாள்ல மொத்தமா அம்மா செஞ்ச எல்லாத் தப்பையும் லிஸ்ட் போட்டு அடுக்குனா..... அவங்களுக்குத் தான் அவங்க செஞ்சுட்டு இருந்த தப்பே புரியலயே..... இல்லன்னா ஏன் நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேக்கப் போறாங்க?" என்று ஜெபா தன்னுடைய தந்தையிடம் கேட்க அப்போதும் சுமலதா அசையாமல் அமர்ந்திருந்த இடத்திலேயே கல் போன்று தான் அமர்ந்திருந்தார்.

"பாஸ்..... திஸ் இஸ் நாட் குட்; ஜெபா இவ்ளோ பேசியும் அவங்க ஒருமாதிரி ஃப்ரீஸ் ஆகி உக்காந்துருக்காங்க! நீங்க போய் ஏதாவது பேசுங்க; இல்ல மிஸ் சந்தனாவையாவது ஏதாவது பேசச் சொல்லுங்க!" என்று சஞ்சீவ் சொல்ல கல்பனாவும் கதிரிடம்,

"போ கதிர்..... இந்தம்மா இன்னும் நிறைய கத்துவாங்க; எகிறுவாங்கன்னு நெனச்சா இப்டி ஸ்டன் ஆகி உட்கார்ந்துருக்காங்க! அவங்க பக்கத்துல போங்க ரெண்டு பேரும்......!" என்று சொல்லி கதிரையும், சந்தனாவையும் சுமலதாவின் பக்கம் நகர்த்தி விட்டாள்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

82.5K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
423K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...
494K 16.7K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..