சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.6K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 65

296 31 13
By Vaishu1986

"என்னடீ இப்ப ஒம்ப்ரச்சன?" என்று கேட்டவனிடம்,

"சரியா மூச்சுவிட முடியல! அதான் ப்ரச்சன! கொஞ்சம் எம்மேல இருந்து எழுந்திரிக்க முடியுமா?" என்றாள் சந்தனா.

"ம்ப்ச்! அதுக்குள்ளயா? உங்கம்மா வர்ற வரைக்கும் இப்டியே கெடப்போமே?" என்று அவளிடம் கேட்டவனிடம் கோபமாக,

"டேய்.... என் உடம்பு என்ன ஒனக்கு மசாஜ் சேர் மாதிரி தெரியுதா? ஆ ஊ ன்னா என் நெஞ்சுல வந்து கம்பர்டபிளா சாய்ஞ்சுட்டு நின்னுக்குற, படுத்துக்குற? நானும் பாவம் பையன்; பயந்து போயிருப்பானா இருக்கும்னு நெனச்சு எடங்குடுத்தா நீ இன்னும் என் தலமேல ஏறி ஒக்காந்துக்குவ போலிருக்கே?" என்று அவனிடம் கேட்டாள் சந்தனா.

குரலில் பொய்யாக கோபம் இருந்தாலும், அவள் விரலில் அவ்வளவு அக்கறை தெரிந்தது கதிருக்கு. நெற்றி, புருவம், சிகை, காது என அவளால் தொட முடிந்த அவனது அனைத்து உடல் பாகங்களையும் இதமாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் இவள் கோபமாக இருந்தாள் என்றால் இவளது மூச்சுக்காற்றில் கூட அனல் தெறிக்கும்! இப்போது இவள் காட்டும் கோபத்தில் கூட குளிர்தென்றல் தான் வீசுகிறது! கோபத்தை பொய்யாக காட்டி, செய்கையால் இதம் தரும் இவளுக்கு எனது வலி நன்றாகவே
புரிகிறது என்ற நினைப்பே மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது கதிருக்கு.

"வெறும் ஒரு மசாஜ் சேரெல்லாம் இவ்ளோ சுகமா இருக்காது லஷ்மி! மூளைக்குள்ள ஏறி உக்காந்த சூடெல்லாம் உன் விரல் வழியா வெளிய வர்ற மாதிரி என்ன மந்திரம்டீ போடுற? என் கவலையெல்லாம் அப்டியே கரைஞ்சு காணாமப் போயிடும் போலிருக்கு!" என்று சொன்னவன் அவனது பிடியை இன்னுங்கொஞ்சம் இறுக்கமாக்கினான்.

"அட திமிங்கலமே; உன் வேலைய மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? ஹக் பண்ணும் போது ரொம்ப அழுத்தாதடா! நான் உன் அளவுக்கு ஸ்ட்ராங்க் இல்ல; எனக்கு வலிக்குது!" என்று சொன்னவளிடம் பெருமூச்சு விட்டவன்,

"ஏன்டீ..... சும்மா கட்டிப்புடிச்சாவே வலிக்குதுன்னன்னா அப்புறம் பரத்தும், சுசீலாவும் எப்டிடீ வருவாங்க? நான் ஏற்கனவே
அவங்களோட முகம், முடி, கலர் காம்ப்ளெக்ஷன் இப்டி எல்லாம் யோசிச்சு வச்சுட்டேனே.....? நான் உனக்குள்ள போ..... ஐயயோ...... ஒருநிமிஷம் உன்னோட காதக்காட்டு! இது கொஞ்சம் சென்ஸார் பண்ற மாதிரி போகும் போலிருக்கு!" என்று சொல்லி விட்டு அவளுடைய காதில் ஏதோ ரகசியம் பேசி அவளிடமிருந்து கன்னத்தில் இரண்டு அறைகள் வேறு வாங்கிக் கொண்டான்.

"அவ்ளோ வலிக்கும்னா எனக்குப் பதிலா புள்ளய நீ பெத்துக்க.....பே! கடவுள் உன்னைய விட பெரிய ஆர்ட்டிஸ்ட் தம்பி; முகம், முடி, கலர்னு நீ கஷ்டப்பட்டு யோசிச்சு வச்சது எல்லாம் நம்ம பேபிட்ட உல்டாவா ஆகப்போகுது பாரு!" என்று சொன்னவளுடைய மூக்கைப் பிடித்து ஆட்டி செங்கதிரோன் ஒளிக்கற்றையைப் போல புன்னகையை உதிர்த்தான். அவனது புன்னகையைப் பார்த்தபடி கண்களை அவன் முகத்திலிருந்து விலக்காமல் இருந்தாள் சந்தனா.

"உன் அப்பாவ மாதிரி அப்பா கிடைக்குறதுக்கு எல்லாம் நீ குடுத்து வச்சுருக்கணும் லஷ்மி....!" என்று அடிக்கடி அவளிடம் சொல்லும் அவனுடைய பேச்சில் ஒருவித ஆற்றாமை வெளிப்படும்.

பிள்ளையை எப்போதும் கண்காணித்தாலும், கண்டித்தாலும் அன்பான தந்தை என்றால் அந்த வகையான தந்தையைக் கூட ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்!

பிள்ளையும், மனைவியும் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பவரை என்ன செய்ய முடியும் என்று நினைத்து வருந்தினாள்.

"யேய்.... இப்ப நீ என்னைய பொண்ணு பாக்க வந்துருக்கியா? இல்ல என்கேஜ்மெண்ட் பண்ண வந்துருக்கியாடா? ஏதோ ஒண்ணு.... வந்தது தான் வந்த! எனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்துருக்க?" என்று கேட்டவளிடம் கையை விரித்து உதடு பிதுக்கினான் கதிர்.

"எருமமாடு! ஏன்டா ஒண்ணுமே வாங்கிட்டு வரல? நான் உனக்காக கஷ்டப்பட்டு வீடெல்லாம் க்ளீன் பண்ணி, ஸோஃபா கவரெல்லாம் மாத்தி, காலையில சீக்கிரமா எழுந்திரிச்சு, கோலம் போட்டு, வெளக்கு வச்சு இப்டி எவ்ளோ செஞ்சுருக்கேன் தெரியுமா? இதெல்லாம் உன் கண்ணுல தெரிஞ்சுச்சா.... இல்லையா? நான் செஞ்ச இத்தன வேலைக்கும் ஒரு கிப்ட்டு கூட கெடையாதா?" என்று பாவமாக கேட்டவளின் தலையில் லேசாக குட்டியவன்,

"ஒரு பொண்டாட்டி புருஷனுக்காக செய்யுற வேலைக்கெல்லாம் அவன் அவளுக்கு கிப்ட் குடுக்கணும்னு ஆரம்பிச்சான்னா, அது எங்க ஆரம்பிச்சு எங்க போய்டீ முடியுறது..... லூசு பொம்ம; சரி.... அதென்ன நான் இருக்குறப்ப வேற ஏதோ ஸ்மைலி பொம்மைய கட்டிப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்குற வேலையெல்லாம் பாக்குற? உன்னோட துப்பட்டாவ வெட்டி தூக்குல தொங்க உட்டவனுக்கு இந்தப் பொம்மைய வெட்டிப் போடுறதுக்கு எவ்ளோ நேரம் ஆகிடப் போவுது.....? ஒரு சூனியபொம்மய கட்டிக்கிட்டு அவ கூட நான் கட்டி உருளப் போறது போதும்; அநாவசியமா என்னைய நிறைய பொம்மைங்க கூட சண்ட போட உடாத பாத்துக்க! இதுதா கடைசி; இனிமே அப்டியெல்லாம் செய்யக்கூடாது என்ன? வெளிய போலாமாடா?" என்று கேட்டு எழுந்தவனின் பின்னாலேயே நடந்து சென்று அவன் மார்பில் ஒண்டிக் கொண்டவள்,

"கொஞ்சம் பயமாயிருக்குடா ரேஷன்!" என்றாள் அவன் முதுகில் தலை வைத்தவாறு.

அவளை முன்னால் நகர்த்தி அவள் கண்களைப் பார்த்து புன்னகைத்தவன், "நீ சொல்லிட்ட.... நான் சொல்லல; அவ்ளோதான் வித்தியாசம்! மேல என்ன பேசிட்டு இருப்பாங்கங்குற? எங்க கதிரு உங்க பொண்ண ரொம்ப ஆசைப்படுறான்; சுமாம்மா வேண்டாம்னு சொன்னாலும்,
எப்டியாவது பாப்பாவ எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்கன்னு தான் அம்மா உங்க அப்பாட்ட கேட்டுட்டு இருப்பாங்க! என்னடீ இது..... காலையில இருந்து வயித்த பொரட்டுற மாதிரியே ஒரு இம்ச?" என்றவனிடம்,

"அதுக்குப் பேரு தான்டா பயம்! கதிர்.... அம்மா என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியல. அதக் கேட்டு நம்ம என்ன முடிவெடுக்கப் போறோம்னு தெரியல. ரொம்ப ஸ்ட்ரெஸ்டா ஃபீல் ஆகுது; இப்ப இங்க எனக்கு ஒரு கிஸ் கெடைக்கு........ ம்ம்ம்!" என்று அவள் தேவையை அவனிடம் பாதி சொல்லும் முன்னமே அவனது தேவையும் அதுவேயாக இருக்கவே,
அவளது மென்மையான இதழ்களை களவாடி தன்னுடைய அதரங்களுக்குள் பதுக்கிக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"ஆலென்... என்ன அப்டியே நிக்குற? ஆன்ட்டி, கல்பனாக்கா, ஜனா ஸார், சஞ்சீவ் எல்லாரும் ஒரே ஒரு விஷயத்த தான் உங்கிட்ட கேக்குறாங்க; அவங்க எல்லாரும் எதாவது கமிட்மெண்ட் குடு!" என்று கேட்டான் ஜெபா.

"இதுல என்னடா பெரிசா கமிட்மெண்ட் வேற குடுக்க வேண்டியதிருக்கு? ஒருநாள் நான் கதிர் கூட தனியா அவன் வீட்டுக்குப் போனேனே நியாபகம் இருக்கா உனக்கு?" என்று கேட்டவரிடம் மற்றவர்கள் எதுவும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க ஜெபா தன்னுடைய தந்தையிடம் ஆமென தலையாட்டினான்.

"என்னைய தனியா கூட்டிட்டுப் போயி அன்னைக்கு எங்கிட்ட கதிர் என்ன பேசுனான் தெரியுமா? சொல்றேன் கேளுங்க!" என்றவர் கதிருடைய வார்த்தைகளை அப்படியே எழுத்து மாறாமல் சொல்ல ஆரம்பித்தார்.

"ஒரு நல்ல நிலைமையில, அவ
புருஷனோட பார்த்துருந்தேன்னா கூட எம்மனசு எவ்ளோ வலிச்சுருந்தாலும், உங்க மேல பெரிய மரியாத வந்துருக்கும்! எப்ப அவ எங்கிட்ட வந்து என்னைய நீ கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டாளோ அப்பவே எனக்கு உங்க மேலயும், உங்க பொண்டாட்டி மேலயும் இருந்த மரியாத போயிடுச்சு! ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் குடுக்காம இத்தன வருஷமாவா ஸார் அவள உங்க கூடவே வச்சிருப்பீங்க?"

"சந்தானலஷ்மியும், சேகரும் நெஜமாவே உங்க பிள்ளைங்க தானா அப்டின்னு எங்கிட்ட கேள்வி கேட்டான்டா ஜெபா. அது மட்டுமில்ல சந்து மோளோட, உன்னையும் சேத்து அவங்கிட்ட குடுத்துட சொல்லிக் கேட்டான்! பொண்ண கட்டிக்கிட்டா எவ்ளோ குடுப்பன்னு கேக்குற இந்த காலத்துல லஷ்மியும், சேகரும் இன்னிக்கும் ஒரு இளவரசியும், இளவரசனும் மாதிரி தான் ஸார்; அவளுக்கு இவ்வளவுன்னு ஒரு விலைய பேச வச்சுடுவாங்களோன்னு எனக்குப்
பயமாயிருக்குங்குற வார்த்தைய எவன்டா சொல்லுவான்? உங்கம்மா சம்மதிச்சா சந்து மோளோட கல்யாணம் நல்லபடியா நம்ம நினைக்குற மாதிரி நடக்கும்! இல்லன்னா உங்கம்மா எங்கூட ஓடி வந்தா பாரு, அதுமாதிரி தான் கதிரோட சந்து போவா. என்ன உங்கம்மா யாரு கிட்டயும் சொல்லாம எங்கூட ஓடி வந்தா; நம்ம சந்து தைரியமா நம்ம எல்லார்ட்டயும் சொல்லிட்டே கதிர் வீட்டுக்குப் போவா! அவ்ளோதான் வித்தியாசம்; சம்பந்தி அம்மா, கல்பனா, ஜனா, சஞ்சீவ் தம்பிங்களா இப்பயாவது நாம எல்லாரும் கீழ போகலாமா?" என்று கேட்டவரிடம் அனைவரும் தலையசைத்து விட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

பாகேஸ்வரி, கல்பனா, ஜனார்த்தனன், சஞ்சீவ் ஏன் ஜெபாவுக்கு கூட கதிருடைய பேச்சு என்று ஆலென் வாயால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மெய்சிலிர்ப்பை கொடுத்தது.

வாழ்நாள் முழுக்க தான் ஒண்டியாய் நிற்க நேர்ந்தாலும், உரிய நேரத்தில் அவளுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என்று பெற்ற அப்பனின் சட்டையையே பிடிக்கும் அளவிற்கு கோபம் காதலிக்கும் ஆண்களில் எத்தனை பேருக்கு சாத்தியமாகி விடும் என்று சஞ்சீவிற்கு தெரியவில்லை. அவனால் இப்படி குணாளினியை வேறு எவனுக்காவது விட்டுத்தர முடியுமா என்று கேட்டால் சத்தியமாக முடியாது என்று தான் பதில் அளிப்பான்.

தான் பாஸ் என்று அழைக்கும் சொல்லுக்கு கதிர் மிகவும் தகுதியானவர் என்ற மகிழ்ச்சியில் சந்தனாவின் வீட்டிற்குள் வந்தான்.

மாடியில் இருந்து கீழிறங்கி வந்ததும் முதல் வேலையாக
கல்பனா, ஜனா, சஞ்சீவ், ஜெபா என ஆளாளுக்கு கதிரை கட்டிப் பிடித்துக் கொள்ள சந்தனா சற்று குழம்பி அவனிடம் கண்ஜாடையில் என்னவென்று கேட்க கதிர் புரியாத பாவத்துடன் தோளைக் குலுக்கினான்.

"கதிரு..... ஒன்னைய நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குய்யா! எம்புள்ளய வளத்ததுல நான் எந்தத் தப்பும் பண்ணல சாமி!" என்று சொன்ன பாகேஸ்வரியிடம்,

"என்னம்மா திடீர்னு இதெல்லாம் சொல்றீங்க?" என்று கேட்டான் கதிர்.

"நான் உங்களப் பத்தி எல்லார்ட்டயும் கொஞ்சம் பேசுனேன் மாப்ள! அதான் எல்லார் கிட்டயும் இந்தப் பொங்கல் எல்லாம்..... கவலைப்படாதீங்க; சுமா வந்து என்ன பேசுனாலும் அத நாம பாத்துக்கலாம்!" என்று சொன்னனவர் அனைவருக்கும் தண்ணீரும், கொறிக்க சற்று பலகாரங்களும் தந்து கொண்டிருக்க கதிர் அந்த நேரத்தில் சத்தமில்லாமல் சந்தனாவின் அறைக்குள் சென்று அந்த ஸ்மைலி பொம்மையை எடுத்து இரண்டு மதிகளின் கையில் கொடுத்து விட்டான்.

"எனக்கு தான் இது வேணும் குடு குட்டிமா!" என்று எப்போதும் தங்கைக்கு பொருளை விட்டுத்தரும் வெண்மதியே இளமதியிடம் சண்டையிட, கல்பனாவின் பேச்சைக் கேட்காமல் இளையவள் உதடுபிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பிக்க
சந்தனா குறுக்கே புகுந்து இருவரின் சண்டையையும் நிப்பாட்டி, இருவருக்கும் நடுநாயகமாக அமர்ந்திருந்த கல்பனாவிடம் அந்த பொம்மையைக் கொடுத்து கதிரை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

"போடீ..... சூபொ! கண்ண உருட்டி மொறச்சாப்ல பயந்துடுவோமா நாங்க?" என்று நினைத்து கதிர் புன்னகைத்துக் கொண்டிருந்த நேரம் சுமலதா ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

"கோவில்ல ஒரே கூட்டம் ஆலென்..... வாங்க மிஸ்டர் ரேஷ்; வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா? ஸாரி..... அம்மா, நானால்லாம் எப்புடோ வந்துருப்பாங்க தான?" என்று கணவரிடமும் கதிரிடமும் கேட்ட படி ஹாலில் ஒரு சேரில் வந்து அனைவரையும் பார்த்த படி சுமலதா சிரித்த முகமாக அமர ஜெபா வேகமாக ஒரு சிலுவை போட்டு கர்த்தரிடம் ப்ரார்தித்துக் கொண்டான்.

"ஹலோ மிஸஸ்.... ஸாரி நீ பேர் நாக்கு தெலியது.... மிஸ்டர் ரேஷோட அம்மா தான நீங்க? உங்கள எங்கயோ பாத்த மாதிரியிருக்கு?" என்று பாகேஸ்வரியிடம் சொன்னார் சுமலதா.

சந்தனா லேசாக வியர்க்க ஆரம்பித்த தன் உள்ளங்கையை கதிருடைய கைகளுக்குள் நுழைக்க, அவன் அவளது எண்ணம் புரிந்து அதை இறுக்கமாகப் பற்றியிருந்தான்.

"சுமா...... ஏன்ட்டி பங்காரம்.... மரிச்சு போயாவா? நம்ம சென்னை வீட்ல நம்ம கூட இருந்த பாகேஸ்வரிமா இவங்க...... நம்ம புள்ளைங்கள கூட நாம பாதி நேரம் இவங்கள நம்பித் தான விட்டுட்டு வெளிய போயிருக்கோம்! அவங்க தான் இவங்க..... இவங்களோட ஒரே பையன் தான் மிஸ்டர் ரேஷ்!" என்று சொன்ன தன்னுடைய கணவரின் சட்டையைப் பற்றியவர்,

"வாட்..... இது மீக்கு முந்தே தெலுசுகதா? எந்துக்கு நன்ன மோசம் ஸேசாவு ஆலென்? ச்சீச்சீ.....
யாரோட பையன் யாருக்கு புருஷன்?" என்று அருவருப்படைந்த குரலில் கேட்டவரிடம்,

"எங்கம்மாவோட பையன் நான் தான் உங்க பொண்ணுக்கு புருஷன்!" என்று கம்பீரமான குரலில் கெத்தாக அறிவித்தான் கதிரேசன்.

சிறுநகை மலரும்!


Continue Reading

You'll Also Like

90.2K 2.7K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
422K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
383K 12.8K 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒ...
3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...